‘ஏன் வேலையை விட்டு மாறுகிறீர்கள்’ என்ற கேள்வியை எதிர்கொள்வது எப்படி..?

By Batri Krishnan
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒரு குறுகிய கால இடைவெளியில் அடிக்கடி வேலையை மாற்றுவது வருங்காலத்தில் உங்களைத் தேர்வு செய்யக் காத்திருக்கும் நிறுவன மேலாளர்களிடம் உங்களைப் பற்றிய ஒரு தவறான அபிப்பிராயத்தை ஏற்படுத்தி விடும்.

 

எனவே உங்களைப் பற்றி தவறான எண்ணத்தில், உங்களை வேலைக்கு அமர்த்தாமல் தவிர்க்க நினைக்கும் மேலாளர்களின் மனதை மாற்றி, அவர்களைத் தூண்டி உங்களைத் தேர்வு செய்யுமாறு எவ்வாறு தூண்டலாம்?

உங்களுக்கு உதவக்கூடிய செயல்முறைகளைப் பற்றி தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

எப்பொழுதும் ஆயத்தமாக இருக்க வேண்டும்

எப்பொழுதும் ஆயத்தமாக இருக்க வேண்டும்

"நீங்கள் ஒரு தலைமைப் பதவிக்காக விண்ணப்பிக்கும் பொழுது, உங்களுடைய சி. வி யில் கடந்த நான்கு ஆண்டுகளில் மூன்று வேலைகள் மாறியிருந்ததைக் குறிப்பிட்டு இருந்தீர்கள் எனில், உங்களைத் தேர்வு செய்யக் காத்திருக்கும் மேலாளர்களின் மனதில் இது சில சந்தேகங்களை விதைத்து விடும்.

மிகவும் கீழ்த்தரமானதாகக் கருதப்படுகிறது

மிகவும் கீழ்த்தரமானதாகக் கருதப்படுகிறது

அதுவும் இந்தியச் சூழ்நிலைகளில் இது உங்களைக் கண்டிப்பாக பாதிக்கும். இந்தியச் சூழ்நிலைகளில் அடிக்கடி வேலை மாறுவது மிகவும் கீழ்த்தரமானதாகக் கருதப்படுவதுடன், ஒரே வேலையில் நீண்ட காலம் தொடர்ந்து இருப்பது ஒரு நல்லொழுக்கமாகக் கருதப்படுகின்றது என வேலை வாய்ப்பு தேடல் நிறுவனமான ஸெடெல்லர் சர்ச் நிறுவனர் வருண் சின்ஹா தெரிவித்துள்ளார்.

 

"சரி" அல்லது "தவறு"

அடிக்கடி வேலை மாறும் தன்மையைப் பற்றி விவரிக்கும் முறைகளில் "சரி" அல்லது "தவறான" முறை என்று எதுவும் இல்லை. நீங்கள் உங்களுடைய கடந்த கால வேலையைச் சரியான காரணங்களுக்காக உதறி இருந்தால், அதைப் பற்றி சிறிதும் கவலைப் படாமல் வேலை மாறுதல் பற்றிய கடினமான கேள்விகளை நீங்கள் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும்" என்றும் அவர் கூறுகின்றார்.

எப்பொழுதும் நேர்மையாக இருங்கள்

எப்பொழுதும் நேர்மையாக இருங்கள்

"பெரும்பாலான நிறுவனத்தின் மூத்த தலைவர்கள், நீங்கள் நேர்மையானவராக இருந்து, முடிவுகள் எடுக்கும் பொழுது நீங்கள் புரிந்த தவறுகளை ஒத்துக்கொள்ளும் பொழுது, உங்களுக்கு இன்னொரு வாய்ப்பு தர தயாராகவே இருப்பார்கள்.

ஏதோ குறை

ஏதோ குறை

நீங்கள் இதற்கு முன்னர் மூன்று நிறுவனத்தில் பணியாற்றி இருந்து, அந்த மூன்று நிறுவனங்களிலும் இருந்து நீங்கள் வெளியேறிய காரணத்தால், நீங்கள் வேறு முடிவு எடுக்க வேண்டியிருக்கும். இது உங்களின் தொலை நோக்குப் பார்வையில் ஏதோ குறை இருக்கின்றது என்பதைத் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது.

புதிய தொடக்கம்

புதிய தொடக்கம்

இதை ஏற்று நீங்கள் ஒரு புதிய தொடக்கத்திற்காகத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தால், அது உங்களின் நம்பகத்தன்மையை அதிகரிக்கும். அவ்வாறு இல்லாமல் நீங்கள் ஏதேனும் ஒரு பொய்யைச் சொல்லி, அது சிறிது காலம் கழித்து உங்களின் புதிய நிறுவனத்திற்குத் தெரிய வந்தால், அது உங்களின் நிலைமையை மேலும் மோசமாக்கிவிடும். ", என சின்ஹா தெரிவிக்கின்றார்.

திறன்களை வெளிப்படுத்தத் தயங்காதீர்கள்

திறன்களை வெளிப்படுத்தத் தயங்காதீர்கள்

"நீங்கள் உங்களின் கடந்த கால வேலைவாய்ப்புகள் மூலம் என்னென்ன திறன்களை பெற்றுள்ளீர்கள் மற்றும் அவற்றை எப்படி தற்பொழுது விண்ணப்பித்துள்ள புதிய பதவிக்குப் பயன்படுத்துவீர்கள் என்பதை நேர்முகத் தேர்வின் பொழுது நீங்கள் முக்கியமாக வெளிப்படுத்த வேண்டும்." என மானுவல் டிசோசா, தலைமை அலுவலக அதிகாரி, இண்டெல்நெட் குளோபல் சர்வீசஸ் கூறுகிறார்.

"இது நீங்கள் இந்தத் திறமைகள் மூலம் தற்பொழுது விண்ணப்பித்துள்ள வேலைக்கு இன்னும் எவ்வாறு மதிப்பு சேர்க்க முடியும் என்பதை முன்னிலைப்படுத்த உதவும்," என்று அவர் மேலும் கூறுகிறார்.

 

உங்களின் வாழ்க்கை இலக்குகளைத் தெளிவுபடுத்துங்கள்

உங்களின் வாழ்க்கை இலக்குகளைத் தெளிவுபடுத்துங்கள்

"நேர்முகத் தேர்வு நடத்தும் மேலாளர்களிடம், உங்களின் புதிய வாழ்க்கை இலக்குகளைப் பகிர்ந்து கொள்ளவும், மேலும் தற்பொழுது நீங்கள் விண்ணப்பித்துள்ள வேலையானது உங்களின் புதிய வாழ்க்கை இலக்குகளுடன் எவ்வாறு பொருந்தி வருகின்றது என்பதையும் எடுத்துக் காட்டவும்", என டிசோசா கூறுகிறார்.

" நீங்கள் அவர்களின் நிறுவனத்தில் இணைந்து பணியாற்ற விரும்புகின்றீர்களா மற்றும் அந்த நிறுவனத்துடன் இணைந்து ஒரு நீண்ட கால வளர்ச்சி வாய்ப்பைப் பெற முயலுவீர்களா, என்பதை உங்களின் வருங்கால முதலாளிகள் தெரிந்து கொள்ள விரும்புவார்கள் " என அவர் கூறுகிறார்.

 

உங்களின் பண்புகளை வெளிப்படுத்துங்கள்

உங்களின் பண்புகளை வெளிப்படுத்துங்கள்

பல நிறுவனங்கள் பாரம்பரிய வேலை விபரத்திற்கு அப்பால் அந்த வேலைக்குத் தேவையான தகுதிகளைத் தாண்டி மையப் பண்புகளைச் சேர்த்து பணியாளர்களின் தகுதி எல்லைகளை விரிவுபடுத்தி வருகின்றனர்; அதற்குப் பின்னர் குறிப்பிட்ட வேலைக்குத் தேவையான பயிற்சிகளை உங்களுக்கு அளிப்பார்கள் வேலை. "

"இதன் விளைவாக, தனிப்பட்ட தன்மை மற்றும் கற்றுக் கொள்ளும் திறன் போன்றவை பணியமர்த்தத் தேவையான புதிய பண்புகளாக மாறி விட்டன, " என இண்டெல்நெட் நிறுவனத்தின் டிசோசா கூறுகிறார்

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Five ways to explain job changes in an interview

Five ways to explain job changes in an interview
Story first published: Friday, September 30, 2016, 11:03 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X