நிமிடங்களில் ஆதார் உடன் பான் கார்டை இணைக்கலாம்.. எப்படி..?!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மத்திய அரசு 2017 ஜூலை 1 முதல் வருமான வரி தாக்கல் செய்யப் பான் கார்டுடன் ஆதார் கார்டு இணைக்கப்பட்டு இருக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது.

மேலும் பான் கார்டை ஆதார் எண்ணுடன் இணைக்கவில்லை என்றால் 2017 டிசம்பர் 31-க்குப் பிறகு உங்கள் பான் கார்டு செல்லாது.

எனவே பான் கார்டை ஆதார் கார்டுடன் எப்படி இணைப்பது என்று இங்குப் பார்ப்போம்.

படி 1
 

படி 1

வருமான வரி தாக்கல் செய்யும் இணையதளத்தில் முதல் உள்நுழைய வேண்டும். உள்நுழைந்த பிறகு ஆதார் எண்ணை இணைக்கும் பாப் அப் திரை வரும். அப்படி இல்லை என்றால் ஆதார் எண்ணை பான் என்னுடன் இணைக்கவும் என்ற இணைப்பை கிளிக் செய்ய வேண்டும்.

படி 2

படி 2

அதார் எண்ணை உள்ளிடும் முன்பு பான் கார்டு மற்றும் ஆதார் கார்டில் உள்ள பெயர், பிறந்த தேதி, பாலினம் போன்ற விவரங்கள் சரியாக இருக்கின்றதா என்பதைச் சரி பார்த்துக்கொள்ள வேண்டும்.

படி 3

படி 3

ஒரு முறை அனைத்து விவரங்களையும் சரி பார்த்த பிறகு ஆதார் எண் மற்றும் கேப்ட்சா குறியீட்டை உள்ளிட வேண்டும். பின்னர் இணைக்கவும் என்ற பொத்தானை அழுத்தவும்.

படி 4

படி 4

சரிபார்ப்பு முடிந்த உடன் ஆதார் எண் பான் எண்ணுடன் இணைக்கப்படும். இதில் முக்கியக் குறிப்பு என்னவென்றால் ஆதார் மற்றும் பான் கார்டு விவரங்கள் இரண்டின் வரங்களும் சரியாக ஒத்துப் போனால் மட்டுமே இணைப்பு நடக்கும்.

நன்மை
 

நன்மை

பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதன் மூலமாக வருமான வரி தாக்கல் செய்யும் போது ஐடிஆர் V படிவத்தைப் பெங்களூரில் உள்ள வருமான வரி அலுவலகத்திற்கு அனுப்ப தேவையில்லை. மின்னணு சரிபார்ப்பு குறியீடு முறையைப் பயன்படுத்தி எளிதாகப் படிவத்திற்கான ஒப்புகையை அளிக்க முடியும்.

எப்படி வருமான வரி தாக்கல் செய்யும் இணையத் தளத்தில் இருந்து மின்னணு சரிபார்ப்பு குறியீடு பெறுவது?

எப்படி வருமான வரி தாக்கல் செய்யும் இணையத் தளத்தில் இருந்து மின்னணு சரிபார்ப்பு குறியீடு பெறுவது?

மின்னணு தாக்கல் செய்யும் முறையைத் தேர்வு செய்து மின்னணு சரிபார்ப்புக் குறியீட்டை உருவாக்கவும் என்று உள்ளிட வேண்டும். மின்னணு சரிபார்ப்பு குறியீடு உருவாக்கப்பட்ட உடன் அது உங்கள் மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்.

இதனைப் பயன்படுத்தி 72 மணி நேரத்தில் மின்னணு சரிபார்ப்புச் செய்ய வேண்டும்.

புகார் பெற புதிய முறை

புகார் பெற புதிய முறை

வருமான வரித் துறை பெயரின் இனிஷியலினால் ஏற்படும் பிரச்சனைக்காகப் புதிதாக எளிமையாகப் புகார் பெறும் முறையையும் அறிமுகப்படுத்தியுள்ளது.

பான் ஆதார் இணைப்பிற்கு மாற்று வழி

பான் ஆதார் இணைப்பிற்கு மாற்று வழி

ஆதார் இணையதளம் மூலமாகவும் பான் கார்டை இணைக்கலாம் என்றும் வருமன வரித் துறை தெரிவித்துள்ளது. இதற்காக ஆதார் இணையதளத்தில் உள்நுழைந்து பான் கார்டு ஸ்கேன் நகலைப் பதிவேற்றினால் பாண் கார்டுடன் ஆதார் கார்டு இணைக்கப்பட்டுவிடும்.

இணைக்கப்பட்ட தரவின் எண்ணிக்கை

இணைக்கப்பட்ட தரவின் எண்ணிக்கை

ஆதார் கார்டுடன் இது வரை 1.18 கோடி பான் கார்டுகள் மட்டுமே இணைக்கப்பட்டுள்ளது என்று பிடிஐ அறிக்கை வெளியிட்டுள்ளது. ஜூலை 1ம் தேதிக்குள் பான் கார்டினை ஆதார் கார்டுடன் இணைக்கவில்லை என்றால் பான் கார்டு செல்லாது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Steps To Link Aadhaar Number to Your PAN and File Income Tax Returns (ITR)

How To Link Aadhaar with PAN In Minutes?
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X