நிதி சார்ந்த வேலையை வீட்டிலிருந்தபடியே செய்து பணம் சம்பாதிக்க 5 வழிகள்..!

Written By: Tamilarasu
Subscribe to GoodReturns Tamil

பொதுவாக மக்கள் வீட்டிலிருந்தபடியே வேலை செய்கிறார்கள். அவற்றில் சில வேலைகள் முழு நேர வேலையைப் போலவே பணிப் பாதுகாப்பையும் மற்றும் வருவாயையும் உறுதிப்படுத்துகிறது. குறிப்பாக, நிதியியல் சார்ந்த துறைகளில் அதிகச் சம்பளத்தை அளிக்கும் பதவிப் பணிகள் கிடைக்கப் பெறுகின்றன.

உங்களைத் தனித்து இயங்கி வேலை செய்ய அனுமதிக்கும் பல்வேறு நிதியியல் பதவிப் பணிகள் இருக்கின்றன. நீங்கள் வீட்டிலிருந்தபடியே செய்யக் கூடிய ஐந்து நிதியியல் சார்ந்த வேலைகளைப் பற்றி இங்கே பார்ப்போம்:

1. டே டிரேடர்

டே டிரேடர்கள் தினமும் பங்குகளை வாங்கி விற்பதன் மூலம் லாபங்களைப் பார்க்க முடியும். ஒரு நாள் வர்த்தகர் மிகக் குறுகியக் காலத்திற்குப் பங்குச் சந்தைகளில் பதவி நிலையில் வகிக்கிறார். அது சில நிமிடங்கள் முதல் சில மணி நேரங்கள் வரை இருக்கலாம். டே டிரேடர்கள் ஒவ்வொரு நாளும் எண்ணற்ற வர்த்தகங்களைச் செய்கிறார்கள். டே டிரேடர்கள் வர்த்தக நாள் முடிவதற்கு முன்பாக அவர்களது வர்த்தகத்தை முடிக்கிறார்கள். டே டிரேடரின் தொழில் அபாயகரமானது. ஆனால் நீங்கள் இதிலொரு நிபுணராக இருந்தால் இலாபங்களை எளிதாகப் பார்க்கலாம். இது பங்குச் சந்தையின் இயக்கங்களைப் பின்தொடர்ந்து மிகச் சரியாகக் கணிக்கக் கூடிய மக்களுக்குச் சிறப்பாகப் பொருந்த கூடிய தொழிலாகும்.

2. கணக்காளர்

கணக்காளர் என்பவர் கணக்கியல் தணிக்கைகள் அல்லது நிதிச் சார்ந்த அறிக்கை ஆய்வுகள் போன்ற கணக்கியல் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் தொழில் முறை நபராவார். நிறைய அனுபவங்களைப் பெற்ற பிறகு மட்டுமே ஒரு நபர் கணக்காளர் என்ற பாத்திரத்தை வகிக்க முடியும். வீட்டிலிருந்து வேலைச் செய்யும் கணக்காளர்களைச் சார்ந்து நிறைய நிறுவனங்களும் புதிய தொழிற் நிறுவனங்களும் இருக்கின்றன. திறன் வாய்ந்த கணக்காளர்கள் தேவைப்படும் வாடிக்கையாளர்கள் மிகப் பெரிய எண்ணிக்கையில் இருக்கிறார்கள். நீங்கள் நல்ல கல்வித் தகுதியும் மற்றும் நல்ல அனுபவமும் பெற்றிருந்தால் அவர்கள் உங்களுக்கு அதிக ஊதியத்தைத் தர தயாராக இருக்கிறார்கள்.

3. நிதியியல் திட்டமிடுபவர்

நீங்கள் ஒரு அனுபவம் வாய்ந்த மற்றும் சான்றிதழ் பெற்ற நிதியியல் திட்டமிடுபவராக இருந்தால் வீட்டிலிருந்தபடியே தனிப்பட்ட முறையில் வேலைச் செய்யலாம். ஒரு நிதியியல் ஆலோசகத் தொழிலுக்கு இளங்கலைப் பட்டப் படிப்புத் தேவைப்படுகிறது. நிதியியல், வியாபாரம், நிர்வாகம், பொருளாதாரம், புள்ளி விவரவியல், கணக்கியல் மற்றும் பல துறைகளில் முதுகலைப் பட்டமும் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. தனிப்பட்ட நிதியியல் ஆலோசனையில் அறிவும் அவசியமானதாகும். மேலும் தனிப்பட்ட நபர்களுக்கு அவர்களுடைய நிதியியல் திட்டங்களுக்கு ஆலோசனைக் கூறிய அனுபவமும் உங்களுக்குக் கண்டிப்பாக இருக்க வேண்டும். நீங்கள் உங்கள் வாடிக்கையாளர்களுக்கு வெவ்வேறு அம்சங்களில் வழிகாட்ட வேண்டும்; இவற்றில் காப்பீட்டுத் திட்டங்கள், ரியல் எஸ்டேட், ஓய்வுக் காலத் திட்டங்கள், மற்றும் வரித் திட்டங்களும் அடங்கும்.

4. நிதியியல் பகுப்பாய்வாளர்.

ஒரு நிதியியல் பகுப்பாய்வாளர் என்பவர் வியாபாரப் பிரிவு மற்றும் தொழிற்துறை பரிந்துரைகளைச் செய்வதற்கு நிறுவனங்களின் அடிப்படைகளுடன் பெருமளவுப் பொருளியல் மற்றும் நுண்ணளவுப் பொருளியல் நிலைகளை ஆராய்ச்சி செய்கிறார். நிதிப் பகுப்பாய்வாளர் என்பவர் ஒரு நிறுவனத்தின் பங்குகளை அடிப்படையாகக் கொண்டு அதன் ஒட்டுமொத்த நடப்பு மற்றும் முன்கூட்டிக் கணிக்கப்பட்ட வலிமையின் அடிப்படையில் அந்நிறுவனத்தின் பங்குகளை வாங்குவது அல்லது விற்பது போன்ற நடவடிக்கைகளைப் பரிந்துரைச் செய்கிறார். ஒரு நிதியியல் பகுப்பாய்வாளரின் வேலை நிறுவனங்களைப் பற்றிய விரிவான ஆராய்ச்சியில் ஈடுபடுவதாகும். சில குறிப்பிட்ட முதலீடுகள் அபாயங்களை எதிர்கொள்ளும் அளவிற்கு மதிப்புடையவைதானா என்று சரிபார்க்க வேண்டியது இந்தத் தொழிலில் அவசியமாகும்.

5. நிதியியல் எழுத்தாளர்.

ஒரு நிதியியல் எழுத்தாளரின் வேலை வீட்டிலிருந்து செய்வதற்கு மிகவும் எளிதானதாகும். எழுதப்பட்ட பொருள் மின்னஞ்சல் மற்றும் வலைசேவையகங்கள் மூலமாக மின்னணு முறையில் வழங்கப்படும். நிதியியல் மற்றும் எழுதும் திறன் ஆகியவற்றில் நிபுணர்களான தனிநபர்கள் இந்த நிதியியல் எழுத்தாளர் பணியைத் தொழிற்முறையில் மேற்கொள்வதைக் கருத்தில் கொள்ளலாம். நிறைய நிறுவனங்களில் பெரும்பாலான நிதியியல் எழுத்தாளர்கள் வீட்டிலிருந்தபடியே வேலைச் செய்கிறார்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Five Financial Jobs To Make Money From Home

Five Financial Jobs To Make Money From Home
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns