சம்பள உயர்வின் ஏமாற்றத்தில் இருக்கும் ஊழியர்களை உற்சாகப்படுத்துவதற்கான ஐந்து வழிமுறைகள்..!

Written By: Tamilarasu
Subscribe to GoodReturns Tamil

எப்பொழுதும் வருடாந்திர செயல்திறன் மதிப்பீடு அல்லது சம்பள உயர்வின் போது ஊழியர்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்திச் செய்யவில்லை எனில் அது பணியிடத்தின் மனநிலை
மற்றும் குறைந்த உற்பத்திக்கு வழிவகுக்கும்.

அந்த நேரத்தில் ஊழியர்களைச் சுறு சுறுப்பாக வைக்கவும் மற்றும் வேலையில் அவர்களை உற்சாகப்படுத்தவும் மூத்த தலைவர்களுக்கான வழிமுறைகளைப் பிருந்தா தாஸ்குப்தா கண்டுபிடித்துள்ளார்.

வெளிப்படையான தகவல் பரிமாற்றம்

ஊழியர்களின் பங்களிப்பை வலுப்படுத்துவது என்பது முக்கியமானதாகும். Synopsys-இன் மனிதவள மூத்த இயக்குநர் அன்ஷுமன் ராய், "ஊழியர்கள் மற்றும் மூத்த இயக்குநர்கள் தங்கள் வளர்ச்சிக்கான அர்ப்பணிப்பை தெளிவுபடுத்துவது மிகவும் முக்கியமான செயலாகும்" எனக் கூறுகிறார்.

மற்ற சலுகைகளை ஆராயவும்

ஏமாற்றமளிக்கும் மதிப்பீடு உலகின் முடிவாக இருக்கக் கூடாது. இதைத் தவிர்த்து "நிலையற்ற சம்பளம், அந்த நேரத்திற்கான
வெகுமதி மற்றும் தொழில் வளர்ச்சிக்காக ஊழியர்களுக்கு நிதியுதவி அளித்தல் இது போன்ற சாத்தியமான தேர்வுகள் அணியின் மன உறுதியை ஒரு வழிப்படுத்தும்" என ராய் கூறுகிறார்.

பாராட்டுக்களைத் தெரிவிக்கவும்

குறைவான சம்பள உயர்வு இருக்கும்பொழுது, ஊழியர்கள் மிகவும் தாழ்வாக உணர்கிறார்கள் ஆனால் அவர்கள் எப்படி உற்சாகப்படுத்தப்படுகிறார்கள் அல்லது பாராட்டப்படுகிறார்கள் என்பதை எதிர்நோக்குகிறார்கள். Capillary டெக்னாலஜியின் நடைமுறை, திறமையைக் கண்டறிதல் மற்றும் பணியிடத் தீர்வுகளின் தலைவர் புன்கு முத்தப்பா, "மூத்த தலைவர்கள் இந்தக் குறிப்பை எடுத்துக் கொண்டு உண்மையான பாராட்டுக்கள், பொருத்தமான கருத்துக்கள் மற்றும் வேலையின் தரத்தை கவனிக்க வேண்டும்" எனக் கூறுகிறார்.

அணுகுமுறையை வரைவுப்படுத்தவும்

ஒவ்வொரு ஊழியரின் தேவைகள் வெவ்வேறாக உள்ளது அதில் உங்கள் அணுகுமுறையை வரைவுப்படுத்துவது முக்கியமானதாகும் மற்றும் அணியிலிருந்து ஒரு நபர் வெளியேறாமல் இருப்பதை உறுதிப்படுத்துவது அவசியம். "தனிப்பட்ட ஊழியரை ஊக்குவிப்பது எது என்பதைக் கண்டறிந்து அதற்கான வெகுமதிகளைக் கொடுக்க வேண்டும்" என முத்தப்பா கூறுகிறார்.

கடினமான சூழ்நிலைகளைச் சமாளிக்கவும்

இந்தச் சராசரியான மதிப்பீடுகளை வழங்கும்போது ஒவ்வொரு நிறுவனமும் கடினமான சூழ்நிலைகளை எதிர்கொள்ளும், அப்பொழுது ஊழியர்களை அமைதிப்படுத்த தலைவர்கள் உதவவேண்டும்.

"துவக்கத்தில், உயர்-திறன் கோண்ட பணியாளர்களுக்குப் பங்குகள் வழங்குவதன் மூலம் அவர்களின் பங்களிப்பை நீங்கள் மதிக்கிறீர்கள் என்பதை நிரூபிக்க ஒரு சிறந்த வழியாகும். இதனால் ஆடம்பர பேஷன் தளமான Zapyle-இன் நிறுவனர் ராசி மேன்தா "இன்றையதினம் ஏதும் இல்லை என்றாலும் நாளை ஒருநாள் நிச்சயமாக அவர்கள் கையில் ஏதாவது ஒன்று இருக்கும்", எனக் கூறுகிறார்.

எல்லாம் நன்மைக்கே!!

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Five ways to improve team morale after disappointing appraisals

Five ways to improve team morale after disappointing appraisals
Story first published: Saturday, May 6, 2017, 12:39 [IST]
Please Wait while comments are loading...
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns