இந்தியாவில் செயல்பட்டு வரும் 15 கிரெளடு ஃபண்டிங் தளங்கள்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அமெரிக்கா போன்ற நாடுகளில் கூட்டமாக முதலீடு செய்யும் கிரெளடு ஃபண்டிங் (Crowdfunding) என்பது ஃபேமஸ். ஆனால் இந்தியா போன்ற நாடுகளில் இன்னும் இந்த முதலீடு வழக்கம் குறித்த விழிப்புணர்வு இல்லை. ஆனால் இதுகுறித்த விழிப்புணர்வு தற்போது கொஞ்சம் கொஞ்சமாக இந்தியாவில் அதிகரித்து வருகிறது.

கிரெளடு ஃபண்டிங் என்பது பல வகைப்படும். இதுகுறித்துச் செபி அமைப்புக் கூறும்போது, 'இந்தியாவில் இன்னும் இந்தக் கிரெளடு ஃபண்டிங் குறித்துப் பெரும்பாலானோர்களுக்குத் தெரியவில்லை என்று கூறியுள்ளது. இந்த நிலையில் இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் கிரெளடு ஃபண்டிங் நிறுவனங்கள் குறித்துப் பார்ப்போம்.

இந்த நிறுவனங்கள் முதலீடுகளை அதிகரித்துத் தொழில் முனைவோர், கலாச்சார விழிப்புணர்வு, சமூகப் பிரச்சனைகளைத் தீர்க்க, மற்றும் மருத்துவம் போன்ற துறைகளுக்கு நிதியுதவி செய்கிறது.

1.பிட்கிவிங் (Bitgiving)

1.பிட்கிவிங் (Bitgiving)

நிறுவனர் மற்றும் சி.இ.ஓ: இஷிதா ஆனந்த்
கமிஷன் கட்டணம்: 6% - 10%

டெல்லியைச் சேர்ந்த இந்த நிறுவனம் பலவித பின்னணிகளில் இருக்கும் குறிக்கும் (நடிகர்கள், பொறியாளர்கள் உள்படப் பலர்) நபர்களை ஒன்று சேர்த்து அவர்களின் கருத்துக்களை ஒன்றிணைத்துப் பல முக்கியப் பிரச்சனைகளுக்கு நிதியுதவி செய்கின்றனர். குறிப்பாகப் புதியதாகத் தொழில் செய்யவுள்ளவர்கள், சமூக மற்றும் வித்தியாசமான திட்டங்களுக்கு உதவி செய்கின்றனர். மேலும் மருத்துவ நோக்கங்களுக்காக நிதி திரட்டலில் அவர்கள் 15% கவனம் செலுத்துகின்றனர்.

பிட்கிவிங் நிறுவனம் ஏற்கனவே 650க்கும் மேற்பட்ட திட்டங்களுக்கு நிதியுதவி செய்துள்ளனர். குறிப்பாக நேபாளில் கடுமையான பூமியதிர்ச்சி ஏற்பட்டபோது, ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் இந்தியர்களுக்கு, மகாராஷ்டிராவில் உள்ள விவசாய விதவைகளுக்கு உதவுதல், மேலும் அரிய நோய்களால் பாதிக்கப்பட்டிருக்கும் இளைஞர்களின் இரண்டு மாத சிகிச்சைக்கு நிதியுதவி அளித்தல் போன்ற அரிய சேவைகள் பிட்கிவிங் செய்த சேவைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

2. கேட்டாபோலட் (Catapooolt)

2. கேட்டாபோலட் (Catapooolt)

நிறுவனர்: சதீஷ் கட்டாரியா
கமிஷன்: 23 அமெரிக்க டாலர்கள் மற்றும் 10-15% கமிஷன்

கடந்த 2013ஆம் ஆண்டுத் தோற்றுவிக்கப்பட்ட இந்தக் கேட்டாபோலட், நீண்ட நெடிய வெற்றிகரமான திட்டங்களுக்கு உதவிய ஒரு கிரெளட் ஃபண்டிங் நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது. புதிய அரிய திட்டங்களுக்குத் தாராளமாக உதவி செய்யும் இந்தக் கேட்டாபோலட் மேலும் விளையாட்டு, அரசியல், சமூகப் பிரச்சனைகள் ஆகியவற்றில் கவனம் செலுத்தி வருகிறது. 300,000 சில்லறை விற்பனை நிலையங்களில் இருந்து நிதி வழங்குவதற்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுத்த இந்தியாவின் ஒரே கிரெளட் ஃபண்டிங் என்ற பெருமையைப் பெற்றுள்ளது.

2000 க்கும் அதிகமான பங்களிப்பாளர்களிடமிருந்து சுமார் 150,000 அமெரிக்க டாலர் தொகையைத் திரட்டி சுமார் 40 திட்டங்களுக்குக் கிரெளட் ஃபண்டிங் உதவியது என்பது சிறப்பு இந்த நிறுவனத்திற்கு உண்டு

 

3. கிரெளடெரா (Crowdera)

3. கிரெளடெரா (Crowdera)

இணை நிறுவனர்கள்: சேட் ஜெயின், சைதன்ய அட்ரேயா, ரிச் மஸ்தூரா

கிரெளடெரா என்பது அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவில் இரண்டு இந்தியர்கள் மற்றும் ஒரு அமெரிக்கர் இணைந்து தொடங்கப்பட்ட நிறுவனம் ஆகும். இதுவொரு உலக அளவிலான கிரெளட் ஃபண்டிங் நிறுவனமாக இருந்தாலும் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இந்தியாவில் கிளை தொடங்கப்பட்டது. இந்த நிறுவனம் சுமார் 537,000 அமெரிக்க டாலர் நிதி திரட்டி அதன் மூலம் பல மதிப்புமிக்க இலாப நோக்கற்றவர்கள், தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு உதவி செய்துள்ளது. மேலும் முழுக்க முழுக்கச் சேவை மனப்பான்மையுடன் இயங்கி வரும் இந்த
கிரெளட் ஃபண்டிங் 2017ஆம் ஆண்டில் இருந்து லாப நோக்கத்தில் இருந்து திரும்பி ஜீரோ கமிஷன் விகிதத்தில் ஒருசில குறிப்பிட்ட நல்ல காரியங்களுக்கு உதவிட முன்வந்துள்ளது.

 

4. ட்ரீம் வாலட்ஸ் (DreamWallets)

4. ட்ரீம் வாலட்ஸ் (DreamWallets)

நிறுவனர்கள்: நிகில் அகர்வால் மற்றும் மனிஷ் ஹரோடியா

ஜெய்ப்பூரை தலைமையிடமாகக் கொண்டு, மும்பை மற்றும் புனே ஆகிய நகரங்களில் அலுவலகங்கள் செயல்பட்டு வரும் இந்த ட்ரீம் வாலட்ஸ் ஒரு ஆன்லைன் கிரெளட் ஃபண்டிங் அமைப்பு. குறிப்பாக எரிபொருள் நிறுவங்களுக்கு நிதியுதவி செய்வதில் அக்கறை காட்டி வருகிறது. இந்த அமைப்பு எந்த ஒரு திட்டத்தையும் லாப நோக்கத்தோடு கருதாமல் ஆரம்பிக்கும் நிறுவனங்களுக்குக் கைகொடுக்கும் அமைப்பாகச் செயல்பட்டு வருவதோடு, அவர்களை ஊக்குவிக்கவும் செய்கிறது.

இந்த அமைப்பு குறிப்பாக 16 துறைகளுக்குத் தொடர்ந்து தனது நிதியுதவியைச் செய்து வருகிறது. அவற்றில் திரைப்படங்கள், திரையரங்கு, நிகழ்வுகள், கலை & கைவினை, இசை, இலக்கியம், புகைப்படம் எடுத்தல், சுற்றுலா, தொழில்நுட்ப தயாரிப்பு மற்றும் சேவை, சமூகக் காரணங்கள் போன்றவற்றை உள்ளடக்கிய 16 வகைகளில் நிதி திரட்டுவதற்கு ட்ரீம் வாலட்ஸ் உதவுகிறது. இந்த அமைப்பு 200 நகரங்களில் நூற்றுக்கும் அதிகமான பிரச்சாரங்கள் செய்து தங்கள் அமைப்பு குறித்த விழிப்புணர்வைப் பரப்பி வருகிறது.

 

5. ஃபேர்செண்ட் (Faircent)

5. ஃபேர்செண்ட் (Faircent)

இணை இயக்குனர்க்ள்: ராஜாத் காந்தி, வினய் மாத்யூஸ், நிதின் குப்தா

கமிஷன் கட்டணம்: ஒருமுறை கட்டணமாக 23 அமெரிக்க டாலர்கள் மற்றும் பணி மற்றும் தொகைக்கு ஏற்ப வட்டி விகிதம் முடிவு செய்யப்பட்டும். வட்டி மூலம் லாபம் பெற வேண்டும் என்பது இதன் நோக்கமல்ல

குர்கான் நகரை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் இந்த ஃபேர்செண்ட் அமைப்பு ஒரு மெய்நிகர் சந்தையில் நேரடியாக வங்கி தொடர்பு இல்லாமல் கடன் வாங்குபவர்கள் மற்றும் கடன் வழங்குபவர்களுக்கு இடையே உள்ள விதிமுறைகள் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்துவதில் ஈடுபட்டு வருகிறது. மேலும் இந்த அமைப்பு பெரிய கடன்களைத் தவிர்த்து, சின்னச் சின்னக் கட்டணங்களுடன் நிதியுதவி செய்து வருகிறது. கடந்த 24 மாதங்களில் மொத்தம் 973,000 அமெரிக்க டாலர் மொத்த கடன்கள் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக 6,000 சாத்தியமான கடன் வழங்குபவர்களாலும் 26,000 பேருக்கு விருப்பமான கடன் வாங்குபவர்களிடமிருந்தும் தொடர்பை ஏற்படுத்தியுள்ளது

 

6. ஃபியூவல் ஏடிரீம்: (FuelADream)

6. ஃபியூவல் ஏடிரீம்: (FuelADream)

நிறுவனர் ரெங்கநாத் தோட்டா

கமிஷன் கட்டணம்: எந்த ஒரு திட்டத்திற்கு 9% கட்டணம் வசூலிக்கப்படும். இதுபோகச் சேவைக்கட்டணமாக 14.5% வசூலிக்கப்படும். ஆகம்வே மொத்த கமிஷன் தொகை 10.3% ஆக இருக்கும்

பெங்களூரில் இயங்கி வரும் இந்த ஃபியூவல் ஏடிரீம் அமைப்பு கடந்த 2016ஆம் ஆண்டு 14 திட்டங்அக்ளுடன் தொடங்கப்பட்டது. இதுவொரு சமூக நன்மை, ஆக்கப்பூர்வமான கலை மற்றும் தொண்டுகள் போன்ற பல்வேறு திட்டங்களில் கவனம் செலுத்துகின்ற ஒரு வெகுமதி அடிப்படையிலான கிரெளட்ஃபண்டிங் அமைப்பு ஆகும். இந்த அமைப்பில் இருந்து இரண்டு விதங்களில் இருந்து நிதி கிடைக்கும்: ஒன்று AON என்று கூறப்படும் (அனைத்தும் அல்லது எதுவும் இல்லாத) அல்லது KWYG (உங்களுக்குத் தேவையானதை பெற) மேலும் எந்த ஒரு பிரச்சாரத்தையும் தொடங்க முடியும். ஏஓஎன் பிரச்சாரங்களில் ஏதேனும் அதன் இலக்குகளை அடைவதில் தோல்வியுற்றால், கொடுக்கப்பட்ட பணம் அனைத்து நிதியாளர்களுக்கும் திருப்பிக் கொடுக்கப்படும்.

குறிப்பிட்டுச் சொல்லும் வகையிலான திட்டங்கள் என்றால் பேட்டரியில் பைக் இயங்குவது மற்றும் கிராமங்கள் மற்றும் விவசாயிகளுக்குக் கால்வாய் வெட்டுவது

 

7. ஃபண்ட் ட்ரீம்ஸ் இந்தியா (FundDreamsIndia)

7. ஃபண்ட் ட்ரீம்ஸ் இந்தியா (FundDreamsIndia)

கமிஷன் கட்டணம்: 5% கட்டணம் மற்றும் 3.95% பிராசசிங் கட்டணம்

புளூபிஷ் வெண்ட்சர்ஸ் பிரைவைட் லிமிடெட் நிறுவனத்தின் ஒரு அங்கம் தான் இந்த ஃபண்ட் ட்ரீம்ஸ் இந்தியா. இந்த அமைப்புத் தனிப்பட்ட வகையில் பாதிக்கப்பட்ட மனிதர்களுக்கு உதவும் வகையில் மற்றும் வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சிகள், சமூகப் பிரச்சனைகள் காரணமானவர்களுக்காக அமைந்துள்ளது. எனவே தான் இந்த அமைப்பு நிதியாளர்கள் மத்தியில் மிக வேகமாகப் பரவி வருகிறது

 

8. இக்னைட் இண்டெண்ட்: ( Ignite Intent )

8. இக்னைட் இண்டெண்ட்: ( Ignite Intent )

இணை நிறுவனர்: ரினிகேஷ் ஷா

இக்னைட் இண்டெண்ட் என்ற இந்தக் கிரவுட்ஃபண்டிங் அமைப்புப் புதியதாகத் தொழில் முனைவோர்களுக்கு, ஸ்டார்ட் அப் மற்றும் கல்லூரி புரொஜக்ட் செய்பவர்களுக்கு உதவி வருகிறது. மேலும் இந்த அமைப்பு பல தனிப்பட்ட நபர்களின் சாதனைகள் மற்றும் தொழில் வெற்றிக்கு ஊக்கப்படுத்தும் வகையில் சிறப்புப் பரிசுகளையும் கொடுத்து வருகிறது. மேலும் உதவியாளர்கள் தங்கள் தொழிலை விரிவுபடுத்தும் எண்ணம் இருந்தாலும் இந்தக் கிரவுட்ஃபண்டிங் அமைப்பு உதவி செய்ய முவருகிறது.

மேலும் இந்தக் கிரவுட்ஃபண்டிங் அமைப்பு புனேவை சேர்ந்த ஆன்லைன் குரோசரியான புனேஎக்ஸ்பிரஸ் அமைப்புக்கு பெரும் உதவி செய்துள்ளது.

 

9. இம்பெக்ட் குரு:

9. இம்பெக்ட் குரு:

இணை நிறுவனர்கள்: குஷ்பு ஜெயின் மற்றும் பியூஷ் ஜெயின்

கடந்த 2014ஆம் ஆண்டு மும்பையில் தொடங்கப்பட்ட இந்தக் கிரவுட்ஃபண்டிங் அமைப்புச் சமூகத் திட்டங்களுக்கு உதவி செய்யும் லாப நோக்கம் இல்லாத அமைப்புகளுக்கு உதவி செய்து வருகிறது. அதுமட்டுமின்றி ஸ்டார்ட்ப், சமூக நல மற்றும் லாபநோக்கம் இல்லாத அமைப்புகளுக்கு நன்கொடை வழங்குவதில் பெரும்பங்கு வகிக்கின்றது. உலக அளவில் இதுபோல் சுமார் லாபநோக்கம் இல்லாத அமைப்புகளுக்கு இந்தக் கிரவுட்ஃபண்டிங் அமைப்பு உதவி செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2016ஆம் ஆண்டுச் சிங்கப்பூரை சேர்ந்த RB இன்வெஸ்ட்மெண்ட் மற்றும் பிரைவைட் இன்வெஸ்டிங் நிறுவனத்திற்கு 500,000 அமெரிக்க டாலர் நிதியுதவி அளித்து உதவியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

10. கேட்டோ (Ketto )

10. கேட்டோ (Ketto )

இணை நிறுவனர்கள்: குணால் கபூர், வருன் சேத் மற்றும் ஜாஹீர் ஏடன்வாலா

கமிஷன் கட்டணம்: 5-8% அல்லது 30 அமெரிக்க டாலர்கள்

கடந்த 2012ஆம் ஆண்டுத் தொடங்கப்பட்ட இந்தக் கிரவுட்ஃபண்டிங் அமைப்பு முக்கியமாக மூன்று விதமான அமைப்புகளுக்கு நிதியுதவி செய்கிறது

தனிப்பட்ட ஒருவரின் வளர்ச்சி (சுகாதாரம்/கல்வி/சுற்றுலா
ஆக்கப்பூர்வமான கலைஞர்கள் (திரைப்படம் / இசை / திரையரங்குகள் / ஃபேஷம்/ தொழில்நுட்பம்
சமூக / சமூகத் திட்டங்கள் (அரசு சாரா நிறுவனங்கள் / இலாபங்கள் / அறநெறிகள்)

மும்பையை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் இந்தக் கிரவுட்ஃபண்டிங் அமைப்பு நிதியைத் தாராளமாக வழங்கி வந்தாலும், நிதி திரட்டுபவர்கள், தங்களுடைய இலக்குகளை அடைய முடியாவிட்டாலும் கூட அவர்கள் கொடுக்கப்பட்ட அனைத்து பணத்தையும் அவர்களே வைத்திருக்க அனுமதிக்கும்.

100,000க்கும் அதிகமான சாதனையாளர்களுக்கு அவர்களுடைய 10000க்கும் மேற்பட்ட புரொஜக்ட்களுக்காக இந்த அமைப்பு 5,999,400 அமெரிக்க டாலர்கள் இதுவரை உதவி செய்துள்ளது. அதாவது சராசரியாக ஒரு புரொஜக்ட்களுக்கு 600 அமெரிக்க டாலர்கள் உதவி செய்துள்ளது என்று வைத்துக் கொள்ளலாம். இந்தக் கிரவுட்ஃபண்டிங் அமைப்புக்குக் கூகுள் கிராண்ட்ஸ், கேவான், கேப் இந்தியா, தசரா சோசியல் இம்பாக்ட்ஸ் ஆகியவை பங்குதாரர்களாகவும், ஆதரவாளராகவும் இருந்து வருகின்றனர்.

 

 

11. மிலாப் (Milaap)

11. மிலாப் (Milaap)

இணை நிறுவனர்கள்: மயூக் செளத்ரி மற்றும் அனோஜ் விசுவநாதன்
கமிஷன் கட்டணம்: 5-8%

பெங்களூரில் இயங்கி வரும் இந்த அமைப்பு சிறிய வகையில் கிராமப்புற மக்களுக்குக் கடன் வழங்கி உதவுகிறது. வருமானம் குறைவாக இருக்கும் கிராம மக்களைத் தேர்வு செய்து அவர்களின் வாரிசுகளுக்குக் கல்வி, மற்றும் அவர்களுக்குத் தேவையான தண்ணீர், கழிப்பறை வசதி ஆகியவற்றுக்காக நிதியுதவி அளிக்கப்படுகிறது. கடந்த 2011ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட இந்தக் கிரவுட்ஃபண்டிங் அமைப்பு, கடந்த 2014ஆம் ஆண்டிற்குப் பின்னர் நன்கொடை, அவசர தேவைகளுக்கான நிதியுதவி, மருத்துவ உதவிகள், இயற்கை சீரழிவு ஏற்பட்ட பகுதிகள் மற்றும் சிறு தொழில்களுக்கு உதவி வருகிறது.

உலகம் முழுவதும் நிதி முதலீட்டைப் பெற்று வரும் இந்த அமைப்பு இதுவரை சுமார் 50,000 புரொஜக்ட்களுக்கு 12.7 அமெரிக்க டாலர்கள் உதவியுள்ளது.

 

12. ரான் டீ (Rang De)

12. ரான் டீ (Rang De)

இணை நிறுவனர்கள்: ஸ்மிதா ராம் மற்றும் என்.கே.ராம்

கமிஷன் கட்டணம்: வட்டி விகிதம் 4.5% முதல் 10% வரை வருடத்திற்கு. மேலும் ரான் டீ கடனாளிகளால் திருப்பிச் செலுத்தப்பட்ட கடன்களில் 2% வரை எடுத்துக் கொள்கிறது

பெங்களூரைச் சேர்ந்த ரான் டீ என்ற கிரவுட்ஃபண்டிங் அமைப்பு நாடு முழுவதிலும் உள்ள கிராமத்து நபர்களுக்குச் சிறிய வகையில் தொழில் செய்பவர்களுக்கு நிதியுதவி செய்யும் அமைப்புதான் இந்த ரான் டீ. கடந்த 2008ஆம் ஆண்டுத் தொடங்கப்பட்ட இந்த அமைப்பு குறிப்பாக 93% நிதியுதவியைப் பெண்களுக்கு அளித்துள்ளது என்பது பெருமைப்படக் கூடிய ஒரு விஷயம் ஆகும். இந்தக் கிரவுட்ஃபண்டிங் அமைப்பு இதுவரை 50,0008 நபர்களுக்குக் கடன் வழங்கியுள்ளது அவற்றில் 9699 கடன்கள் சமூகத் திட்டமிடலுக்காக வழங்கப்பட்டது. சமூகம் சார்ந்த நிதியுதவியாக மட்டும் இதுவரை சுமார் 7 மில்லியன் அமெரிக்க டாலர் வழங்கியுள்ள இந்த அமைப்பு கிட்டத்தட்ட சுமார் 5 மில்லியன் அமெரிக்க டாலர் கடனை திரும்பப் பெற்றுள்ளது

 

13. ஸ்டார்ட் 51

13. ஸ்டார்ட் 51

இணை நிறுவனர்கள்: அதீத் பஜாஜ்
கமிஷன் கட்டணம்: 5%

ஸ்டார்ட்51.காம் என்ற அமைப்புக் கிரவுட்ஃபண்டிங் அமைப்புகளில் குறிப்பிடத்தக்கது. நிதி பங்களிப்பாளர்கள் இடமிருந்து பிரச்சாரத் தார்கள் நேரடி நிதி பங்களிப்பை செய்வதை இந்த அமைப்பு நோக்கமாகக் கொண்டுள்ளது. இது அனைத்து அல்லது ஏதேனும் ஒரு குறிப்பிட்ட நிதியுதவி கொள்கையைப் பின்பற்றுகிறது. நீங்கள் அதிகப் பணம் பெற வேண்டி விண்ணப்பித்தால் லோன் கிடைக்கும் அல்லது தேவையில்லை என்றால் அது கிடைக்காது. இந்த அமைப்புத் திரைப்படம் உருவாக்குபவர்கள், டிசைனிங் தொழில் செய்பவர்களுக்கு உதவி செய்வதில் முன்னுரிமை தருகிறது. பணம் கொடுப்பவர்களுக்கும் பணம் வழங்குபவர்களுக்குச் சமூகச் சிந்தனை குறித்த அக்கறையை இது வெளிப்படுத்துகிறது. இந்த நிறுவனம் அகமதாபாத் நகரில் இயங்கி வருகிறது

 

14. தி ஹாட் ஸ்டார்ட் (TheHotStart)

14. தி ஹாட் ஸ்டார்ட் (TheHotStart)

கமிஷன் கட்டணம்: 16.75%

புளுபெர்ரி பே வெண்ட்சர்ஸ் பிரைவைட் லிமிடெட் நிறுவனத்தின் இந்த அமைப்பு கடந்த 2014ஆம் ஆண்டில் இருந்து செயல்பட்டு வருகிறது. 50 லட்ச ரூபாய் வரை உள்ள புரொஜக்ட்களுக்கு இந்த அமைப்பு லோன் வழங்கி உதவி செய்கிறது.

இரண்டு விதங்களில் இந்த அமைப்பு உதவி செய்து வருகிறது. ஒன்று 'நெகிழ்வான நிதியளிப்பு' மாதிரி மற்றும் இரண்டாவது 'அனைத்து அல்லது ஒன்றும் அல்லாத மாதிரி'. நெகிழ்வான நிதி மாதிரியில், நிதி திரட்டிகள் அவர்கள் எதை உயர்த்தினாலும் அவற்றை வைத்துக்கொள்ளுங்கள். இரண்டாவது மாதிரியில், நிதி திரட்டப்பட்ட நிதி இலக்குகளை அடைய முடிந்தால் மட்டுமே நிதி திரட்ட முடியும்.

 

15 விஷ்பெர்ரி: (Wishberry)

15 விஷ்பெர்ரி: (Wishberry)

இணை நிறுவனர்கள்: பிரியங்கா அகர்வால், அனுஷுலிகா டுபெய்

மும்பையைச் சேர்ந்த இந்த அமைப்பு கடந்த 2010ஆம் ஆண்டுத் தொடங்கப்பட்டது. விஷ்பெரியின் நிதியுதவிகள் ஆக்கப்பூர்வமான புரொஜக்ட்கள், ஸ்டாண்ட் அப் காமெடி, திரைப்படத் தயாரிப்புகள், டிசைன், ஒளிப்பதிவு, இசை, நடனம் மற்றும் கலை ஆகியவற்றுக்கு உதவி செய்யும்

இந்த அமைப்பின் வெற்றி 70% ஆக இருக்கக் காரணம் என்னவெனில், தொழிலில் ஈடுபடுபவர்களுக்க் அவர்களுடைய புரொஜக்ட்கள் குறித்து ஆக்கப்பூர்வமான பிரச்சாரங்கள் செய்வது, குறிப்பாக வீடியோ மூலம் அறிவுறுத்துவது ஆகியவற்றில் ஈடுபடுகிறது.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

A list of 15 crowdfunding platforms in India

A list of 15 crowdfunding platforms in India
Story first published: Tuesday, August 1, 2017, 10:07 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X