ஆடிப் போய் ஆவணி எல்லம் வரத் தேவையில்லை.. இதை ஃபாலோ பண்ணாலே போதும் வேலையில் நீங்க டாப்புதான்..!

By: Bala latha
Subscribe to GoodReturns Tamil

இன்றைய நவீன யுகத்தில் அடிப்படை தொழில்முறை அறிவு மற்றும் திறன்களை வளர்த்துக் கொள்ளும் பொறுப்பைத் ஒருபுறம் தொடர்ந்து கொண்டே உங்கள் தொழில் வாழ்க்கையிலும் முன்னேறுவது முற்றிலும் கடினமானது.

இது வெறுமனே சரியான உத்தியோகத்தைத் தேர்ந்தெடுப்பது மட்டும் பெரிய விஷயமல்ல. அதில் மேன்மேலும் எப்படி மேம்படுவது மற்றும் வெற்றியடைவது என்பது தான் உங்கள் முன் உள்ள சவால்.

இது வேகமாக நகர்ந்து கொண்டிருக்கும் உலகம். இங்கு நாட்டின் கலாச்சாரக் கட்டமைப்பு நாளுக்கு நாள் மாற்றமடைந்து கொண்டே வருகிறது. நீங்களும் அந்த மாற்றங்களுக்கேற்ப இணைந்து உங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். இல்லையென்றால், நீங்கள் பின்தங்கி விடுவீர்கள். நீங்கள் கற்றுக் கொள்வதையும் உங்களை மேம்படுத்திக் கொள்வதையும் தொடர்ந்து செய்து வந்தால் உங்கள் தொழில் வாழ்க்கையில் அதிவேகமாக வெற்றியின் எல்லையைத் தொடுவீர்கள்.

உங்கள் தொழில் வாழ்க்கையில் தொடர்ந்து கற்றுக் கொள்வதற்கும் வளர்ச்சி அடைவதற்கும் 10 எளிய அர்த்தமுள்ள வழிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

1. படைப்பாற்றல்

உங்கள் படைப்பாற்றலானது உங்களைச் சக பணியாளர்கள் மற்றும் போட்டியாளர்களிடமிருந்து தனித்துச் செயல்பட மட்டும் உதவுவதில்லை, மேலும் உங்கள் மூத்த மேலாண்மை அதிகாரிகள் மற்றும் போட்டியாளர்களை உங்களை நோக்கிக் கவனிக்கவும் செய்கிறது. ஒரு வேலையை உங்களுக்கே உரிய ஒரு தனிப்பட்ட மற்றும் நூதனமான வழிகளில் செய்வது உங்களுக்கு வழக்கத்திற்கு மாறான வழிகளில் நீங்கள் ஆய்வு செய்ய உதவி புரிகிறது. அது உங்கள் தொழில் வாழ்க்கையை முன்னேற்றும் என்பதில் சந்தேகமில்லை. முழுவதுமாகச் சிறந்த மதிப்பினை உடைய புதிய சிந்தனைகளைக் கொண்ட மக்களைப் போல் உங்கள் படைப்பாற்றலின் சாரங்களுக்கு ஊட்டமளியுங்கள்.

2. பொருத்தமானவராய் இருங்கள்

உங்கள் வளர்ச்சியை முடுக்கிவிடும் பொருட்டு நாளும் மாற்றமடைந்து கொண்டே இருக்கும் வேலைகளின் பன்முகத்தன்மை மற்றும் தேவைகளுக்கேற்ப உங்களைப் பொருத்திக் கொள்வது அவசியமானதாகும். சிறந்த முறையில் பேரம் பேசுவதாகட்டும், ஒரு சிறந்த பட்டறைக்குத் தலைமையேற்பது எப்படி என்று கற்றுக் கொள்வதாகட்டும், அல்லது ஒரு செயல் திட்டத்தின் அணித் தலைவராக இருபதிலாகட்டும், தனிப்பட்ட பொருத்தமுடைமை அந்த நேரத்தின் அத்தியாவசியத் தேவையாகும். சுறுசுறுப்பும் விரைவாகக் கிரகத்துக் கொள்ளும் தன்மையும் உங்கள் நிறுவனத்திற்கு மட்டுமல்ல உங்கள் சுய மதிப்பிற்கும் மதிப்பைக் கூட்டுகிறது.

3. குறுகிய மற்றும் நீண்டகாலத் திட்டங்களைத் தீட்டுங்கள்

உங்கள் குறுகிய மற்றும் நீண்ட கால இலக்குகளை முயற்சித்துப் பார்ப்பது அத்தியாவசியமானதாகும். நீங்கள் மேம்படுத்த விரும்புவதைக் குறுகிய காலத் திட்டத்தில் செயல்படுத்திக் குறித்து வைத்துக் கொள்வது பின்னாளில் நீண்ட காலத் திட்டங்களில் அது உங்கள் திறமையை நாளடைவில் மேம்படுத்திக் கொள்ள உதவும். ஒரு முறை அது வெற்றியடைந்தால் நீங்கள் வளர்ச்சியடைய விரும்பு அந்த வழியைப் பின்தொடருங்கள். இது குறிப்பிட்ட திறன்களுக்கு மட்டுமல்ல. ஆனால் நீங்கள் விரும்பிச் செய்யும் பணிகள், நீங்கள் சேர்க்க விரும்பும் மதிப்பு,போன்ற அனைத்திற்கும் சாத்தியமானது. இதனால் வருங்காலத்தில் உங்களிடமே நீங்கள் வித்தியாசத்தைக் காண்பீர்கள்.

4. பிணைப்பு

உங்கள் தொழில் வாழ்க்கையில் உங்களைப் புதிய தொடர்புகளுடன் இணைத்துக் கொள்வது தேவைப்படுகிறது. இது உங்களைப் புதிய தொடர்புகளுடன் இணைப்பதில் உதவி புரிவது மட்டுமல்லாமல் மேலும் உங்கள் வேலையில் உதவியாக இருக்கும் தொலைநோக்கு கண்ணோட்டத்தையும் உங்களுக்கு வழங்குகிறது. உங்கள் தொழில்துறை தொடர்பான சந்திப்பு நிகழ்ச்சிகளில் பங்கேற்பது மக்கள் உங்களைக் கவனிக்க உதவுவதோடு மேலும் அது சில விலைமதிக்கமுடியாத வாய்ப்புகள் வரும்போது அவர்களது மனதில் உங்கள் பெயரை முதன்மையான இடத்தில் வைக்கலாம். அது நீங்கள் சமீபத்திய தொழில்துறை போக்குகளை அறிந்து வைத்துக் கொண்டு உங்களைப் புதுப்பித்துக் கொள்ள உதவதோடு மேலும் தொழிலில் உங்கள் ஆளுமைக்குப் பொருந்தக்கூடிய புதிய தொழில் நுணுக்கங்களைப் பற்றிக் கற்றுக் கொள்ளச் சிறந்த வழியாகும்.

5. செய்ய வேண்டியவற்றின் பட்டியல்

ஒருவருடைய தொழில்முறை முன்னேற்றத்திற்கு ஒழுங்குமுறையுடனும் மற்றும் கட்டமைப்புடனும் இருக்க வேண்டியது மிகவும் அவசியமானதாகும். செய்ய வேண்டியவற்றின் பட்டியலைப் பராமரிப்பது உங்களைத் திறமையானவராக ஆக்கவும், அதிகமாகவும், வேகமாகவும் செயல்படவும் உதவி புரிகிறது. உங்கள் நிறுவனத்திற்கு உயர்ந்த மதிப்பைச் சேர்க்கும் ஒரு திட்டத்தை அடையாளம் கண்டு அதை உங்கள் தினசரி வேலைப்பட்டியலில் சேர்த்து அதைச் செயல்திறனுடன் செய்வதற்கான வழிகளைக் கண்டறியுங்கள். மற்ற அதிக முக்கியத்துவம் இல்லாத வேலைகளை விட இதற்கு முக்கியத்தவம் அளிக்கிறீர்களா என்பதை உறுதி செய்யுங்கள்.

6. உங்கள் வேலையின் பொறுப்புக்களை ஏற்றுக் கொள்ளுங்கள்

உங்கள் வேலை இடம் உங்கள் அதிகபட்ச கவனத்தைக் கோருகிறது. எளிமையாக ஒவ்வொரு நாளும் உங்கள் வேலையின் விரிவாக்கத்தைப் பார்ப்பது மற்றும் உங்கள் தற்போதைய பொறுப்புகள் பற்றி ஒரு வரி தாளை உருவாக்குவதன் மூலம், நீங்கள் ஒவ்வொரு வேலைக்கும் தாராளமாக நேரம் ஒதுக்கலாம். உங்கள் ஆற்றலை நீட்டிக்கும் மற்றும் உங்கள் பலத்தைச் சோதனை செய்ய உதவும் பொறுப்புகளை ஏற்கக் கூச்சப்படாதீர்கள்.

7. கூடுதல் வேலைகளில் கவனம் செலுத்துங்கள்

உங்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலைக்குள் அடங்காத வேலைகளையும் செய்ய வேண்டியது சமமான முக்கியதுவத்தைப் பெறுகிறது. வேலையிடத்தில் வேலை ஓட்டம் மென்மையாக நகர, தினமும் கூடுதல் கடமைகளை எழுதி வையுங்கள். வேலைகள் வழக்கமாக மாறிக் கொண்டே இருக்கும். எனவே, அவற்றைக் கையாள ஒரு கூடுதல் மைல் செல்லுதல் அற்புதங்களை நிகழ்த்தும். மிக நுணுக்கமான விவரங்களை நீங்கள் கையாளும்போது அது நிறுவனம் உங்கள் மதிப்பை உணர்ந்து கொள்ள உதவி செய்யும்.

8. உங்கள் பலவீனமான புள்ளிகளைச் சமாளிக்கத் தொடர்ச்சியாகக் கருத்துப் பின்னூட்டங்களைத் தேடுங்கள்

கருத்துப் பின்னூட்டங்கள் என்பவை சிக்கலான அடிப்படை ஆதாரக் கூறுகளாகும். உங்கள் தொழில் வாழ்க்கையில் வெற்றிகரமாக உங்களை முன்னேற்றும் உந்து சக்தியாக அது செயல்படுகிறது. அது விவரங்களைப் பற்றிக் கண்டுபிடிக்க மட்டும் உதவி புரிவதில்லை, மேலும் அது உங்கள் இலக்குகளைச் சாதிப்பதில் துணையாகவும், சவால்களை நீங்கள் எதிர் கொள்ள உதவியாகவும் இருக்கிறது. ஏதேனும் தொழில்முறை பலவீனங்கள் அல்லது உங்கள் அறிவில் உள்ள இடைவெளிகளை உங்கள் சகப்பணியாளர்கள் அல்லது மூத்த அதிகாரிகளின் கருத்துப் பின்னூட்டத்துடன் சரி செய்து கொள்ளலாம்.

9. எது அவசரம் மற்றும் எது முக்கியம் என்பதற்கு இடையே உள்ள வித்தியாசத்தைக் கற்றுக் கொள்ளுங்கள்

அவசரமும் முக்கியத்துவமும் கைகோர்த்து இருக்கிறது. ஆனால் உங்கள் உற்பத்தித் திறன் மற்றும் வேலையின் தரம் ஆகியவற்றை அதிகப்படுத்த இந்த இரண்டிற்கும் இடையே உள்ள வித்தியாசத்தைப் புரிந்து கொள்வது முக்கியமானதாகும். அவசர வேலைகள் உடனடியான அடிப்படையில் கவனிக்கப்பட வேண்டும். மற்றும் முக்கியமான வேலைகள் உடனடியாகச் செய்யப்பட வேண்டிவை அல்ல, ஆனால் உங்கள் கவனம் மற்றும் நேரம் அதற்குத் தேவை. ஒரு சிறிய ஆலோசனை: அவசர வேலைகள், முக்கிய வேலைகளைப் பாதித்து விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

10. சந்தேகமாக இருக்கும்போது செயல்படுங்கள்

நெருக்கடியான சூழ்நிலைகளில் என்ன செய்வது என்று சிந்தித்துக் கொண்டே அங்கேயே தேங்கிவிட்டு நேரத்தை வீணாக்காதீர்கள், பிரச்சனைகளை எதிர்கொண்டு அதன் மீது செயல்படுங்கள். நிதானமாக அனுமதி கேட்பதைவிட, மன்னிப்பு கேட்பது எப்பொழுதும் மிகுந்த நன்மைப்பயக்கக் கூடியது. உங்களுடைய பார்வை மற்றும் குறிக்கோள் ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ளது, உங்களது இலக்குகள் தெளிவாக வரையப்பட்டுள்ளது. எனவே சிந்தித்துக் கொண்டே நேரத்தை வீணாக்காதீர்கள். முன்னேறிச் செல்லுங்கள். உங்கள் உள்ளுணர்வை நம்புங்கள், அதைப் பின்பற்றுங்கள்.

பலவீனத்தின் குறியீடு

கற்றுக் கொள்ளுதல் என்பது பலவீனத்தின் குறியீடு அல்ல. ஆனால் வலிமையின் குறியீடு. வாழ்க்கைப் பயணத்தில் கற்றுக் கொள்ளாமல் யார் ஒருவராலும் அவரது தொழில் வாழ்க்கையில் உயர முடியாது. உங்களுக்குத் தெரிந்ததைப் பற்றி ஏற்கனவே நீங்கள் நிச்சயமாகவும் நம்பிக்கையாகவும் இருக்கும் போது, நீங்கள் கடினமான மற்றும் வேகமான விதிகள் எதையும் பின்பற்றத் வேண்டிய தேவை இங்கு இல்லை.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள வழிகளைப் பின்பற்றினால் அது ஒரு பணியாளராக உங்கள் மதிப்பைக் கூட்டி உங்கள் சுய விவர பக்கத்திற்கு அற்புதங்களைச் செய்யும். புதிய வாய்ப்புகளில் பணிபுரிய எப்போதும் தயாராக இருங்கள். அது ஒரு வேளை மறைந்திருக்கும் அடுத்த மிகப்பெரிய வாய்ப்புக்கான கதவுகளைத் திறக்க மிகச்சரியான திறவு கோலாக இருக்கலாம். பொறுப்புகளை ஏற்றுக் கொள்ளத் தயங்காதீர்கள். மாறாகப் பொறுப்புகளை உங்கள் சொந்தமாக்கிக் கொள்ளுங்கள்.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

10 tips to help you get ahead in your career

10 tips to help you get ahead in your career - Tamil Goodreturns
Story first published: Sunday, April 16, 2017, 17:25 [IST]
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns