எந்தெந்த ராசிக்காரர்கள் கோடீஸ்வரர் ஆக வாய்ப்பு உள்ளது என்பது தெரியுமா?

Posted By: Siva lingam
Subscribe to GoodReturns Tamil

கடந்த ஆண்டுப் போர்ப்ஸ் பட்டியலில் உள்ள 100 கோடீஸ்வரர்களின் பட்டியலை ஆராய்ந்து பார்த்த போது, அவர்கள் அனைவரும் ஒருசில குறிப்பிட்ட ராசியைச் சேர்ந்தவர்களாக இருப்பது தெரிய வந்தது.

அந்த ராசி உங்களுக்கு இருக்கின்றதா? என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே படியுங்கள்.

தனுசு ராசி 6ஆம் இடம்

தனுசு ராசிக்காரர்கள் பொதுவாகப் புத்திசாலித்தனமாக, தாராளமான மனதுடைய மற்றும் நகைச்சுவை குணம் கொண்டவராக இருப்பார்கள். துரதிஷ்டவசமாக இவர்கள் ஒரு வாக்குறுதியைக் கொடுத்தால் அதைக் காப்பாற்ற வேண்டும் என்ற முனைப்பு இவர்களிடம் இருக்காது. எந்த ஒரு செயலையும் மிகவும் எளிதாக அதே நேரத்தில் பதட்டமாக முடிப்பார்கள்.

தனுசு ராசி 9ஆம் இடம்

2016 பட்டியலில் இந்த ராசிக்குரியவர்கள் மூன்று கோடீஸ்வரர்கள் உள்ளனர். ஃபிடலிட்டி இன்வெஸ்ட்மெண்ட் நிறுவனத்தின் சி.இ.ஓ அபிகெயில் ஜான்சன். இவரது சொத்து மதிப்பு $13.4 பில்லியன், மற்றும் இந்துஜா நிறுவனத்தின் நிறுவனர்கள் இந்துஜா பிரதர்ஸ். இவர்களது சொத்து மதிப்பு. $14.4 பில்லியன், மேலும் பிராப்பர்ட்டி டேவிட் & சைமன் ரியூபன். இவரது சொத்து மதிப்பு $14.4 பில்லியன்.

கடகம் 7வது இடம்

பொதுவாகக் கடக ராசியை உடையவர்கள் உறுதியான, விசுவாசமான, வசப்படுத்தும் குணங்கள் கொண்ட மற்றும் மிகவும் கற்பனையான நபர்களாக இருப்பார்கள்> மேலும் இவர்கள் எதிர்மறையாக , மந்தமான சந்தேகத்திற்கிடமான, சூழ்ச்சி மற்றும் பாதுகாப்பற்ற அம்சங்களையும் கொண்டவர்கள்.

இந்தக் கடக ராசிக்குரிய கோடீஸ்வரர்கள் என்று பார்த்தால் இங்கே ஐந்து கோடீஸ்வரர்கள் குறிக்கப்பட்டுள்ளது. அவர்கள்
டெஸ்லா மோட்டார் நிறுவனர் மற்றும் சி.இ.ஓ எலான் மஸ்க். இவர் $12 பில்லியன் சொத்துக்களை உடையவர், மேலும் $12.3 பில்லியன் சொத்து மதிப்பை உடைய ஹெயின்கென் ஹெரஸ் சார்லினே மற்றும் $11.1 பில்லியன் சொத்துமதிப்பை உடைய HCL நிறுவனர் ஷிவ் நாடார்.

 

கன்னி 5ஆம் இடம்

கன்னிராசியை உடையவர்கள் வெற்றிகரமான சாதனையாளர்களாக இருப்பார்கள். விசுவாசமான, நடைமுறைக்குத் தகுந்தவாறு நடப்பார்களாக, பகுப்பாளியாக, கடின உழைப்பாளிகளாக இருப்பார்கள். மற்றவர்களின் துயர் துடைப்பதில் ஆர்வம் உள்ளவர்களாக இருப்பார்கள். இவர்களிடம் போலித்தனம் இருக்காது.

இந்த ராசியை உடையவர்கள் ஆறு பேர் கோடீஸ்வரர்களாக உள்ளனர். இவர்களில் $72.7 பில்லியன் சொத்து மதிப்புள்ள வாரன் பப்பெட், $22.7 பில்லியன் சொத்து மதிப்பு உள்ள அலிபாபா நிறுவனத்தின் சேர்மன், 27.8 டாலர் சொத்து மதிப்புள்ள ஜோர்க் பாலோ ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

 

மீனம் 4ஆம் இடம்

மீனம் ராசியை உடையவர்கள் மிகப்பெரிய உள்ளுணர்வு உடையவர்கள். மற்றும் மென்மையான, கருணையுள்ள, கலையம்சம் உள்ளவர்கள். ஆனால் இவர்கள் ஒருவித பயத்துடனே வாழ்வார்கள். அதிக நம்பிக்கையுடன் இருக்கும் இவர்கள் தியாகியாகவும் இருப்பார்கள்.

இந்த ராசியில் ஆறு கோடீஸ்வர்கள் உள்ளனர். ஆர்களில் $34 பில்லியன் சொத்து மதிப்பை உடைய லக்சுரி குட்ஸ் பாரோன் நிறுவனத்தின் சி.இ.ஓ பெர்னார்டு அர்னால்ட், $10.6 பில்லியன் சொத்து மதிப்பை உடைய ரூபர்ட் முர்டாக் என்ற ஆஸ்திரேலியாவின் மீடியா நிறுவனர், $19.8 பில்லியன் சொத்து மதிப்பை உடைய டெல் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் சி.இ.ஓ ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

 

விருச்சிகம் 5ஆம் இடம்

இந்த ராசியை உடையவர்கள் துணிச்சலான சமயோசித, உணர்ச்சிவசப்பட்ட மற்றும் பிடிவாதமாகக் குணத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள் இவர்களின் பலவீனங்களைப் பொறாமை, அவநம்பிக்கை ஆகியவை மற்றும் ரகசியத்தைக் காப்பவர்கள்.

இந்த ராசியை உடையார்கள் போர்ப்ஸ் பட்டியலில் ஏழு பேர் உள்ளனர். இவர்களில் $75 பில்லியன் சொத்து மதிப்பை உடைய உலகின் நம்பர் ஒன் கோடீஸ்வரர் பில்கேட்ஸ், $16.7 பில்லியன் சொத்து மதிப்பை உடைய ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்டீவ் ஜாப்ஸ், $28.7 பில்லியன் சொத்து மதிப்பை உடைய சீனாவின் ரியல் எஸ்டேட் தொழிலதிபர் வாங் ஜியாலின் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

 

மிதுனம் 6ஆம் இடம்

இவர்கள் மிகவும் அதிர்ஷ்டக்காரர்களாகவும், ஐடியாக்களைப் பகிர்ந்து கொள்பவர்களாகவும் இருப்பார்கள். மேலும் மிகவும் ஆர்வம் உள்ளவர்களாகவும், சூழ்நிலைக்குத் தக்கவாறு தங்களை மாற்றிக் கொள்ளும் தன்மை உடையவர்களாகவும் இருப்பார்கள். இருப்பினும் இவர்கள் சந்தேகமாக மற்றும் சீரற்ற குணங்களுடன் படபடப்புடன் இருப்பார்கள்.

மிதுன ராசியைச் சேர்ந்தவர்கள் டாப் 100 பணக்காரர்கள் பட்டியலில் 9 பேர்கள் உள்ளனர். அவர்களில் $23.8 பில்லியன் சொத்து மதிப்பை தாம்சன் ரியூட்டர்ஸ் நிறுவனத்தின் சேர்மன் டேவிட் தாம்சன், $33.6 பில்லியன் சொத்து மதிப்பை உடைய வால்மார்ட் நிறுவனத்தின் ஜிம் வால்டன், $15.3 பில்லியன் சொத்து மதிப்பை உடைய லண்டன் தொழிலதிபர் லென் பிளாவாட்னிக் ஆகியோர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்.

 

துலாம் ராசி 2ஆம் இடம்

இந்த ராசியை உடையவர்கள் பொதுவாக ராஜதந்திரியாக இருப்பார்கள். நியாயமான எண்ணம், சமூக மற்றும் கூட்டுறவு குணங்கள் கொண்டவராக இருந்தாலும், இவர்களிடம் காழ்ப்புணர்ச்சி குணம் அவ்வப்போது எட்டி பார்க்கும்.

இந்த ராசியிலும் 9 பேர் போர்ப்ஸ் பட்டியலில் உள்ளனர். அவர்களில் குறிப்பிடத்தக்கவர்களாக $36.1 பில்லியன் சொத்து மதிப்பை உடைய லியான்னே பெட்டர் கோர்ட், $20.8 பில்லியன் சொத்து மதிப்பை உடைய H&M சேர்மன் ஸ்டீபன் பெரச்சான், #32.3 பில்லியன் சொத்து மதிப்பை உடைய வால்மார்ட் நிறுவனத்தின் அலைஸ் வால்டன் ஆவார்கள்.

 

மகரம் 5ஆம் இடம்

இந்த ராசியை உடையவர்கள் பொறுப்புணர்வு உள்ளவர்களாகவும், ஒழுக்கமான சுய கட்டுப்பாடு மற்றும் முழுத் தலைமைக்கானஅங்கீகாரம் பெற்றவர்களாக இருப்பார்கள். இவர்களது. குறைகள் என்று பார்த்தால் தவறுகளுக்கு மன்னிப்பு தராதவர்களாக இருப்பார்கள்.

இந்த ராசியை உடையவர்கள் 10 பேர் போர்ப்ஸ் பட்டியலில் உள்ளனர். அவர்களில் $45.2 பில்லியன் சொத்து மதிப்பை உடைய அமேசான் நிறுவனத்தின் ஜெப் பெசாஸ், $12.2 பில்லியன் சொத்து மதிப்பை உடைய ரஷ்ய அதிபர் விளாடிமின் புதின, $17.2 பில்லியன் சொத்து மதிப்பை உடைய நேஷனல் பேங்க் ஆப் நியூயார்க் சேர்மன் ஜோசப் சஃப்ரா ஆகியோர் உள்ளனர்.

 

சிம்மம் முதலாம் இடம்

சிம்ம ராசியை உடையவர்கள் பொதுவாகக் கிரியேட்டிவ் உணர்ச்சி, தாராள மற்றும் மனதை உருக்கும் குணம், மகிழ்ச்சியான மனம் ஆகிய நற்பண்புகள் உள்ளவர்களாக இருப்பார்கள். ஆனால் குறைகள் என்று பார்த்தால் இவர்கள் பிடிவாதக்காரர்கள் மற்றும் சோம்பேறி, மேலும் திமிர்பிடித்தவர்களாக இருப்பார்கள்.

இந்த ராசியை உடையவர்கள் 11 பேர் போர்ப்ஸ் பட்டியலில் உள்ளனர். அவர்களில் குறிப்பாக $34.4 பில்லியன் சொத்து மதிப்பை உடையக் கூகுள் நிறுவனத்தின் இணை நிறுவனர் செர்கே பிரின், $11.5 பில்லியன் சொத்து மதிப்பை உடைய பிரன்கோயிஸ் பினால்ட், மற்றும் ஆரக்கள் நிறுவனத்தின் நிறுவனர் லாரி எல்லிசன். இவரிடம் $43.3 பில்லியன் சொத்து மதிப்பை உடையது.

 

மேஷம் 3ஆம் இடம்

மேஷ ராசியை உடையவர்கள் பொதுவாக உறுதியுடன் மன தைரியம் உள்ளவர்களாகவும், தன்னம்பிக்கை, நேர்மையான மற்றும் உணர்ச்சி மிகுந்தவர்களாகவும் இருப்பார்கள். இவர்களுடைய பலவீனம் என்ன என்றால் முன்கோபம், மந்தமான, பொறுமையிழக்கும் தன்மையுடன் மனக்கிளர்ச்சி உள்ளவர்களாக இருப்பார்கள்.

இந்த ராசியை உடையவர்கள் 12 பேர் போர்ப்ஸ் பட்டியலில் கோடீஸ்வரர்களாக உள்ளனர். அவர்களில் குறிப்பாக $19.3 பில்லியன் சொத்து மதிப்பை உடைய முகேஷ் அம்பானி, $35.2 பில்லியன் சொத்து மதிப்பை உடையக் கூகுள் நிறுவனத்தின் இணை நிறுவனர் லாரி பேஜ், $67 பில்லியன் சொத்து மதிப்பை உடைய ஜாரா நிறுவனத்தின் நிறுவனர் அமான்சியோ ஒர்டேகா ஆகியோர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்.

 

ரிஷபம் 4ஆம் இடம்

பொதுவாக இந்த ராசியை உடையவர்கள் பெரிய தலைவர்களாக இருப்பார்கள். இவர்கள் நம்பகத்தன்மையுடன், நடைமுறைக்குத் தகுந்தவர்களாகவும் பொறுப்பு மற்றும் நிலையான மனதுடன் இருப்பார்கள். எனினும், அவர்கள், பிடிவாதமாகவும் பொறாமை உடையவர்களாகவும் இருப்பார்கள்.

இந்த ராசியை உடையவர்கள் 13 பேர் போர்ப்ஸ் பட்டியலில் கோடீஸ்வரர்களாக உள்ளனர். அவர்களில் குறிப்பாக $44.6 பில்லியன் சொத்து மதிப்பை உடைய பே'ஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க், $16.8 பில்லியன் சொத்து மதிப்பை உடைய ஜெர்மனியின் சுசானே க்ளாட்டன், $39.6 பில்லியன் சொத்து மதிப்பை உடைய கோச் இண்டஸ்ட்ரீஸ் பிரசிடெண்ட் டேவிட் கோச் ஆகியோர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Which zodiac sign do most billionaires share?

Which zodiac sign do most billionaires share?
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns