சிலபல கோடிகளைச் சம்பாதிக்க இது ஒரு 'ஷாட்கட்'..!

By Super Admin
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: இன்றைய நிலையில் மாத சம்பளம் வாங்கிக் கோடிஸ்வரனாக மாறியவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு, சொல்லப்போனால் எண்ணக்கூடிய அளவில் தான் உள்ளனர்.

 

ஆனால் சொந்தமாகத் தொழில் அல்லது பகுதி தொழில் (side business) செய்து தற்போது மிகப்பெரிய தொழிலதிபர்களாக மாறியவர்களை உங்கள் அருகில் பலர் இருப்பார்கள். அவர்களை நீங்கள் முன்மாதிரியாகக் கூட எடுத்துக்கொள்ள முடியும்.

காரணம் ஒவ்வொரு தொழிலதிபர்களிடம் நாம் அறிந்துகொள்ள வேண்டியது நிறைய இருக்கு. சரி ஒரு சிறந்த தொழிலதிபராக மாற வேண்டும் என்றால் முதலில் நீங்கள் ஒரு நல்ல முதலீட்டாளராக இருக்க வேண்டும்.

உங்கள் முதலீட்டுத் தேர்வு சிறப்பானதாக இருந்தாலே போதும் கண்டிப்பாக வெற்றி தான். இப்படி வெற்றி அடைய என்ன பண்ணவேண்டும் என்பது தான் பலரின் கனவு. அதற்கான பதில் தான் இங்கே உள்ளது.

 கணக்கு தான் முக்கியம்

கணக்கு தான் முக்கியம்

சிறந்த முதலீட்டாளராக மாற முதல்ல கணக்குல நீங்க கண்ணா இருக்கணும். தொழிலோட முதல் மொழி கணக்குதான். இக்கட்டுரையில் பங்குச்சந்தை முதலீட்டில் அதிக வருமானத்தையும் லாபத்தை மட்டுமே அடைவது எப்படி என்பதையே பார்க்கப்போகிறோம்.

இது ஒரு பெரிய சிக்கலான அறிவியல் இல்லை என்றாலும் அச்சுறுத்த கூடிய ஒன்றாகப் பலருக்குத் தோன்றலாம். இதன் ரகசியம் என்னவென்றால் ஒரு நிறுவனம் தருகின்ற நிதிநிலையை அல்லது எண்களை ஆராய்ந்து நிறுவனத்தின் நிலை, அதனுடைய திறமை மற்றும் பொருளாதார மதிப்பு ஆகியவற்றை அறியும் திறமை உங்களிடம் இருக்க வேண்டும்.

குறைந்தபட்சம் அந்த நிறுவனம் தடுமாற்றமின்றிப் பணப் பரிவர்த்தனைகளில் ஈடுபட்டு தொழிலைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டும்.

எப்படி வருவாய்க் கிடைக்கிறது

எப்படி வருவாய்க் கிடைக்கிறது

முதலீட்டாளருக்கு ஒரு நிறுவனம் அல்லது தொழில் எவ்வாறு வருவாயைப் பெறுகிறது என்பது தெரிந்திருக்க வேண்டும்.

அவருக்குத் தாம் முதலீடு செய்யும் நிறுவனம் எவ்வாறு வருவாயைப் பெறுகிறது அது ஒப்பீட்டளவில் எவ்வாறு உயர்ந்த நிலையில் இருக்கிறது என்பதைத் தெரிந்திருக்கவேண்டியதும் அவசியம்.

பல வெற்றிகரமான தொழில் நிறுவனங்கள் வித்தியாசமான முயற்சிகளில் ஈடுபட்டு (அது சற்று வித்தியாசமாகப் பட்டாலும்) முன்னேறுகின்றன.

இது போன்ற வித்தியாசமான முயற்சிகள் போட்டி நிறுவனங்களுக்குப் பெரும் சவாலாக அமைகின்றன. இதனால் பெரிய அளவிலும் தொடர்ந்தும் தொழிலைச் செய்ய முடிகிறது.

செயல்முறை நுண்ணறிவு
 

செயல்முறை நுண்ணறிவு

நம்பிக்கைகளை ஒப்பீடு செய்தல் மற்றும் அதிலிருந்து மாறுபடுதல் எனச் சற்று திறந்த மனதுடன் இருப்பது முதலீட்டாளர்கள் புரிந்துகொள்ளவும் அந்த நம்பிக்கைகளைச் சோதனைக்குள்ளாகவும் செய்கிறது.

இதன் மூலம் செயல் முறை நுண்ணறிவைப் பெற முடியும். இதனால் நமது சிந்தனைகள் மாற்றத்திற்கு இடமளித்து மேலும் கூர்மையான கவனத்தைத் தரும் (தொழில் அறிஞர் வாரென் பபெட் கூறுவதைப் போல)

அபாயங்களை எதிர்கொள்ளுதல்

அபாயங்களை எதிர்கொள்ளுதல்

மேற்கூறப்பட்ட புரிந்துகொள்ளும் நுண்ணறிவு தடைகளைத் தாண்டி வெற்றியைப் பெறத் தூண்டும்.

ஒரு வெற்றிகரமான முதலீட்டாளருக்கு முதலீட்டின் மொத்த செலவு, வாய்ப்புச் செலவுகள் மற்றும் அதனால் கிடைக்கும் பழங்கள் குறித்து நன்றாகத் தெரிந்திருக்கும்.

வெற்றி வாய்ப்புகளை அதிகரித்தல்

வெற்றி வாய்ப்புகளை அதிகரித்தல்

இதன் மூலம் ஒரு முதலீட்டாளர் சூழ்நிலையை நன்கு அறிந்து முடிவெடுக்கவும், வெற்றி வாய்ப்புகளுக்காகக் காத்திருக்கவும் முடிகிறது.

இதனைப் பொதுவாக "டைமிங்" என்று கூறுவர். அதாவது சந்தை நிலவரங்களை ஏற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல். ஆனால் என்னைப் பொறுத்தவரை ஒரு பரிவர்த்தனையின் மதிப்பு வெளியாகும் வரை அல்லது அதற்குண்டான துல்லியமான செலவு அல்லது அதில் உள்ள நட்டம் ஆகியவற்றை அறிந்துகொள்ளும்வரை காத்திருப்பது என்றுதான் கூறவேண்டும்.

இந்திய முதலீட்டு அனுபவம்

இந்திய முதலீட்டு அனுபவம்

ஒரு நல்ல முதலீட்டாளராக உருவெடுக்க இன்னும் நிறைய நுட்பமான திறமைகளும் அனும்பவமும் தேவைப்படுகின்றன.

இந்தியாவின் முதலீட்டு அனுபவமும் அதிலுள்ள ஆழம் குறைந்த சந்தை நிலவரமும் இந்தியாவில் உள்நாட்டு முதலீட்டுக்கான வாய்ப்புகள் இன்னும் அதிகமாகவே உள்ளன.

நெடுநாள் உயர்தரச் செயல்முறை (சுபீரியர் ஆல்பா)

நெடுநாள் உயர்தரச் செயல்முறை (சுபீரியர் ஆல்பா)

ஒரு ஒழுக்கமான நெறிமுறை மூலமே நெடுநாள் நீடிக்கக் கூடிய செயல்முறையை உருவாக்க இயலும். இது ஒரு நபரின் உண்மையான திறமையும் அறிவுக்கூர்மையும் கொண்டு பாரபட்சங்களையும் தவறான நம்பிக்கைகளையும் களைய உதவுகிறது.

மியூச்சுவல் பண்டில் முதலீடு செய்யலாம்

மியூச்சுவல் பண்டில் முதலீடு செய்யலாம்

ஒரு தனிநபர் முதலீட்டாளராகத் தகுந்த ஆர்வமும் திறமைகளையும் வளர்த்துக் கொள்ளாத வரையில் அவர்கள் மியூச்சுவல் பண்டின் மூலம் முதலீடு செய்து போட்டி, திறமை மற்றும் விடாமுயற்சி ஆகியவை தம்முடைய முதலீட்டு குறிக்கோளை நோக்கிச் செல்ல வேண்டும்.

சட்டுபுட்டுன்னு 1 கோடி ரூபாய் சம்பாதிக்க அருமையான வழி..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

How to be great and successful investor in stock market?

How to be great and successful investor in stock market? - Tamil Goodreturns
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X