உங்கள் கணக்கை ஈபிஎப்-இல் இருந்து என்பிஎஸ் திட்டத்திற்கு மாற்றுவது எப்படி..?

Posted By:
Subscribe to GoodReturns Tamil
சென்னை: பங்குச்சந்தை முதலீட்டைத் தாண்டி, தேசிய ஓய்வூதிய அமைப்பு (என்பிஎஸ்) சந்தாதார்களும் பிரிவு 80 சி யின் கீழ் ரூ 1.5 லட்சம் வரை வரிச்சலுகைகளைப் பெறலாம்.

அங்கீகரிக்கப்பட்ட பணியாளர் வருங்கால வைப்பு நிதியிலிருந்து (EPF) என்பிஎஸ் ஸுக்கு மாற்றுவது இப்போது சாத்தியம். இதன் மூலம் பல லாபங்கள் ஒரு முதலீட்டாளருக்கு உண்டு. சரி இதனை எப்படி மாற்றுவது. வாங்கப் பார்ப்போம்

உயிர்ப்புள்ள என்பிஎஸ் கணக்கு

முன் தேவையாக உங்களுக்குச் செயலில் உள்ள டயர் 1 என்பிஎஸ் கணக்கு இருக்க வேண்டும். இந்தக் கணக்கை மாத சம்பள வேலையில் இருக்கும் ஒரு ஊழியருக்கு என்பிஎஸ் செயல்படுத்தப்பட்டுள்ளது இருந்தால் எளிமையாக இக்கணக்கைத் துவங்கலாம்.

இல்லையெனில் நீங்கள் ஒரு POPஐ (point of presence) அணுகலாம் அல்லது npstrust.org.in இல் என்பிஎஸ் கணக்கு துவங்க ஈ-என்பிஎஸ் போர்டலை அணுக முடியும்.

 

வருங்கால வைப்பு இடமாற்றம் செய்வதற்கான வேண்டுகோள்

அங்கீகரிக்கப்பட்ட ஊழியர் வருங்கால வைப்பு நிதி அல்லது முதுமை ஓய்வுஊதிய நிதியில் உள்ள நிலுவைகளை அவரது என்பிஎஸ் கணக்கில் மாற்ற , பணியாளர் வருங்கால வைப்பு நிதி அல்லது முதுமை ஓய்வு ஊதிய நிதி கணக்கிற்குத் தற்போதைய நிறுவனத்தின் மூலம் ஒரு கோரிக்கை விடுக்க வேண்டும்

மாற்றம் துவக்கநிலை

விண்ணப்பம் பெற்றுக்கொண்ட பிறகு, அங்கீகரிக்கப்பட்ட பிராவிடண்ட் / முதுமை ஓய்வூதிய நிதியம் வருங்கால வைப்பு / முதுமை ஓய்வூதிய கணக்கில் நிலுவைகளை மாற்ற ஆரம்பிக்கின்றனர்.

ஒரு காசோலை அல்லது வரைவு (அரசு ஊழியர்கள் வழக்கில்) என்பிஎஸ் இன் நோடல் அலுவலகத்தின் பெயரில் வழங்கப்படும் அல்லது பாப் சேகரிப்பு கணக்கின் பெயரில் வழ்ந்கப்படும்(அனைத்து குடிமக்களுக்கும்)

 

வேலையில் அமர்த்துபவருக்குக் கடிதம்

ஊழியரின் என்பிஎஸ் டயர் 1 கணக்கு மாற்றப்பட்டன என அங்கீகரிக்கப்படப் பிராவிடண்ட் / முதுமை ஓய்வு நிதியால் தற்போதைய நிறுவனத்திற்கு ஒரு கடிதம் வழங்கப்படும் . நோடல் அலுவலகம் அல்லது பாப் (தேவைக்கு ஏற்ப) அந்தப் பணத்தைச் சேகரித்து ஊழியரின் என்பிஎஸ் டயர் 1 கணக்கில் சேர்க்கப்படும்

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

4-step guide to move funds from EPF to NPS

4-step guide to move funds from EPF to NPS
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns