RERA:வீடு வாங்குபவர்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள்

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நாடாளுமன்றத்தில் வீடு மனை விற்பனைக்கான ஒழுங்குமுறை சட்டத்தை நிறைவேற்றி, தற்போது அமலுக்கும் வந்துள்ளது. அது ரியல் எஸ்டேட் துறையைச் சீர்செய்து அதிக வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வு ஆகியவற்றைக் கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது ஒரு வீட்டையோ, மனையையோ அல்லது அடுக்குமாடி குடியிருப்பையோ வாங்கும் போது ஏற்படும் தாமதங்களையும், ஊழலையும் மற்றும் அதிகார ஆதிக்கத்தையும் அடிக்கடி சமாளிக்கும் வீடு வாங்குபவர்களுக்கு மிக அருமையான ஒரு செய்தியாகும்.

இந்தச் சட்டமானது 5 முக்கிய வழிகளில் ரியல் எஸ்டேட் துறையை மேம்படுத்துவதோடு புதிதாக வீடு வாங்குபவர்களுக்கு விஷயங்களை எளிதாக்குகிறது.

குறைகளைக் கையாளும் மாநில அளவிலான ஒழுங்குமுறை ஆணையம்

குறைகளைக் கையாளும் மாநில அளவிலான ஒழுங்குமுறை ஆணையம்

RERA என்பது மாநில ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் என்று அழைக்கப்படும் மாநில அளவிலான ஒழுங்குமுறை கட்டுப்பாட்டு அமைப்பு உருவாவதற்கு வழிவகுக்கும். இந்த அமைப்பானது வீடு வாங்கும் அனைவரும் ஒரு கட்டுமானர் அல்லது கட்டுமான நிறுவனம் தொடர்பான கஷ்டங்கள் மற்றும் குறைகள் (மோசடி, பணம் திருப்பிச் செலுத்துதல், பராமரிப்புக் கட்டணங்கள் போன்ற பல்வேறு கட்டணங்கள், பதிவு செய்தல் மற்றும் ஒப்பந்தம்) தொடர்பான பல்வேறு பிரச்சனைக்காக இந்த அமைப்பை அணுகலாம்.

இந்த ஒழுங்குமுறை ஆணையமானது அந்த மாநிலத்தில் அனைத்து வணிக மற்றும் குடியிருப்பு சார்ந்த ரியல் எஸ்டேட் பரிவர்த்தனைகளை ஆளுகின்ற ஒரே அதிகார மையமாக இருக்கும்.

இந்த ஒழுங்குமுறை உருவாக்கமானது நாட்டின் அனைத்து மாநிலங்களும் இந்த RERA சட்டத்தை உறுதிபடுத்தி ஒவ்வொரு மாநிலத்திலும் ஒழுங்குமுறை அதிகாரிகளை நியமித்தால் மட்டுமே இந்தச் சட்டத்தை முழுமையாக அமல்படுத்த முடியும்.

 

கட்டுமானர்கள் மிகப் பெரிய அளவில் வெளிப்படைத் தன்மையாக இருப்பதை உறுதிப்படுத்துகிறது
 

கட்டுமானர்கள் மிகப் பெரிய அளவில் வெளிப்படைத் தன்மையாக இருப்பதை உறுதிப்படுத்துகிறது

இப்போது வீடு வாங்குபவர்கள் ஒரு கட்டமான செயல் திட்டத்தைப் பற்றி அவர்களுக்குத் தேவைப்படும் அனைத்து தகவல்களையும் விரல் நுணியில் பெற்றுக் கொள்ளலாம்.

இது ஏனென்றால் RERA கட்டுமானர்களின் நிலத்தின் பட்டா, ஒழுங்குமுறை ஆணையம் வழங்கிய ஒப்புதல்களின் நகல்கள், செயல் திட்டத்தின் வரைபடம், செயல்திட்டத்தில் பணியாற்றும், கட்டுமான ஒப்பந்ததாரர்கள் மற்றும் துணை ஒப்பந்ததாரர்களின் விவரங்கள் மேலும் செயல்திட்டத்தை முடிக்கும் எதிர்பார்க்கப்பட்ட காலம் ஆகியவற்றை மாநில அதிகார மையதிட்டம் சமர்பிக்க வேண்டியதை கட்டாயமாக்கியுள்ளது.

இதன் மூலம் விட்டை வாங்கும் முழுவதுமாகப் பில்டக்களை மட்டுமே நம்பியிருக்கத் தேவையில்லை, இணையதளத்திலேயே அதன் நிலையைக் கணித்துக்கொள்ளலாம்.

இந்தச் சட்டம் 500 சதுரடிக்கும் அதிகமாகவும் 8 அப்பார்ட்மென்ட் வீடுகள் கட்டும் அனைத்து பில்டர்களுக்கும் இது பொருந்தும்.

 

கட்டுமானிக்கப்பட்ட பகுதி மற்றும் சூப்பர் கட்டுமானிக்கப்பட்ட பகுதி

கட்டுமானிக்கப்பட்ட பகுதி மற்றும் சூப்பர் கட்டுமானிக்கப்பட்ட பகுதி

பொதுவாக வீட்டுமனை விற்பனையாளர்கள் வீடு வாங்குபவர்களைக் குழப்புவதற்காக உள் கட்டமைப்பு பகுதி, கட்டமைப்பு பகுதி, மேம்படுத்தப்பட்ட கட்டமைப்பு பகுதி (சதுர அடி அல்லது சதுர மீட்டரில்) போன்ற பல்வேறு பிதற்றல்களை ஏற்படுத்தியுள்ளார்கள்.

இதன் விளைவாக, வீடு வாங்கும் ஏராளமான மக்கள் அவர்கள் செலுத்திய பணத்திற்கும் மிகக் குறைவான இடத்தையே பெறுகிறார்கள். RERA விற்கு மிக்க நன்றி. இத்தகைய கட்டுமானார்களின் நடவடிக்கைகளைச் சட்டத்திற்குப் புறம்பானதாக ஆக்கியுள்ளது. இப்போது முதற்கொண்டு, உட்கட்டமைப்பு என்ற பகுதி என்பதற்கான விளக்கம் சட்டத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் வீடு வாங்குபவர்கள் அதற்கு மட்டும் பணம் செலுத்தினால் போதுமானது.

 

ஒரு வீட்டு கட்டுமான பணி நிறைவுக்கு ஏற்றவாறு வைப்புத் தொகை

ஒரு வீட்டு கட்டுமான பணி நிறைவுக்கு ஏற்றவாறு வைப்புத் தொகை

பெரும்பாலும் வீட்டுமனை விற்பனையாளர்கள் வீடு வாங்குபவர்களின் தேவையால் ஒரே நேரத்தில் பல்வேறு வீட்டு கட்டுமான செயல்திட்டங்களைத் தொடங்கி விடுகின்றனர். ஆனால் பிறகு அவர்களால் அதைக் குறித்த காலத்திற்குள் முடிக்க முடிவதில்லை.

இது பலமுறை நிகழ்கிறது. ஏனென்றால் ஒரு கட்டுமானரோ அல்லது வீடுமனை விற்பனையாளரோ பண நெருக்கடியில் இருப்பதால் இவ்வாறு நிகழ்வதாகக் கூறுகின்றனர்.

 

70% தொகை

70% தொகை

இதன் காரணமாக ஏராளமான வீட்டு உரிமையாளர்கள் ஏற்கனவே அவர்களது வீட்டுக்காக வைப்புத் தொகை அல்லது முன்பணம் செலுத்திவிட்டு வீட்டுக் கட்டுமான செயல்திட்டம் தாமதமடைந்தாலோ அல்லது நிறுத்தி வைக்கப்பட்டாலோ பிரச்சனைகளில் சிக்கிக் கொள்கிறார்கள்.

RERA ஒரு புதிய வசதியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி வீடு, மனை விற்பனையாளர்கள் ஒரு வீட்டுக்கட்டுமான செயல்திட்டத்திற்கு ஆகும் மதிப்பிடப்பட்ட செலவுக் கட்டணத்தில் 70% ஐ ஒரு பிரத்யேக வங்கி கணக்கில் வைத்துப் பூட்டப்பட வேண்டும். இது வீட்டுக் கட்டுமானர்கள் ஒழுங்கான முறையில் கட்டுமான செயல்திட்டங்களை நிறைவு செய்வதற்குப் போதுமான நிதியை ஒதுக்கி வைத்திருக்கிறார்கள் என்பதை உறுதி செய்யும்.

 

 

வீடு வாங்குபவர்களுக்குப் பெரிய அளவில் பாதுகாப்பு

வீடு வாங்குபவர்களுக்குப் பெரிய அளவில் பாதுகாப்பு

நிறைவடையாத வீட்டுக் கட்டுமான செயல்திட்டங்களே ஒவ்வொரு வீடு வாங்குபவரின் மிகப்பெரிய கவலையாகும். RERA இதைத் தடுப்பதற்காக ஒரு முக்கிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய சட்டத்தின் படி வீடு மனை விற்பனையாளர் வீடு வாங்குபவர்களுக்குச் செயல்திட்டத்தை நிறைவு செய்யும் ஒரு தேதியை அளிக்க வேண்டும்.

அந்தத் தேதிக்கு அப்பாற்பட்டு சொத்துடைமையை ஒப்படைப்பதில் தாமதங்களானால் வீடு மனை விற்பனையாளர் வீடு வாங்குபவருக்கு அவர் செலுத்திய பணத்திற்கான வட்டியை செலுத்த வேண்டும். இந்தத் தொகை வீடு வாங்கியவர் அவர் / அவள் செலுத்தும் வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதத்திற்கு ஈடு செய்வதாக இருக்கும்.

மேலும் இந்தச் சட்டமானது ஒரு கட்டுமான பணியின் போது வீடு வாங்குபவரின் அனுமதியில்லாமல் கட்டுமானர் அவர் விற்கும் சொத்தின் திட்டங்களில் எந்த மாற்றத்தையும் செய்ய முடியாது என்பதையும் உறுதிபடுத்துங்கள்

 

அதிகாரம்

அதிகாரம்

மாநில ஒழுங்குமுறை ஆணையத்திற்கு அதிகாரம் வழங்கியதன் மூலம் RERA வீடு வாங்குபவர்கள் கட்டுமானர்களுக்கு எதிரான குறைகளை விரைவாகத் தீர்த்துக் கொள்ளும் வசதியை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன், வீடு வாங்குபவர்களுக்கும் கட்டுமானர்களுக்கும் இடையே உள்ள சச்சரவுகளைத் தீர்த்து வைக்க மேல்முறையீட்டு நீதி மன்றங்கள் RERA வின் கீழ் அமைக்கப்பட்டுள்ளன.

இந்தச் சட்டத்தை மீறும் சொத்து விற்பனையாளர் அல்லது கட்டுமானரை இந்த நீதிமன்றம் 3 வருடங்கள் வரை சிறையிலடைக்கும் சட்டத்தை வழங்குகிறது.

 

நஷ்ட ஈடு

நஷ்ட ஈடு

மேலும் RERA வழங்கும் பாதுகாப்பானது நீங்கள் வீடு வாங்கிய பிறகும் முடிவடைவதில்லை. புதிய சட்டத்தின் கீழ் ஒரு வீட்டை வாங்கியவர் வீடு வாங்கிய ஒரு வருடத்திற்குள் கட்டுமானப்பணி அதிருப்திகரமாக இருந்தால் வீடு மனை விற்பனையாளர் அல்லது வீட்டுக் கட்டுமானரை தொடர்பு கொண்டு எழுத்துப்பூர்வமாக நஷ்ட ஈட்டை கோரலாம்.

இந்தப் புதிய ரியல் எஸ்டேட் சீர்திருத்த ஒழுங்குமுறை சட்டம் புதிதாக வீடு வாங்குபவர்களுக்குப் பல்வேறு வழிகளில் ஒரு வரப்பிரசாதமாகும். நிறைய இந்தியர்கள் சொத்துக்களை வாங்கிக் கொண்டிருப்பதால் ரியல் எஸ்டேட் துறையில் வெளிப்படைத் தன்மை மற்றும் கட்டுப்பாட்டு ஒழுங்குமுறையை உறுதிபடுத்தும் ஒரு சட்டம் தேவைப்படுகிறது. அதிர்ஷ்டவசமாக இந்தப் புதிய சட்டம் பொறுப்புணர்வைக் கொண்டுவருவதன் மூலமாக வீடு வாங்குபவர்களது உரிமைகளைப் பாதுகாப்பதை உறுதிப்படுத்துகிறது.

 

வீட்டுப் பட்ஜெட்

வீட்டுப் பட்ஜெட்

ஜிஎஸ்டி உங்க வீட்டுப் பட்ஜெட்-ஐ எப்படியெல்லாம் பாதிக்கும் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்..! ஜிஎஸ்டி உங்க வீட்டுப் பட்ஜெட்-ஐ எப்படியெல்லாம் பாதிக்கும் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்..!

சக்கரவர்த்தி

சக்கரவர்த்தி

டேவிட் ராக்ஃபெல்லர்: அமெரிக்காவை ஆட்டிப்படைத்த சக்கரவர்த்தி..!டேவிட் ராக்ஃபெல்லர்: அமெரிக்காவை ஆட்டிப்படைத்த சக்கரவர்த்தி..!

ஜெட் ஏர்வேஸ்

ஜெட் ஏர்வேஸ்

விமானத்தில் பிறந்த குழந்தைக்கு லைப் டைம் ப்ரீ ஆஃபர் கொடுத்த ஜெட் ஏர்வேஸ்..!விமானத்தில் பிறந்த குழந்தைக்கு லைப் டைம் ப்ரீ ஆஃபர் கொடுத்த ஜெட் ஏர்வேஸ்..!

 

எஸ்ஐபி திட்டங்கள்

எஸ்ஐபி திட்டங்கள்

எஸ்பிஐ-ல் முதலீடு செய்ய ஏற்ற எஸ்ஐபி திட்டங்கள்..!எஸ்பிஐ-ல் முதலீடு செய்ய ஏற்ற எஸ்ஐபி திட்டங்கள்..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

RERA: Things Home Buyers need to know

RERA: Things Home Buyers need to know
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X