பணம் சம்பாதிக்கும் புதிய மந்திரம் தெரியுமா உங்களுக்கு..?

இந்தியாவின் செல்வ வளம் கடந்த பத்தாண்டுகளில் மிகப்பெரிய மாற்றங்களைச் சந்தித்துள்ளது. வேகமாக வளர்ந்து வரும் பணக்கார்களின் எண்ணிக்கையானது உலகில் வேறு எந்த நாட்டையும் விட இந்தியாவில் கோடிஸ்வரர்களின் எண்ணி

சென்னை: இந்தியாவின் செல்வ வளம் கடந்த பத்தாண்டுகளில் மிகப்பெரிய மாற்றங்களைச் சந்தித்துள்ளது. வேகமாக வளர்ந்து வரும் பணக்கார்களின் எண்ணிக்கையானது உலகில் வேறு எந்த நாட்டையும் விட இந்தியாவில் கோடிஸ்வரர்களின் எண்ணிக்கை மேலும் உச்சமடைந்து விறுவிறுப்பான வேகத்தில் செல்லும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வெற்றிக்கான மந்திரம் என்ன..??

10 லட்சம் பேர்

10 லட்சம் பேர்

2015 ம் ஆண்டில் நடத்தப்பட்ட ஒரு பொருளாதாரப் புலனாய்வு பிரிவு ஆய்வின் படி அடுத்த ஐந்து ஆண்டுகளில், புதிய செல்வந்தர்களின் எண்ணிக்கை அல்லது ஒரு லட்சம் அமெரிக்க டாலரில் இருந்து ஒரு மில்லியன்(பத்து லட்சம்) அமெரிக்க டாலர் நிகராகச் சொத்துக்கள் உள்ள குடும்பங்களின் எண்ணிக்கை, இந்தியாவில் 10 மடங்கு அதாவது 49 லட்சம்(4.9 மில்லியன்) உயரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது என்று கண்டறியப்பட்டது.

47.4 சதவீத வளர்ச்சி

47.4 சதவீத வளர்ச்சி

புதிய செல்வந்தர்கள் (NWBs) எண்ணிக்கை 2020ம் ஆண்டு 47.4% உயரும். இவர்களின் உத்தேச சராசரி சொத்துக்கள் ($178.000 ) ஒரு லட்சத்து எழுபத்து எட்டாயிரம் அமெரிக்க டாலர் அளவிற்கு இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த எண்ணிக்கையின் மூலம், புதிய செல்வந்தர்களின் வரையறை கூட மாறிவிட்டது. நீண்ட காலம் முன்பு, வர்த்தக உரிமையாளர்கள் மற்றும் அவர்களின் வாரிசுகள் மட்டும் செல்வத்தைத் திரட்டினர் அல்லது செல்வத்தை அதிகரிக்க முடியும் என்றாலும் கடந்த 8-10 ஆண்டுகளில், வணிக நிறுவனங்களின் மேலாளர்கள் மற்றும் தொழில் வல்லுநர்கள் கணிசமாகச் செல்வத்தை உருவாக்குவதில் முனைப்பு காட்டினர்.

 

புதிய வாய்ப்பு

புதிய வாய்ப்பு

வளர்ந்து வரும் தொழில் வல்லுநர்களுக்குக் கிடைக்கும் அங்கீகாரம் மற்றும் அவர்களின் பங்கு ஒரு நிறுவத்தை உருவாக்குவதில் பங்கு வகிக்கின்றது. இந்தத் திறமையாளர்களின் மதிப்பு அவர்களின் முதலாளிகளிடம் இருந்து செல்வம் பகிர்வுக்கு வழிவகுத்தது. இது கொழுத்த பணபரிசுகளாகவோ அல்லது முக்கியமாக, பணியாளர் பங்கு விருப்பங்கள் திட்டங்கள் மூலம் சென்றடைந்தது.

முதலாளித்துவம் குறைந்தது..

முதலாளித்துவம் குறைந்தது..

இந்தப் போக்கின் விளைவாகத் தொழிற்சாலைகள், வெளிநாட்டுக் கிளை நிறுவனங்கள் மற்றும் பரம்பரை சார்ந்த தொழில் வணிக நிறுவனங்களில் பணியாற்றும் தொழில் வல்லுநர்கள் கணிசமான அளவிற்குச் செல்வந்தர்களாக மாறினர்.

முக்கியத் துறைகள்

முக்கியத் துறைகள்

ஐ.ஐ.எப்.எல் என்ற தனியார் சொத்து மேலாண்மை நிறுவன உயர் அதிகாரியான யதின் ஷா என்பவர் "நடுத்தர வணிகம் மேற்கொள்ளும் முதலாளிகள் ஈட்டக்கூடிய அதே அளவிற்குத் தொழில் வல்லுநர்களும் செல்வம் ஈட்டுகிறார்கள் " என்று கூறுகிறார்.

சுவராசியமாக, பெறு நிறுவனங்களில் பணியாற்றும் குறிப்பாக ஆலோசனை, தகவல் தொழில் நுட்பம், நிதி சேவைகள் மற்றும் முதலீட்டு நிறுவங்களில் பணியாற்றும் இந்தச் செல்வந்த தொழில் வல்லுநர்கள் ஏதேச்சையாகத் தாங்கள் பணக்காரர் ஆகிவிட்டதைப் பார்க்கிறார்கள்.

 

40 வயது

40 வயது

மேலும் யதின் ஷா கூறுகையில் நான் சந்தித்த பலரும் பெரும்பாலும் தங்களின் 40 வயதின் ஆரம்பத்தில் அல்லது 40 வயது நெருங்கிக் கொண்டு இருப்பவர்கள் அவர்களுடைய மதிப்பை அறிந்து ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளனர்.

அவர்களின் பின்னணி நிச்சயமாக ஒரு எண்ணிக்கையையோ அல்லது குடும்பப் பின்னணியையோ அவர்கள் பொறியியல் கல்லூரிகள் அல்லது மேலாண்மை நிறுவனங்களில் படித்த படிப்பு முதலியன சார்ந்து அல்லது தங்கள் ஆரம்பக் கால வேலை பார்த்த நாட்களைச் சார்ந்து இல்லை.

 

இரண்டு வகையான தொழில்

இரண்டு வகையான தொழில்

தொழிலில் இரண்டு வகையான வளர்ச்சி இருக்கிறது. நிறுவனம் தானாக உற்பத்தி செய்து, சந்தையைப் பிடிப்பதன் மூலமாக வளர்வது ‘ஆர்கானிக் குரோத்' என்று சொல்லுவார்கள். இன்னொன்று ஏற்கெனவே செயல்பட்டு வரும் நிறுவனத்தைக் கையகப்படுத்துதன் மூலம் சந்தையை விரிவுபடுத்துவது. இது ‘இன்ஆர்கானிக் குரோத்' என்று சொல்லப்படும்.

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்

தொழிலின் நிலையான பொருளாதார வளர்ச்சிக்கும் மற்றும் நிகரான மேம்பாட்டிற்கும், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. குறைந்த மூலதனத்தில் நிலைத்த வேலைவாய்ப்பு அளிப்பது இப்பிரிவின் மேன்மையாகும்.

தொழில் முனைவோர் மேம்பாடு அடைவதற்கு நாற்றங்காலாக விளங்குவது குறு, சிறு மற்றும் நடுத்தரத்தொழில் துறையேயாகும். இதில் முதல் தலைமுறை தொழில் முனைவோர் பங்கு அளப்பரியது.

 

மந்திரம்

மந்திரம்

உண்மையில் சிறந்த சேமிப்பு என்பது
செலவினம் = வருமானம் - சேமிப்பு என்பதாகும்.

"தேவை வரும் போது பார்த்துக் கொள்ளலாம் என்கிற மனநிலை மாறி, எதிர்காலத் தேவைகளை வகைப்படுத்தி அதற்காகத் திட்டமிட்டு முதலீட்டை ஆரம்பிக்க வேண்டும் என்கிற எண்ணம் இன்றைய மனிதர்களின் மனதில் பெருகி வருகிறது.

‘வருமானம் பெருக வேண்டுமெனில் செலவு களும் அதிகரிக்க வேண்டும். ஆனால் அந்தச் செலவானது ஆரோக்கியமானதாக இருக்க வேண்டியது அவசியம்"

"செலவுகள் அவசியமானது தான். ஆனால், அந்தச் செலவுகள் அவசியம்தானா அல்லது அநாவசியமா என்பதை ஆராய வேண்டும். அதனால் சேமிப்பதற்காகத் திட்டமிடுவதுபோல, செலவுகளுக்காகவும் திட்டமிட வேண்டியது அவசியமாகிறது.

 

முதலீடு

முதலீடு

ஒருவருடைய முதலீடானது ஒரே திட்டத்தில் இருந்தால் ரிஸ்க் அதிகம் என்பதோடு மட்டுமல்லாமல், வளர்ச்சியும் பெரிய அளவில் இருக்காது. அதனால்தான் நாம் செய்யும் முதலீட்டைப் பிரித்து மேற்கொள்ளும்படி பரிந்துரைப்பார்கள்.

என் முதலீட்டின் மீது அக்கறை உண்டு!

என் முதலீட்டின் மீது அக்கறை உண்டு!

‘‘என் பணத்தின் மீதும், நான் செய்யும் முதலீட்டின் மீதும் எனக்கு இல்லாத அக்கறை வேறு யாருக்கு இருந்துவிட முடியும் என்பதே என் எண்ணம்.
அதனால் நிதி ஆலோசகர்கள் முதலீட்டுத் திட்டங்களைப் பரிந்துரை செய்தாலும் அதுகுறித்த தகவல்களை, அந்தத் திட்டத்தின் கடந்தகால வளர்ச்சியை இணையதளம் வாயிலாகத் தெரிந்துகொண்டு, ஒருமுறைக்கு இருமுறை ஆராய்ந்த பின்னரே முதலீட்டை ஆரம்பிப்பேன்.

அதேசமயம், முதலீட்டுத் திட்டங்கள் குறித்த டெக்னிக்கல் விஷயங்களை நிதி ஆலோசகர்களிடம் கேட்டு தெரிந்துகொள்வதிலும் கவனமாக இருப்பேன்.
இப்படி ஆராய்ந்து முதலீட்டை மேற்கொள்ளும் போது நஷ்டம் வந்தாலும் அதை இலகுவாக எடுத்துக்கொண்டு, முதலீட்டைப் பெருக்க என்ன செய்ய வேண்டும் என்கிற அடுத்தகட்ட நடவடிக்கையில் இறங்குவேன்'

 

பணம் மேலாண்மை

பணம் மேலாண்மை


"ஷா " வின் கூற்றுப்படி தொழில்முறை பணக்காரர்கள் . ஒரு நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி யை கொண்டுள்ள ஒரு முதலீட்டாரை போல அல்லது ஒரு வீட்டில் உள்ள கணக்குகளார்களைக் கொண்ட ஒரு நிறுவனம் மேம்படுத்துவதற்குப் போலல்லாமல், பணம் மேலாண்மை வரும் போது நிபுணர்கள் இருந்து உதவியை நாட வாய்ப்பு அதிகமாக இருக்கிறது என்கிறார்.

முதலீடும் திட்டமும்

முதலீடும் திட்டமும்

வல்லுநர் தங்கள் சொந்த செல்வம் நிர்வகிக்க நேரம் இல்லாமையால் தங்களின் முதலீட்டுப் பயணத்திற்கான ஆலோசனை பெற நிதி மேலாண்மை ஆலோசகர் தேவைப்படுகிறார்.

"இதன் விளைவாக, தங்கள் தனிப்பட்ட நிதி சிறப்பாகத் திட்டமிட்டு நிர்வகிக்கப்படும்," ஷா கூறினார். எந்தவொரு நெறிமுறைப் படுத்தப்பட்ட முதலீட்டுத் திட்டமும், தவறானதல்ல. ஆனால், அந்தத் திட்டம் நம்முடைய ரிஸ்க் மற்றும் தேவைக்கு ஏற்றதா என்பதை ஆராய்வது அவசியம்.

 

ஆய்வு

ஆய்வு

"ஒவ்வொரு முறையும் முதலீடு செய்யும்போது சிறிது அவகாசம் எடுத்து சாதக, பாதகங்களை ஆராய்ந்து முதலீடு செய்தல் வேண்டும். அப்படிச் செய்யும்போது அந்த முதலீட்டுத் திட்டத்துக்கான அறிவு முதலீட்டாளர்களுக்குக் கிடைக்கும். அதுமட்டுமல்லாமல், அந்த முதலீட்டுத் திட்டத்தின் மீதான ரிஸ்க் எவ்வளவு என்பதையும் உணர்ந்துகொள்ள முடியும்.

மற்றவர்கள் சொல்

மற்றவர்கள் சொல்

ஆனால், வெறுமனே மற்றவர்கள் சொல்லக் கேட்டுச் செய்யும்போது, முதலீட்டில் நஷ்டம் ஏற்பட்டால் ஏமாற்றி விட்டார்களோ என்கிற எண்ணம் உருவாகி சங்கடத்தை உண்டாக்கும்.

மறு ஆய்வு

மறு ஆய்வு

"ஒருவர் செய்த முதலீட்டை 3 - 6 மாதம் அல்லது வருடத்துக்கு ஒருமுறையாவது போர்ட்ஃபோலியோ மறுஆய்வு செய்யவில்லை எனில், அந்த முதலீட்டைச் செய்ததற்கான பலனைப் பெறமுடியாமல் போய்விடும். செய்திருக்கும் நிதித் திட்டத்தின்படி, சரியாகப் பயணப்படுகிறோமா என்பதைத் தெரிந்து கொள்வது அவசியம்.

அப்போதுதான் நாம் செய்திருக்கும் முதலீடுகள் நமக்குத் தொடர்ச்சியாக வருமானம் தருகிறதா என்பது தெரியும். ஒருவரின் முதலீட்டுக் காலம் ஐந்தாண்டுகளுக்குக் குறைவாக இருந்தால், 3-6 மாதங்களுக்கு ஒருமுறை போர்ட்ஃபோலியோ ரிவியூ செய்து கொள்வது அவசியம். நீண்டகாலம் எனில், ஆண்டுக்கு ஒருமுறை செய்யலாம்" என்றார்.

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+