வீட்டுக் கடனுக்கும் அடமானக் கடனுக்கும் என்ன வித்தியாசம்..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வீட்டுக்கடன் மற்றும் வீட்டு அடமானக் கடன் என்ற இரண்டு வார்த்தைகளும் ஒன்றிலிருந்து மற்றொன்று முற்றிலும் வேறுபட்டவை என்பதை அறியாமலே நாம் அந்த வார்த்தைகளை அடிக்கடிப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

 

இங்கே இரண்டு வங்கியியல் கருத்துக்களைப் பற்றிய சில குறிப்பிட்ட உண்மைகள் பற்றி விளக்கப்பட்டுள்ளது:

பிணையம்

பிணையம்

சந்தையிலிருந்து நிதியைப் பெறுவதற்கு ஒருவர் துணை (collateral) ஈடு வழங்க வேண்டுமென்று கருதப்படுகிறது. இது கிடைக்கப்பெறும் அனைத்து வகை அடமானக் கடன்களுக்கும் பொருந்தக்கூடிய உண்மை தான்.

எனவே, வீட்டுக்கடன் என்பதே ஒரு வகை அடமானக் கடன் தான் - அந்தக் கடன் வீட்டை ஈடாக வைத்துத் தரப்படுகிறது. அதே சமயத்தில், நீங்கள் உங்கள் இதர சொத்துக்களையும் கடன் பெறுவதற்கான பிணைய ஈடாக வைக்கப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

 

அடமானக் கடன்

அடமானக் கடன்

ஒரு அடமானக் கடனில் உங்கள் சொத்து பாதுகாப்புப் பிணையமாக செயல்படுகிறது. இன்னும் எளிமையாகச் சொல்லப் போனால், அடமானக் கடன்களில் உங்கள் சொத்து கடனுக்கு ஈடாக பிணையமாகப் பயன்படுத்தப்படுகிறது.

இந்தியாவில் பெரும்பாலான வீட்டுக் கடன்கள் அடமானக் கடன்களாகத் தான் இருக்கின்றன. அதற்கு பொருள் என்னவென்றால், ஒருவேளை நீங்கள் கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறினால், இழப்பை ஈடு செய்வதற்காக உங்கள் சொத்துக்களை விற்கும் உரிமை வங்கிக்கு இருக்கிறது.

 

வீட்டுக் கடன்
 

வீட்டுக் கடன்

வீட்டுக்கடன்கள் முன்கூட்டியே அமைக்கப்பட்ட ஒரு இயல்பை உடையன. இது ஒரு சொத்தை வாங்குவதற்காக மட்டுமே வழங்கப்படுகிறது.

மாறாக, அடமானக் கடன் மூலமாக பெறப்பட்டக் கடனை இதர நோக்கங்களுக்காகவும் பயன்படுத்திக் கொள்ளலாம். அடமானக் கடனைப் பெறும்போது நீங்கள் அதிக வட்டியை செலுத்துவதற்கு இதுவும் ஒரு காரணமாகும்.

 

வங்கிகள்

வங்கிகள்

இந்திய வங்கிகள் உங்களுடைய தனிப்பட்ட பயன்பாட்டிற்காக நிதி வழங்குவதற்காக உங்கள் சொத்துக்களை ஈடாக வைத்துக் கொண்டு தரப்படும் அடமானக் கடன்களை விரிவுப்படுத்தியுள்ளது.

நிதி பயன்பாடு

நிதி பயன்பாடு

ஆனால் ஒரு வீட்டுக்கடன் வழக்கில், வங்கிகள் நேரடியாக வீடு விற்பவர்களின் வங்கிக் கணக்கிற்கு கட்டணத்தைச் செலுத்திவிடும். பெறப்பட்ட நிதி வீடு வாங்குவதற்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது என்பதை உறுதி செய்து கொள்ள இது ஒரு வழியாகும்.

அதே சமயம், ஒரு அடமானக் கடனைப் பொறுத்த வரை கடன் வாங்கியவர்கள் அவர்கள் தேர்வு செய்யும் எந்த இடத்தில் வேண்டுமானாலும் நிதியைப் பயன்படுத்திக் கொள்ள அவர்களுக்கு சுதந்திரம் உண்டு. அடமானக் கடனில் வங்கி கடன்தாரருக்கு நேரடியாக பணத்தை வழங்குகிறது.

 

வட்டி மாறுபாடு

வட்டி மாறுபாடு

பொதுவாக, வீட்டுக்கடனுக்கு செலுத்தும் வட்டி அடமானக் கடனை விடக் குறைவாக இருக்கின்றது. உதாரணத்திற்கு, கடந்த ஆண்டு ஜூன் வரை, பொதுக் கடன் வழங்குநராகிய ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, 9.20 சதவிகித வட்டி விகிதத்திற்கு வீட்டுக் கடன்களை வழங்கி வந்தது.

ஆனால் சொத்துக்களை அடமானமாகக் கொண்டுத் தரப்படும் கடன்களுக்கு எஸ்பிஐ, கடன் தொகையைப் பொறுத்து 10.77 சதவிகிதத்திற்கும் மற்றும் 11.75 சதவிகிதத்திற்கும் இடைப்பட்ட வட்டியை விதித்தது.

 

வரி சலுகை

வரி சலுகை

மேலும் இதில், வீட்டுக்கடனில் இருப்பது போலன்றி, அடமானக் கடன்களைச் செலுத்தும் போது ஊதியம் பெறும் பணியாளர்களுக்கு தரப்படும் வரிச் சலுகையும் இல்லை.

ரூபாய் 28 இலட்சங்கள் வரை வாங்கப்படும் வீட்டுக் கடன்கள் முன்னுரிமைப் பிரிவில் வழங்கப்படும் கடன்களுக்கான வட்டி வரம்பின் கீழ் வருகின்றன. மாறாக, அடமானக் கடனில் இந்தப் பயனையும் அனுபவிக்க முடியாது.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

How Home Loan And Mortgage Loan Are Differentiate?

How Home Loan And Mortgage Loan Are Differentiate?
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X