வங்கி கட்டணங்களை செலுத்துவதில் இருந்து தப்பிப்பது எப்படி..?

Written By:
Subscribe to GoodReturns Tamil

உங்கள் வங்கி எதற்காக உங்களுக்கு கட்டணங்களை விதிக்கிறது என்று எப்போதாவது உணர்ந்திருக்கிறீர்களா? தேவையில்லாத கட்டணங்களைத் தவிர்ப்பதற்கு மக்கள் தங்கள் வங்கிக் கணக்குகளை நெருங்கிக் கண்காணிக்க வேண்டும்.

கூடுதல் வங்கி கட்டணங்களிலிருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ள நீங்கள் இந்த குறிப்புகளை நடைமுறையில் பயற்சி செய்யுங்கள்.

வங்கி கட்டணம்

நீங்கள் ஒரு வங்கியில் ஒரு புதிய சேமிப்புக் கணக்கைத் தொடங்கும் போது வங்கிக் கட்டணங்களை கவனத்தில் கொண்டிருக்கிறீர்களா என்பதை உறுதி செய்து கொள்ளவும். குறைந்தபட்ச நிலுவைத் தொகை கட்டணம், ஒரு காலவரையறைக்குட்பட்ட சேமிப்புக் கணக்கிலிருந்து மிக விரைவாக பணத்தை எடுத்ததற்கான கட்டணம், ஏ.டி.எம் கார்ட் பயன்படுத்தியதற்கான கட்டணம் போன்ற கட்டணங்களை கண்காணிப்பதன் மூலம் அவற்றை தவிர்க்க முடியும்.

மேலும் காலப் போக்கில் அந்த கட்டணங்களுக்காகும் மிகப் பெருமளவு பணத்தை சேமிக்கவும் முடியும்.

 

ஏ.டி.எம் கட்டணம்

ஏ.டி.எம் பயன்பாடு உங்கள் வங்கியுடன் மட்டும் தொடர்புடையது அல்ல. இது ஏ.டி.எம் வழங்குபவர்கள் மற்றும் உங்கள் வங்கி இருவரும் உங்களுக்கு கட்டணம் விதிக்க வழிவகுக்கும். பண மதிப்பீட்டிழப்பிற்குப் பின்பு நிறைய வங்கிகள் அவர்களது வாடிக்கையாளர்களிடமிருந்து ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கைகள் வரை வங்கியிலிருந்து பணம் எடுத்த பிறகு கட்டணங்களை வசூலிக்கிறது. உங்களுக்குத் தேவையற்ற செலவாக சிறிய அளவு பணம் வருடந்தோறும் பல ஆயிரம் ரூபாயாக சேர்ந்து விடுகிறது.

வங்கி கணக்கை முடித்தல்

சில வங்கிகளில் நீங்கள் உங்கள் வங்கி கணக்கை ஒரு குறிப்பிட்ட கால வரையறை வரை திறந்து வைத்திருக்க வேண்டும். அல்லது குறிப்பிட்ட காலத்திற்கு முன்பாகவே வங்கிக் கணக்கை முடித்ததற்கான கட்டணத்தை எதிர் கொள்ள வேண்டியிருக்கும். உங்கள் வங்கிக் கணக்கை முடித்ததற்கான கட்டணங்களை சரி பாருங்கள்.

மிகைப் பற்று

உங்கள் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை விட அதிகமாக நீங்கள் செலவு செய்யவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் வங்கிக் கணக்கில் இருப்பதை விட அதிகப் பணத்தை நீங்கள் செலவு செய்யும் போது வங்கிகள் மிகைப் பற்றுக் கட்டணத்தை விதிக்கின்றன. உங்கள் சோதனைக் கணக்கில் போதுமான நிதி இல்லாவிட்டாலும் கூட மிகைப்பற்று பாதுகாப்பு உங்களுக்கு கட்டணத்துடன் கூடிய கொள்முதல்களுக்கு அனுமதியளிக்கும்.

வங்கி அட்டையை கிரெடிட் கார்டாகப் பயன்படுத்துதல்

சில வங்கிகள் உங்கள் வங்கி கார்டை டெபிட் கார்டாகவோ அல்லது கிரெடிட் கார்டுக்கு மாற்றாகவோ பயன்படுத்திக் கொள்ள ஒவ்வொரு மாதமும் முதல் இரண்டு அல்லது ஐந்து பணப் பரிமாற்றங்களுக்குப் பிறகு ஒரு சிறிய கட்டணத்தை வசூலிக்கிறது. கட்டணங்கள் வங்கியைப் பொறுத்தது. ஒவ்வொரு முறை நீங்கள் பணப் பரிமாற்றம் செய்யும் போதும் உங்கள் வங்கி கார்டை கிரெடிட் கார்டாகப் பயன்படுத்தலாம் என்பதைக் கருத்தில் கொள்ளுங்கள். இது வருடத்திற்கு சில நூறு ரூபாய்களை நீங்கள் சேமிக்க உதவும்.

வட்டி ஈட்டித் தரும் – சேமிப்புக் கணக்குகள்

நீங்கள் ஒரு வங்கி அல்லது நிதி நிறுவனத்தைத் தேடுவதாக இருந்தால், ஒரு வாடிக்கையாளராக உங்களுக்கு, வட்டியை ஈட்டித் தரும் சேமிப்பு மற்றும் சோதனைக் கணக்குகளைக் கொண்ட வங்கியையே கருத்தில் கொள்ள வேண்டும்.

கட்டணத் தள்ளுபடிகளைக் கேளுங்கள்

உங்களுக்கு மிகைப் பற்றுக் கட்டணங்கள் போன்ற மிகப் பெரிய அளவு வங்கிக் கட்டணங்கள் விதிக்கப்பட்டால், உங்கள் வங்கியை தொலைபேசியில் அழைத்து, அதைப் பற்றி பேசத் தயங்காதீர்கள். இதனால் கட்டணங்களில் தள்ளுபடி அல்லது மாற்றங்களை நீங்கள் பெற முடியும். இது உங்களுக்கு வழக்கமான ஒரு நிகழ்வாக இல்லையென்றால், சில சமயங்களில் வங்கிகள் உங்களுக்கு விதிக்கப்பட்டக் கட்டணங்களை திரும்பப் பெற்றுக் கொள்வதற்கும் தயாராக இருக்கும்.

இணையத்தில் வங்கிப் பணப் பரிமாற்றங்கள் செய்யுங்கள்

இன்று பெரும்பாலான வங்கிகள் இணைய சேவைகளை வழங்குகின்றன. உங்களிடம் ஒரு கணினி அல்லது ஸ்மார்ட் போன் இணைய இணைப்புடன் இருந்தால், நீங்கள் ஆன்லைன் வங்கிப் பரிவர்த்தனையை தேர்ந்தெடுக்கலாம் மேலும் காகித அறிக்கைக் கட்டணங்களைத் தவிர்க்கலாம். மேலும் இணைய வழியாகவே புதிய காசோலைகளைப் பெறும் வசதிகளையும் சரிபார்த்துக் கொள்ளலாம். எனவே இது வழக்கமாக வங்கி வழியாக புதிய காசோலைகளைப் பெறுவதைக் காட்டிலும் மலிவானது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

How To Escape from Banking Charges?

How To Escape from Banking Charges?
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns