ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் இப்படி ஒரு ஓட்டையா..?

பணமில்லா பொருளாதாரத்தை உருவாக்குவோம் என்று விளம்பரபடுத்தும் நிலையில் அரசு சேவைகள் பல இன்னும் டிஜிட்டல் மையமாக்கப்படவில்லை.

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய அரசு சில வாரங்களாக டிஜிட்டல் இந்தியாவாக மாற்றுவோம், பணமில்லா பொருளாதாரத்தை உருவாக்குவோம் என்று விளம்பரபடுத்தும் நிலையில் அரசு சேவைகள் பல இன்னும் டிஜிட்டல் மையமாக்கப்படவில்லை.

அதே நேரம் டிஜிட்டல் மையமாக இருக்கும் சில அரசு துறை சேவைகளிலும் ஏகப்பட்ட பிரச்சனை. இப்படி இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கி சேவை அளிக்கும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் இணைய வங்கி சேவையில் ஒரு சில பிரச்சனைகள் இருக்கின்றன. அது பற்றி இங்குப் பார்ப்போம்.

பயனாளியைச் சேர்க்கும் முறை

பயனாளியைச் சேர்க்கும் முறை

பிற வங்கிகளின் இணையதள சேவைகளில் ஒரே நாளில் எத்தனைப் பயனாளியின் கணக்கு விவரங்களை வேண்டுமானாலும் பண பரிமாற்றத்திற்காகப் பதிவுசெய்யலாம்.

ஆனால் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் இன்ட்ரா வங்கி, வங்கிகளுக்கு இடையிலான, விசா, ஸ்டேட் பேங்க் குரூப் மற்றும் IMPS என வரும் ஒவ்வொரு பரிவர்த்தனை வகைகளிலும் ஒரு நாளுக்கு ஒரு பயனாளியை மட்டுமே சேர்க்க இயலும்.

 

ஒன்றுக்கு மேற்பட்ட பயனாளியை இணையதள சேவையில் சேர்க்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்?

ஒன்றுக்கு மேற்பட்ட பயனாளியை இணையதள சேவையில் சேர்க்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்?

உங்கள் ஸ்டேட் பாங்க் ஆப் இந்திய இணையதள வங்கி சேவையில் ஒன்றுக்கு மேற்பட்ட பயனாளியின் கணக்கு விவரங்களை உள்ளிட வேண்டும் என்றால் வங்கியிலோ அல்லது ஐஅர்டிஏ எனப்படும் ஏடிம் மூலம் இணைய வங்கி கோரிக்கை ஒப்புதலுக்கு அனுப்பும் சேவையின் வாயிலாகச் சேர்க்க இயலும்.

இணையதள வங்கி சேவை

இணையதள வங்கி சேவை

இணையதள வங்கி சேவையின் மூலம் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் பயனாளியின் கணக்கு விவரங்களைச் சேர்க்கும் போது பெறும் ஒரு முறை கடவுச்சொல்லை உள்ளிட்ட பிறகு 4 மணி நேரத்தில் பயனாளியின் வங்கி கணக்கிற்கு பணம் செலுத்த இயலும். ஆனால் ஒரு நாளுக்கு ஒரு பயனாளியை மட்டுமே பதிவு செய்ய இயலும்.

புதிய பயனாளியின் கணக்கு விவரத்தை மின்னஞ்சல் அல்லது குறுந்தகவல் அல்லது போன் அழைப்பு மூலம் சேர்க்க இயலுமா?

புதிய பயனாளியின் கணக்கு விவரத்தை மின்னஞ்சல் அல்லது குறுந்தகவல் அல்லது போன் அழைப்பு மூலம் சேர்க்க இயலுமா?

இல்லை. பயனாளியின் கணக்கு விவரங்களை சம்மந்தப்பட்ட படிவத்தில் பூர்த்தி செய்து உங்களது கையெழுத்துடன் வங்கியில் சமர்ப்பித்து மட்டுமே பயனாளியை சேர்க்க இயலும்.

ஒரு முறை கடவுச்சொல் இல்லாமல் பயனாளியை எப்படி இணையதள வங்கி கணக்கில் சேர்ப்பது?

ஒரு முறை கடவுச்சொல் இல்லாமல் பயனாளியை எப்படி இணையதள வங்கி கணக்கில் சேர்ப்பது?

எஸ்பிஐ இணையதள வங்கி சேவையில் பயனாளியைச் சேர்க்கும் போது வரும் ஒரு முறை கடவுச்சொல்லுக்கான பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் இல்லை என்றால் 'ஒப்புதல்'-க்கான கோரிக்கையை வங்கிக்கே அனுப்பலாம். அதற்கு உங்கள் கணக்கு உள்ள வங்கி கிளை ஒப்புதல் அளிக்கும் போது உடனே பரிவர்த்தனை செய்ய இயலும். நான்கு மணி நேரம் காத்திருக்கும் என்ற நிலை இல்லை.

இங்கு கிளிக் செய்க.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

SBI's FAQs on New Beneficiary Addition Process

SBI's FAQs on New Beneficiary Addition Process
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X