இது உங்களின் 'உரிமை' என்பதை தெரிந்துகொள்ளுங்கள்..!

இது உங்களின் 'உரிமை' என்பதை தெரிந்துகொள்ளுங்கள்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: ஒரு முதலீட்டாளராக மற்றும் வரி செலுத்துபவராக, உங்களுக்குச் சில உரிமைகள் மற்றும் கடமைகள் உள்ளன.

இங்கே ஒவ்வொரு முதலீட்டாளருக்கும் தேவைப்படும் போது அதன் மீது நடவடிக்கை எடுக்கக்கூடிய 10 அடிப்படை உரிமைகளின் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது.

1. செலுத்தப்பட்ட தரகுத் தொகையைத் தெரிந்து கொள்ளும் உரிமை.

1. செலுத்தப்பட்ட தரகுத் தொகையைத் தெரிந்து கொள்ளும் உரிமை.

உங்களுக்கு விற்கப்பட்ட நிதித் தயாரிப்புகளிலிருந்து உங்கள் நிதி விநியோகஸ்தர் அல்லது காப்பீட்டு முகவர் எவ்வளவு தரகை சம்பாதிக்கிறார் என்பதைத் தெரிந்து கொள்வது உங்கள் உரிமையாகும்.

ஒருவேளை காப்பீட்டுக் கொள்கையாக இருந்தால், விற்பனைப் பங்கு காப்பீட்டு முனைமத் தொகையைச் சார்ந்தது. உங்கள் காப்பீட்டு முகவர் ஒரு காப்பீட்டு கொள்கையை விற்பதற்கு முன்பு உங்களிடம் இதைப் பற்றிய விவரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.

ஒரு பரஸ்பர நிதியின் விநியோகஸ்தருக்கு நிதி நிறுவனத்தால் செலுத்தப்பட்ட தரகுத் தொகை உங்கள் கணக்கு அறிக்கையில் வெளிப்படுத்தப்படும்.

உங்களுக்குத் தேவையான தகவல்கள் வழங்கப்படவில்லையென்றால் உரியச் சட்ட சீரமைப்புகளான, பரஸ்பர நிதிக்கு SEBI யையும் மற்றும் காப்பீட்டுக்கு IRDAI யையும் இவர்களைத் தொடர்பு கொள்ளும் உரிமை உங்களுக்கு இருக்கிறது.

 

2. காப்பீட்டுத் திட்டத்தைத் திருப்பி அளித்துவிடும் உரிமை.

2. காப்பீட்டுத் திட்டத்தைத் திருப்பி அளித்துவிடும் உரிமை.

ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தில் இலவச தேர்ந்தெடுக்கும் காலம் (Free Look Period) வழங்கப்படுகிறது, இது உங்களுக்குக் காப்பீட்டுத் திட்டம் வேண்டாமென்றால் காப்பீட்டுக் கொள்கை ஆவணங்களை அடையப் பெற்ற 15 நாட்களுக்குள் காப்பீட்டைத் திருப்பியளித்துவிடும் உரிமையை உங்களுக்கு வழங்குகிறது.

3 வருடங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட கால வரையறைக்குள் வரும் அனைத்து காப்பீட்டுத் திட்டங்கள் மற்றும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களும் இந்த இலவச தேர்ந்தெடுக்கும் காலத்தை வழங்குகிறது.

நீங்கள் காப்பீட்டுத் திட்டத்தைத் திருப்பியளிக்க விரும்பினால், இணையத்திலிருந்து ஒரு விண்ணப்பப் படிவத்தைத் தரவிறக்கம் செய்து சமர்ப்பிப்பது தேவையாகும்.

முகவர் தவறுதலாக ஒரு காப்பீட்டுத் திட்டத்தை விற்றிருந்தால், பரிந்துரைக்கப்பட்ட 15 நாட்களுக்குள் வேண்டுமென்றே அனுப்பாததற்கான அபாய நேர்வு அவர் அல்லது அவளுக்கு ஏற்படும்.

 

3. கடன் கொடுத்தவர்களால் தொந்தரவு செய்யப்படாமல் இருப்பதற்கான உரிமை.

3. கடன் கொடுத்தவர்களால் தொந்தரவு செய்யப்படாமல் இருப்பதற்கான உரிமை.

நீங்கள் கடன் செலுத்துவதிலிருந்து தவறியிருந்தாலும் கூட, 60 நாள் அறிவிப்பை உங்களுக்குக் கொடுக்க வேண்டியது கடன் கொடுத்தவரின் கடமையாகும்.

கடன் கொடுத்தவர் அல்லது மீட்பு முகவர்களுக்கு உங்களைத் தொந்தரவு செய்யவோ அல்லது மரியாதைக் குறைவாக நடத்தவோ எந்த விதமான உரிமையும் இல்லை.

மேலும் 60 நாள் அறிவிப்புக் காலம் நடைபெறும் போது அவர்கள் உங்களைக் காலை 7 மணி மற்றும் இரவு 7 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் மட்டுமே அழைக்கலாம். ஒருவேளை உங்களுக்குத் தொல்லைக் கொடுக்கப்பட்டால் வங்கியுடன் அந்தப் பிரச்சனையை எழுப்ப அல்லது முதல் தகவல் அறிக்கையைத் தாக்கல் செய்ய உங்களுக்கு உரிமை இருக்கிறது.

 

4. பண அட்டை மோசடிக்காரர்களுக்குப் பணம் செலுத்தாமலிருக்கும் உரிமை.

4. பண அட்டை மோசடிக்காரர்களுக்குப் பணம் செலுத்தாமலிருக்கும் உரிமை.

கடன் அட்டை அல்லது பற்று அட்டை மோசடிகள் நடந்தால் அந்தப் பணப் பரிவர்த்தனை நடவடிக்கைகள் உங்களால் மேற்கொள்ளப்படவில்லை என்பதை நீங்கள் நிரூபித்தால் அதிகாரமளிக்கப்படாத பணப் பரிவர்த்தனை நடவடிக்கைகளுக்குப் பணம் செலுத்தாமலிருக்க உங்களுக்க உரிமை இருக்கிறது.

உங்கள் பண அட்டைத் தவறாகப் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது என்று நீங்கள் சந்தேகித்தால் விஷயத்தை வங்கியிடம் புகார் செய்து உங்கள் பண அட்டை மேற்கொண்டு தவறாக உபயோகிக்கப்படுவதைத் தவிர்க்க உங்கள் அட்டையை முடக்கிக் கொள்ளலாம்.

முதல் தகவல் அறிக்கையைத் தாக்கல் செய்வது ஒரு தேர்வாகும். பெரும்பான்மையான பண அட்டைகள் அட்டையை வைத்திருப்பவரை மோசடிகளிலிருந்து பாதுகாக்க பூஜ்ஜியப் பொறுப்பு அம்சத்துடன் வருகிறது.

 

5. ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தைத் திருப்பித் தரக் கோரும் உரிமை.

5. ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தைத் திருப்பித் தரக் கோரும் உரிமை.

IRDAI கோட்பாடுகளின் படி, 3 வருடங்கள் முடிவடைந்த ஒரு ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தைத் திரும்பப் பெறும் உரிமை உங்களுக்கு இருக்கிறது. மற்றும் இந்த விதிக்கு எந்த விதிவிலக்கும் இல்லை. காப்பீட்டு நிறுவனத்திற்குக் காப்பீட்டுத் தாரரின் நம்பகத்தன்மையைச் சரிபார்க்க 3 வருட இடைக்காலம் வழங்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து உரிமைக் கோரிக்கைத் தீர்க்கப்பட வேண்டும். ஒரு வேளை காப்பீட்டுதாரர் முதல் 3 ஆண்டுகளுக்குள் மரணமடைந்தால் இந்த விதி மதிப்புடையதாகிறது. ஆனால் உரிமைக் கோரிக்கை 3 வருடங்களுக்குப் பிறகே செய்யப்படுகிறது.

