கிரெடிட் ரிப்போர்ட் பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டியவை..!

Written By:
Subscribe to GoodReturns Tamil

வங்கிகளிலிருந்து வீட்டுக் கடனைப் பெற நீங்கள் கடனைத் திருப்பிச் செலுத்துவதில் நல்ல மதிப்பீட்டைப் பெற்றிருக்க வேண்டியது அவசியம் என்பதைப் பலரும் அறிந்திருப்பீர்கள்.

உங்கள் மோசமான கடன் மதிப்பெண்ணை (Credit Score) காரணமாகக் காட்டி வங்கிகள் உங்கள் விண்ணப்பத்தை நிராகரிப்பதற்கு முன்பாக நீங்களே உங்களுக்கு நன்மதிப்பை சரிபார்த்துக் கொள்வது நல்லது.

இப்படிக் கடன் அறிக்கை (Credit Report) பற்றி அனைவரும் கட்டாயமாகத் தெரிந்து கொள்ள வேண்டியவை பற்றியே நாம் இப்போது பார்க்கப்போகிறோம். இப்போதெல்லாம் கிரேடிட் ரிப்போர்ட்-ஐ வீட்டு கடனுக்கு மட்டும் அல்லாமல் அனைத்து விதமான கடனுக்கும் வங்கிகள் ஆய்வு செய்கிறது குறிப்பிடத்தக்கது.

கிரெடிட் ஸ்கோர்

கடன் தரும் அமைப்புகள் நிதி நிறுவனங்களால் அளிக்கப்படும் தரவுகளைப் பயன்படுத்தி உங்கள் கடனை திருப்பிச் செலுத்தும் நடத்தையை மதிப்பாய்வு செய்கின்றன. அதனடிப்படையில் வாடிக்கையாளருக்கு மதிப்பெண் வழங்கப்படுகிறது.

எனினும் 300 க்கும் 600 க்கும் இடைப்பட்ட கடன் மதிப்பெண் அபாயகரமானதாக வங்கிகளால் கருதப்படுகிறது, 700 க்கு மேற்பட்ட மதிப்பெண் அபாயமற்ற மண்டலமாகக் கருதப்படுகிறது. உங்கள் கடன் மதிப்பெண்ணைப் பொறுத்து ஒரு வங்கி உங்களுக்குக் கடன் தருவதா வேண்டாமா என்பதை முடிவு செய்யும்.

 

இலவசம்

இந்த வருடம் ஜனவரி 1 முதல் இந்திய ரிசர்வ் வங்கி (RBI) கடன் வழங்கும் அமைப்புகள் வாடிக்கையாளருக்குத் தேவைப்பட்டால் ஒரு நிதியாண்டின் கடன் தகவல் அறிக்கையை (CIR) இலவசமாகக் கொடுக்க வேண்டுமென்பதைக் கட்டாயமாக்கியுள்ளது.

இதற்கு ஒவ்வொரு நிதியாண்டும் நீங்கள் நான்கு இலவச கடன் தகவல் அறிக்கைகளைப் பெறலாம் என்பது பொருளாகும்.

 

கடன் அமைப்புகள்

தற்போது இந்தியாவில் நான்கு கடன் அமைப்புகள் இயங்கி வருகின்றன. சிஆர்ஐஎஃப் - உயர் குறியீட்டு கடன் தகவல் சேவைகள், ஈக்விஃபேக்ஸ் கடன் தகவல் சேவைகள், எக்ஸ்பீரியன் கடன் தகவல் இந்திய நிறுவனம் மற்றும் டிரான்ஸ் யூனியன் சிபில் என்பன ஆகும். இந்த அமைப்புகள் ஒவ்வொரு வருடமும் ஒரு இலவச தகவல் அறிக்கையை உங்களுக்கு வழங்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

7 நாட்கள்

ஒரு வாடிக்கையாளருக்குக் கடன் தகவல் அறிக்கையைப் பெறும் பணி சோர்வடையச் செய்வதாகவும் மிக நீண்ட காலம் எடுத்துக் கொள்வதையும் காணலாம். கடன் அமைப்புகளிலிருந்து அறிக்கைகளைப் பெற சராசரியாக இரண்டு முதல் ஏழு நாட்களுக்கு இடைப்பட்ட காலம் எடுத்துக் கொள்கிறது.

இந்த அமைப்புகள் இணையத்தில் சேவைகளை வழங்குவது உண்மையாக இருந்த போதிலும், அதற்கான செயல்முறை பெரும்பாலும் சிக்கலானது. அத்தகைய சந்தர்ப்பங்களில் நீங்கள் அதிகம் சிரமப்படத் தேவையில்லை.
உங்களுக்கு உதவப் பேங்க் பஜார் டாட் காம் மற்றும் பைசா பஜார் டாட் காம் போன்ற நிதி சார்ந்த தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளன.

 

சில நிமிடங்கள்

இந்த நிதி சார்ந்த தொழில்நுட்ப நிறுவனங்களை உங்கள் கடன் தகவல்களைப் பெற அனுமதிப்பதன் மூலம் (இதற்கு உங்கள் அனைத்து மதிப்புமிக்க விவரங்களை வழங்குதல் என்பது பொருளாகும்), சில நிமிடங்களில் நீங்கள் உங்கள் கடன் தகவல் அறிக்கையை இலவசமாகப் பெறலாம்.

வரம்பு மீறுதல்

இருப்பினும் வல்லுநர்கள் இந்த நிதி சார்ந்த தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்தத் தகவல்களை இதர தயாரிப்புகளை விளம்பரப்படுத்தவோ அல்லது மூன்றாம் தரப்பினருக்கு விற்கவோ செய்வதனால் தகவல் வரம்பு மீறுதல் ஏற்படக்கூடும் என்று கருதுகின்றனர்.

உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்

ஒரு கடன் தகவல் அறிக்கைக்காக உதவியைப் பெற நீங்கள் இந்த நிதி சார்ந்த தொழில்நுட்ப நிறுவனங்களை அணுகுவதற்கு முன்பு, நீங்கள் ஒரு நம்பகமான நிறுவனத்துடன் தான் தொடர்பில் இருக்கிறீர்களா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

வரலாறு

அடிப்படை கட்டமைப்பு அதே மாதிரியாக இருந்த போதிலும், கடன் அமைப்புகள் உங்கள் கடன் மதிப்பெண்ணை அடைய வெவ்வேறு முறைகளைப் பயன்படுத்துகிறது.

உங்கள் கடந்த கடன் செலுத்திய வரலாற்றினை அடிப்படையாகக் கொண்டு இந்தக் கடன் அமைப்புகள் 300 முதல் 900 இடைப்பட்ட கடன் மதிப்பெண்களை உங்களுக்கு வழங்குகின்றன.

அவை வெவ்வேறு வழிமுறைகளைப் பயன்படுத்தி இந்த மதிப்பெண் எண்ணிக்கையை வரவழைப்பதால், வெவ்வேறு அமைப்புகள் வெவ்வேறு கடன் மதிப்பெண்களை உங்களுக்கு வழங்கலாம். அதைப் பற்றி நீங்கள் கவலைப்படத் தேவையில்லை.

 

காரணத்தைக் கண்டறியவும்..

இருப்பினும், இரண்டு கடன் அமைப்புகள் வழங்கிய மதிப்பெண்களுக்கு இடையில் பரந்த இடைவெளிகள் இருந்தால், ஏன் அப்படி இருக்கிறது என்பதை நீங்கள் கண்டறிவது நல்லதாகும்.

உடனடி நடவடிக்கை

ஒரு வேளை தரவுத் தகவல்கள் சம்பந்தமாக ஏதேனும் முரண்பாடுகளை நீங்கள் பார்த்தால், அந்தப் பிழையைத் திருத்த நீங்கள் உடனடியாகக் கடன் அமைப்புகளை அணுக வேண்டும்.

வீட்டுக் கடன்

உங்கள் கடன் அறிக்கை புதுப்பிக்கப்பட்ட எண்ணிக்கையில் பிரதிபலிப்பதற்கு முன்பு சில நாட்கள் எடுத்துக் கொள்ளும் என்கிற உண்மையை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

ஒருவேளை வீட்டுக் கடன் பெறுவதில் நீங்கள் அவசரத்தில் இருந்தால், உங்கள் கடன் அறிக்கை தொடர்பாகப் பிரச்சனைகள் எதுவும் இல்லை என்பதை உறுதி செய்து கொள்ளவும்.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Credit Report That You Must Know

Credit Report That You Must Know
Story first published: Friday, May 19, 2017, 15:00 [IST]
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns