டான் (TAN) நம்பர் விவரங்களை ஆன்லைனில் மாற்றுவது எப்படி ?

By Srinivasan
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டான் (TAN) நம்பர் எனப்படும் வரி பிடித்தம் மற்றும் வசூல் கணக்கு எண் என்பது ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பணம் பரிமாற்றம் செய்யம்போது சட்டப்படி வரிப் பிடித்தம் செய்யவும் அதனை வரித்துறைக்குச் செலுத்தவும் தேவையான ஒன்று.

 

டான் எண் ஒதுக்கப்பட்டுள்ள ஒரு நபர் அல்லது அமைப்பு தன்னுடைய விவரங்களை இணைய தளம் மூலம் கீழே சொல்லப்பட்ட வழி முறைகளின்படி மாற்றிக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.

தொடர்பு (லிங்க்)

தொடர்பு (லிங்க்)

வரி பிடித்தம் செய்பவர் https:tin.tin.nsdl.com/tan/index.html என்ற தொடர்பில் சென்று "Online Application for Changes" Correction in TAN Data for TAN allotted" என்பதை கொடுக்கவேண்டும்.

ஒரு விண்ணப்பப் படிவம் தோன்றி அதில் நீங்கள் தேவையான விவரங்களை நிரப்ப வேண்டும்.

தகவல்கள்

தகவல்கள்

வரி பிடித்தம் செய்பவர் தேவையான பொத்தான்களை தேர்வு செய்து இந்த படிவத்தை எங்கெங்கு மாற்றம் தேவையோ அங்கு தகுந்த விவரங்களுடன் பூர்த்தி செய்து (பெயர், முகவரி மற்றும் தொடர்பு). இதற்குண்டான கட்டணத்தை செலுத்தும் முறையினையும் குறிப்பிடவேண்டியது அவசியம்.

படிவத்தை பதிவு செய்தல்
 

படிவத்தை பதிவு செய்தல்

விண்ணப்பத்தை நிரப்பிய பிறகு படிவத்தை "submit" பட்டனை அழுத்தி பதிவு செய்ய வேண்டும். திரையில் விண்ணப்பம் பெறப்பட்டதற்கான தகவல் வேறு ஏதேனும் மாற்றம் செய்ய வேண்டுமா எனக் கேட்டு வரும். அனைத்து தகவல்களும் சரியாக இருப்பின் வரி பிடித்தம் செய்பவர் பணம் செலுத்தும் பக்கத்திற்குச் செல்லலாம் (payment section).

கட்டணம் (Fees)

கட்டணம் (Fees)

இந்த மாற்றங்களை செய்ய ருபாய் 63 கட்டணமாக வசூலிக்கப்படும். கட்டணமானது ஆன்லைன் வங்கி சேவை வாயிலாக கிரெடிட் அல்லது டெபிட் கார்டு மூலம் செலுத்தலாம். அல்லது "NSDL-TIN" என்ற பெயரில் காசோலை மூலமோ அல்லது வங்கி வரைவோலை (டிமாண்ட் டிராப்ட்) மூலமோ செலுத்தலாம்.

சான்று (Acknowledgement)

சான்று (Acknowledgement)

ஆன்லைன் மூலம் கட்டணத்தை செலுத்தியவுடன் அல்லது பிற முறைகளில் பணம் செலுத்தும் முறையை தேர்வு செய்ததும் திரையில் கட்டணம் பெறப்பட்டதற்கான ஒரு தகவல் 14 இலக்க எண்ணோடு தோன்றும். இதனை குறித்து வைத்துக்கொண்டு பின்னர் இது தொடர்பான தகவல் பரிமாற்றங்களுக்கு அந்த எண்ணை குறிப்பிட பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.

பின்னர் இந்த சான்றை கையொப்பமிட்டு காசோலை அல்லது வரைவோலை இருந்தால் அதனை இணைத்து அதனுடன் TAN நகலையும் (பழைய அல்லது புதிய) மாற்றப்பட்ட விவரங்களுக்கான சான்றையும் (proof) இணைத்து பின் வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்:

NSDL e-Governance Infrastructure Limited, 5th Floor, Mantri Sterling, Plot No.341, Survey No. 997/8, Model Colony, Pune-411016

கவனிக்க வேண்டிய சில முக்கிய விவரங்கள்

கவனிக்க வேண்டிய சில முக்கிய விவரங்கள்

இந்த விவர சான்று (acknowledgement) மற்றும் அது தொடர்பான தகவல்களுடன் ஆன்லைனில் சமர்ப்பிக்கப்பட்ட 15 நாட்களுக்குள் அனுப்பப்படவேண்டியது அவசியம்.

மாற்றப்பட்ட தகவல்களில் தவறுகள் ஏதேனும் இருப்பின் அதற்கான தகவல் திரையில் தோன்றும். அதனை சரி செய்த பிறகு மீண்டும் படிவத்தை சமர்ப்பிக்கலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: tan tax டான் வரி
English summary

How to change TAN data online

A Tax Deduction and Collection Account Number (TAN) is allotted to a person who is required by law to deduct tax from a payment made to another, and deposit the same with income tax authorities.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X