யாரெல்லாம் ஆதாருக்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள் என்று தெரியுமா?

Written By: Tamilarasu
Subscribe to GoodReturns Tamil

நீங்கள் ஆதாருக்கு விண்ணப்பிக்கும் முன் அதற்குத் தகுதியுடையவரா அல்லது இல்லை என்பது முக்கியமானது. ஏனென்றால் உங்கள் வரி வருவாயைத் தாக்கல் செய்வதற்கும் பான் கார்டுக்கு விண்ணப்பிக்கவும் மற்றும் சட்டத்தால் கட்டாயமாக்கப்பட்ட பல பணப் பரிமாற்றங்களுக்கும் நீங்கள் ஆதார் அட்டையை மேற்கோள் காட்ட வேண்டுமா இல்லையா என்பதை இது தீர்மானிக்கிறது.

அடிப்படையில் ஆதார் சட்டத்தின் படி நீங்கள் ஒரு இந்திய குடியுரிமை கொண்டவராக இருந்தால் மட்டுமே ஆதாரை கட்டாயமாக மேற்கோள் காட்டி பான் கார்டுடன் இணைப்பது தொடர்பான சட்டங்கள் உங்களுக்குப் பொருந்தும்.

குழப்பம்

கடந்த பட்ஜெட்டில் செய்யப்பட்ட சீர்திருத்தங்கள் நிதி சார்ந்த வாழ்க்கையில் எந்த ஒரு கஷ்டத்தையும் ஏற்படுத்தாததால் ஆதாரைப் பெறுவதற்குத் தகுதியுடையவர் யார் என்பது தொடர்பாக மக்களிடையே ஏராளமான குழப்பம் ஏற்படுகிறது.

வருமான வரிக்குத் தாக்க

இந்த வருடம் பிப்ரவரி மாதம் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவு திட்டத்தில் வருமான வரிச் சட்டத்தில் சட்டப்பிரிவு 139 ஏஏ வில் சீர்திருத்தங்கள் செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியான விளைவாக, ஜூலை 1, 2017 முதல் உங்கள் வருமான வரியை தாக்கல் செய்யும் போதும் மற்றும் பான் கார்டுக்கு விண்ணப்பிக்கும் போதும் உங்கள் ஆதார் எண் அல்லது ஆதார் பதிவு அடையாளத்தை (ஒரு வேளை நீங்கள் ஆதாருக்கு விண்ணப்பித்திருந்து இன்னமும் அதைப் பெறவில்லையென்றால்) சான்றாகக் காட்ட வேண்டியது கட்டாயமாக்கப்படுகின்றது. மேலும் உங்கள் ஆதாரை நீங்கள் வருமான வரிக்குத் தாக்கல் செய்யவில்லை என்றாலும் கூட உங்களிடம் ஏற்கனவே இருக்கும் பான் கார்டுடன் இணைக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ஆதாருக்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள் யார் என்று கேள்வி எழுகிறது?

வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் (என்ஆர்ஐ) அல்லது இந்தியாவில் வசிக்கும் வெளிநாட்டுக்காரர்கள் கூட ஆதாருக்கு விண்ணப்பிக்கத் தகுதியுடைவர்களா?

இந்த 2016 ஆதார் சட்டம், ஒவ்வொரு குடிமகனுக்கும் அவருடைய மக்கள் தொகைச் சார்ந்த தகவல்கள் மற்றும் உயிரியல் அளவீட்டுத் தகவல்களைச் சமர்ப்பித்து ஆதார் பதிவு சேர்க்கை செயல் முறையில் பங்கேற்பதன் மூலம் ஒரு ஆதார் எண்ணைப் பெறுவதற்கான உரிமை உள்ளது.

 

 

என்ஆர்ஐ

நீங்கள் ஒரு என்ஆர்ஐ யா அல்லது ஒரு வெளிநாட்டுக்காரரா என்பது முக்கியமல்ல. 182 நாட்களுக்கு மேல் நீங்கள் இந்தியாவில் தங்கியிருந்தீர்கள் என்றால் நீங்கள் ஆதாருக்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள் என்கிறார் சின்ஹா.

இருந்தாலும் இந்தியாவில் தங்குவதற்குத் தேவைப்படும் குறைந்த பட்ச நாட்களைக் கணக்கிடும் போது வருகை தந்த தேதி அல்லது நாட்டைவிட்டுப் புறப்பட்ட தேதி மற்றும் அரை நாள் போன்றவற்றைக் கருத்தில் கொள்ளலாமா வேண்டாமா என்பதை இந்தச் சட்டம் குறிப்பிடவில்லை.

 

குழப்பிக் கொள்ளக் கூடாது

மேலே கூறப்பட்டுள்ள ஆதார் குடியிருப்பு விளக்கங்களை வருமான வரிச் சட்டத்தில் குறிப்பிடப்பற்றுள்ளவற்றுடன் ஒருவர் குழப்பிக் கொள்ளக் கூடாது. வருமான வரிச் சட்டம் ஒரு தனி நபரை ஒரு நிதியாண்டில் (ஏப்ரல் 1 முதல் மார்ச் 31 வரை) 182 நாட்களுக்கு மேல் இந்தியாவில் தங்கியிருந்தால் அவரை இந்தியக் குடியுரிமைப் பெற்றவர் என்று வரையறுக்கிறது. மற்றொரு புறம் ஆதார் சட்டத்தின் கீழ் ஒரு வருடத்தை வரையறுக்கும் குறிப்பிட்ட தேதிகள் எதுவுமில்லை.

குடியுரிமை

நீங்கள் ஆதார் கார்டை வைத்திருந்தாலோ அல்லது அதற்கு விண்ணப்பித்திருந்தாலோ நீங்கள் இந்தியக் குடியுரிமையைப் பெற்றிருப்பதாக அர்த்தமில்லை என்று ஆதார் சட்டம் தெளிவுபடுத்துகிறது.

தகவல்களான முகவரி

ஆதார் என்பது ஒரு தனி நபரிடம் மக்கள் தொகை சார்ந்த தகவல்களான முகவரி, பிறந்த தேதி போன்றவற்றையும் மற்றும் உயிரியல் அளவீட்டு தகவல்களான கருவிழிப்படல ஸ்கேன், கைவிரல் ரேகைகள் போன்றவற்றையும் பெற்ற பிறகு வழங்கப்படும் ஒரு 12 இலக்க அடையாள எண்ணாகும்.

இது அந்த நபருடைய தனிப்பட்ட தகவல்களுடன் எந்தவித தொடர்புமற்ற ஒரு சிறந்த எண் வரிசையாகும்

 

ஆதார் எண்

ஆதார் எண் மெதுவாகப் பல விஷயங்களுக்காகக் கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. எடுத்துக்காட்டாக, ரூ 50,000 மேற்பட்ட பணப் பரிமாற்றங்களைச் செய்யும் போது, அரசாங்கத்தில் சமூகப் பாதுகாப்பு மற்றும் மானியத் திட்டங்களின் கீழ் நன்மைகளைப் பெறுவதற்கும் மற்றும் பல தருணங்களிலும் தேவைப்படுகிறது.

ஆதாரை சான்றாகக் காட்ட வேண்டும்

வருமான வரிச் சட்டத்தின் 139 ஏஏ பிரிவு ஆதார் எண்ணை பெறுவதற்குத் தகுதியுடைய ஒவ்வொரு நபரும் வருமான வரி தாக்கல் செய்யும் போது ஆதாரை சான்றாகக் காட்ட வேண்டும் என்று குறிப்பிடுகிறது. மேலும் அது பான் கார்டு வைத்திருக்கும் மற்றும் ஆதாரைப் பெற தகுதியுள்ள அல்லது ஏற்கனவே ஒரு ஆதாரை வைத்திருக்கும் ஒவ்வொரு நபரும், பான் கார்டு அரசாங்கத்தால் செல்லாதது என்று அறிவிக்கப்படுவதைத் தவிர்க்க, ஆதார் மற்றும் பான் கார்டு இரண்டையும் இணைக்க வேண்டும் என்று வரையறுக்கிறது.

சில விதி விலக்குகள்

இருந்தாலும், மத்திய நேரடி வரி விதிப்பு குழு (சிபிடிடி) மே 11, 2017 தேதியிடப்பட்ட அறிக்கையில் ஆதார் வைத்திருக்காத மற்றும் இதுவரை அதற்கு விண்ணப்பிக்காத தனி நபர்களில் சில குறிப்பிட்ட பிரிவினருக்கு
சில விதி விலக்குகளை வழங்கியுள்ளது. அவை:

(i) வரி விதிப்பு சட்டப்படி வெளிநாட்டில் வசிக்கும் இந்திய குடிமக்கள்
(ii) இந்திய குடிமகன்கள் அல்லாதவர்கள்
(iii) வரிவிதிப்பு ஆண்டின் போது 80 அல்லது மேற்பட்ட ஆண்டுகள் வயதுடையவர்கள்
(iv) அஸ்ஸாம், மேகலாயா மற்றும் ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலங்களில் குடியிருப்போர்

 

இந்திய குடியுரிமை இல்லை என்றால்

ஆதார் சட்டத்தின் படி, ஒரு தனிநபர், அவர் / அவள் இந்திய குடியுரிமை பெற்றவராக இல்லாவிட்டால், 139 ஏஏ சட்டப் பிரிவின் கீழ் அவர் ஆதிக்க வரம்பில் கண்காணிக்கப்படமாட்டார்.

ஆதார் எண்ணை குறிப்பிட வேண்டியது அவசியம்

உங்கள் குடியுரிமை நிலை ஒரு குறிப்பிட்ட வரிவிதிப்பு ஆண்டில் என்ஆர்ஐ யிலிருந்து இந்தியக் குடியுரிமைப் பெற்றவராக மாறுகிறது என்று வைத்துக் கொண்டால், அப்போது நீங்கள் வருமான வரியை தாக்கல் செய்ய ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டியது அவசியமாகும்.

உச்ச நீதிமன்ற ஆணை

பான் மற்றும் ஆதார் இணைப்பு தொடர்பான உச்ச நீதிமன்ற ஆணை, பான் கார்டு மட்டும் வைத்திருப்பவர்கள் ஆனால் ஆதார் இல்லாதவர்களுக்கு மட்டும் நிவாரணமளிக்கிறது.

பான் கார்டை ஆதாருடன் இணைப்பு

இருந்தாலும், நீங்கள் ஜூலை 1, 2017 க்கு பிறகு வருமான வரி விலக்கிற்குத் தாக்கல் செய்வதாக இருந்தால், நீங்கள் ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டியது தேவையாகும். (மேலே குறிப்பிட்டுள்ளதைப் போல விதிவிலக்குப் பெற்றவர்களைத் தவிர்த்து) இதனால் தவிர்க்க முடியாதபடி, உங்கள் பான் கார்டை ஆதாருடன் இணைக்க வேண்டியது அவசியமாகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Who are eligible to apply for Aadhaar? Find out

Who are eligible to apply for Aadhaar? Find out
Story first published: Saturday, August 12, 2017, 16:50 [IST]
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns