பல்வேறு சுகாதார காப்பீட்டு திட்டத்தை கிளைம் செய்வது எப்படி?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மக்களில் பலர் சுகாதார காப்பீட்டுத் திட்டத்தை வைத்திருப்பதில்லை. ஆனால், அப்படி வைத்திருப்பவர்களில் பெரும்பான்மையானோர் ஒன்றுக்கும் மேற்பட்ட காப்பீட்டு நிறுவனங்களில் காப்பீட்டுத் திட்டங்களை வாங்கியிருக்கிறார்கள். சில பாலிசிதாரர்கள் ஒரே நேரத்தில் ஒரு குழு காப்பீட்டின் கீழும் காப்பைப் பெறுகிறார்கள்.

 

ஒரு திட்டத்திலிருந்து மற்றொன்று வேறுபட்ட பாதுகாப்பு நற்பயன்கள் இருந்தால் மட்டுமே, ஒன்றுக்கும் மேற்பட்ட காப்பீட்டுதாரரிடம் பாலிசி வைத்திருப்பது என்பது புத்திசாலித்தனமானதாகும்.

பல்வேறு சுகாதார காப்பீட்டு திட்டத்தை கிளைம் செய்வது எப்படி?

ஒரே மாதிரியான காப்பீட்டுக் கொள்கைகளை உடைய பல்வேறு இழப்பீட்டுறுதிக் காப்பீட்டுத் திட்டங்கள் பாலிசிதாரருக்கு பயனளிக்காது.

பல்வேறு காப்பீட்டு

எனவே, பல்வகைக் காப்பீடுத் திட்டங்களில் காப்பீட்டுப் பாதுகாப்புத் திட்டங்கள் பரஸ்பரம் பிரத்தியேகமானதாக இருந்தால் சிறப்பாக இருக்கும்.

பல்வேறு காப்பீட்டு நற்பலன் பாலிசிகளை வாங்கும்போது, இரண்டாவது காப்பீட்டுதாரருக்கு முதல் பாலிசியின் இருப்பைப் பற்றி அறிவிக்கப்பட வேண்டியது மிக முக்கியமானதாகும், ஏனென்றால், அது எழுத்துறுதியின் ஒரு முக்கியப் பகுதியை உருவாக்குகிறது.

உடல்நலக் காப்பீடு

உடல்நலக் காப்பீடுகளான மெடிக்ளைம் போன்றவை இழப்பீட்டுறுதிக் காப்பீடுகளாகும். அதாவது, பாலிசியின் முன்னுறுதியளிக்கப்பட்ட காப்பீட்டுத் தொகையில் மருத்துவமனைக் கட்டணங்கள் மட்டும் இழப்பீட்டுத் தொகையாகத் திருப்பியளிக்கப்படும்.

உடல் நலக் காப்பிட்டுத் திட்டங்களில் உள்ள இதர மாறுபாடுகள் என்னவென்றால், வரையறுக்கப்பட்ட நற்பயன் கொள்கைகள் ஆகும். அதாவது, காப்பீடு செய்யப்பட்ட ஒட்டுமொத்த தொகை வரையறுக்கப்பட்ட ஒரு நிகழ்ச்சி நிகழும்போது (நோய் வாய்ப்படும்போது) மருத்துவமனை செலவுகளைப் பொருட்படுத்தாமல் திருப்பிச் செலுத்தப்படும்.

இழப்பீட்டுறுதிக் காப்பீடுகள்

ஒருவர் ஒன்றுக்கும் மேற்பட்ட உடல்நலக் காப்பீட்டுத் திட்டங்களை வைத்திருந்தால், ஒரு பாலிசிதாரராக, தாக்கல் செய்யப்பட்ட காப்பீட்டுத் தொகை யாரேனும் ஒரு காப்பீட்டுதாரரால் செலுத்தப்படும். பாலிசிதாரர் அவர் / அவள் காப்பீட்டுத் திட்டம் வைத்திருக்கும் அனைத்துக் காப்பீட்டு நிறுவனங்களையும் அணுக வேண்டியது கட்டாயமல்ல. தாக்கல் செய்யப்பட்டக் காப்பீட்டு தொகையை பாலிசிதாரர் விரும்பும் எந்த ஒரு காப்பீட்டு நிறுவனத்திடமிருந்து வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளலாம்.

 

சில வருடங்களுக்கு முன்பு 'நன்கொடை விதிமுறை' யின் அடிப்படையில் தாக்கல் செய்யப்பட்ட காப்பீட்டுத் தொகையின் தீர்வு வழங்கப்பட்டதைப் போல இப்போது வழங்கப்படுவதில்லை என்பதால், ஒட்டுமொத்த மருத்துவமனைச் செலவுகளை காப்பீட்டு நிறுவனங்களுக்கிடையே பகிர வேண்டிய தேவையில்லை. இந்த விதிமுறையின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட காப்பீட்டுத் தொகை பாலிசிதாரர் வைத்திருக்கும் பாலிசிகள் மற்றும் காப்பீட்டுத் தொகையின் விகித அடிப்படையில் அனைத்து காப்பீட்டு நிறுவனங்களாலும் வழங்கப்படுகிறது.

காப்பீடு அளிப்பவரால் பகுதியாக செலுத்தப்படுகிறது.

ஒருவேளை ஒரு காப்பீட்டு நிறுவனத்தார் ஒரு குறிப்பிட்ட ஒட்டுமொத்த தொகையை செலுத்தாமல் போனாலோ அல்லது அனுமதிக்காமல் போனாலோ, அத்தகைய சூழ்நிலையில் பாலிசிதாரர் மற்றொரு காப்பீட்டு நிறுவனத்தை அணுகலாம். கடந்த வருடம், ஐஆர்டிஏஐ "பல்வேறு காப்பீட்டுத் திட்டங்களை வைத்திருக்கும் ஒரு பாலிசிதாரர் ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட பாலிசியால் காப்பீட்டு தொகையை பெற அனுமதிக்கப்படாத நிலையில், காப்பீட்டுத் தொகை தீர்ந்துவிடவில்லை என்றாலும் கூட, இதர பாலிசிகளிலிருந்து காப்பீட்டுத் தொகையை தாக்கல் செய்து பெறும் உரிமையை பெற்றுள்ளார்" என்று தெளிவுபடுத்தியுள்ளது.

காப்பீடு செய்யப்பட்டத் தொகையில் அயர்ச்சி

ஒரு பாலிசியில் காப்பீடு செய்யப்பட்ட தொகையை விட மருத்துவமனைக் கட்டணங்கள் அதிகமானால், ஒருவர் மற்றொரு காப்பீட்டு நிறுவனத்திடமிருந்து மீதித் தொகையை தாக்கல் செய்து பெற்றுக் கொள்ள விண்ணப்பிக்கலாம். "கழித்தல்கள் அல்லது இணை பண செலுத்தல்கள் கருதப்பட்டதற்கு பிறகு ஒரு ஒற்றைப் பாலிசியின் கீழ் தாக்கல் செய்யப்பட்டத் தொகை வரையறுக்கப்பட்ட காப்பீட்டுத் தொகையைவிட அதிகமானால், பாலிசிதாரருக்கு அவர் / அவள் விரும்பும் காப்பீட்டு நிறுவனத்தைத் தேர்ந்தெடுத்து மீதித் தெகைக்கு தாக்கல் செய்யும் உரிமை உண்டு," என்று சொல்கிறார் டாடா ஏஐஜி பொது காப்பீட்டு நிறுவனத் தலைவர் திரு. எம். ரவிச்சந்திரன்.

எந்த பாலிசியைத் தேர்ந்தெடுக்கலாம்.

ஒரு பாலிசிதாரர் என்ற முறையில், ஒன்றுக்கும் மேற்பட்ட பாலிசிகளை நீங்கள் வைத்திருந்தால், ஒருவர் எந்த ஒரு காப்பீட்டு நிறுவனத்தாரையும் தாக்கல் செய்யப்பட்ட காப்பீட்டுத் தொகைக்கு மதிப்பீடு அளிக்கச் சொல்லி கேட்கலாம். ஏனென்றால் தாக்கல் செய்யப்படாத போனஸின் மீது (என்சிபி) மற்றும் தற்போதைய பாலிசியின் காத்திருப்புக் காலம் ஆகியவற்றின் மீது தாக்கல் செய்யப்பட்டதன் பாதிப்பு இருப்பதால், ஒருவரால் இதை எப்படி முடிவெடுக்க முடியும்? "ஒன்று சேர்க்கப்பட்ட போனஸ் தொகை அதே விகிதத்தில் குறைக்கப்படுகிறது. அது ஒவ்வொரு ஆண்டும் அதிகரிக்கிறது. ஆனால் காத்திருப்புக் காலத்தின் மீது எந்த விதத் தாக்கத்தையும் ஏற்படுத்துவதில்லை," என்று சொல்கிறார் குப்தா.

குழு உடல்நலக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் காப்பீடு செய்திருக்கும் ஒருவருக்கு தேர்ந்தெடுப்பது மிகவும் சுலபமானதாகும். "ஒரு வாடிக்கையாளர் ஒரு சில்லறை விற்பனை பாலிசியும் ஒரு குழு பாலிசியையும் வைத்திருந்தால், முதலில் குழு பாலிசியின் கீழ் காப்பீட்டு தொகைக்கு தாக்கல் செய்வது சிறந்ததாகும். ஏனென்றால், சில்லறை விற்பனை பாலிசியில் தொகுக்கப்பட்ட என்சிபி போன்ற நற்பயன்களும், உடல்நலப் பரிசோதனைகளுக்கு தாக்கல் செய்யும் வசதிகளும் இல்லை. மேலும், பொதுவாக குழு பாலிசிகளில் சில்லறை பாலிசிகளை விட, குறிப்பாக காத்திருப்புக் காலம் தொடர்பாக பரந்த அளவில் காப்பீட்டு வசதிகள் இருக்கின்றன" என்று சொல்கிறார் ரவிச்சந்திரன்.

காப்பீட்டைத் தாக்கல் செய்வது எப்படி

தாக்கல் செய்வதற்கு காப்பீட்டு நிறுவனத்தார் அசல் மருத்துவமனை ரசீதுகளையும் மற்றும் மருத்துவமனையிலிருந்து வெளியேற்றப்பட்ட விவரங்களையும் தருமாறு வலியுறுத்துகின்றனர். ஒரு பாலிசிதாரர் ஒன்றுக்கும் மேற்பட்ட காப்பீட்டு நிறுவனங்களில் காப்பீட்டுத் தொகைக்கு தாக்கல் செய்ய நேர்ந்தால், ஆவணங்கள் தொடர்பான விசாரணைகள் இருக்கும். "இரண்டாவது காப்பீட்டு நிறுவனத்தாரிடம் வாடிக்கையாளர் காப்பீட்டுத் தொகையை தாக்கல் செய்வதற்கு ஆவணங்களின் உண்மையான பிரதிகளுடன் (சுய சான்றளிக்கப்பட்டது) முதல் காப்பீட்டு நிறுவனத்தாரிடமிருந்து பணத்தை செலுத்தியதற்கான அசல் தீர்வு கடிதத்தையும் சேர்த்து சமர்பிக்க வேண்டும்." என்று அறிவிக்கிறார் குப்தா.

பல்வேறு பாலிசிகளை வைத்திருத்தல்: முன்கூட்டி வரையறுக்கப்பட்ட - காப்புறுதி நற்பயன்கள்.

சிக்கலான நோய்களுக்கான திட்டங்கள் பொதுவாக ஒத்த முன்கூட்டி வரையறுக்கப்பட்ட நற்பயன்களைக் கொண்ட காப்பீட்டுத் திட்டங்களாகும். அவை ஒரு இணை காப்பீட்டுத் திட்டமாகவும் (ஆயுள் காப்பீட்டுத் திட்டத்துடன்) அல்லது தனியாக நிற்கும் காப்பீட்டுத் திட்டமாகவும் வருகின்றன. ஐஆர்டிஏஐ விதிகளின் படி, பல்வேறு முன்கூட்டி வரையறுக்கப்பட்ட நற்பயன்களைக் கொண்ட காப்பீட்டுத் திட்டங்களின் மீது செய்யப்படும் அனைத்து தாக்கல்களுக்கும் ஒவ்வொரு காப்பீட்டு நிறுவனத்தாராலும் மதிப்பளிக்கப்பட வேண்டும்.

"உடல்நலக் காப்பீட்டுத் திட்ட ஒழுங்குமுறை சட்ட விதி 2016 இன் பிரிவு 24 கூறுவது என்னவென்றால், வரையறுக்கப்பட்ட நற்பயன்களை வழங்கும் பல்வேறு பாலிசிகளில், காப்பளிக்கப்பட்ட நிகழ்வு ஏற்படும்போது பாலிசியி்ன் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைப் பொறுத்து, ஒவ்வொரு காப்பீட்டு நிறுவனமும் இதே போன்ற மற்ற பாலிசிகளின் கீழ் பெறப்பட்ட தொகை அல்லாமல் தனிப்பட்ட முறையில் காப்பீட்டுத் தொகை தாக்கல்களுக்கு பணம் செலுத்த வேண்டும்," என்று சொல்கிறார் ரவிச்சந்திரன்.

சிக்கலான நோய்களுக்கான காப்பீட்டுத் திட்டங்களில் ஒப்பீட்டளவில் தாக்கல் செய்வது மிகவும் எளிதானதாகும். "சிக்கலான நோய்களுக்கான காப்பீட்டுத் திட்டங்கள் முன்கூட்டி வரையறுக்கப்பட்ட நற்பயன்களைக் கொண்ட திட்டங்களாகும் மேலும் பாலிசியின் கீழ் காப்பளிக்கப்பட்ட நோய்கள் ஏற்படும் அந்த நேரத்திலேயே மருத்துவமனை ரசீதுகள் எதையும் சமர்பிக்க வேண்டிய தேவையில்லாமல் உடனடியாக தாக்கல் செய்யப்பட்ட தொகைச் செலுத்தப்படுகிறது," என்று தெரிவிக்கிறார் பேங்க் பஜார் பொது காப்பீட்டு நிறுவனத்தின் தலைவர் அட்ரே பரத்வாஜ்

நிறைவு

ஒன்றுக்கும் மேற்பட்ட பாலிசிகளை வைத்திருக்கும் பாலிசிதாரர் என்ற முறையில், வெளிப்படுத்துதல் மற்றும் வெளிப்படைத் தன்மை ஆகியவை மிகவும் முக்கியமானவையாகும். பொருளாதார மற்றும் உடல்நல நிலைகள், ஏற்கனவே இருக்கும் வியாதிகள் ஆகியவற்றை பற்றி மட்டுமல்லாமல், நீங்கள் தற்போது ஏதேனும் பாலிசிகளை வைத்திருந்தால் அதைப் பற்றியும் காப்பீட்டு நிறுவனத்தாருக்கு தெரியபடுத்தியிருக்கிறீர்களா என்பதையும் உறுதி செய்து கொள்ளவும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

How to make a claim on multiple health insurance policies

How to make a claim on multiple health insurance policies
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X