எந்த வயதில் எப்படி வேலையை தேட வேண்டும்?

By Bala Latha
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வயது ஏறும் போது வேலைத் தேடல் கடினமாகிறது. 'நோ கன்ட்ரி ஃபார் ஓல்ட் மென்' எனப்படும் முதியவர்களுக்கு என்ற நாடு இல்லை என்ற திரைப்படத்தில் வருவதைப் போல உலகம் மாறுகின்றது என்பதை நீங்கள் நம்பினால் அதற்காக உங்களைக் குறை சொல்ல முடியாது.

பணியிலமர்த்தல் இளைய சமுதாயத்தினரை குறிப்பாக 35 வயதிற்குக் குறைவானவர்களை நோக்கிச் சாய்வது போலத் தோன்றுகிறது.

இளைஞர்களின் பக்கம் ஆதரவு
 

இளைஞர்களின் பக்கம் ஆதரவு

இந்தியாவில் வேலைக்கு ஆட்களை நியமிக்கும் பெரும்பாலான மேலாளர்கள் இளைஞர்களின் பக்கம் ஆதரவாக இருக்கிறார்கள், ஏனென்றால், சரியோ அல்லது தவறோ இளைஞர்கள் மிக அதிக அளவில் மலிவான் சம்பளத்திற்குக் கிடைக்கப்பெறுகிறார்கள், மேலும் அவர்கள் அதிக ஆற்றலுடன் இருக்கிறார்கள் மேலும் குறைந்த ஆர்வமுள்ள பாத்திரங்களில் கூட நீண்ட நேரம் பணியாற்ற தயாராக இருப்பார்கள் என்று நம்புகிறார்கள். இறுதியாக, தொடர்ந்து மாறிக் கொண்டிருக்கும் தொழில்நுட்ப வியாபாரச் சூழலில் அனுபவத்திற்கு விலை மதிப்பு இல்லை.

இதைத் தெரிந்து கொண்டு, வெவ்வேறு வயதுகளில் சிறந்த விளைவுகளைப் பெற உங்கள் வேலைத் தேடும் யுத்திகளை எப்படி மேம்படுத்தலாம் என்பதைப் பற்றி இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

உங்கள் 20 வயதுகளில் வேலைத் தேடல்

உங்கள் 20 வயதுகளில் வேலைத் தேடல்

வேலைச் சந்தை இளைஞர்களுக்கு ஆதரவளிப்பதாக இருந்தால், நீங்கள் ஏன் இன்னமும் போராடிக் கொண்டிருக்கிறீர்கள்? உங்கள் 20 வயதுகளில் மிகப் பெரிய சவால் என்னவென்றால் உங்களிடம் ஒரு காலியான தனிப்பட்ட கல்வித்தகுதிக் குறிப்புகள் இருந்தாலும் ஒரு சிறந்த வாய்ப்பைக் கண்டறிவதே ஆகும். இரகசியம் என்னவென்றால், நீங்கள் பள்ளி மற்றும் கல்லூரியில் படிக்கும் போதே சீக்கிரமாக வேலை பார்க்கத் தொடங்கி விடுவது தான். உள்ளிருப்புப் பயிற்சிகளில் பங்கு கொள்ளுங்கள், உறவினர்கள் மற்றும் நண்பரிகளின் வியாபாரங்களில் வேலை பாருங்கள், நிகழ்ச்சிகள், என்ஜிஓ செயல்திட்டங்கள் தன்னார்வலர்களாக வேலை செய்யுங்கள் அல்லது தொழில்முனைவோரிடம் கூடச் சிறு வேலைகளைப் பாருங்கள்,

அந்தப் பேருந்தை நீங்கள் தவற விட்டிருந்தாலும் பட்டப்படிப்பை முடித்த பிறகு வேலையைத் தொடங்க ஒன்றும் அதிகத் தாமதமாகிவிடவில்லை. தொடக்கத்திலேயே சிறந்த ஒரு வேலையைப் பெறுவதைப் பற்றி அதிகமாகக் கவலைப்பட வேண்டாம். 5 வருடங்களுக்குப் பல்வேறு விதமான அனுபவங்களைப் பெறுவதில் கவனத்தைச் செலுத்துங்கள். அதிக அபாயங்களை எடுங்கள், உங்கள் வீட்டிலிருந்து, நகரத்திலிருந்து, அல்லது நாட்டிலிருந்து வெளியே பயணம் செய்யுங்கள் மேலும் கற்றுக் கொள்ளும் வாய்ப்புகளுக்கும் மற்றும் வழிகாட்டுதல்களுக்கு முன்னுரிமை கொடுங்கள்

வேலைத் தேடத் துவங்கும் முன், உங்களுக்கு இருக்கிறது என்று நீங்கள் நம்பும் திறன்களை, நீங்கள் நேசிக்கும் செயல்களை, நீங்கள் வேலை செய்ய விரும்பும் நிறுவனங்களை எழுதி வைத்துக் கொள்ளுங்கள். அதன்படி, ஒரு உங்கள் சமூக இணைய மற்றும் தொழில்முறை சுயவிவரக் குறிப்பைச் சுத்தமான தொழிற்முறை சார்ந்த புகைப்படங்களுடன் மற்றும் பிழைகளில்லாத நிலையான வடிவத்தில் ஒரு சுயவிவரக் குறிப்பை தயாராக வைத்துக் கொள்ளுங்கள்.

தொழில்முறையில் உடை அணிந்து கொள்ளுங்கள் மேலும் 30 - நிமிட நேர்காணல் அத்துடன் 30 - விநாடிகளில் உயரத்தை அடைவதற்கும் பயிற்சி செய்யுங்கள். உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களைச் சந்திப்பதன் மூலம் மற்றும் இணையத்திலும் கல்லூரி வளாகத்திலும் வேலை வாய்ப்புகளுக்கு விண்ணப்பிப்பதன் மூலமும் நேர்காணல்களுக்கான வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்ளுங்கள், அவர்களுடைய தொடர்புகள் உங்களை வலுப்படுத்தக்கூடியதாக அமையலாம்.

உங்கள் 30 வயதுகளில் வேலைத் தேடல்
 

உங்கள் 30 வயதுகளில் வேலைத் தேடல்

இதில் ரகசியம் என்னவென்றால், நீங்கள் தற்போதைய வேலை தேடலை திட்டமிடவில்லை ஆனால் அதற்குப் பிறகான ஒன்றைத் திட்டமிடுகிறீர்கள். நீங்கள் வெவ்வேறு விஷயங்களை முயற்சித்து விட்டீர்கள், கட்டு கட்டான திறமைகளைப் பெற்றுவிட்டீர்கள், மேலும் உங்கள் சுயவிவரக் குறிப்பில் சில வரிகளையும் பெற்றிருக்கிறீர்கள். இப்போது, அடுத்தப் பத்து வருடங்களுக்கு அதிகபட்ச வருமானம் ஈட்ட உங்களை நன்கு நிலைநிறுத்திக் கொள்வதற்கு நீங்கள் உங்கள் தொழில்வாழ்க்கைக்கு எப்படி வழிகாட்ட வேண்டும் என்பதைக் கண்டுபிடியுங்கள்.

நீங்கள் தனிப்பட்ட மற்றும் தொழில்முறை நிலைப்புத்தன்மையைத் தேடும் போது, இன்னமும் நீங்கள் ஒரு வேலையைக் கண்டறியவில்லை என்றால், சில கணக்கிடப்பட்ட அபாயங்களை எடுத்துப் பார்க்கலாம். மழை நாளுக்காகச் சில மாத சேமிப்பை உருவாக்கிக் கொண்டு, ஒவ்வொரு வாரமும் 6 முதல் 8 மணி நேரங்களைத் தேடுதலுக்காக முதலீடு செய்யலாம் மேலும் ஒவ்வொரு புதிய நேர்காணல் மற்றும் தொடர்புகளையும் மகிழ்ந்து அனுபவித்து நிறையக் கற்றுக் கொள்ளலாம். நீங்கள் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய வாய்ப்புகளைத் தேடுங்கள் இதனால் நீங்கள் வருங்காலப் பாத்திரங்களுக்கு நிபுணத்துவத்தையும் மற்றும் நற்பெயரையும் உருவாக்கலாம்.

உங்கள் தற்போதைய நிறுவனத்தில் தலைமை பொறுப்புகளுக்காகத் தன்னார்வமாக வேலைகளைச் செய்யுங்கள் மேலும் உங்கள் சக பணியாளர்கள், வாடிக்கையாளர்கள், முன்னாள் முதலாளிகள் மற்றும் தொழிற்துறை வல்லுநர்களுடன் நல்லுறவை வளர்க்க நேரத்தை முதலீடு செய்யுங்கள். அவர்கள் உங்களுடைய வருங்கால வேலைகள் குறிப்பாக அடுத்த வேலைத் தேடலுக்குத் தொடர்புகளாக இருப்பார்கள். வழிகாட்டிகளைத் தேடுங்கள் மற்றும் நீங்கள் பார்க்கும் வேலையில் பொறுப்புக்களில் மாற்றம் கேட்டு உங்கள் தற்போதைய முதலாளியை அணுகுங்கள்.

உங்கள் 40 வயதுகளில் வேலைத்தேடல்

உங்கள் 40 வயதுகளில் வேலைத்தேடல்

பெரும்பாலான தொழிற்முறையாளர்களுக்கு இது வருமானத்திலும் மற்றும் பணி சார்ந்த நல்ல தாக்கங்களை ஏற்படுத்திக் கொள்வதிலும் உங்கள் வேலையில் இந்தப் பத்தாண்டு காலம் மிகவும் ஆக்கப்பூர்வமானதாகும். இந்தப் பருவத்தில் வேலை தேடுவதில் உள்ள சவால் என்னவென்றால், நீங்கள் விலை மதிப்புள்ளவர் என்று உங்கள் முதலாளியை புரிந்து கொள்ளச் செய்வது. நீங்கள் ஏற்படுத்த விரும்பும் தாக்கங்கள், நீங்கள் கட்டுமானிக்கும் நம்பிக்கை மற்றும் நீங்கள் விரும்பும் அங்கீகாரம் மற்றும் திருப்தி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு வாய்ப்புகளைத் தேடுங்கள்.

இப்போது வரை உங்கள் தொழில் வாழ்க்கையில் முன்னேற்றங்களைப் பற்றி ஒரு கதையைக் கட்டுமானியுங்கள். உங்கள் தலைப்பில் நிபுணத்துவம், உங்கள் தர நிறுவனம், மதிப்பு மற்றும் உங்கள் சமீபத்திய சாதனைகள் ஆகியவற்றை உயர்த்திக் காட்டும் அதே நேரத்தில் கடந்த காலத்தைச் சில வரிகளில் சுருக்கமாகச் சொல்லும் ஒரு சுயவிவரக் குறிப்பை செதுக்குவதில் நேரம் செலவிடுங்கள். உங்கள் லிங்க்ட்இன் பக்கம் உங்கள் சுயவிவரக் குறிப்பின் ஒரு சுருக்கப் பதிவாக இருக்கிறதா என்று உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

இப்போது தொழிற்முறை தொடர்புகள், ஆட்சேர்ப்பு முகவர்கள் மற்றும் ஆன்லைன் விளம்பரங்களில் வரும் வேலைவாய்ப்புகளுக்கு விண்ணப்பித்தல் ஆகிய மூன்று விதமான தேடுதல்களையும் பயன்படுத்துங்கள். நீங்கள் தற்போது ஒரு வேலையில் இருந்து கொண்டே வேலை தேடுகிறீர்களா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். விளக்கத்தை அடிப்படையாக வைத்து வேலைகளை ஒதுக்கி விடாதீர்கள். ஏனென்றால் அரிதாகத்தான் அவை வேலைக்கு ஆட்களை எடுக்கும் மேலாளர் தேடும் உண்மையான பணிகளாக இருக்கும்.

ஒரு நேர்காணலில் கடந்த காலத்தில் நீங்கள் உருவாக்கிய எண்ணிக்கை தாக்கத்தின் மீது கவனம் செலுத்துங்கள். உதாரணமாக, உற்பத்தி செலவை 12% குறைத்திருந்தால் புதிய முதலாளியிடம் அதே போன்ற வித்தியாசத்தை எப்படித் திட்டமிட முடியும்.

உங்கள் 50 வயதுகளில் மற்றும் அதற்கும் மேற்பட்ட வயதுகளில் வேலைத் தேடல்

உங்கள் 50 வயதுகளில் மற்றும் அதற்கும் மேற்பட்ட வயதுகளில் வேலைத் தேடல்

50 கள் அல்லது 60 வயதுகளில் உள்ளவர்களுக்குத் தேவையான ஆற்றல், ஊக்கம், புத்திசாலித்தனமான எதிர்வினைகள் மற்றும் இளைஞர்களுடன் வேலை செய்யும் திறமை போன்றவை இருக்காது என்று முதலாளிகள் பயப்படுகின்றனர். கூடுதலாக அவர்கள் அதிகச் செலவு வைப்பவர்களாக இருக்கக்கூடும். உங்கள் இலக்கு அந்தத் தவறான புரிதலை மாற்றுவதாக இருக்க வேண்டும். இதனால் நீங்கள் ஒரு புதிய வேலையைப் பெற சாத்தியமான வாய்ப்புகள் உள்ளன. ஒரு தீவிரமான லிங்க்ட்இன் பக்கத்தை உருவாக்கவும் மற்றும் பிழைகளற்ற ஒரு சுயவிவரக் குறிப்பை உருவாக்கவும் கற்றுக் கொள்ளுங்கள். அது ஒரு பக்கத்திற்கு மேல் இருக்கக்கூடாது. கடந்த 10 வருட அனுபவங்களை அது கவனம் செலுத்த வேண்டும்.

உங்கள் மின்னஞ்சல் முகவரியைக் காலத்திற்கேற்றபடி மாற்றியமையுங்கள். நீங்கள் ஆரோக்கியமாகவும் வேலை செய்ய விருப்பமாகவும் இருக்கிறீர்கள் என்பதை எடுத்துரைக்க எப்போதும் உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ளுங்கள் மற்றும் நன்றாக உடை அணியுங்கள். நேர்காணலுக்காகக் கடினமாகப் பயிற்சி செய்யுங்கள். பெரும்பாலான மூத்த தொழிற்முறையாளர்கள் வேலைவாய்ப்பு அவர்களைத் தேடி வரும் என்றும் நேர்காணல் செய்பவர்கள் அவர்களின் வயதுக்கு மரியாதை தருவார்கள் என்றும் நம்பி ஏமாற்றமடைகின்றனர்.

அவர்கள் சோம்பேறித்தனத்தையும் வேலை செய்ய வேண்டிய அவசியமில்லாததையும் உணர்த்துகின்றனர். நீங்கள் ஒரு வேலை வாய்ப்பைத் தேடும் போது தன்னார்வ மற்றும் சம்பளமில்லாத பாத்திரங்களில் ஈடுபடுத்திக் கொள்ளுங்கள். உங்கள் பணியிடத்தில் புகழ் பெறுவதற்காக நேரத்தைச் செலவிடுங்கள் உங்கள் விளையாட்டில் முன்னணியில் இருக்கத் தொழில்நுட்ப ஆன்லைன் வகுப்புக்களை எடுத்துக் கொள்ளுங்கள். வயது முதிர்ந்தோருடன் நட்பாக இருக்கும் நிறுவனங்களின் நேர்காணல்களை அணுகுங்கள். உங்கள் இளைய முதலாளிகள் மற்றும் சக பணியாளர்களிடம் நீங்கள் கடந்த காலத்தில் எப்படி வெற்றிகரமாக வேலைப் பார்த்தீர்கள் என்பதைப் பற்றிய கதைகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

உங்களுக்கு வயதாகி விட்டதால் சம்பளம் மற்றும் உங்கள் பாத்திரத்தில் விட்டுக் கொடுங்கள் மேலும் உரையாடல்களின் போது உங்கள் ஞானம், சார்பு, வெளிப்படைத்தன்மை ஆகியவற்றைச் செயல்முறையில் காட்டுங்கள். நேர்மறை எண்ணங்களுடன் இருங்கள். வேலைத் தேடலின் போது பதட்டம் மன அழுத்தம் போன்றவற்றை வெளிப்படுத்தாதீர்கள்.

வயது எப்போதும் உங்கள் அளவு ஆவதில்லை

அக்கறையுடன் சிந்தியுங்கள்

அக்கறையுடன் சிந்தியுங்கள்

ஹார்வர்ட் பல்கலைக்கழக உளவியல் பேராசிரியர் எல்லன் லாங்கரின் ஆய்வுகள் உங்கள் சிந்தனைத் திறனும் உடல் தகுதியும் நீங்கள் உலகை எப்படி உணர்கிறீர்கள் என்பதைப் பெருமளவில் சார்ந்து வளைந்து கொடுக்கக்கூடியது என்பதைக் காட்டுகின்றன. உங்கள் மன நலத்தையும் உளவியல் திறனையும் மேம்படுத்திக் கொள்ள அக்கறையுடன் சிந்தியுங்கள் மற்றும் உங்களைச் சுற்றியுள்ள அன்றாட மாற்றங்கள் மற்றும் புத்துணர்வை கவனியுங்கள்.

லாபங்களைச் சிந்தியுங்கள்

லாபங்களைச் சிந்தியுங்கள்

உங்கள் தொழிலதிபர் அல்லது வியாபார நிறுவனத்திற்கு எப்படி அதிகப் பணத்தை உருவாக்கித் தர முடியும் என்று யோசியுங்கள் மேலும் நீங்கள் உருவாக்கிய லாபத்தில் ஒரு பகுதியைக் கேட்டுப் பெறுங்கள். உங்களுக்கு வருங்காலப் பணத்தைத் தரும் எந்த ஒரு வியாபாரமும் உங்கள் வயதைப் பொருட்படுத்தாது. தரகுக்கு விற்பனை செய்தல், மணி நேரங்களுக்குக் கணக்கெழுதி தருதல் ஆகியவை உதாரணங்கள்.

நிபுணராகச் சிந்தியுங்கள்

நிபுணராகச் சிந்தியுங்கள்

ஒரு மருத்துவருக்கோ வழக்கறிஞருக்கோ வயது ஒரு ஊனமல்ல. நிபுணத்துவமே பெரிதாக மதிப்பிடப்படுகிறது. நிபுணத்துவம் அனுபவத்தால் வருகிறது. நீங்கள் நிபுணராக இருக்கும் களத்தை அடையாளம் காணுங்கள். அது வயதில் இளைய ஒருவரால் வழங்க முடியாததாக இருக்க வேண்டும். நெருக்கடி நிலை மேலாண்மை மற்றும் சிக்கல்களைப் பேச்சு வார்த்தைகள் மூலம் தீர்த்தல் ஆகியவை இங்குத் தகுதி பெறுகின்றன.

வழிகாட்டியாக இருப்பதைச் சிந்தியுங்கள்

வழிகாட்டியாக இருப்பதைச் சிந்தியுங்கள்

வேலைச் சந்தைகள் அனுபவமற்ற இளைஞர்களை வேலைக்கு அமர்த்துவதில் கவனம் செலுத்துவதால் அவை அனுபவம் வாய்ந்த நபர்களுக்கு வாய்ப்புக்களை ஏற்படுத்தித் தந்து குழுக்களுக்குப் பயிற்சி அளிக்கவும் அணிகளை வேகம் கூட்டவும் வேலைவாய்ப்புகளைத் தருகின்றன. உங்கள் தற்போதைய வேலையில் கூடச் செயல்திறனான ஆசிரியர் பணி மற்றும் வழிகாட்டி பாத்திரங்கள் உங்களை மதிப்பு மிக்க மேலாண்மை மற்றும் தலைமை பொறுப்புகளுக்குக் கொண்டு செல்லும்.

விளைவுகளைச் சிந்தியுங்கள்

விளைவுகளைச் சிந்தியுங்கள்

உங்கள் திறமைகள் அல்லது அனுபவத்தைப் பற்றிச் சிந்திப்பது மற்றும் பேசுவதற்குப் பதிலாக விளைவுகளை மற்றும் பயன்களைப் பற்றிப் பேசுங்கள். உங்களால் ஒரு பிராந்தியத்தின் விற்பனை செயல்திறனை மாற்றி அதிகரிக்கச் செய்ய முடியுமா? உங்களால் கொள்முதல் செலவுகளைக் குறைக்க முடியுமா? வேலைச் சந்தையில் உங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும் போது, நீங்கள் ஒப்புக்கொள்ள விரும்பும் உறுதியான பயன்களைப் பற்றி முன்னதாக விவாதம் செய்யுங்கள் மேலும் லாபங்களில் உங்கள் பங்கையும் இணைத்துக் கொள்ளுங்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

How to search for a job at different ages for best results

How to search for a job at different ages for best results
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Goodreturns sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Goodreturns website. However, you can change your cookie settings at any time. Learn more