ஐடி ஊழியர்களுக்கு மீண்டும் பயிற்சியளிக்க திறன் படைத்தவர்களாக மாற்ற ஏற்ற சிறந்த வழிகள்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இன்றைய வேகமான உலகில் ஐடி நிறுவனங்கள் ஊழியர்களுக்குத் திறன் இருக்கிறதா இல்லையா என்று சரிபார்த்து பணியை விட்டு நீக்கும் அதே நேரத்தில் சில நிறுவனங்கள் ஊழியர்களுக்கு மீண்டும் பயிற்சி அளித்துத் திறனை மேம்படுத்தவும் செய்கின்றது.

அப்படி நிறுவனங்கள் ஊழியர்களுக்குப் பயிற்சி அளிக்க ஏற்ற வழிகள் என்னென்ன என்று இங்குப் பார்ப்போம்.

பணியாட்களுக்கு மீண்டும் பயிற்சியளித்தல்

பணியாட்களுக்கு மீண்டும் பயிற்சியளித்தல்

வளர்ந்து வரும் தொழில்நுட்பம் புழக்கத்தில் உள்ள திறமை வளர்க்கும் பயிற்சிகளை வழக்கத்திலிருந்து ஒழித்துப் பாரம்பரிய வழிகளில் ஒரு தகர்ந்த நிலையை ஏற்படுத்தி, வர்த்தகத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தி விடுவதால் பணியாளர்களுக்குப் புத்தாக்கப் பயிற்சி தருவது கட்டாயத் தேவையாகிறது. நிறுவனங்கள் பணியாளர்களின் புத்தாக்க பயிற்சிக்கான வழிகாட்டித் தயாரிக்கும்போது மனதில் கொள்ள வேண்டிய விஷயங்கள் பற்றி வல்லுநர்களின் கருத்தை ஸ்ரீராதா டி பாசு கேட்டிருக்கிறார்.

மாற்றங்களைத் தெரியப்படுத்துதல்

மாற்றங்களைத் தெரியப்படுத்துதல்

KPIT நிறுவனத்தின் KNS ஆச்சார்யா கூறுகிறார் : மூத்த நிர்வாக அமைப்பு இத்தகைய மாற்றங்களைப் பணியாளர்களுக்கு அவர்கள் ஏற்றுக்கொள்ளத்தக்க வகையில் தெரியப்படுத்தி, மாற்றமடைய ஊக்கப்படுத்தி, மாற்றத்திற்கான காலக்கெடுவை நிறுவனத்தின் முதலாளிகளுக்கும் தெரியப்படுத்த வேண்டும்.

விளைவுகளை வரையறை செய்தல்

விளைவுகளை வரையறை செய்தல்

simplilearn நிறுவன மூத்த வர்த்தக நிறுவன இயக்குனர் கூறுகிறார் : மதிப்பிடத்தக்க முடிவுகளின் மீதான கூர்ந்து நோக்கும் தன்மை கற்றலுக்கான வழிமுறைகளை விரிவுபடுத்தி, நன்கு கற்றறிந்த நிலையோடு கூடிய விளைவுகளை ஏற்படுத்தும். மேலும், இத்தகைய செயல் முன்னேற்றத்திற்கான முடிவுகளை எடுக்க உதவவும், பயிற்சி திட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளவும், முதலீடுகளின் மீதான லாபத்தை அளவிடவும் பேருதவி செய்யும்.

காலக்கெடுவை நிர்ணயித்தல்

காலக்கெடுவை நிர்ணயித்தல்

KPIT ன் ஆச்சார்யா கூறுகிறார் : ஒவ்வொரு பணியாளருடைய தனிப்பட்ட திறமை வளர்ச்சிக்கான ஒரு குறுகிய காலக்கெடுவை நிர்ணயிக்காதவரையில் இவை காகிதத்தில் மட்டுமே இருக்கும் என்பதை நிறுவனங்கள் உணர வேண்டும். மேலும் அவர் கூறுகிறார் : ஒவ்வொரு பணியாளரும் அவர் தன்னை மேம்படுத்திக்கொள்ள ஒரு காலக்கெடு தேவை என்பது குறித்த தெளிவான திட்டம் இருக்க வேண்டும் என்பது தவிர்க்க முடியாததாகிறது.

டிஜிட்டல் முறை நவீன கற்றல் முறைகள்

டிஜிட்டல் முறை நவீன கற்றல் முறைகள்

பணியாளர்கள் தமது கற்றல் முறைகளில் நெகிழ்வுத் தன்மை வேண்டும். டிஜிட்டல் முறை தொழில்நுட்பத்திற்கு நம்மைத் தயார்படுத்திக் கொண்டு மாற வேண்டியது சாத்தியமாகக்கூடிய ஒரு விஷயம்தான். எச்சரிக்கையும், புத்திசாலித்தனமும் நிறைந்த பல நிறுவனங்கள் ஏற்கனவே இணையதளம் சார்ந்த நெகிழ்வுத் தன்மையுடன் கூடிய பயிற்சித் திட்டங்களை ஏற்கனவே ஆரம்பித்து விட்டன. இந்த டிஜிட்டல் முறை பயிற்சிகள் நிர்வாகத்திற்கும், நிறுவனத்திற்கும் வெற்றிக்கான சந்தர்ப்பங்களை உருவாக்குபவையாக அமைகின்றன என்கிறார் ஸ்கில்சாப்ட் நிறுவன நிர்வாகி வினய் பிரதான்.

நேர்த்தியான பயிற்சிகள்

நேர்த்தியான பயிற்சிகள்

நிர்வாகிகளுக்கு நிர்வாகவியல் பயிற்சி கண்டிப்பாகத் தேவை. அது படிப்பிற்கும் பயிற்சிக்கும் இடையிலான கலவையாக இருக்கும். ஸ்கில்சாப்ட் ன் வினய் பிரதான்.கூறுகிறார் : நிறுவனங்கள் இந்தத் திட்டங்களைக் கைக்கொண்டால் நல்ல நம்பிக்கையின் உச்சமாக இருக்கும். நிறுவனங்கள் நிர்வாகிகளை முன்னேற்ற உதவுவதை உணரத்தக்க ஆற்றலை அவை தருகின்றன என்றும் கூறுகிறார்.

புதிய தொழில்நுட்பங்களோடு கூடிய பயிற்சிகள் புதிய முன்னேற்றங்களுக்கும் வழி வகுக்கும்.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Five ways to prepare effective roadmap to reskill staff

Five ways to prepare effective roadmap to reskill staff
Story first published: Tuesday, May 30, 2017, 18:27 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X