வங்கி லாக்கரில் இருக்கும் சொத்துக்களை பாதுகாக்க ஒரு சிறந்த வழி..!

Written By:
Subscribe to GoodReturns Tamil

இப்போது ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா வாடிக்கையாளர்கள் தங்கள் உடைமைகளான நகைகள், பணம் மற்றும் இதர முக்கிய ஆவணங்களை உங்கள் சொந்த அபாயத்தில் வங்கி லாக்கரில் வைத்துக் கொள்ள வேண்டுமென்றும் உங்கள் உடைமைகளுக்கு ஆபத்து நேர்நதால் வங்கிக்கு அதற்கு நஷ்ட ஈடு தரும் பொறுப்பு இல்லை என்றும் அறிவித்துள்ளது.

மேற்கொண்டு அந்த அறிவிப்பை நியாயப்படுத்தும் வகையில், வங்கி அவர்களின் வங்கி லாக்கர் வாடிக்கையாளர்களுடன் பகிர்ந்து கொள்ளும் உறவானது ஒரு வீட்டு உரிமையாளருக்கும் மற்றும் வாடகைதாரருக்கும் இருக்கும் உறவைப் போன்றது.

எனவே, அத்தகைய உறவில் தங்களுடைய மதிப்பு மிக்க சொத்துக்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டியது வங்கியில் லாக்கர் வைத்திருப்பவரின் பொறுப்பாகும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

தற்போது வாடிக்கையாளர்கள் தங்களுடைய மதிப்பு மிக்க சொத்துக்களை பத்திரமாக வைத்துக் கொள்ளப் பாதுகாப்பான வழிகளைத் தேடுகிறார்கள்.

காப்புத் திட்டம்

அதே சமயம், இதர சிலர் அவர்களது மதிப்பு மிக்கச் சொத்துக்களை ஒரு பிரத்யேகமான காப்புத் திட்டத்தை வாங்கி அதில் பாதுகாப்பாக வைக்க நினைக்கிறார்கள். இந்தப் பிரிவு வாடிக்கையாளர்களை பொறுத்த வரை வங்கி லாக்கர்கள் தான் இதரத் தேர்வுகளை விட அதிகப் பாதுகாப்பானது என்று நம்புகிறார்கள்.

சொத்து மதிப்பீடு

எனவே வீட்டுக் காப்பீடு அல்லது வீட்டுடைமையாளர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அனைத்து அபாயக் காப்பீடுகளாக கூடுதல் சேர்ப்புக் காப்பீடுகள் கிடைக்கப் பெறுகின்றன.

இந்தக் காப்பீடுகள் உங்கள் குடியிருப்புச் சுற்றுப்புறத்திற்கு வெளிப்புறம் இருக்கும் உங்களுடைய சொத்து மதிப்பீடுகளுக்கு காப்பீடு அளிக்கிறது.

 

 

எப்படி பாதுகாப்பு அளிக்கிறது?

நகையின் மதிப்பைப் பொறுத்து காப்பீட்டின் வரம்பு ரூ.2 இலட்சத்திலிருந்து ரூ. 10 இலட்சத்திற்கு இடையில் அமைக்கப்படுகிறது. இருந்தாலும், ஒரு நகையை மாற்றி அமைப்பதற்கான கட்டணம் சுமார் ரூ. 10 இலட்சம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது, காப்பீட்டுத் திட்டத்தை வாங்கும் போது மதிப்பீட்டுச் சான்றிதழ் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

கட்டணம்

நகை சம்பந்தப்பட்ட அனைத்து விவரங்களும் நகையின் வகை, உடை, அத்துடன் மாற்றியமைப்பதற்கான கட்டணம் போன்றவை வழங்கப்பட வேண்டும்.

மேலும் வீட்டுக் காப்பீட்டுத் திட்டத்தின் ஒட்டுமொத்தக் காப்பீட்டைப் பொறுத்து நகை காப்புக்கு பல்வேறு பொதுக் காப்பீட்டு நிறுவனங்களால் ஒரு இணை வரம்பு அமைக்கப்பட்டுள்ளது. ரூ. 3 இலட்சத்திற்கான மொத்த வீட்டுடைமையாளர் காப்பீட்டுத் திட்டத்தைப் பற்றி சொல்லப் போனால், அதில் நகைக்கான காப்பீடு அதிகபட்சம் 25% கிடைக்கப்பெறும்.

 

காப்பீட்டிற்கு காப்பீட்டு முனைமத் தொகை குறைவு

சந்தையில் தங்கத்தின் மதிப்பை ஒப்பிடும் போது அத்தகைய காப்பீட்டுத் திட்டத்திற்கு காப்பீட்டு முனைமம் மிகக் குறைவு. மேலும் நகையில் சந்தை மதிப்பில் 0.5-1% க்கும் இடையிலான வரம்பில் உள்ளது.

இழப்பு ஏற்பட்டால் வாடிக்கையாளர்கள் தாக்கல் செய்யலாம்

தாக்கல் படிவத்தை சமர்ப்பிப்பதன் மூலம் வாடிக்கையாளர்கள் சம்பந்தப்பட்ட ஆவணங்களான சேதாரம் அல்லது திருட்டு தொடர்பான ஆவணங்கள், மொத்த இழப்பீட்டு மதிப்பீடு, முதல் தகவல் அறிக்கையின் நகல், மதிப்பீட்டுச் சான்றிதழ் அல்லது நகைகளின் விலைப்பட்டியல் போன்றவற்றை வழங்குவதன் மூலம் இழப்பீட்டிற்கு தாக்கல் செய்யலாம். இயற்கைச் சீற்றங்களின் விளைவாக சேதங்கள் ஏற்பட்டால், நிலநடுக்கவியல் அல்லது வானிலையியல் துறையிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

You Can Protect Your Belongings In Bank Locker Through Householder's Policy

You Can Protect Your Belongings In Bank Locker Through Householder’s Policy - Tamil Goodreturns | வங்கி லாக்கரில் இருக்கும் சொத்துக்களை பாதுகாக்க ஒரு சிறந்த வழி..! - தமிழ் குட்ரிட்டன்ஸ்
Story first published: Sunday, July 23, 2017, 19:47 [IST]
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns