வருமான வரி ரீபண்ட் பணத்தை உடனடியாகப் பெறுவது எப்படி..?

By Srinivasan
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  சென்னை: எல்லாரும் வருமான வரி விவரங்களை வருமான வரித்துறையிடம் தாக்கல் செய்து முடித்து ரீபண்ட் தொகைக்காக காத்திருக்கும் நேரம் இது. ஒரு வருடத்திற்கான வருமானத்தைச் சரியான முறையில் கணக்கிட்டு வருமான வரியைச் செலுத்தினாலும், பல்வேறு காரணங்களுக்காக வருமான வரிதுறையிடம் செலுத்திய வரிப் பணத்தில் மீதமுள்ள தொகையை திருப்பிப் பெறுவது மிகவும் சவாலான விஷயமாக தான் இன்றளவும் உள்ளது.

  சரி உங்கள் வரிப் பணத்தை உடனடியாக திரும்பப்பெற உதவும் 10 வழிகளை நாம் இப்போதும் பார்ப்போம்.

  வருமானவரி விவரங்கள் தாக்கல் செய்வது கட்டாயம்

  உங்களுக்கு வருமான வரி ரீஃபன்ட் அல்லது அதிக வரி திரும்பக் கிடைக்க வேண்டுமென்றால் அதற்கு நீங்கள் வரிவிவரங்களைத் தாக்கல் செய்திருக்க வேண்டியது அவசியம். வருமான வரித் துறை உங்கள் கணக்குகளைத் தானே செய்து உங்களுக்கான வரிப் பணத்தைத் திரும்பத் தராது.

  வரி விவரங்களைக் கெடுவுக்குள் தாக்கல் செய்தல்


  வருமானவரி தாக்கல் செய்யவேண்டிய கடைசி நாள் வரை காத்திருக்காமல் கூடிய வரையில் தாக்கல் செய்துவிடுங்கள். உங்கள் அதிகப் பட்ச வரியை உடனே திரும்பப் பெறும் வழிகளில் இதுவும் ஒன்று. இந்த வருடம் நிறையபேர் ஒரு வாரத்திற்குள் ரீஃபண்டுகளைப் பெற்றதாக அறிகின்றோம்.

  ஆன்லைனில் வரிவிவரத் தாக்கல்

  நடப்பாண்டு முதல் உபரிவரியை திரும்பப் பெற விரும்புவோர் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டியது அவசியமாக்கப்பட்டுள்ளது. எனவே நேரடி விண்ணப்பங்களை நம்பிக்கொண்டு வழிமுறை சிக்கல்களில் மாட்டிக்கொள்ளாதீர்கள்.

  ஃபார்ம் 16 மற்றும் ஃபார்ம் 26ஏஎஸ் ஆகியவற்றை ஒப்பிட்டுச் சரிபார்த்தல்

  ஃபார்ம் 16-இல் (டிடிஎஸ்) மற்றும் ஃபார்ம் 26ஏஎஸ் ஆகியவற்றில் கொடுக்கப்பட்டுள்ள வருவாய் மூல வரித் தொகை சரியாக உள்ளதா எனப் பார்க்க வேண்டியது அவசியம். வருமான வரித்துறை ஃபார்ம் 26ஏஎஸ் படிவத்தில் கொடுக்கப்பட்டுள்ள தொகைப் படிதான் உபரிவருவாயை திரும்ப அளிக்கும். எனவே வரிவிவரத் தாக்கலுக்கு முன்னதாக இவ்விரு படிவங்களில் உள்ள தொகைகளையும் சரிபார்த்தல் மிகவும் அவசியம்.

  டான் எண்ணைச் சரியாக அளிக்க வேண்டியது அவசியம்

  டான் நம்பர் என்பது ஒவ்வொரு நிறுவனத்திற்கும் பிரத்தியேகமாக வழங்கப்படும் வரிவிதிப்பிற்கான எண்ணாகும். எனவே ஃபார்ம் 16 படிவத்தில் உள்ள டான் எண்ணைச் சரியாக அறிந்து வரிவிவரத் தாக்கல் செய்யும்போது குறிப்பிடவேண்டும். அவ்வாறு செய்யத் தவறும்பட்சத்தில் வரித்துறை உங்களுக்கு உபரி வரியைத் திரும்ப அளிக்காது அல்லது அதற்கான காரணம் கேட்டு உங்களுக்கு அறிவிப்பை அளிக்கும் (ஏனெனில் உங்கள் டான் எண் வெவ்வேறாக அல்லது தவறாக இருக்க வாய்ப்புள்ளது)

  சரியான வங்கி விவரங்களைத் தரவேண்டும்

  உங்கள் வங்கிக் கணக்கில் நேரடியாக உங்கள் உபரி வரித் தொகையைப் பெற நீங்கள் கோரியிருந்தால் அதற்கான சரியான வங்கி விவரங்களை நீங்கள் அளிக்க வேண்டியது அவசியம். இதில் தவறுகள் ஏற்பட்டால் உங்கள் பணம் திரும்பப் பெறுவதில் காலத் தாமதம் ஏற்படலாம். உங்கள் வங்கிக் கணக்கு எண் (பத்து இலக்க எண்), வங்கியின் எம்ஐசிஆர் குறியீட்டு எண் மற்றும் வங்கிக் கிளை மற்றும் தொடர்புக்கான முகவரி ஆகிய விவரங்களை அளிக்க வேண்டும்.

  சரியான முகவரியைத் தரவேண்டும்

  உங்கள் பணத்தைத் திரும்பப் பெற அஞ்சல் வழியைத் (காசோலை மூலம்) தேர்ந்தெடுத்திருந்தால் உங்கள் முகவரியை சரியாகத் தரவேண்டியது அவசியம். இதில் தவறு ஏற்பட்டால் அனுப்பப்பட்ட காசோலை மீண்டும் வரித்துறைக்கே சென்றுவிடும். இதனால் தேவையற்ற தாமதங்கள் ஏற்படும்.

  ஒருவேளை நீங்கள் காசோலையைத் தாமதமாகப் பெற்று அதற்கான பணம் பெறும் தேதி காலாவதி ஆகியிருந்தால் உங்கள் பகுதி கணக்கு அதிகாரியை அணுகவும். இது புதிய காசோலையைப் பெற உங்களுக்கு உதவும்

   

  பான் கார்டிலுள்ள பெயரும் வங்கிக் கணக்குப் பெயரும் ஒன்றாக இருக்க வேண்டும்.

  உங்கள் வங்கிக் கணக்கில் உள்ள உங்கள் பெயரும் பான் கார்டிலுள்ள பெயரும் வெவ்வேறாக இருந்தால் அது உங்கள் தொகையைப் பெறுவதில் தாமதத்தை ஏற்படுத்தும். ஒருவேளை உங்கள் தொகை கொடுக்கப் பட்டுவிட்டதாக் குறிப்பிடப்பட்டு ஆனால் நீங்கள் தொகையைப் பெறவில்லையெனில் உங்கள் வங்கியைத் தொடர்புகொள்ளுங்கள். அதில் எந்தக் குழப்பமும் இல்லாதபட்சத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள எஸ்பிஐ வங்கிக் கிளையை அணுகவும். ஏனென்றால் இந்த வங்கி வருமான வரியைத் திரும்பத்தரும் பணியில் ஈடுபட்டுள்ளது.

  Cash Management Product (CMP)
  State Bank of India
  SBIFAST
  31, Mahal Industrial Estate
  Off Mahakali Caves Road
  Andheri (East)
  Mumbai - 400093
  Phone Number: 18004259760 or email at itro@sbi.co.in

   

  சரியான வருமான வரிப்படிவம் (ITR) தெரிவு செய்யுங்கள்

  இந்தப் படிவத்தைத் தெரிவு செய்வது மிகவும் சுலபம். ஆனாலும் இன்னும் பலர் இதனைத் தவறாகவே தெரிவு செய்கின்றனர். இந்தத் தவறு வரித் தொகையைத் திரும்பப் பெறுவதில் தாமதத்தை ஏற்படுத்தும்.

  உங்கள் ரீஃபண்டை கவனித்து உறுதி செய்யுங்கள்

  உங்கள் ரீஃபுண்ட் திரும்பக் கிடைக்கவில்லையென்றால் அதன் நிலையினை அடிக்கடி கவனித்து அறிந்துகொள்ளுங்கள். இது ஏதாவது தடங்கல் அல்லது தடை இருப்பின் அதைக் களைந்து தாமதத்தைத் தவிர்க்க உதவும்.

  இதைச் செய்ய வருமான வரித்துறையின் பின்வரும் இணையத் தளத்திற்குச் சென்று சரிபார்க்கலாம்.

   

  வேறு கடைசி வழி ஏதாவது இருக்கிறதா?

  உங்களுக்கு உங்கள் பணம் திரும்பக் கிடைக்க வில்லையென்றாலோ அல்லது உங்கள் புகாருக்குப் பதில் இல்லையென்றாலோ உங்களுக்கு இறுதியாக இருக்கும் வழி தகவல் பெறும் உரிமைச் சட்டம். அதற்கான எந்த ஒரு குறிப்பிட்ட படிவமும் இல்லை.

  நீங்கள் 10 ரூபாய் கட்டணம் அஞ்சல் ஆணை, வங்கி வரைவு அல்லது நீதிமன்ற கட்டண வில்லை (கோர்ட் ஃபீ ஸ்டாம்ப்) மூலம் செலுத்த வேண்டும். உங்கள் விண்ணப்பத்தில் உங்களைப் பற்றிய பெயர், முகவரி, வரி ஆய்வு வருடம், பான் கார்டு எண், நிலுவையிலுள்ள தொகை உள்ளிட்ட விவரங்களைக் கொடுக்க வேண்டும்.

  இந்த விண்ணப்பத்தை உங்கள் பகுதி வருமான வரி ஆணையரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

   

  தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

  English summary

  10 ways to get your Income Tax Refund quickly

  It is tax filing time for all individuals. Once you file the tax then the next step is to look for getting Income Tax Refund at the earliest. Hence, in this post I will try to explain 10 ways to get your Income Tax Refund quickly.
  Company Search
  Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
  Thousands of Goodreturn readers receive our evening newsletter.
  Have you subscribed?

  Find IFSC

  Get Latest News alerts from Tamil Goodreturns

  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Goodreturns sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Goodreturns website. However, you can change your cookie settings at any time. Learn more