செல்லப் பிராணிகளுக்கு இத்தனை வகையான காப்பீடுகளா..?!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்களிடம் ஒரு அழகான நீங்கள் எப்பொழுதும் அரவணைக்கும் சிறிய நாய்க்குட்டி இருக்கிறதா?. அது உங்கள் பாசத்திற்குறியது மற்றும் அன்பானது, அதைப் பிரிந்து வாழ்வதை உங்களால் நினைத்துக் கூடப் பார்க்க முடியாதா? அப்போது நீங்க அதைக் கண்டிப்பாகப் படிக்க வேண்டும்.

 

செல்லப் பிராணிகள் தீவிரமாக நோயில் விழுந்தாலோ அல்லது சாலையில் நீங்கள் அதனுடன் நடந்து செல்லும் போது அது ஒரு விபத்தை எதிர்கொண்டாலோ என்ன நடக்கும்?

நீங்கள் உங்கள் செல்ல நாய்க்குக் காப்பீடு செய்திருந்தால் கவலைப்படத் தேவையில்லை - அனைத்து மருத்துவச் சிகிச்சைக்கான செலவுகளையும் காப்பீட்டு நிறுவனமே செலுத்திவிடும்.

ஆகையால் உங்கள் அழகான நாய்க் குட்டி விரைவில் நலம் பெற்று தன் எழுந்து நடந்து வீடு திரும்பும்.

காப்பீடு

காப்பீடு

செல்லப்பிராணிகளுக்கான காப்பீடு வீட்டு வளர்ப்பு விலங்குகள் மற்றும் பறவைகளான நாய்கள், பூனைகள், குதிரைகள், கிளிகள் போன்ற மற்றும் பலவற்றிற்கும் கிடைக்கப் பெறுகிறது.

காப்புறுதி

காப்புறுதி

இந்தச் செல்லப்பிராணிகளுக்கான காப்பீட்டுத் திட்டங்கள் வளர்ப்பு பிராணியின் உரிமையாளரின் தேவைகள் மற்றும் விருப்பங்களுக்கேற்ப காப்பீட்டு நிறுவனங்களால் தனிப்பட்ட முறையில் வடிவமைக்கப்படுகின்றன.

மேலும் செல்லப்பிராணிகளுக்கு ஏற்படும் நோய்களுக்கும் மற்றும் விபத்துக்கள் காரணமாக ஏற்படும் காயங்களுக்கும் செய்யப்படும் மருத்துவச் சிகிச்சைக்குக் காப்பளிக்கிறது. சில காப்பீட்டுத் திட்டங்கள் செல்லப்பிராணிகளின் இறப்பு மற்றும் திருட்டினால் செல்லப் பிராணியை இழத்தல், மற்றும் இதர காரணங்களுக்கும் காப்பீட்ளிடை அளிக்கிறது.

3 வகையான காப்பீடு

3 வகையான காப்பீடு

செல்லப் பிராணிகளுக்கான மூன்று விதமான காப்பீட்டுத் திட்டங்கள் உள்ளன. அதாவது, அவை ஆயுட்காலக் காப்பீடு, கால வரம்பு காப்பீடு, பண வரம்பு காப்பீடு என்பனவாகும்.

ஆயுட்காலக் காப்பீடு
 

ஆயுட்காலக் காப்பீடு

ஆயுட்காலக் காப்பீடு நெருக்கடியான / நீண்டகால நோய்களுக்குக் காப்பீட்டை வழங்குகிறது. இந்தக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் செல்லப் பிராணிகளின் சிகிச்சைக்காக ஒரு குறிப்பிட்ட தொகையை ஒவ்வொரு வருடமும் காப்பீட்டு நிறுவனமே செலுத்தும்.

கால வரம்பு காப்பீடு

கால வரம்பு காப்பீடு

பெயருக்கேற்றாற் போல இந்தக் கால வரம்பு காப்பீட்டுத் திட்டமானது, ஒப்பந்தம் செய்யப்பட்ட கால வரம்பு வரை ஒரு செல்லப்பிராணி நோயுற்றாலோ அல்லது காயங்களால் பாதிக்கப்பட்டாலோ காப்பை வழங்குகிறது.

பண வரம்பு காப்பீடு

பண வரம்பு காப்பீடு

பண வரம்பு காப்பீட்டு திட்டமானது ஒரு செல்லப்பிராணியின் உரிமையாளர் செல்லப்பிராணியின் மருத்துவச் சிகிச்சைக்காக எதிர்கொள்ளும் செலவுகளில் காப்பீட்டு நிறுவனம் செலுத்த வேண்டிய பண வரம்பை குறிப்பிடுகிறது. பண வரம்பு முடிவடையும் வரை இந்தக் காப்பீடு கிடைக்கப்பெறும்.

 முதிர்வு தொகை

முதிர்வு தொகை

நாய்கள் மற்றும் பூனைகள் போன்ற செல்லப் பிராணிகளின் வழக்கில் அந்த வளர்ப்புப் பிராணியின் இனம் மற்றும் இதர காரணிகளைப் பொறுத்து காப்பீட்டு திட்டத்தின் முதிர்வு தொகை ரூபாய் 15,000 முதல் ரூபாய் 30,000 க்கும் இடைப்பட்ட வரம்பில் இருக்கும்.

வித்தியாசமான காப்பீடு

வித்தியாசமான காப்பீடு

மேலும் சில காப்பீட்டுத் திட்டங்கள் ஒரு செல்லப்பிராணி ஒரு மூன்றாம் தரப்பினரை கடித்துவிட்டாலோ அல்லது உடல் ரீதியாகத் தாக்கி விட்டாலோ அல்லது மூன்றாம் தரப்பினரின் சொத்துக்கு இழப்பையோ அல்லது சேதத்தையோ ஏற்படுத்தினாலோ அதனால் எழக்கூடிய நிதி சார்ந்த பொறுப்புகளிலிருந்து செல்லப்பிராணியின் உரிமையாளரைப் பாதுகாக்கும் மூன்றாம் தரப்பினர் பொறுப்புக் காப்பீட்டை வழங்குகின்றது.

காப்பீட்டு நிறுவனங்கள்

காப்பீட்டு நிறுவனங்கள்

இந்தியாவில் பல காப்பீட்டு நிறுவனங்கள் செல்லப்பிராணிகளுக்கான காப்பீட்டுத்திட்டங்களை வழங்குகின்றன, அவற்றில் நியூ இந்தியா காப்பீட்டு நிறுவனம், ஓரியண்டல் காப்பீட்டு நிறுவனம், யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனம், ஃப்யூச்சர் ஜெனராலி, மற்றும் பலவும் அடங்கும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Have you insured your pet yet?

Have you insured your pet yet?
Story first published: Tuesday, April 25, 2017, 17:27 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X