ஆதார் கார்டை தொலைத்து விட்டீர்களா? பீதியடைய வேண்டாம்: ஆன்லைனில் டூப்ளிகேட் ஆதார் பெற எளிய வழி..!

Written By:
Subscribe to GoodReturns Tamil

சென்னை: தற்போது அரசாங்கத்தின் பெரும்பாலான சலுகைகளைப் பெற ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஒருவேளை உங்கள் ஆதாரை நீங்கள் தொலைத்து விட்டால் என்ன செய்ய வேண்டும்? அத்தகைய சூழ்நிலையில் மக்கள் பீதியடையத் தொடங்குகிறார்கள்.

ஆதாரின் அசல் ஒருவேளை தொலைந்து விட்டாலோ அல்லது தவறுதலாக எங்காவது வைத்து விட்டாலோ ஆதார் அட்டையின் நகலை பதிவிறக்கம் செய்துக் கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

உங்கள் ஆதார் அட்டை தொலைந்து விட்டாலோ அல்லது தவறுதலாக எங்காவது வைத்து விட்டாலோ ஆதார் அட்டையின் நகல் பிரதி ஒன்றை இணையத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

அதற்கு தேவையானவை எல்லாம் என்ன?

இணைய இணைப்பு, மொபைல் எண் அல்லது மின்னஞ்சல் முகவரி:

நீங்கள் இழந்த ஆதார்/பதிவு ஐடி யை ஆன்லைனில் மீட்டெடுக்க உங்கள் மொபைல் எண் அல்லது மின்னஞ்சல் முகவரி தேவைப்படும்.

இது அத்தியாவசியமானது ஏனென்றால், ஆதாரை மீட்டெடுக்கப் பயன்படும் ‘ஓடிபி' (ஒரு முறை கடவுச் சொல்) ஐ விண்ணப்பதாரர் இதில் பெறுவார்.

 

ஆன்லைனில் ஆதார் அட்டை நகலின் பிரதியைப் பெறுவது எப்படி?

ஆன்லைனில் ஆதார் அட்டை நகலின் ஒரு பிரதியைப் பெற பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றுங்கள்.

https://resident.uidai.gov.in/find-uid-eid என்கிற இந்த இணைப்பிற்குள் சென்று உள் நுழையுங்கள். முகப்புப் பக்கத்திலேயே உங்கள் தொலைந்த ஈஐடி/யுஐடி ஐ மீட்டெடுப்பதற்கான தேர்வைக் காணலாம். உங்கள் விருப்பத் தேர்வின் படி ஆதார் எண் (யுஐடி) அல்லது பதிவு எண் (ஈஐடி) ஐ தேர்ந்தெடுக்கவும்.

உங்கள் முழுப்பெயர், மின்னஞ்சல் முகவரி மற்றும் உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை உள்ளிடவும். அங்கு காட்சிப்படுத்தப்படும் ரகசிய எண்களை உள்ளிட்டு ‘ஓடிபி' ஐ பெறுங்கள் என்கிற பொத்தானை அழுத்துங்கள்.

 

ஓடிபி

ஒரு முறை கடவுச்சொல் (ஓடிபி) உங்கள் மொபைல் அல்லது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பபடும். பெட்டியில் ஓடிபி ஐ உள்ளிட்டு "ஓடிபி ஐ சரிபார்க்கவும்" என்கிற பொத்தானை கிளிக் செய்யவும்.

இதன்பிறகு, விண்ணப்பதாரர் அவருடைய மொபைலில் ஆதார் அட்டை எண் அல்லது பதிவு அடையாளத்துடன் ஒரு குறுஞ்செய்தியைப் பெறுவார்.

 

அடுத்த கட்டம்

https://eaadhaar.uidai.gov.in/ என்கிற இந்த இணைப்பிற்கு வருகை தந்து, "ஐ ஹேவ்" என்கிற தலைப்பின் கீழ் "பதிவு எண்" அல்லது "ஆதார் எண்" என்பவற்றில் பொருத்தமான தேர்வை தேர்வு செய்யவும்.

முக்கிய தகவல்கள்

பிறகு உங்கள் ஆதார் எண் அல்லது பதிவு எண்ணை உள்ளிடவும்.

உங்கள் முழுப்பெயர், அஞ்சல் குறியீடு, பாதுகாப்பு எழுத்துக்கள், மொபைல் எண் ஆகியவற்றைக் கொடுத்து பிறகு "ஓடிபி ஐ பெறுங்கள்" என்கிற தேர்வை சொடுக்கவும். ஒரு முறைக் கடவுச் சொல் உங்கள் மொபைலுக்கு அல்லது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்.

உங்கள் மொபைல் எண்ணுக்கு சற்று முன் அனுப்பப்பட்ட ஓடிபி ஐ "ஓடிபி ஐ உள்ளிடுக" என்கிற பாக்சிற்குள் உள்ளிட்டு பிறகு "மதிப்பிடுக மற்றும் பதிவிறக்கம் செய்க" என்கிற தேர்வை க்ளிக் செய்யவும்.

 

பாஸ்வேர்ட்

அங்குள்ள பிடிஎஃப் கோப்பு கடவுச் சொல்லால் பாதுகாக்கப்பட்டுள்ளது. உங்கள் ஆதார் அட்டையை உள்ளடக்கிய பிடிஎஃப் கோப்பின் கடவுச் சொல், உங்கள் வீட்டு முகவரியின் அஞசல் குறியீடாகும்.

ஈ – ஆதார்

பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இந்த ஆதார் அட்டையின் நகல் அசல் ஆதாருக்கு சமமாக உதவிகரமாக இருக்கிறது. ஈ - ஆதார் என்பது நகல் ஆதாரின் பிரதியாகும். அச்சிடப்பட்ட ஈ - ஆதார் உங்கள் ஆதார் எண்ணை உறுதி செய்யப் பயன்படுத்தப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Lost Aadhaar? Don't Panic: How To Get A Duplicate Aadhaar Online?

Lost Aadhaar? Don't Panic: How To Get A Duplicate Aadhaar Online?
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns