தோனி கிரிக்கெட்டில் மட்டுமல்ல.. பிஸ்னஸ் செய்வதிலும் 'சூப்பர் கிங்ஸ்' தான்..!

Written By: Tamilarasu
Subscribe to GoodReturns Tamil

முப்பத்து ஐந்து வயது கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி, முன்னாள் இந்திய டெஸ்ட், ஒரு நாள் மற்றும் டி20 அணியின் கேப்டன் கடந்து வந்த பாதையானது அழிவில்லாத திரை உலகில் திரை காவியமாக "எம் எஸ் தோனி, வெளிவராத சரித்திரம்" என்ற பெயரில் திரைப்படமாகக் கடந்த ஆண்டுச் செப்டம்பர் 30ம் தேதி வெள்ளிக் கிழமை வெளியிடப்பட்டது.

இந்தப் பாலிவுட் படமானது அதிகப் பார்வையாளர்களை ஈர்க்கும் விதமாக இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகி சாதனை படைத்தது.

தோனி கிரிக்கெட்டில் மட்டுமல்ல.. பிஸ்னஸ் செய்வதிலும் 'சூப்பர் கிங்ஸ்' தான்..!

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாகப் பல சாதனைகள் புரிந்த இந்தப் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரரின் உள்ளே புதைந்திருக்கும் வியாபார யுக்தியைப் பற்றிப் பலருக்கும் தெரியாது.

ஏர் இந்தியா முதல் இந்தியா சிமெண்ட்ஸ் வரை

2013ம் ஆண்டுத் தேசிய விமானச் சேவை நிறுவனமான "ஏர் இந்தியா" வில் இருந்து "இந்தியா சிமெண்ட்ஸ்" கம்பெனியில் "துணை தலைமை அதிகாரியாக" பணியில் சேர்ந்தார்.

இந்தியா சிமெண்ட்ஸானது இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபில்) ஒரு அணியான "சென்னை சூப்பர் கிங்ஸ்" ஐ சொந்தமாக வைத்துள்ளது. இந்த அணியின் கேப்டனாகத் தோனி முதல் சீசன் முதல் இருந்து வந்தார்.

 

சென்னையின் எப்சி

2014ம் ஆண்டு "சென்னையின் எப்சி" என்ற கால்பந்து அணியின் இணை உரிமையாளராகச் சூப்பர் ஸ்டார் அமிதாப்புடன் சேர்ந்து வாங்கியுள்ளார்.

ஃபோர்ப்ஸ் 100

அதிகபட்ச ஊதியம் பெறும் பிரபலங்களுக்கான ஃபோர்ப்ஸ் 100 பட்டியலில் தோனி இடம்பெற்றது ஆச்சரியம் ஒன்றுமில்லை. 2016ம் ஆண்டு அவர் பெற்ற வெற்றிகள் மற்றும் விளையாட்டில் இருந்து அவர் பெற்ற ஊதியம் வெறும் 4 மில்லியன் டாலர்கள் மட்டுமே.

விளம்பர ஒப்பந்தங்கள்

ஆனால் அவரின் விளம்பர ஒப்பந்தங்களில் இருந்து அவர் பெற்ற வருமானம் சுமார் 27 மில்லியன் டாலர்களாகும். மேலும் அவரது திரைகாவியம் வெளியீட்டு ஒப்பந்தங்கள் அவருக்கு 3 மில்லியன் டாலர்கள் வருமானத்தைப் பெற்றுத் தந்தது.
இப்பேற்பட்ட தோனியிடம் இருந்து நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டிய சில வணிகப் பாடங்களை உங்களுக்காகவே பின்வருமாறு தொகுத்துள்ளோம்.

நிகழ்காலத்தில் வாழ்வது

ஒரு தொழில் முனைவோருக்கான சிறப்பான குண நலன்களைக் கொண்டுள்ள தோனியின் இந்தச் சிறப்பானது, அவரது கிரிக்கெட் வாழ்க்கை முடிவு பெற்றபின்னரும் அவரது வாழ்க்கை வெளிச்சத்திலேயே நடைபோடும். கடந்த காலம் மற்றும் எதிர்காலத்தைப் பற்றிய கவலையை விட்டு நிகழ்காலத்தில் வாழும் குணம் தோனியுடையது.

தனது சிறு வயதில் இருந்தே கிரிக்கெட்டில் தீராத காதல் கொண்டிருந்த தோனி தான் நாட்டிற்காக விளையாடுவேன் என்று ஒரு போதும் கனவு கண்டதில்லை அதே சமயம் கிரிக்கெட் தான் தனது வாழ்க்கையின் மைல்கல் என்றும் அவர் நினைத்தது இல்லை. எந்த ஒரு வெற்றியுள்ள தொழில் அதிபரும் எதிர்காலத்தைக் குறித்த அதீத கவலை அல்லது முடிந்து போன காலத்தைக் குறித்த கவலையுடையவர்களாக இருக்க மாட்டார். இது அவர்களது குறிக்கோளை நிறைவேற்றாது. இது தான் தோனியின் எண்ணமும் கூட.

 

ஆபத்தைத் திசை திருப்புவது

உங்களது வாழ்க்கையிலும் சரி, தொழிலும் சரி ஆபத்துகளை வேறு வழியில் மாற்றிக் கொள்வது நலன் பயக்கும். தோனி தான் முதலீடு செய்திருக்கும் ஐந்து நிறுவனங்களின் ஈவுத்தொகை மூலம் கணிசமான வருமானத்தை ஈட்டுகிறார். முதலாவது ரிதி கூட்டு நிறுவனங்களின் கூட்டு நிறுவனமான " ரிதி எம்.எஸ்.டி ஆல்மண்டே பிரைவேட் லிமிடேட்" என்ற படத் தயாரிப்பு நிறுவனம். இரண்டாவது அருன் பாண்டே மற்றும் சஞ்சய் பாண்டே என்பவர்களுடைய சொந்த விளையாட்டு மேலாண்மை சம்பந்தமுடைய ஒரு நிறுவனம். அவருடைய மனைவி சாக்ஸி இந்த நிறுவனத்தில் ஒரு இயக்குநராக உள்ளார்.

இவருடைய மற்ற நிறுவனங்கள்

அமர்பாலி மகி டெவலப்பர்ஸ் பிரைவேட் லிமிட்டேட், வின்னிங்க் வேய்ஸ் தோனி பவுண்டேசன், ஜெஜி எண்டர்பிரைசஸ் மற்றும் ஆப்டிமம் விஜிலென்ஸ் லிமிடேட் முதலியன ரியல் எஸ்டெட் வளர்ச்சி, சிசிடிவி அமைப்புகள் மற்றும் தொண்டு நிறுவன வணிகங்களில் கவனம் செலுத்துகின்றன.

விளையாட்டு மற்றும் வர்த்தகத் தலைமைத்துவம்

களத்தில் தோனி வெளிப்படுத்தும் அவரது தலைமைப்பண்பு அவரைப் பல போட்டிகளில் இந்தியாவிற்கு வெற்றியைத் தேடி தரச் செய்துள்ளது அதே தலைமைத்துவத்தும் இவரின் வணிகத்திலும் வெற்றியை ஈட்டி தந்துள்ளது. விளையாட்டு ஆய்வாளர்களின் படி, அதிக அழுத்தத்தின் போது அமைதியாக இருந்து அதிரடியாகப் பேட்டிங் செய்து எதிரனியினரை திணறடித்து மற்ற சக விளையாட்டு வீரர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழும் இவரது திறன் பல சந்தர்ப்பங்களில் இந்தியாவிற்கு ஒரு நாள் சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் வெற்றியைப் பெற்று தந்துள்ளது.

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மிக வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவராகத் தோனி திகழ்ந்து வருகிறார். ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் "இயான் சேப்பல்" தோனியைப் பற்றி, "தோனி விளையாட்டில் மூர்க்க குணம் நிறைந்தவர் அதே நேரத்தில் சாந்தமும் மற்றவர்களைத் தன்பால் ஈர்க்கும் திறனும் உடையவர்" என்று கூறினார். இந்தக் குணங்களே அவர் தனது வணிகத்தை முன்னெடுத்துச் செல்ல அவருக்கு உதவி வருகின்றன.

 

பணம் உங்களின் வேலையாள்

சில வர்த்தகர்களும் தொழில் அதிபர்களும் தங்களின் தொழில் நிலைத்து நிற்பதற்கு வாழ்நாள் முழுவதும் உழைத்துக்கொண்டிருப்பார்கள். ஆனால் சில விவேகமுள்ளவர்கள் மட்டும் தங்கள் முதலீடுகள் தங்களுக்கான வருமானத்தைப் பெற்றுத் தருவதில் பார்த்துக்கொள்வர் இவர்களில் தோனியும் ஒருவர். "ரிதி" நிறுவனத்தில் உள்ள தோனியின் முதலீடு ஒவ்வொரு முறையும் விளையாட்டு வீரர்கள் அல்லது பிரபலங்கள் ஒப்பந்தங்கள் மூலம் விளம்பரத்தில் ஈடுபடும் போது அது இவருக்குப் பணத்தைப் பெற்றுத் தரும்.

வியாபார கூட்டாளியை தேர்ந்தெடுப்பதில் கவனமாக இருங்கள்

கடைசியாக ஆனால் இறுதியாக, தோனி தனது குடும்ப உறுப்பினர்கள், நெருங்கிய கூட்டாளிகள் மற்றும் நண்பர்களிடம் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளார். நிறைய வணிகங்கள் தோல்வியடைவது முரண்பட்ட கருத்துக்கள் அல்லது பங்குதாரர்களிடையே ஏற்படும் ஈகோ மோதல்கள் காரணமாக அமைகிறது. இத்தகைய எதிர்மறையை விளைவுகளை அகற்றுவதற்காகத் தனது நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களைக் கொண்டு உருவாக்கிய ஒரு அணியை உருவாக்கி தனது வணிகத்தை ஒரு போட்டி நிறைந்த ஒன்றாக முன்னெடுத்துச் செல்கிறார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

MS Dhoni : The Entrepreneurial Side of This Wondrous Mind

MS Dhoni : The Entrepreneurial Side of This Wondrous Mind
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns