ஸ்மார்ட்போனை கிரெடிட்,டெபிட் கார்டு ரீடர்களாக அல்லது பிஓஎஸ் இயந்திரங்களாக மாற்றக்கூடிய வழிகள்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெரும் மதிப்பிலான ரூபாய் நோட்டுகளைச் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்ததில் இருந்து டிஜிட்டல் பண பரிவத்தனை செய்ய மத்திய அரசு அறிவுறுத்தி வருகின்றது. மேலும் பனமில்லா பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் விதமாக பல விளம்பரங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

 

இதனால் பல வியாபாரிகள் பேடிஎம் போன்ற செயலிகள் மற்றும் பாயிண்ட் ஆப் சேல்(பிஓஎஸ்) இயந்திரங்கள் போன்றவற்றை பயன்படுத்தி கட்டணங்களை பெறுவது அதிகரித்து வருகின்றது.

வங்கிகளும் அதற்காக பிஓஎஸ் இயந்திரங்களை அதிகளவில் விற்கத் துவங்கியுள்ளது. ஒரு பக்கம் செயலிகள் பதிவிறக்கும் அதிகர்த்து வரும் நிலையில் உங்களது ஸ்மார்ட்போனை எப்படி கிரெடிட்-டெபிட் கார்டு ரீடர்களாக அல்லது பிஓஎஸ் இயந்திரங்களாக மாற்றலாம் என்று இங்குப் பார்ப்போம்.

ஸ்மார்ட்போன் - கார்டு ரீடர்

ஸ்மார்ட்போன் - கார்டு ரீடர்

வியாபாரிகள் உங்கள் ஸ்மார்ட்போனை கார்டு ரீடராக மாற்ற மொபைல் செயலியை பதிவிறக்கி அதற்கு ஏற்ற கார்டு ரீடர் ஒன்றை வாங்க வேண்டும்.

செயலியை உங்கள் ஸ்மார்ட்போனில் நிறுவிய உடன் கார்டு ரீடரை இணைத்துவிட்டு செயலியில் எவ்வள பணம் என்று உள்ளிட வேண்டும்.

பின்னர் உங்களது வாடிக்கையாளர்களின் கிரெடிட் அல்லது டெபிட் கார்டினை கார்டு ரீடரில் ஸ்வைப் செய்தபின் கார்டின் பின் எண்ணை உள்ளிட்டவுடன் பரிவர்த்தனை முடிந்துவிடும்.

எனவே இங்கு நாம் இந்தியாவில் ஸ்மார்ட்போன் மூலம் கிரெடிட், டெபிட் கார்டு ரீடர் பரிவர்த்தனை சேவைகளை அளிக்கும் செயலிகள் மற்றும் சாதனங்கள் பற்றிப் பார்ப்போம்.

இபைசா(epaisa)

இபைசா(epaisa)

இ-பைசா என்ற செயலியின் மூலம் ஸ்மார்ட்போன் பயன்படுத்தி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளில் இருந்து பணத்தை பெறலாம்.

இபைசா செயலியுடனான கார்டு ரீடரை இணைக்கக் குறைந்தது மாதம் 199 ரூபாய் முதல் 999 ரூபாய் வரை கட்டணமாக செலுத்த வேண்டி வரும்.

அது மட்டும் இல்லாமல் முதன் முதலாகத் துவக்க கட்டணமாக 3,500 ரூபாய் செலுத்த நேரிடலாம். இந்தக் கட்டணம் நீங்கள் தேர்ந்து எடுக்கும் மாத திட்டத்தை பொருத்து குறையும்.

எம்பிஓஎஸ்
 

எம்பிஓஎஸ்

எம்பிஓஎஸ் சேவையை ஸ்மார்ட் போனில் பயன்படுத்த எம்ஸ்வைப் என்ற செயலியை பதிவிறக்க வேண்டும். இந்தச் செயலியின் மூலம் கார்டு ரீடர்களை இணைத்துப் பயன்படுத்த 2000 ரூபாய் முதல் 3000 ரூபாய் வரை தொடக்க கட்டணமாகவும், மாதம் 30 ரூபாய் சேவை கட்டணமாகவும் வசூலிக்கப்படுகின்றது.

பேபிஓஎஸ்

பேபிஓஎஸ்

இந்தச் செயலியை உங்களது ஸ்மார்ட் போனில் பதிவிறக்குவதன் மூலம் நேரடியாக வாடிக்கையாளர் எவ்வளவு பணம் செலுத்த வேண்டும் என்று உள்ளிட்ட பிறகு கார்டு விவரங்களைத் தெரிவிக்க வேண்டும்.

உடனே இந்த செயலி வாடிக்கையாளர்களின் கணக்கில் இருந்து பணத்தை பெற்றுக்கொண்டு மூன்று நாட்களில் உங்கள் கணக்கில் பணத்தைச் செலுத்திவிடும்.

சர்க்கில் இட் அப் மற்றும் பேபால்

சர்க்கில் இட் அப் மற்றும் பேபால்

ஸ்மார்ட்போனை பிஓஎஸ் இயந்திரமாகப் பயன்படுத்தக்கூடிய செயலிகள் மற்றும் கார்டு ரீடர்களை விரைவில் பேபால் நிறுவனங்கள் இந்தியாவில் வெளியிட இருப்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Smartphone as POS for credit and debit card

Smartphone as POS for credit and debit card
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X