ஓய்வுக்கால திட்டத்தில் நீங்கள் செய்யக்கூடாத 3 தவறுகள்..!

Written By: Tamilarasu
Subscribe to GoodReturns Tamil

ஓய்வு பெறுவதைப் பற்றி ஒருபோதும் முன்கூட்டி தயாராக முடியாது என்று ஒரு காலத்தில் நான் கேள்விப்பட்டிருக்கிறேன். அது பெரும் பதட்டத்தை ஏற்படுத்தும் மேலும் மக்களில் பலர் அந்தத் திடீர் மாற்றத்தால் பெரிதும் பாதிப்புக்குள்ளாகிறார்கள்.

உண்மையில் பெரும்பாலும் இங்கே உள்ள மிகப்பெரிய தடை என்னவென்றால் பணியிலிருக்கும் இன்றைய பொழுதிற்கும் மற்றும் ஓய்வு பெற்ற பிறகு நாளைய பொழுதிற்கும் இடையேயுள்ள சமன்பாட்டைக் கண்டறிவதுதான்.

இந்த இரண்டும் எப்படி ஒருங்கிணைந்து செயல்பட முடியும்?

பெரும்பாலும் மக்கள் தவறு செய்யும் சூழ்நிலை இங்கேதான் ஏற்படுகிறது. மற்றும் சரியான நேரத்தில் ஓய்வு பெற முடியாமல் போகிறது.
எனவே நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

வாழ்க்கையில் மற்ற எல்லாவற்றையும் போலவே சில திட்டங்களை முன்கூட்டி திட்டமிட்டுக் கொண்டு உங்களைத் தொந்தரவு செய்யக் கூடிய மற்றும் உங்கள் பணி ஓய்வைத் தவறான பாதையில் கொண்டு செல்லும் தவறுகளை உங்களால் தெளிவாகத் திருத்திக் கொள்ள முடியும்.

 

தவறு 1: உங்களுக்கு நீங்கள் உண்மையாக இருக்காதீர்கள்

ஓய்வு பெரும் மக்களை நான் கேட்க விரும்பும் முதல் கேள்வி என்னவென்றால் தற்போதைய வாழ்க்கை முறையையே அவர்களது பணி ஓய்வுக்குப் பிறகும் பராமரிக்க அவர்களுக்குத் தேவைப்படும் வருமானத்தின் தொகை எவ்வளவு.

நீங்கள் ஏற்கனவே யூகித்தது போலப் பரந்த அளவில் பெரும்பான்மையானவர்களுக்கு இந்தக் கேள்விக்கான விடை தெரிவதில்லை. அல்லது அவர்களால் அவர்களுக்கே உண்மையாக இருக்க முடிவதில்லை.

 

ஏன்?

ஏனென்றால் தற்போதைய வாழ்க்கை முறையைத் தக்கவைத்துக் கொள்ள ஓய்வு காலத்தின் போது அவர்களுக்குத் தேவைப்படும் பணத்தின் மதிப்பு மிக அதிகமாக இருந்தால், ஓய்வு பெற்றதின் நோக்கம் முற்றிலும் ஊக்கத்தைக் கெடுக்கக் கூடியதாகக் காணப்படுகிறது.

மற்றொரு வகையில் யூகித்த பணம் மிகவும் குறைவாக இருந்தால் துரதிஷ்டவசமாகப் பெரும்பாலான சூழ்நிலைகளில் ஓய்வு பெற்ற நபர் பிற்கால வாழ்க்கையில் மிகக் கடினமான நிதிநிலைக்குத் தள்ளப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது.

பொதுவான விதியின் படி உங்கள் தற்போதைய வருடாந்திர வருமானத்தில் சுமார் 80% கணக்கிடப்பட வேண்டும்.

இது கல்லில் எழுதப்படாத எழுத்தாக இருக்கிறது, பெரும்பாலும் மக்கள் அவர்களுடைய ஓய்வு காலத்தில் எவ்வளவு பணம் தேவைப்படுகிறது என்பதைக் குறைத்து மதிப்பிடுவதில்லை.

ஏதேனும் நடந்தால் உடல் நலப் பராமரிப்புக்கான கட்டணங்கள் எளிதாக அதிகரித்து வருகிறது.

 

தவறு 2: காலாவதியாகிவிட்ட உங்கள் ஓய்வு திட்டத்தின் பதிவையே சார்ந்திருத்தல்.

ஓய்வூதிய திட்டத்தில் கவனிக்கப்படாத ஒரு விஷயம் என்னவென்றால் அது எதார்த்த நிலவரம். சந்தை நிலவரங்கள் மாறும்போது விலைகளும் கடுமையாக மாறும்.

ஒவ்வொரு முறையும் உங்கள் ஓய்வூதிய திட்டத்தைச் சரிபார்க்க வேண்டியது மிகவும் அவசியமானதாகும்.

5 ஆண்டுகளுக்கு முன்பு வடிவமைக்கப்பட்ட உங்கள் ஓய்வூதிய திட்டத்தை நீங்கள் புதுப்பித்துக் கொள்ளவில்லையென்றால் அது இன்றைய தேதிக்குப் பொருத்தமானதாக இல்லாமல் போகும் வாய்ப்புகள் உண்டு.

மேலும் உங்களது கவனம் வேறு பாதையில் மாறக்கூடும், நீங்கள் உங்கள் உடல்நல கவனிப்பிற்காக அதிகப் பணத்தைச் செலவிடுவீர்கள் மற்றும் உடல் நலத்திற்கான செலவினங்களை மதிப்பிடுவதற்கு மறந்துவிடாதீர்கள்.
மேலும் பணி ஓய்வின் எந்தப் புள்ளியில் அந்தப் பணத்தைப் பெறமுடியும் என்பதையும் தெரிந்து வைத்திருங்கள்.

 

தவறு 3: அறிவு என்பது ஆற்றல் (அல்ல)

நீண்ட காலக் கவனிப்புத் தேர்வுகள் பற்றி நீங்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டியது முக்கியமானதாகும். அதனால் நீங்கள் உங்கள் பணி ஓய்வு காலத்தை மகிழ்ச்சியாக அனுபவிக்கலாம்.

பணி ஓய்வு திட்டம் என்பது நிதி சார்ந்த திட்டமிடுதலின் மிகுந்த உணர்ச்சிகரமான பகுதியாக ஒருபோதும் இருப்பதில்லை. இருந்தாலும் அது எளிதில் மிக முக்கியமாக ஒன்றாக ஆகிவிடுகிறது.

இந்த வயதில் மணிக்கட்டில் கடிகாரம் இல்லாத உலகம் ஒரு தொலைதூர கனவு போலத் தோன்றினாலும் ஒவ்வொரு வருடமும் இந்தக் கனவு கானல் நீர் போன்ற உண்மையாக நெருங்கி வருகிறது என்பதை மறந்து விடாதீர்கள்.

 

திர்காலத்தில் சேமிக்கத் தொடங்கலாம் என்று நினைத்துக் காத்திருக்காதீர்கள்

பணி ஓய்வு பெறும்போது எப்போதோ எதிர்காலத்தில் சேமிக்கத் தொடங்கலாம் என்று நினைத்துக் காத்திருக்காதீர்கள். எவ்வளவு சீக்கிரம் சேமிக்கத் தொடங்குகிறீர்களோ அவ்வளவு சிறந்தது. நீங்கள் இருக்கும் சூழ்நிலையை மேலும் சிறப்பாகப் புரிந்து கொள்வதற்காகச் சில நூறு டாலர்களை மாதாந்திர அடிப்படையில் இப்போதே சேமிக்கத் தொடங்குங்கள். அந்தப் புள்ளியிலிருந்தே உங்கள் சேமிப்பைக் கட்டுமானியுங்கள்.

ஃபுருகல் காட்டேஜ் நிறுவனத்தின் உரிமையாளரான நிக்கோலா சொல்வது போல ஒரு நல்ல பட்ஜெட்டில் வாழ்க்கை நடத்துவது சிறந்ததாகும்: "உங்கள் நிதியை உருவாக்கும் மற்றும் உடைக்கும் ஒரு மிகப் பெரிய விஷயம், உங்களுக்கு வரும் வருமானத்தையும் செலவையும் தெரிந்து வைத்துக் கொண்டு அதற்கேற்ப வரவு செலவு திட்டத்தை அமைப்பதாகும். அறிவே அனைத்திற்கும் மேலான ஆற்றல்".

 

மேலே குறிப்பிட்டுள்ள வழிமுறைகளை நீங்கள் பின்பற்றினால் ஓய்வு பெறுவதைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை. உங்கள் ஓய்வுக்காலத்தை மகிழ்ச்சியுடன் அனுபவிக்கும் தகுதியை நீங்கள் பெற்றிருக்கிறீர்கள். எனவே உங்கள் கவலைகளை ஒதுக்கி விட்டு இப்போதே திட்டமிட தொடங்குங்கள். உண்மையில் அறிவு தான் எல்லாமே.

மேலே குறிப்பிட்டுள்ள வழிமுறைகளை நீங்கள் பின்பற்றினால் ஓய்வு பெறுவதைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை. உங்கள் ஓய்வுக்காலத்தை மகிழ்ச்சியுடன் அனுபவிக்கும் தகுதியை நீங்கள் பெற்றிருக்கிறீர்கள். எனவே உங்கள் கவலைகளை ஒதுக்கி விட்டு இப்போதே திட்டமிட தொடங்குங்கள். உண்மையில் அறிவு தான் எல்லாமே.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

3 retirement planning mistakes you can live without

3 retirement planning mistakes you can live without
Story first published: Monday, June 19, 2017, 11:29 [IST]
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns