உங்கள் பழைய நிறுவனத்தின் பிஎப் கணக்கை இன்னும் மாற்றவில்லையா..! அப்ப இதை முதலில் படிங்க..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மாத சம்பளம் வாங்கும் ஊழியரா நீங்கள், பல நிறுவனங்களில் பணி புரிந்தும் உங்கள் பிஎப் கணக்கை புதிய நிறுவனத்தின் பிஎப் கணக்குடன் இணைக்கவில்லையா அப்படியானால் அதுவும் நல்லது தான்.

 

நம்மில் பலர் பிஎப் கணக்கை மாற்றம் செய்து கொள்வது மற்றும் கணக்கில் உள்ள பணத்தை திரும்பப் பெறுவது பெறும் சிரமம் என்று நினைக்கின்றனர். நீங்கள் பிஎப் கணக்கை இன்னும் மாற்றவில்லை மற்றும் திரும்பப் பெறவில்லை என்றால் பின் வருவனவற்றைக் கண்டிப்பாக படியுங்கள்.

இங்கு நாம் பிஎப் கணக்கை எப்படி புதிய நிறுவனத்திடன் இணைப்பது? மற்றும் பிஎப் கணக்கில் உள்ள பணத்திற்கு எப்படி உரிமைகோருவது என்று இங்கு பார்ப்போம்.

செயலற்ற கணக்கு

செயலற்ற கணக்கு

நீங்கள் மூன்று வருடத்திற்கு மேல் உங்கள் பிஎப் கணக்கை பயன்படுத்தாமல் இருந்தால் அதற்கு மேற்பட்ட நாட்களுக்கு வட்டி ஏதும் கிடைக்காது.

கணக்கைச் செயல்படுத்தாமல் இருப்பது மற்றும் பணத்தை அதிக வட்டிக்காக எடுக்காமல் விடுவது போன்ற காரணங்களுக்காக இது போன்ற செயல்படா கணக்குகளுக்கு வட்டி அளிப்பதை 2011 ஏப்ரல் 1 முதல் மத்திய அரசு நிறுத்திவிட்டது.

இரட்டிப்பு லாபம் வீணாகிவிடும்

இரட்டிப்பு லாபம் வீணாகிவிடும்

ஒரு வேலை உங்கள் பிஎப் கணக்கில் 1 லட்சம் இருந்தால் 10 வருடம் வரை நீங்கள் எடுக்காமல் இருந்தால் 8.5 சதவீதம் வட்டி விகதத்திற்கு அப்படியே இரட்டிப்பாகி 2.26 லட்சம் வரை நீங்கள் பெற இயலும். அதுவே இது போன்று செயல்படாத கணக்கில் வைத்திருந்தால் உங்களால் லாபம் ஏதும் ஈட்ட இயலாது.

யுனிவர்சல் கணக்கு எண்
 

யுனிவர்சல் கணக்கு எண்

நிறுவனம் மாறி வேலைக்குச் சேர்ந்தவுடன் உங்களிடம் பழைய நிறுவனத்தின் யுனிவர்சல் கணக்கு எண்(UAN) வைத்திருந்தால் உடனே அந்த எண்ணை உங்கள் புதிய நிறுவனத்தில் நீங்கள் அளிப்பதன் மூலம் அளிதாக உங்கள் பழைய பிஎப் கணக்கை புதிய நிறுவனத்திற்கு மாற்றிக்கொள்ளலாம்.

ஆன்லைன், ஆப்லைன் முறைகள்

ஆன்லைன், ஆப்லைன் முறைகள்

புதிய நிறுவனத்தில் வேளைக்குச் சேரும் போது ஆன்லைன், ஆப்லைன் என இருவழியாகவும் பிஎப் கணக்கை புதிய நிறுவனத்திற்கு மாற்றிக் கொள்ளலாம்.

ஆன்லைன் மூலம் மாற்ற உங்கள் பழைய நிறுவனம் பிஎப் அலுவலகத்தில் டிஜிட்டல் கையொப்பத்தைச் சமர்ப்பித்து இருத்தல் வேண்டும். ஆப்லைன் முறையில் மாற்றும் போது உங்களது புதிய நிறுவனம் பழைய நிறுவனத்துடன் தொடர்பு கொண்டு அதற்கான பணிகளைச் செய்யும்.

உரிமைகோரல்

உரிமைகோரல்

ஒரு நிறுவனத்தில் பணி புரிந்து இரண்டு மாதங்கள் நீங்கள் பணியை தொடராமல் இருந்தால் நீங்கள் படிவம் 19-ஐ பயன்படுத்தி பணத்திற்கான உரிமைகோரலாம். இதற்கான படிவத்திதை ஈபிஎப்ஓ(EPFO) இணையதளத்தில் இருந்து பதிறக்கி கொள்ளலாம்.

10 சதவீதம் டிடிஎஸ்

10 சதவீதம் டிடிஎஸ்

நிறுவனத்தில் ஐந்து வருடம் தொடர்ந்து பணி புரியாமல் 50,000 ரூபாய்க்கு மேல் இருந்து பணத்திற்கான உரிமை கோரும் போது 10 சதவீதம் வரை டிடிஎஸ்(TDS) கட்டணம் செலுத்த வேண்டி வரும். அதுவே ஐந்து வருடத்திற்கு மேற்பட்டு நீங்கல் பணி புரிந்து இருந்தால் வரி செலுத்த தேவை இல்லை.

பிஎஃப் இருப்பை சரிபார்க்க எளிமையான 5 வழிகள்

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: pf transfer withdraw பிஎப்
English summary

Haven't Transferred PF Money After Job Change? 5 Things To Know

Haven't Transferred PF Money After Job Change? 5 Things To Know
Story first published: Wednesday, September 28, 2016, 17:11 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X