பிபிஎப் பணத்தை திரும்ப பெறுவது மற்றும் அதன் மூலம் கடன் பெறுவது எப்படி?

Written By: Tamilarasu
Subscribe to GoodReturns Tamil

ஒரு நிதியாண்டில் பிபிஎஃப் கணக்கில் முதலீடு செய்ய வேண்டிய குறைந்தபட்ச வைப்புத் தொகை ரூ.500 ஆகும். வட்டி விகிதங்கள் வீழ்ச்சியடைந்த போதிலும் பிபிஎஃப் அல்லது பொது வைப்பு நிதிகள் பிரசித்தி பெற்ற சேமிப்புத் திட்டங்களில் ஒன்றாக இருக்கிறது. பிபிஎஃப் மற்றும் இதர சிறு சேமிப்புத் திட்டங்களின் வட்டி விகிதங்கள் முன்பு இருந்த வருடாந்திர முறையோடு ஒப்பிடும் போது கடந்த வருடம் ஏப்ரல் மாதத்திலிருந்து ஒவ்வொரு காலாண்டிலும் மாற்றியமைக்கப்படுகிறது.

பிபிஎஃப் இல் முதலீடு செய்துள்ள முதலீட்டாளர்கள் 7.8 சதவிகிதம் வட்டி விகிதத்தைப் பெற்று வருகிறார்கள். பிபிஎஃப் மற்றும் இதர சிறு சேமிப்புத் திட்டங்கள் அரசாங்கப் பத்திரங்களில் நிர்ணயிக்கப்பட்ட அளவில் வருமானத்தைத் தரும் திறன் கொண்டிருக்கும். வரித் தாக்கல்களைப் பொறுத்தவரை பிபிஎஃப் ஈஈஈ அல்லது வரிவிலக்கு தகுதியை பெறுகிறது - பங்களிப்பு, வட்டி மற்றும் முதிர்வு காலம் அனைத்தும் வரிகளற்றது.

நபருக்கு ஒரு பிபிஎப் கணக்கு

சிறுவர்களின் சார்பில் தொடங்கப்படும் கணக்காக இருந்தால் தவிர, ஒரு தனிநபரால் ஒரே ஒரு பிபிஎஃப் கணக்கை மட்டுமே பராமரிக்க முடியும். கூட்டுக் கணக்குகளைத் திறக்க முடியாது.

யாரால் கணக்கு துவங்க முடியும்?

ஒரு சந்தாதார் சிறுவரின் சார்பாகக் கணக்கைத் திறக்க முடியும். ஆனால் அனைத்துக் கணக்குகளிலும் அதிகபட்ச வருடாந்திர பங்களிப்பு வரம்பு 1.5 இலட்சமாக இருக்க வேண்டும்.

குறைந்தபட்ச தொகை

இந்தியத் தபால் துறை வலைத்தளத்தில் தெரிக்கப்பட்டுள்ள படி, ஒரு பிபிஎஃப் கணக்கைத் தொடங்க குறைந்தபட்சமாகக் கணக்கில் ரூ. 100 இருக்க வேண்டும்.

குறைந்தபட்ச முதலீடு

ஒரு நிதியாண்டில் பிபிஎஃப் கணக்கில் இருக்க வேண்டிய குறைந்தபட்ச வைப்புத் தொகை ரூ. 500 மற்றும் அதிகபட்சத் தொகை ரூ. 1.5 இலட்சமாகும். ஒரு நிதியாண்டில் வாடிக்கையாளர் வைப்பு நிதியைச் செலுத்தத் தவறினால் ரூ. 50 அபராதமாக விதிக்கப்படும். ஒரு நிதியாண்டில் பிபிஎஃப் வைப்புத் தொகைகள் அதிகபட்சமாக 12 பரிவர்த்தனைகள் வரை செய்யப்படலாம்.

முதிர்வுக் காலம்

பிபிஎஃப் கணக்கின் முதிர்வு காலம் 15 ஆண்டுகள் ஆகும். ஆனால் முதிர்வடைந்த ஒரு வருட காலத்திற்குள் மேற்கொண்டு 5 வருடங்கள் அல்லது அதற்கு மேலும் நீட்டிக்கப்படலாம். இந்தக் கணக்கு ஒரு அங்கீகரிக்கப்பட்ட வங்கி அல்லது தபால் அலுவலகத்திலிருந்து மற்றொன்றிற்கு மாற்றப்படலாம். அத்தகைய வழக்கில் பிபிஎஃப் கணக்கு ஒரு தொடர்ச்சியான கணக்காகக் கருதப்படும்.

அபராதம்

பிபிஎஃப் சந்தாதாரர்கள் ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சத் தொகையான ரூ. 500 ஐ செலுத்தத் தவறினால், அந்தக் கணக்கு நிறுத்தப்பட்டதாகக் கருதப்படும். அத்தகைய சந்தர்ப்பங்களில் கணக்கு புதுப்பிக்கப்பட்டாலன்றிச் சந்தாதாரர் கடன் பெறவோ அல்லது ஒரு பகுதியாகப் பணத்தை வெளியெடுக்கவும் அதிகாரம் பெறமாட்டார். சந்தாதாரர் நிறுத்தப்பட்ட கணக்குடன் கூடுதலாக மற்றொரு கணக்கைத் திறக்க முடியாது.

இடையில் நிறுத்திய பிறகு முதலீட்டை மீண்டும் துவங்க வேண்டுமா?

ஒரு பிபிஎஃப் சந்தாதாரர் நிறுத்தப்பட்ட கணக்கை புதுப்பிக்க ஒவ்வொரு வருடமும் நிலுவை சந்தாத் தொகை ரூ. 500 உடன் சேர்த்து ஒவ்வொரு வருடத்திற்கும் ரூ. 50 ஐ அபராதமாகச் செலுத்தி கணக்கைப் புதுப்பித்துக் கொள்ளலாம்.

கடன் எப்போது பெற முடியும்?

ஒரு பிபிஎஃப் வைப்புதாரர் கணக்கு தொடங்கிய 3 வது ஆண்டிலிருந்து கடன் பெறுவதற்குத் தகுதியுடையவராகிறார். நிலுவைத் தொகையில் 25% முதல் நிதியாண்டின் இறுதியில் கிடைக்கப்பெறும். பிபிஎஃப் வட்டி விகிதத்திற்கு மேல் கடன் மீதான வட்டி விகிதம் ஆண்டுக்கு 2 சசதவிகிதமாக இருக்கலாம். கடன் 36 மாதங்களில் திருப்பிச் செலுத்தப்படும்.

பகுதி பணத்தைத் திரும்பப் பெறுதல்

இந்தியத் தபால் துறையின் வலைத்தளத்திலுள்ள படி, கணக்குத் தொடங்கப்பட்ட 7 வது வருடத்திலிருந்து ஒவ்வொரு வருடமும் பகுதியாகப் பணத்தைத் திரும்பப் பெற்றுக்கொள்ள அனுமதிக்கப்படும். நான்காம் ஆண்டின் இறுதியில் அதாவது பணத்தைத் திரும்பப் பெற்ற ஆண்டின் உடனடி முந்தைய ஆண்டு அல்லது முந்தைய ஆண்டின் இறுதியில் உள்ள தொகை எது குறைவாக இருக்கிறதோ அந்த நிலுவைத் தொகையில் 50 சதவிகிதம் மட்டுமே அதிகபட்சத் தொகையாக வரையறுக்கப்பட்டுள்ளது.

முதிர்வுக்கும் முன் பணம் எடுக்கும் முறை

2016 ஆம் ஆண்டுத் திருத்தத்தின் படி கணக்கு ஐந்து நிதியாண்டுகளை நிறைவு செய்து மற்றும் மருத்துவச் சிகிச்சை போன்றவற்றை நோக்கிய சில குறிப்பிட்ட சூழ்நிலைகளின் கீழ் மட்டுமே முதிர்வடைவற்கு முன் முன்கூட்டி மூட அனுமதிக்கப்படும். "ஒரு சந்தாதாரர் அவருடைய கணக்கு அல்லது அவர் பாதுகாப்பாளராக இருக்கும் சிறுவரின் கணக்கையோ அந்தத் கணக்கு வைத்திருப்பவரின், அல்லது வாழ்க்கை துணைவரின் அல்லது குழந்தையின் தீவிர நோய்கள் அல்லது உயிருக்கு ஆபத்தான நோய்களின் சிகிச்சை செலவுகளுக்கு அந்தத் தொகைத் தேவைப்படும் என்கிற அடிப்படையில் தகுதியுடைய மருத்துவ அதிகாரியிடமிருந்து ஆதரவான ஆவணங்கள் வழங்கப்பட்டால் மட்டுமே கணக்கு முதிர்வடைவதற்கு முன் முன்கூட்டி மூட அனுமதிக்கப்படும்." என்று நிதி அமைச்சகம் ஒரு அறிவிப்பில் தெரிவித்துள்ளது. (நிறுவன உள்ளீடுகளுடன்)

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

How to get PPF money back and get loan through it?

How to get PPF money back and get loan through it?
Story first published: Tuesday, September 12, 2017, 10:50 [IST]
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns