போனஸ், இன்சென்டிவ் இரண்டும் ஒன்றா? - ஒரு அலசல்

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

போனஸ் மற்றும் இன்சென்டிவ் என்ற இந்த இரு சொற்களும் நாம் வேலை செய்யும் இடங்களில் பணப்பயன் குறித்த பேச்சுக்களின் போது அடிக்கடி பயன்படுத்தும் சொற்கள்தான். கிட்டத்தட்ட ஒரே பொருளைக் குறிக்கும் இருவேறு சொற்கள் இவற்றின் அர்த்தத்தில் சிறு வித்தியாசமும் உண்டு. இதைப் பற்றித்தான் இப்போது பார்க்க உள்ளோம்.

 

இரண்டுமே இழப்பீடு (மாற்றாக வழங்கப்படும் தொகை) அல்லது ஊக்கத்தொகை அல்லது கருணைத்தொகை என்ற ஏதோ ஒன்றை ஒவ்வொரு சமயத்திலும் குறிப்பிடும்.

நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் அடிக்கடி பேசிக்கொள்ளும் வார்த்தைகள்தான் இவை.

போனஸ் என்றால் என்ன?

போனஸ் என்றால் என்ன?

போனஸ் என்பது நிர்வாகத்தால் ஒரு குறிப்பிட்ட பணியாளருக்கோ அல்லது ஒரு பணியாளர் குழுவிற்கோ அவர்களின் முந்தைய பணிநாட்களில் சிறப்பாகப் பணிபுரிந்து நிர்வாகத்திற்கும், நிறுவனத்திற்கும் லாபம் சேர்த்துக் கொடுத்ததானாலோ அல்லது நிறுவனத்திற்கு வெற்றி தேடித்தந்து ஒரு குறிப்பிட்ட இலக்கினை அடைந்ததற்காகவோ அவர்களின் பணியைப் பாராட்டி நிர்வாகத்தால் அறிவிக்கப்படும் ஒரு பரிசுத் தொகை என்று கூறலாம்.

இன்சென்டிவ் என்றால் என்ன

இன்சென்டிவ் என்றால் என்ன

இன்சென்டிவ் என்பது பணியாளர்களை ஒரு வேலையைச் செய்ய ஊக்கப்படுத்த அல்லது ஒரு இலக்கினை அடைய ஊக்கப்படுத்த நிர்வாகத்தால் ஏற்கனவே திட்டமிடப்பட்டு அடுத்தடுத்த ஒவ்வொரு பணிக்கும் ஒவ்வொரு விதமான ஊக்கத்தொகை வழங்குவதாகும்.

போனஸ் தொகைக்கும் இன்சென்டிவ் தொகைக்கும் உள்ள அடிப்படை வித்தியாம் என்ன?
 

போனஸ் தொகைக்கும் இன்சென்டிவ் தொகைக்கும் உள்ள அடிப்படை வித்தியாம் என்ன?

போனஸ் என்பது ஒரு பணியாளர் குறிப்பிட்ட பணி அல்லது திட்டத்தை முடித்த பிறகு வழங்கப்படுவது. இன்சென்டிவ் என்பது ஒருவரை ஒரு பணியைச் செய்ய ஊக்கப்படுத்த முன்கூடியே வழங்கி அந்த வேலையே செய்யத் தூண்டுவது.

போனஸ் ஒரு இன்ப அதிர்ச்சி

போனஸ் ஒரு இன்ப அதிர்ச்சி

போனஸ் வழக்கமாக ஒரு இன்ப அதிர்ச்சியைக் கொடுக்கக் கூடியது. இன்செண்டிவ்வில் இத்தகைய ஆச்சரியப்படும் விஷயம் ஏதும் கிடையாது. இன்சென்டிவ்கள் பணியாளர்களை ஒரு வேலையைச் செய்யத் தூண்டி நிர்வாகத்திற்கு உண்மையாக இருந்திட வழங்கப்படுவது. இன்சென்டிவ் ஒரு பணியை முடிக்கும் பணியாளருக்கு உறுதி செய்யப்பட்டது. போனஸ் என்பது ஏற்கனவே முடிக்கப்பட்ட பணிக்கு அதை முடித்த பணியாளர் குழுவிற்கு நிர்வாகம் பெற்ற பயனிலிருந்து வழங்கப்படும் ஒரு பரிசுத் தொகை.

முன்னோக்கிய பார்வை மற்றும் பின்னோக்கிய பார்வை

முன்னோக்கிய பார்வை மற்றும் பின்னோக்கிய பார்வை

இன்சென்டிவ் பணியாளருக்கு வழங்கப்படும் கூடுதல் ஊதியம்.(அவர்களின் சம்பளத்திற்கு மேல் வழங்கக் கூடியது.) செய்யவேண்டிய வேலைக்காக வழங்கப்படுவதால் இது முன்னோக்கிய பார்வையாகும். ஆனால் போனஸ் என்பது ஏற்கனவே முடிக்கப்பட்ட பணியைப் பாராட்டி ரொக்கமாக வழங்கப்படும் பரிசுத் தொகை என்பதால் இது பின்னோக்கிய பார்வையாகும்.

போனஸ் ரொக்க வடிவில்

போனஸ் ரொக்க வடிவில்

இன்சென்டிவ் முடிக்கப்பட்ட செயலுக்கு ரொக்கமாகவோ, சேமிப்பு முதலீடுகளாகவோ, பொருளாகவோ அல்லது ஒரு பயணத் திட்டமாகவோ எப்படி வேண்டுமானாலும் கொடுக்கப்படலாம். போனஸ் என்பது முடிக்கப்பட்ட பனியின் அல்லது பொருளின் மதிப்பு, நிர்வாகத்திற்குக் கிடைத்த லாபம் ஆகியவற்றின் அடிப்படையில் ரொக்கமாக மட்டுமே வழங்கப்படுவது.

இன்சென்டிவ் போனஸ் வடிவில்

இன்சென்டிவ் போனஸ் வடிவில்

இன்சென்டிவ் போனசாக இருக்கலாம். ஆனால் போனஸ் இன்செண்டிவாக இருக்க முடியாது. ஏனென்றால் இன்சென்டிவ் முன்நோக்கிய பார்வையுடன் ஒரு பணியைச் செவ்வனே முடிக்கப் பணியாளரை ஊக்கப்படுத்த வழங்கப்படும், போனஸ் ஒரு பணி முடிக்கப்பட்டு ஒப்படைக்கப்பட்ட பின்னர் முதலாளி அல்லது மேலாளர் பணியாளர்கள் சிறப்பாகச் செயல்பட்டிருப்பதாக நினைத்தால் தரப்படும்.

முக்கியக் குறிப்பு

முக்கியக் குறிப்பு

இனி உங்கள் நிறுவனத்தின் அலுவலகக் கடித தொடர்புகளில், தகவல் பரிமாற்றங்களில் போனஸ் மற்றும் இன்சென்டிவ் குறித்துச் சரியான இடங்களில் இவ்வார்த்தைகளைப் பயன்படுத்துவீர்கள்தானே?

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

What Is The Difference Between Bonus And Incentive?

What Is The Difference Between Bonus And Incentive?
Story first published: Saturday, May 20, 2017, 12:20 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X