அலுவலக அரசியலை சமாளிப்பது எப்படி..?

By Batri Krishnan
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அரசியல் நம்முடைய வாழ்வில் இரண்டறக் கலந்து விட்டது. பொது வாழ்வாகட்டும் அல்லது ஒருவருடைய தனிப்பட்ட வாழ்வாகட்டும், அரசியலை எதிர்கொள்ளாமல் நம்மால் காலம் தள்ள இயலாது.

 

அதுவும் பணிபுறியும் இடத்தில் நடக்கும் அரசியலானது நம்முடைய வாழ்வையே மாற்றி விடும். பணியிடத்தில் நடைபெறும் அரசியலை சமாளிக்கத் தேவையான மற்றும் அவசியாமான முதல் படி என்பது அங்கு நடைபெறும் அரசியல் மூலாதாரங்களை கண்டு பிடிப்பது.

விலகி இருங்கள்

விலகி இருங்கள்

நீங்கள் உங்கள் அலுவலகத்தின் தலைசிறந்த அரசியல்வாதிகளை கண்டறிந்த பின்னர் அவர்களிடமிருந்து விலகியே இருங்கள். இதுவே உங்களுடைய நலன்களை பாதுகாக்கும்.

அளவாக வைத்துக் கொள்ளுங்கள்

அளவாக வைத்துக் கொள்ளுங்கள்

எவர் ஒருவர் தன்னுடைய வேலையில் கவனம் செலுத்த விரும்புகின்றாரோ அவர் எந்த ஒரு நாடகத்தனமான செய்கையிலும் சிக்காமல் அரசியல் புரியாமல் அரசியல்வாதிகளிடமிருந்து விலகி இருத்தல் மிகவும் அவசியம்.

அரசியல் புரிபவர்களிடம் தொழில் முறையில் மட்டும் மிக அளவாக உங்கள் தொடர்புகளை வைத்துக் கொள்ளுங்கள். அவசியம் ஏற்பட்டால் கூட தேவைக்கு அதிகமாக அவர்களிடம் அதிக தகவல்களை வழங்க வேண்டாம் என ஸ்வப்னில் காமத், என்ற வேலை பயிற்சி நிறுவனர், தெரிவிக்கின்றார்.

எல்லோரிடமும் சகஜமாகப் பழகுங்கள்
 

எல்லோரிடமும் சகஜமாகப் பழகுங்கள்

ஒரே ஒரு குழுவுடன் மட்டும் உங்களை இணைத்துக் கொள்ளாதீர்கள். " ஒருவர் பிற குழுக்களிடமும் சகஜமாகப் பழக வேண்டும். இது பிற குழுக்களை வெறுக்கும் மனோபாவமுடைய மக்களின் மத்தியிலும் உங்களுடைய செல்வாக்கை அதிகரிக்கும் " , என மோஹித் குண்டேச்சா, ஜோம்பே தலைமை நிர்வாக அதிகாரி கூறுகிறார்.

நேரடியாக மற்றும் வெளிப்படையாக பழகுங்கள்

நேரடியாக மற்றும் வெளிப்படையாக பழகுங்கள்

உங்களுடைய வேலை நெறிமுறைகளில் அரசியலை கையாள்வது மிக முக்கிய பங்கு வகிக்கின்றது. "நீங்கள் பணிப்புரியும் வேலை மற்றும் அதனைச் சார்ந்து நீங்கள் எடுக்கும் முடிவுகள் எப்போதும் வெளிப்படையாக மற்றும் அனைவருக்கும் தெரியும் படியாக இருப்பது மிகவும் அவசியம்" என காமத் கூறுகிறார். ஒருவர் எப்பொழுதும் சீராக இருக்க வேண்டும் மற்றும் எப்பொழுதும் எந்த ஒரு சர்ச்சைக்கும் இடம் தராமல் இருக்க வேண்டும்.

இராஜதந்திரியாக இருங்கள்

இராஜதந்திரியாக இருங்கள்

நீங்கள் அரசியலில் விழுவதற்கு விரும்பவில்லை என்றால் இராஜதந்திரக் கலையை நன்றாக கற்றுக் கொள்ளுங்கள். ஒரு அரசியல்வாதி உங்களை மாட்டிவிடும் ஒரு கேள்வியை கேட்டார் என்றால், அவரிடம் விவாதிப்பதைத் தவிர்த்து, அவருடைய கருத்தை மறுத்தோ அல்லது ஆதரித்தோ பதிலளிக்காதீர்கள் என காமத் கூறுகிறார்.

மாறாக, அந்தப் பிரச்சினையில் உங்களுக்கு கருத்தே இல்லை என்பதை நாகரீகமாக எடுத்துக் கூறுங்கள். "விவாதத்தின் பொழுது நீங்கள் உங்களுடைய சலிப்பை உணர்த்தும் பொழுது, அந்த அரிசியல்வாதி, அந்த பிரச்சனையில் உற்சாகம் காட்டும் வேறொரு நபரை தேடி ஓடி விடுவார்" என்று மேலும் அவர் தெரிவிக்கின்றார்.

ஜாக்கிரதையாக இருங்கள்

ஜாக்கிரதையாக இருங்கள்

எப்போதும் உங்கள் கண்கள் மற்றும் காதுகளை திறந்து வைத்திருங்கள். அரசியல் எப்பொழுதும் நன்மையையும் தீமையையும் தராது. அது ஒரு கைப்பிடி இல்லா கத்தி போன்றது. எனினும், எந்த ஒரு நிறுவனத்திலும் நேரம், பணம், அதிகாரம், பதவி உயர்வுகள் மற்றும் அங்கீகாரத்திறாக என்ன வேண்டுமானாலும் செய்யத் தயாராக உள்ளவர்கள் இருக்கின்றார்கள். "நாம் அவர்களை தவிர்க்க வேண்டும்", என திரு காமத் கூறுகிறார்.

கிசுகிசு

கிசுகிசு

"கிசுகிசுவை எப்பொழுதும் தவிர்க்க இயலாது. ஆனால் கிசுகிசுவை ஆரம்பிக்காமல் அல்லது அதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளாமல் நம்மால் இருக்க முடியும்", என குண்டேச்சா கூறுகிறார். "இந்த நல்ல வழக்கங்கள் உங்களை பழி பாவங்கள் மற்றும் பிற அலுவலக அரசியலில் இருந்து உங்களை காப்பாற்ற உதவும்", என்று அவர் மேழும் கூறுகிறார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

How to survive in office politics?

The very first step to deal with workplace politics is to pin down the source or sources. Once you have been successful in identifying the sources, the next logical step is to stay away from these peers.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X