SIP என்றால் என்ன? லாபம் நஷ்டம் எப்படி கணக்கிடப்படுகிறது..? இது எப்படி வேலை செய்கிறது?

முறையான முதலீட்டு திட்டம்(SIP) என்றால் என்ன? அது எப்படி வேலை செய்கிறது?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எஸ்ஐபி என அழைக்கப்படும் சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் (SIP) மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யும் ஒரு வழிமுறையாகும். மியூச்சுவல் ஃபண்டில் பாரம்பரியமாக மொத்தமாக முதலீடு செய்வதற்கு மாற்றாகத் தவணை முறையில் முதலீடு செய்வதையே எஸ்ஐபி என அழைக்கின்றனர். எஸ்ஐபி மூலம் மியூச்சுவல் ஃபண்டு திட்டங்களில் குறைந்தது 100 ரூபாய் தவணையாகச் செலுத்தி முதலீடு செய்யலாம். ரெக்கரிங் டெபாசிட் என அழைக்கப்படும் தொடர் வைப்பு நிதி போன்று எஸ்ஐபி வழியாக மியூச்சுவல் ஃபண்டு திட்டத்தில் முதலீடு செய்யலாம்.

அது எப்படி வேலை செய்கிறது?

அது எப்படி வேலை செய்கிறது?

எஸ்ஐபி என்பது ஒரு நெகிழ்த்தன்மை உடைய மற்றும் எளிதான முதலீட்டுத் திட்டமாகும். உங்கள் பணம் உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து தானியங்கியாகக் கழிக்கப்பட்டு ஒரு குறிப்பிட்ட பரஸ்பர நிதி முதலீட்டுத் திட்டத்தில் முதலீடு செய்யப்படுகிறது.

முதலீடு துவங்கிய நாளின் தற்போதைய சந்தை விலை நிலவரத்தை (NAV அல்லது நிகரச் சொத்திருப்பு மதிப்பு என்று அழைக்கப்படுகிறது) அடிப்படையாகக் கொண்டு உங்களுக்குச் சில குறிப்பிட்ட எண்ணிக்கை அலகுகள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

 

கூடுதல் அலகுகள் எப்படிச் சேர்க்கப்படுகின்றது

கூடுதல் அலகுகள் எப்படிச் சேர்க்கப்படுகின்றது

ஒவ்வொரு முறை நீங்கள் பணத்தை முதலீடு செய்யும் போதும், சந்தை விலை நிலவரப்படி அத்திட்டத்தின் கூடுதல் அலகுகள் வாங்கப்பட்டு உங்கள் கணக்கில் சேர்க்கப்படுகிறது. எனவே அலகுகள் வெவ்வேறு விலைகளில் வாங்கப்படுவதால் முதலீட்டாளர்கள் ரூபாய் - மதிப்பீட்டுச் சராசரி மற்றும் வட்டி கூட்டுத் தொகையாக்கத்தின் ஆற்றலால் பயன் பெறுவர்.

ரூபாய் மதிப்புச் சராசரியாக்கம்.
 

ரூபாய் மதிப்புச் சராசரியாக்கம்.

நிலைப்புத்தன்மையற்ற சந்தைகளால், பெரும்பான்மையான முதலீட்டாளர்கள் முதலீடு செய்வதற்கேற்ற சிறந்த நேரம் பற்றிச் சந்தேகத்துடனிருக்கிறார்கள் மற்றும் சந்தையில் அவர்கள் நுழைவதற்கான நேரம் பார்த்து முயற்சிக்கிறார்கள். ரூபாய் மதிப்புச் சராசரியாக்கம் உங்களை இந்த ஊகிக்கும் விளையாட்டிலிருந்து வெளியேற அனுமதிக்கிறது.

நீங்கள் ஒரு வழக்கமான முதலீட்டாளராக இருப்பதால், உங்கள் பணம் விலை குறைவாக இருக்கும் போது அதிக அலகுகளையும் விலை அதிகமாக இருக்கும் போது குறைந்த அலகுகளையும் ஈட்டித் தரும். நிலைப்புத்தன்மையற்ற காலங்களின் போது, உங்களை ஒரு அலகுக்குக் குறைந்த சராசரி விலையைப் சாதிக்க அனுமதிக்கிறது.

 

வட்டி கூட்டுத் தொகையாக்கம்

வட்டி கூட்டுத் தொகையாக்கம்

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் ஒருமுறை சொன்னார், "கூட்டு வட்டி உலகின் எட்டாவது அதிசயமாகும். அதை யார் புரிந்து கொள்கிறார்களோ, அவர்கள் பணம் சம்பாதிக்கிறார்கள், யார் புரிந்து கொள்ளவில்லையோ., அவர்கள் பணம் செலுத்துகிறார்கள்." கூட்டு தொகையாக்கத்திற்கான விதிகள் எளிமையானவை - நீங்கள் எவ்வளவு சீக்கிரம் முதலீட்டைத் தொடங்குகிறீர்களோ, அவ்வளவு அதிகமாக உங்கள் பணம் வளரும்.

எடுத்துக்காட்டு

எடுத்துக்காட்டு

நீங்கள் ஒரு மாதத்திற்கு ரூ. 10000 முதலீடு செய்யத் தொடங்கியிருந்தால் 20 வருட காலத்தில் உங்கள் 40 வது பிறந்த நாளில், நீங்கள் ரூ. 24 இலட்சங்களைத் தனியாக எடுத்து வைக்க முடியும். அந்த முதலீடானது ஒரு வருடத்திற்குச் சராசரியாக 7% வளர்ந்தால், நீங்கள் 60 வயதை அடையும் போது அது ரூ. 52.4 இலட்சங்களாக மதிப்படைந்திருக்கும்.

எனினும், நீங்கள் 10 வருடங்களுக்கு முன்பாகவே முதலீடு செய்வதைத் தொடங்கியிருந்தால், ஒவ்வொரு மாதமும் உங்கள் ரூ. 10000, 30 வருடங்களில் ரூ. 36 இலட்சமாகச் சேர்க்கப்பட்டிருக்கும். அதே வருடாந்திர வளர்ச்சியான 7% சராசரி என்று அனுமானித்தால், உங்களது 60 வது பிறந்த நாளில் நீங்கள் 1.22 கோடி ரூபாயைப் பெறுவீர்கள் - நீங்கள் பத்து வருடங்கள் கழித்துத் தொடங்கியிருந்தால் இரட்டிப்பை விட அதிகமான தொகையை நீங்கள் பெறுவீர்கள்.

 

ஒழுக்கமான சேமிப்பு

ஒழுக்கமான சேமிப்பு

வெற்றிகரமான முதலீடுகளுக்கு ஒழுக்கமே திறவுகோல் ஆகும். நீங்கள் எஸ்ஐபி (SIP) வழியாக முதலீடு செய்யும் போது, நீங்கள் வழக்கமான சேமிப்பில் உங்களை ஈடுபடுத்திக் கொள்கிறீர்கள். நீங்கள் செய்யும் ஒவ்வொரு முதலீடும் உங்கள் நிதி குறிக்கோள்களை அடைவதை நோக்கி எடுத்து வைக்கும் அடியாகும்.

நெகிழ்வுத்தன்மை

நெகிழ்வுத்தன்மை

நீண்ட காலத் தொலைநோக்கு கண்ணோட்டத்துடன் சிப் முதலீடுகளில் தொடர அறிவுறுத்தப்படும் அதே வேளையில், அங்கே கட்டாயம் ஏதும் இல்லை. முதலீட்டாளர்கள் எந்த நேரத்திலும் திட்டத்திலிருந்து இடையிலேயே நிறுத்திக் கொள்ளலாம். மேலும் ஒருவர் முதலீடு செய்யப்படும் தொகையை அதிகரிக்கலாம் / குறைத்துக் கொள்ளலாம்.

நீண்ட கால ஆதாயங்கள்

நீண்ட கால ஆதாயங்கள்

பண மதிப்பீட்டுச் சராசரியாக்கம் மற்றும் கூட்டுத் தொகையாக்க திறனின் காரணமாக நீண்ட கால முதலீட்டுத் தொடுவரைகளில் ஈர்க்கக்கூடிய வரவுகளை வழங்கும் உள்ளார்ந்த ஆற்றல் எஸ்ஐபி (SIP) யிடம் உள்ளது.

சௌகரியம்

சௌகரியம்

எஸ்ஐபி (SIP) ஒரு சிக்கல்களற்ற முதலீட்டு முறையாகும். உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து தானியங்கியாகப் பற்று எடுத்துக் கொள்ளும் வசதியைச் செய்து தரச் சொல்லி நீங்கள் உங்கள் வங்கிக்கு நிலைக் கட்டளைகளை வெளியிடலாம்.

செயல்முறையில் உள்ள முதலீடுகளைப் பின்பற்ற ஆதாரங்கள் இல்லாத சில்லறை முதலீட்டாளர்களுக்குச் எஸ்ஐபி (SIP) ஒரு சிறந்த முதலீட்டுத் திட்டம் என்று நிரூபித்துக் கொண்டுள்ளது.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

What is a Systematic Investment Plan? How does it work?

What is a Systematic Investment Plan? How does it work?
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X