கேஸ் சிலிண்டர் விபத்து ஏற்படும் போது எல்பிஜி இன்சூரன்ஸ் பெறுவது எப்படி..?

கேஸ் சிலிண்டர் விபத்து ஏற்படும் போது எல்பிஜி இன்சூரன்ஸ் பெறுவது எப்படி..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நம் நாட்டில் எல்பிஜி சிலிண்டர்களால் ஏற்படும் விபத்துக்கள் தொடர்பாக ஆண்டுதோறும் பல புகார்கள் பதிவு செய்யப்படுகின்றன. எண்ணெய் விற்பனை நிறுவனங்களும், விநியோகஸ்தர்களும் கோடிக்கணக்கான ரூபாய்களைக் காப்பீட்டு முனையக் கட்டணமாகச் செலுத்துகின்றனர். ஆனால் மக்களுக்கு இதைப் பற்றிப் போதிய விழிப்புணர்வு இல்லை.

பதிவு செய்யப்பட்ட எல்லாக் காஸ் சிலிண்டர் நுகர்வோரும் அவர்களுடைய பதிவு செய்யப்பட்ட முகவரியில் எல்பிஜி சிலிண்டர் விபத்துக்களினால் ஏற்படும் அபாயங்களுக்கு எதிராகக் காப்பீடு செய்யப்பட்டுள்ளனர்.

காப்பீடு தொகை

காப்பீடு தொகை

காஸ் சிலிண்டர்களால் ஏற்படும் விபத்துக்களுக்கு ரூபாய் 40 முதல் 50 இலட்சங்கள் வரை காப்பீடு அளிக்கப்படுகிறது.

யாருக்கெல்லாம் இந்தக் காப்பீடு பொருந்தும்?

யாருக்கெல்லாம் இந்தக் காப்பீடு பொருந்தும்?

எல்பிஜி காப்பீட்டுத் திட்ட பாதுகாப்பு, குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களுக்குமானது.. ஒருவேளை மரணம் நேர்ந்தால், இறந்தவரின் உறவினர் இழப்பீடு கேட்டு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும். பாதிக்கப்பட்டவரின் வயது, வருமானம் மற்றும் இதர காரணிகளைப் பொறுத்து எவ்வளவு இழப்பீட்டுத் தொகை தரவேண்டுமென்பதை நீதிமன்றம் முடிவு செய்யும்.

ஒருவேளை விபத்து நிகழ்ந்தால் எல்பிஜி காப்பீட்டிற்கு எப்படித் தாக்கல் செய்ய வேண்டும்? விபத்து நிகழ்ந்த பின் எல்பிஜி சிலிண்டர் வாடிக்கையாளர்கள் பின்பற்ற வேண்டிய செயல்முறைகளை இங்குப் பார்ப்போம்.

 

1. யாரைத் தொடர்பு கொள்ள வேண்டும்?

1. யாரைத் தொடர்பு கொள்ள வேண்டும்?

விபத்து நடந்ததைப் பற்றி மிக அருகாமையில் உள்ள காவல் நிலையத்தில் உடனடியாகப் புகார் அளிக்க வேண்டும். விபத்துக்கள் ஏதேனும் நிகழ்ந்தால் எல்பிஜி சிலிண்டர் வாடிக்கையாளர் உடனடியாக விநியோகஸ்தருக்கு எழுத்துப் பூர்வமாகத் தகவல் தெரிவிக்க வேண்டும். பின்னர், விநியோகஸ்தர் சம்பந்தப்பட்ட எண்ணெய் நிறுவனத்திற்கும், காப்பீட்டு நிறுவனத்திற்கும் விபத்துக் குறித்துத் தகவல் தெரிவிப்பார். வாடிக்கையாளர்கள் நேரடியாகக் காப்பீட்டு நிறுவனத்தைத் தொடர்பு கொள்ளவோ அல்லது விண்ணப்பிக்கவோ தேவையில்லை.

2. தேவையான ஆவணங்கள்:

2. தேவையான ஆவணங்கள்:

இந்தக் காப்பீட்டிற்குத் தாக்கல் செய்வதற்கு, பின்வரும் சில ஆவணங்களை வாடிக்கையாளர்கள் எண்ணெய் நிறுவனத்திற்குச் சமர்ப்பிக்க வேண்டியது அவசியமாகும். இறப்புச் சான்றிதழின் அசல், பிரேதப் பரிசோதனை அறிக்கைகள் / மரண விசாரணை / பிண ஆய்வாளர் அறிக்கை / மரணச் சட்டத்தேர்வாராய்ச்சி அறிக்கை ஆகியவை ஒருவேளை விபத்து நிகழ்ந்தால் பொருந்தக்கூடிய ஆவணங்களாகும்.

3. காயங்கள்:

3. காயங்கள்:

ஒருவேளை காயங்கள் நிகழ்ந்தால், வாடிக்கையாளர்கள், மருத்துவச் செலவுகளுக்குச் செலுத்திய அசல் கட்டண ரசீதுகள், மருத்துவரின் மருந்து பரிந்துரைச் சீட்டுக்கள், மருந்துகள் வாங்கியதற்கான அசல் ரசீதுகள், விடுவிப்பு அட்டை மற்றும் மருத்துவமனையில் தங்கி உள்ளிருப்புச் சிகிச்சை பெற்றது தொடர்பான அசல் ஆவணங்கள் ஆகியவற்றைச் சமர்ப்பிக்க வேண்டும்.

4. சொத்துச் சேதங்கள்:

4. சொத்துச் சேதங்கள்:

எல்பிஜி சிலிண்டர் விபத்துக்களின் போது சொத்துக்கள், வீடு அல்லது கட்டிடம் மற்றும் வாகனங்கள் ஆகியவற்றிற்குச் சேதம் விளைவதென்பது சாதாரணமானதாகும். அத்தகைய சம்பவங்களில், நீங்கள் அந்தச் சேதங்களுக்கான இழப்பீட்டிற்குத் தாக்கல் செய்யலாம். வாடிக்கையாளரின் பதிவு செய்யப்பட்ட சுற்றுச்சூழல்களில் சேதம் ஏற்பட்டிருந்தால், காப்பீட்டு நிறுவனம் ஏற்பட்ட இழப்பை மதிப்பிட அவர்கள் சார்பாக ஒரு மதிப்பீட்டாளரை நியமிக்கிறது. உள்ளூர் கேஸ் நிறுவனம் காப்பீட்டை தாக்கல் செய்து முறைப்படி சம்பிரதாயங்களை நிறைவேற்ற உங்களுக்கு உதவ வேண்டும்.

5. ஐ.எஸ்.ஐ தர முத்திரையிடப்பட்ட உபரி பாகங்களையே பயன்படுத்துங்கள்:

5. ஐ.எஸ்.ஐ தர முத்திரையிடப்பட்ட உபரி பாகங்களையே பயன்படுத்துங்கள்:

நீங்கள் பயன்படுத்தும் உபரி பாகங்களின் மீது எப்போதும் ஒரு கண் வைத்துக் கவனமாக இருக்க வேண்டியது முக்கியமானதாகும். காப்பீடு கோரி செய்யப்படும் தாக்கல் நிராகரிக்கப்படுவதைத் தவிர்க்க, ஐ.எஸ்.ஐ தர முத்திரையிடப்பட்ட பொருட்களையே நீங்கள் எப்போதும் பயன்படுத்த வேண்டும். துணைக்கருவிகளான கேசுக்கு தீ ஏற்றும் கருவி மற்றும் கேஸ் குழாய்கள் போன்ற கருவிகளும் இதில் அடங்கும்.

6. பராமரிப்புச் சோதனைகள்

6. பராமரிப்புச் சோதனைகள்

உங்கள் கேஸ் கொள்முதல் வியாபாரியிடம் வழக்கமான கால இடைவெளிகளில் பராமரிப்பு சோதனைகளைச் செய்யச் சொல்லி கேட்க வேண்டியது மிகவும் முக்கியமானதாகும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

How To Claim LPG Insurance? Know The Procedure

How To Claim LPG Insurance? Know The Procedure
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X