வருமான வரி தாக்கல் செய்வது பற்றி பல கேள்விகள் மற்றும் குழப்பத்துடன் இருக்கிறீர்களா..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பலருக்கு இது தொடர்பான சந்தேகங்கள் வந்தால் யாரிடம் கேட்பது, யாரைத் தொடர்பு கொல்வது, எப்படிச் செய்வது என்று தெரியாமல் இருப்பார்கள்.

 

இது போன்ற சிக்கல்களில் இருந்து உங்களை விடுவிக்க வருமான வரித் துறை உதவி எண்களை அறிவித்துள்ளது. இதன் வாயிலாக வரி கட்டுவதற்கான கேள்விகள், சிக்கல்கள் என எல்லாவற்றிற்கும் நீங்கள் தீர்வைக் காணலாம்.

உங்கள் கேள்விகள், சந்தேகங்களைப் பொருத்து தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் என்னென்ன என்பதை இங்கே பார்க்கலாம்.

1) அயகர் சேவா கேந்திரா (Aaykar Seva Kendra)

1) அயகர் சேவா கேந்திரா (Aaykar Seva Kendra)

அயகர் சேவா கேந்திரா() வருமான வரித் துறையின் ஒரு புதிய முயற்சி ஆகும். இது வரி செலுத்துவோருக்கான சிக்கல்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகவே உருவாக்கப்பட்டது.

ஏதேனும் பொதுவான கேள்விகள் மற்றும் வருமான வரி, பான் அல்லது டான் பற்றிய கேள்விகளுக்கு ‘18001801961/1961' எண்ணைத் தொடர்பு கொள்க.

2) பான் அல்லது டான் பற்றிய கேள்விகள்

2) பான் அல்லது டான் பற்றிய கேள்விகள்

பான் அட்டைக்கு நீங்கள் விண்ணப்பித்த பிறகு அது தொடர்பான நிலை தகவல்கள் எதையும் நீங்கள் பெறவில்லை என்றால் www.tin-nsdl.com என்ற இணைய தளத்தை பரக்கவும் அல்லது +912027218080 என்ற எண்ணைத் தொடர்புகொள்க.

3) இணைய வழி வருமான வரி தாக்கல்
 

3) இணைய வழி வருமான வரி தாக்கல்

சில சமயம் தொழில்நுட்ப பிழை அல்லது ஏதேனும் தவறு ஏற்பட்டிருந்தால் உள்நுழைவு வேலை செய்யாது. இதுபோன்ற இணைய வழி தாக்கல் செய்யும் போது உள்நுழைவு பற்றிய கேள்விகள் மற்றும் சந்தேகங்களை 180042500025 அல்லது +918026500025 எண்களைத் தொடர்பு கொண்டு கேட்கலாம்.

இந்த எண்களை நீங்கள் தொடர்பு கொள்ளும் போது திங்கள் முதல் சனி கிழமை வரை, காலை 9 மணியில் இருந்து இரவு 8 மணிக்குள் மட்டுமே தொடர்பு கொள்ள இயலும்.

4) கட்டணம் திருப்பித்தருதல்

4) கட்டணம் திருப்பித்தருதல்

அறிவிப்பு, கட்டணம் திருப்பித்தருதல் செயல்படுத்துதல், மறுபதிப்பு அல்லது திருத்தம் பற்றிய சிக்கல்களுக்கு 18004252229 என்ற எண்ணைத் தொடர்பு கொள்க.

5) டிடிஎஸ்

5) டிடிஎஸ்

ஃபார்ம் 26AS, ஃபார்ம் 16 பற்றிய கேள்விகள் அல்லது சிக்கல்களை பற்றி அறிந்து கொள்ள www.tdscpc.gov.in என்ற இணைய தளத்தை பார்க்கவும் அல்லது 18001030344, 911204814600 என்ற எண்களைத் தொடர்பு கொள்ளவும் அல்லது contactus@tdscpc.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அஞ்சல் அனுப்பவும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Any Queries On Income Tax or Tax Returns? Here Are Helplines For Taxpayers

An individual tax payer can come across many queries or confusion regarding his income tax returns or may have any grievance regarding the issue.
Story first published: Friday, July 15, 2016, 19:30 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X