உங்கள் அலுவலக கணினியில் நீங்கள் கண்டிப்பாகச் செய்யக்கூடாத 6 தவறுகள்..!

Written By: Tamilarasu
Subscribe to GoodReturns Tamil

இணையதளத்தினைப் பயன்படுத்தும் போது அனைவருக்கும் சில வித்தியாசமான பழக்கம் இருக்கும். அப்படி இருக்கும்பட்சத்தில் அவற்றில் சிலவற்றை உங்கள் அலுவலகக் கணினியில் செய்யாமல், பார்க்காமல் தவிர்ப்பது நல்லது.

உங்கள் அலுவலகக் கணினியில் நீங்கள் பணி புரியும் போது நிறுவனத்தினால் நீங்கள் பயன்படுத்தும் கணினியை டிராக் செய்ய முடியும், அதனை வைத்து நீங்கள் என்னவெல்லாம் செய்கின்றீர்கள் என்பதை அவர்கள் பார்க்க வாய்ப்புண்டு. உலாவியின் வராலற்று எனப்படும் ஹிஸ்டரியை நீக்கினாலும் பார்க்க முடியும். எனவே மன்னிப்பு கேட்கும் முன்பு அவற்றைச் செய்யாமல் இருப்பது நல்லது.

எனவே இங்கு அலுவலகக் கணினியில் என்னவெல்லாம் பார்க்க கூடாது என்பதை இங்குப் பார்ப்போம்.

ஆபாசப் படங்கள் அல்லது பிற பொருத்தமற்ற இணையதளங்கள்

இது தான் இந்தப் பட்டியலில் முக்கியமான ஒன்று. ஆபாச இணையதளங்களை உங்கள் கணினியில் தேடக் கூடாது, பார்க்கவும் கூடாது. அப்படிச் செய்பவர்களாக நீங்கள் இருந்தால் அதனை முதலில் நிறுத்த வேண்டும். இல்லை என்றால் நிறுவனத்தினை விட்டுப் பணியில் இருந்து நீக்கப்படுவீர்கள்.

இரண்டாம் வேலை

ஒரு நிறுவனத்தில் வேலை செய்துகொண்டே சிலர் பிற நிறுவனங்களுக்கு ப்ரீலான்சர் போன்ற பணிகளைச் செய்வார்கள். அப்படிச் செய்யும்பட்சத்தில் அது சமந்தமான தகவல்களை அலுவலகக் கணினியில் பார்ப்பதைத் தவிர்க வேண்டும்.

டேட்டிங் வலைத்தளங்கள்

அலுவலகக் கணினியில் டேட்டிங் வலைத்தளங்களைப் பார்க்க கூடாது. இதனை வேலை செய்யும் இடத்திற்குச் சமந்தமான பணி கிடையாது. ஒருவேலை நீங்கள் டேட்டிங் வலைத்தளங்களைப் பார்ப்பது நிறுவனத்தால் கண்டறியப்பட்டால் நீங்கள் யாருடன் டேட்டிங் செய்கின்றீர்கள் என்பது அவர்களுக்குத் தெரிந்துவிடும்.

டோரன்ட் அல்லது ஸ்டீரிமிங் தளங்கள்

டோரண்ட் தளங்களில் இருந்து உங்களுக்குத் தேவையான சட்ட விரோதமான மென்பொருள்களைப் பதிவிறக்கம் செய்தல் மற்றும் படங்களைப் பதிவிறக்கம் செய்தல் போன்றவற்றுக்கு நிறுவனத்தின் இணையதளத்தினைப் பயன்படுத்தக் கூடாது.

5 முதல் 15 நிமிடங்கள் வரையிலான கோப்புகளைப் பதிவிறக்கம் செய்யும் போது சிக்கல் இல்லை, இதுவே மணிக் கணக்கில் பதிவிறக்கம் செய்ய வேண்டிய கோப்புகள் என்றால் முன்பே உங்களது தலைமை அதிகாரிக்கு அறிவித்துவிட்டுச் செய்வது நல்லது.

 

கன்ஃபெஸ் தளங்களைத் தவிர்க்கவும்

கன்ஃபெஸ் போன்ற தளங்கள் சென்று உங்கள் நிறுவனத்தினைப் பற்றிய தவறான கருத்துகளைப் பதிவேற்றம் செய்தால் அதன் மூலமும் நீங்கள் பாதிக்கப்படலா. பொதுவாக நிறுவனங்கள் இதைப் பற்றி எல்லாம் ஆராய்ந்து பார்க்காது என்றாலும் தற்செயலாகப் பார்க்க நேரினால் உங்களை வேலைக்குச் சிக்கலை ஏற்படுத்தும்.

சொந்த காரியங்களுக்குப் பயன்படுத்துதல்

இணையதளத்தினைப் பயன்படுத்தும் போது சொந்தக் காரியங்களுக்காக அதிகம் பயன்படுத்துவதைத் தவிர்க வேண்டும். வெளியூர் செல்ல ஏதேனும் நீங்கள் திட்டமிட்டு இருந்தால் அதனை உங்கள் மேல் அதிகாரி அரியக்கூடும். எனவே இதுபோன்ற காரியங்களை அலுவலகக் கணினிகளில் செய்வதைத் தவிர்ப்பது நல்லது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Things which are all not to do in your office computer

Things which are all not to do in your office computer
Story first published: Wednesday, August 2, 2017, 9:19 [IST]
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns