சென்னை: நாம் நம் வாழ்வின் ஒவ்வொரு விஷயமும் சிறப்பாக இருக்க வேண்டுமென்று விரும்பவும் அதற்காக முயற்சிக்கவும் செய்கிறோம். நடைமுறையில் நம் வாழ்க்கையைச் சிறப்பானதாக்க போதிய திட்டமிடலும் பணமும் அவசியமாகிறது. எப்பாடுபட்டாவது குருவி போலச் சிறுக சிறுகச் சேர்க்கும் பணமும் செல்வமும் பிற்காலத்திற்குப் பயன்படும் வகையில் பாதுகாக்கப் பட வேண்டியது மிகவும் முக்கியம்.
ஆரோக்கியம் தொடர்பான உணவுக் கட்டுப்பாடு மற்றும் எடை குறைப்பு போன்றவை இந்த வரிசையில் ஆரோக்கியமான நிதி ஆதாரம் என்பதும் முக்கிய இடத்தைப் பெறுகின்றது.
நிதி நெருக்கடிகளைச் சமாளிக்க நீங்கள் தயாராக இல்லையென்றால் வளமான நிதி ஆதாரங்களைப் பெற்றிருந்தாலும் உதவாது. எனவே இந்த 2016 ஆண்டில் ஆரோக்கியமான நிதி ஆதாரங்களில் உங்களுக்கு உதவ இதோ ஐந்து வழிகள்:

திட்டமிட்டபடி நடந்துகொள்ளுங்கள்
புதுவருட உறுதிமொழிகள் பெரும்பாலும் வருடம்முழுவதும் கடைப்பிடிக்கப்படுவதில்லை என்பதால் இவை பெரும் மாற்றம் எதையும் ஏற்படுத்தப்போவதில்லை.
குறிப்பிட்ட வருடத்தில் நாம் என்ன திட்டமிட்டோம் என்பதையே கூட மறந்து நம் வசதிக்கேற்ப திட்டத்தை மாற்றி எதிர்கால நன்மையைச் சிதைக்கிறோம்.

கடன் நம்பகத்தன்மை
நிதி ஆதாரங்களை நல்ல முறையில் பராமரிக்க உதவும் மற்றுமொரு வழி உங்களுடைய கடன் வரையறைகளை மீறாமல் இருப்பது. அவ்வாறு மீறிச் செய்யும்போது உங்கள் நெருக்கடிகள் வெளியில் தெரியவருவதோடு உங்கள் கடன் நம்பகத்தன்மையை அதாவது க்ரெடிட் ஸ்கோர் எனப்படும் புள்ளிகளும் குறையும்.

நிதி மேலாண்மையில் சமநிலை
உங்கள் நிதி நிலையை ஆராய்ந்து அவ்வப்போது அதனைச் சரிவரப் புரிந்துகொள்வதன் மூலம் வருமான வரிச் சட்டங்களுக்கு உட்பட்டு நடக்கவும் புதிய முதலீட்டுத் திட்டங்களை அறிந்து வைத்திருக்கவும் அதன் மூலம் பல்வேறு வரிச்சலுகைகளைப் பெறவும் உதவும்.
அவ்வப்போது வங்கி அறிக்கைகளை (ஸ்டேட்மென்ட்) சரிபார்த்தல், தானாகப் பற்று வைக்கும் நடைமுறைகள் (ஆட்டோ டெபிட்) போன்றவற்றில் தவறுகள் இருந்தால் அவற்றைக் கண்டறிய உதவும்.

கடனைச் திருப்பிச் செலுத்துதல்
நீங்கள் உங்கள் கிரெடிட் கார்டு அல்லது வேறு ஏதாவது ஒரு வழியில் பெரிய கடனில் சிக்கித் தவித்தால் அதனை நன்கு புரிந்துகொண்டு உண்மையில் எவ்வாறு அதனைச் செலுத்த முடியும் என்பதைக் கடன் கொடுத்த நிறுவனத்துடன் இணைந்து செயலாற்ற முனையுங்கள்.
ஒரு முதலீட்டைச் செய்வதை விடக் கடனை அடைப்பது எப்போதுமே சிறந்த தேர்வாக இருக்கும்.

ஓய்வுகாலக் கணக்கு
வாழ்க்கையை ஒரு ஆரோக்கியமான நிதி ஆதாரத்துடன் நடத்திச் செல்ல போதிய அளவு சேமிப்புகளையும் முதலீடுகளையும் ஒய்வுகாலத்திற்காக ஒவ்வொரு வருடமும் செய்யவேண்டியது மிகவும் அவசியம்.

ஆவணங்களைப் பாதுகாத்தல்
இன்சூரன்ஸ் பாலிசி, நிரந்தர வைப்புச் சான்றுகள், சொத்துப் பத்திரங்கள் மற்றும் அவை தொடர்பான ஆவணங்கள் போன்ற முக்கிய நிதி ஆவணங்கள் ஒரு நிதித் தொடர்பான பரிவர்த்தனைக்கு நல்ல நிலையில் பாதுகாக்கப்பட்டுக் கொடுக்கப் படவேண்டியிருக்கும் என்பதால் அதனைப் பாதுகாப்பாக வைக்கவேண்டியது அவசியம்.
ஒருவர் ஆதார் எண்ணை அடிப்படையாகக் கொண்ட ஒரு மின்னணு பாதுகாப்புப் பெட்டகத்தைக் கொண்டு அதன் மூலம் ஆவணங்களை மின்னணு முறையில் பாதுகாக்க முடியும். அல்லது அவற்றின் மின்னணுப் பதிவுகளை ஒரு ஹார்ட் டிஸ்கில் சேமித்து வைக்கவும் முடியும். எனினும் தொலைந்துபோனால் எப்போது வேண்டுமானாலும் நகலைக் கேட்டுப் பெறமுடியும்.

வரித் திட்டமிடல்
வரி நடைமுறைகளுக்கு முங்கூட்டியே தயாராக இருங்கள். அதற்குத் தேவையான அனைத்து ஆவணங்கள் மற்றும் ரசீதுகளைத் தயாராக வைத்திருங்கள்.

நல்ல ஆலோசகர்
ஒரு நல்ல உடற்பயிற்சியாளர் உடலை ஆரோக்கியமாக வைக்க எவ்வாறு உதவுவாரோ அவ்வாறே ஒரு முதலீட்டு மற்று வரிச் சேமிப்புக்கு அறிவுரை தரும் ஆலோசகரும் இருக்கவேண்டியது அவசியம்.

முடிவுரை
நல்ல நிதி நிலை என்பது நெடுநாளைய முயற்சியினால் அமையுமே தவிர ஃபாஸ்ட்புட் போல உடனே அமைந்துவிடாது. நிதிச் சுதந்திரம் என்ற நிலையை அடைய எந்த ஒரு மந்திர தந்திரமோ அல்லது குறுக்கு வழியோ தந்துவிடாது. அது நன்கு திட்டமிடப்பட்டுப் பராமரிக்கப்பட்டால் மட்டுமே பயன்தரக்கூடிய ஒன்று. ஆகவே இந்தப் புதிய வருடத்தினை நிதி நிலையை நன்கு மேலாண்மை செய்வதன் மூலம் மகிழ்ச்சிகரமான வருடமான வருடமாக மாற்றலாம் வாங்க..