 

6. 90 நாட்களில் வரிப்பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான உரிமை

6. 90 நாட்களில் வரிப்பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான உரிமை

வருமான வரி விவர அறிக்கையைத் தாக்கல் செய்த 90 நாட்களுக்குள் உங்கள் வருமான வரிப் பணத்தைத் திரும்பப் பெறுவது உங்கள் உரிமையாகும். பணத்தைத் திரும்பப் பெறுவதில் இந்தக் காலக் கெடுவிற்கு அப்பாற்பட்ட தாமதம் ஏற்பட்டால், உங்கள் சட்ட அதிகார வரம்பிற்குட்பட்ட வருமான வரி விதிப்பு அதிகாரியை நீங்கள் அணுகலாம் அல்லது வருமான வரித் துறை இணையத் தளத்தில் ஒரு வேண்டுகோளை எழுப்பலாம்.

அதுமட்டுமல்லாமல், உங்கள் பணத்தைத் திரும்பப் பெறுவதில் தாமதம் ஏற்பட்டால் திரும்பப் பெற வேண்டிய தொகையின் மீது ஒவ்வொரு மாதமும் 0.5 சதவீதம் வட்டியைப் பெறும் அதிகாரமும் கூட உங்களுக்கு உள்ளது. இதுவரை திருப்பிக் கொடுக்கப்பட்ட வரி சம்பளத்திலிருந்து வரிப் பிடித்தம் செய்யப்பட்டதை விடக் கூடுதலாக இருந்தால், வருமான அறிக்கையை நீங்கள் தாக்கல் செய்த பிறகு அதைத் திரும்பப் பெறும் அதிகாரம் உங்களுக்கு இருக்கிறது.

 

7. சரியான நேரத்தில் சொத்தை சொந்தம் கொள்ளும் உரிமை.

7. சரியான நேரத்தில் சொத்தை சொந்தம் கொள்ளும் உரிமை.

நீங்கள் ஒரு சொத்தை வாங்கினால், அதன் கட்டுமானப் பணி செயல் திட்டம் தாமதமானால், நீங்கள் வீட்டுக்கடன் மீது கட்டும் அதே மாதாந்திர தவணை வட்டியை உங்களுக்கு அபராதமாகச் செலுத்த வேண்டியது, சட்டப்படி கட்டுமான மேம்பாட்டாளரின் கடமையாக ஆகிறது. நினைவில் கொள்ளுங்கள், ஒரு சொத்தை வாங்குதல், கொடுக்கப்பட்ட கால வரையறைக்குள் அதனைச் சொந்தமாக்கிக் கொள்ளும் உரிமையை உங்களுக்கு அளிக்கிறது.

உங்களால் செலுத்தப்பட்ட மொத்தத் தொகையையும் திருப்பித்தரக் கோரி தாக்கல் செய்யும் உரிமை உங்களுக்கு இருக்கிறது. வேண்டுகோள் எழுப்பப்பட்ட 45 நாட்களுக்குள் உங்கள் பணத்தைத் திருப்பிச் செலுத்த கட்டுமானர் பொறுப்பாளர் ஆவார்.

ஒரு சொத்தை சொந்தமாக்கிக் கொள்வதில் ஏற்படும் தாமதம் தொடர்பான எந்த ஒரு பிரச்சனைக்காகவும், உங்கள் மாநில சொத்து, மனை ஒழுங்குமுறை ஆணையத்தை நீங்கள் அணுக வேண்டும். இந்த அதிகாரிகள் உங்கள் புகாரை 60 நாட்களில் தீர்த்து வைக்க வேண்டும்.

 

8. பாதுகாப்புப் பெட்டக வசதியைப் பெறும் உரிமை.

8. பாதுகாப்புப் பெட்டக வசதியைப் பெறும் உரிமை.

நீங்கள் வாங்கியில் ஒரு பாதுகாப்புப் பெட்டகத்தைப் பெற விரும்பினால், நீங்கள் அந்த வங்கியில் சேமிப்புக் கணக்கு வைத்திருக்க வேண்டிய அவசியமோ அல்லது அந்த வங்கியுடன் இதர தொடர்புகள் வைத்திருக்க வேண்டிய அவசியமோ இல்லை.

எனினும், வங்கி உங்களை இந்தப் பாதுகாப்புப் பெட்டக வசதியை பயன்படுத்தவதற்கு 3 வருட கால வாடகை மற்றும் கட்டணங்களை உள்ளடக்கிய ஒரு நிரந்தர வைப்புத் தொகையைத் திறக்கச் சொல்லி கேட்கலாம்.

ஒரு வேளை வங்கி உங்களை அதன் மற்ற ஏதேனும் தயாரிப்புகள் அல்லது சேவைகளில் முதலீடு செய்யச் சொல்லி வற்புறுத்தினால் அந்தப் பிரச்சனையை நீங்க குறைகள் தீர்க்கும் பிரிவில் எழுப்பலாம். அல்லது இந்தப் பிரச்சனை நீண்ட காலத்திற்கு நீடித்தால் புகார் தீர்ப்பாயம் அல்லது இந்திய ரிசர்வ் வங்கியைக் கூட அணுகலாம்.

 

9. சேவைக் கட்டணத்தை மறுக்கும் உரிமை.

9. சேவைக் கட்டணத்தை மறுக்கும் உரிமை.

ஒரு உணவு விடுதியில் வழங்கப்பட்ட சேவையில் உங்களுக்கு அதிருப்தி ஏற்பட்டால் உங்கள் விலை ரசீதுடன் இணைக்கப்பட்ட சேவைக் கட்டணத்தைச் செலுத்த மறுக்கும் உரிமை உங்களுக்கு இருக்கிறது. சேவை வரி அல்லது மதிப்புக் கூட்டு வரி போல அல்லாமல், சேவைக் கட்டணமானது அரசாங்கத்தால் விதிக்கப்படும் வரி அல்ல.

மாறாக அது நேரடியாக உணவு விடுதியாளரின் சட்டைப் பைக்குள் செல்கிறது. இது அதைத் தன்னார்வமாக விரும்பிச் செலுத்தும் கட்டணமாக்குகிறது. உணவு விடுதி உங்களைச் சேவை கட்டணத்தைச் செலுத்த சொல்லி வற்புறுத்தினால், நீங்கள் நுகர்வோர் விவகாரத் துறையை அணுகி ஒரு முறையான புகாரை பதிவு செய்யலாம்.

 

10. நிதி உரிமை ஆணையில் மாற்றத்தை அறியும் உரிமை.

10. நிதி உரிமை ஆணையில் மாற்றத்தை அறியும் உரிமை.

நீங்கள் முதலீடு செய்திருக்கும் பரஸ்பர நிதி நிறுவனத்தின் முதலீட்டு நிதி உரிமையில் செய்யப்படும் நிரந்தர மாற்றம் பற்றி அறிவிக்கப்பட வேண்டிய உரிமை உங்களுக்கு இருக்கிறது. மாற்றங்கள் செயலாக்கப்படுவதற்கு முன்பாக, வெளியேறுவதற்கான வணிகச் செலவை செலுத்தாமல் ஒரு திட்டத்திலிருந்து வெளியேறும் உரிமை முதலீட்டாருக்கு உள்ளது.

ஒரு நிதி திட்டத்தின் அடிப்படைப் பண்புகள் மாற்றப்பட்டிருந்தால், மற்றும் முதலீட்டாளர் எந்தப் பயன்களுக்காக அந்தத் திட்டத்தில் முதலீடு செய்தாரோ அந்தப் பலன்கள் அல்லது முதலீட்டு வருவாயை அவர் பெற்று மகிழவில்லை என்றால் அப்போது இந்த விதி பொருந்தும்.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

10 financial rights you must know

10 financial rights you must know
Story first published: Wednesday, March 8, 2017, 18:29 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X