உங்கள் குடும்பத்தாரின் ஆயுள் காப்பீட்டு பணத்தை கண்காணிப்பது, இழப்பீடு ஏற்படாமல் தடுப்பது எப்படி..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தனிநபர்கள் அவர்களது பெற்றோர், கணவன்/மனைவி அல்லது மகன்/மகள் வைத்திருக்கும் காப்பீட்டு முனைமங்களைப் பற்றி அறியாமல் அவர்கள் இறந்த பிறகு தாக்கல் செய்வதில் தோல்வி அடைந்த பல உதாரண சம்பவங்களைப் பற்றி நாம் கேள்விப்பட்டிருக்கிறோம் அல்லது பார்த்திருக்கிறோம்.
பாலிசிதாரரின் மரணத்திற்கு பிறகு காப்பீட்டுத் தாக்கல் எதுவும் செய்யப்படவில்லை என்றால், அந்த நிதி காப்பீட்டு நிறுவனத்திடமே இருக்கும். அத்தகைய உரிமைக் கோரப்படாத வைப்புத் தொகைகள் ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களிடம் கடந்த ஒரு வருடத்தில் சுமார் இரட்டிப்பு மடங்காகியுள்ளது.
உதாரணமாக, மார்ச் 2015 இல் ரூ. 5,439 கோடியாக இருந்த உரிமைக் கோரப்படாத காப்பீட்டுத் தொகை. மார்ச் 2016 ஆம் ஆண்டு இறுதியில் ரூ.10,527 கோடியாக அதிகரித்துள்ளது.

உரிமை தாக்கல் செய்யப்படாத தொகை என்றால் என்ன?

உரிமை தாக்கல் செய்யப்படாத தொகை என்றால் என்ன?

உரிமை தாக்கல் செய்யப்படாத தொகை என்றால், ஒரு ஆயுள் காப்பீட்டு நிறுவனம் அதன் பாலிசிதாரர்கள் அல்லது பயனாளர்களுக்கு (நியமனப்பட்டவர்கள்) தர வேண்டிய நிலுவைப் பணமாகும்.

இவை இறப்பு அல்லது முதிர்வு தாக்கல்கள், வாழ்வாதார நன்மைகள், காப்பீட்டு முனைம திரும்பப் பெறுதல், (பாலிசி ரத்து செய்யப்படும் போது) அல்லது இழப்பீட்டுக் காப்புறுதி - சேர்ந்த வட்டி ஆகிய வடிவங்களில் இருக்கலாம். தீர்வு நாளுக்கு பிறகு 6 மாதங்களுக்கும் மேலாக உரிமை தாக்கல் செய்யப்படாத எந்த ஒரு தொகையும் ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தினரால் உரிமைக் கோரப்படாத தொகையைாகக் கருதப்படும்.

ஒரு காப்பீட்டு நிறுவனத்தின் உரிமை தாக்கல் செய்யப்படாத தொகையில் மறைமுகமாக எவற்றை எல்லாம் சேர்க்கலாம்.. வாங்க பார்போம்.

 

இது போன்ற பல சூழல்கள் இருக்கலாம்:

இது போன்ற பல சூழல்கள் இருக்கலாம்:

நீங்கள் ஒரு ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தை ரத்து செய்து விடுகிறீர்கள் மேலும் அந்த வருட பாலிசிக்கு நீங்கள் செலுத்திய நிலுவை முனைமத் தொகை உங்களுக்கு திருப்பி செலுத்தப்படவில்லை என்றால்:

ஒருவேளை நீங்கள் 30 வருட கால அளவைக் கொண்ட ஒரு ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தில் 10 வருட காலத்திற்கான வரைமுறை கொண்ட ப்ரீமியம் தொகை திட்டத்தைத் தேர்ந்தெடுக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். 5 வருடங்களுக்குப் பிறகு நீங்கள் பாலிசியை சமர்ப்பித்து விட முடிவு செய்கிறீர்கள், ஆனால் திரும்பப் பெறும் தொகை மிகக் குறைவாக இருக்கிறது. மேலும் உங்கள் கண்காணிப்பு பட்டியலில் இருந்து தவறி விட்டது என்று கொள்ளுங்கள். முகவரி மாற்றம் போன்ற காரணங்களினால் இந்தத் தொகை உங்களை ஒருபோதும் வந்தடையாது. அத்தகைய சிறு தொகைகள் ஒன்றாக சேர்ந்து காப்பீட்டு நிறுவனங்களில் உரிமை தாக்கல் செய்யப்படாத தொகை என்னும் பிரிவின் கீழ் கணிசமான ஒரு பெரும் தொகுப்பாக சேர்ந்து விடுகிறது.

 

நீண்ட கால காப்பீட்டு தாக்கல்களில் ஒருவேளை காப்பீட்டு நிறுவனத்தார் பாலிசிதாரரின் நியமனப்பட்டவரிடமிருந்து எந்த அறிவிப்பையும் பெறவில்லை என்றால்:

நீண்ட கால காப்பீட்டு தாக்கல்களில் ஒருவேளை காப்பீட்டு நிறுவனத்தார் பாலிசிதாரரின் நியமனப்பட்டவரிடமிருந்து எந்த அறிவிப்பையும் பெறவில்லை என்றால்:

பாலிசிதாரர் துரதிருஷ்டவசமாக இறந்து விடும் சந்தர்ப்பங்களில், நியமனப்பட்டவர் இறுதியில் பாலிசியை உரிமை தாக்கல் செய்யாமல் போகலாம், ஏனென்றால், அநேகமாக அவர்/அவளுக்கு அந்த நீண்ட கால காப்பீட்டுத் திட்டத்தை பற்றித் தெரியாமல் இருக்கலாம் அல்லது அவர்/அஅவள் பாலிசியின் ஆவணங்களை கண்டறிய முடியாமல் இருக்கலாம்.

முதிர்வுத் தொகை நன்மைகள், வாழ்நாள் நன்மைகள், (மணி பேக் பாலிசி திட்டத்தின் கீழ்) அல்லது இழப்பீட்டுக் காப்புறுதி தாக்கல்கள் போன்ற வட்டி செலுத்தும் ஆணைகள் பாலிசிதாரரை சென்றடையவில்லை என்றால்:
உங்களிடம் ஒவ்வொரு 5 வருடங்களுக்கும் 20 சதவிகிதப் பணத்தை திருப்பி கொடுப்பதாக உறுதி அளிக்கும் மணி பேக் திட்டம் இருப்பதாக வைத்துக் கொள்வோம். இருப்பினும், காப்பீட்டு நிறுவனத்தினரால் பணம் செலுத்தப்பட்ட காசோலைகள் உங்களை ஒருபோதும் வந்தடையவில்லை, ஏனென்றால், நீங்கள் ஒரு புதிய முகவரிக்கு இடம்பெயர்ந்து விட்டீர்கள். ஆனால், காப்பீட்டு நிறுவனத்தாரிடம் புதிய முகவரியை புதுப்பிக்கவில்லை.

காப்பீட்டுதாரர் வைத்திருக்கும் அத்தகைய கட்டணங்கள் உரிமைக் கோரப்படாத தொகை என்ற பிரிவில் சேர்க்கப்படுகிறது. இந்தியக் காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (ஐஆர்டிஏஐ) அனைத்து காப்பீட்டு நிறுவனங்களுக்கும் (ஆயுள் காப்பீடு மற்றும் ஆயுள் காப்பீடு அல்லாத காப்பீட்டுத் திட்டங்கள் இரண்டிற்கும்) அவர்களுடைய உரிய வலைத்தளங்களில் உரிமைக் கோரப்படாத காப்பீட்டுப் பணத்தை பற்றிய முழு விவரங்களை வெளியிடுமாறு தௌிவான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. காப்பீட்டு நிறுவனங்களை மிகச் சிறிய தொகைக்கு உரிமை தாக்கல்கள் பற்றிய விவரங்களை வௌயிடும் தொந்தரவிலிருந்து காப்பதற்காக, இந்த விதிமுறைகள் உரிமைக் கோரப்படாதத் தொகை ரூ.1000 அ்ல்லது அதற்கும் மேல் இருந்தால் மட்டுமே காப்பீட்டு நிறுவனங்கள் விவரங்களை வெளியிட அனுமதிக்கிறது.

சமீபத்திய ஐஆர்டிஏஐ சுற்றறிக்கையின் படி (ஜூலை 25, 2017 தேதியிடப்பட்டது) எந்த ஒரு காப்பீட்டு நிறுவனத்தின் உரிமைத் தாக்கல் செய்யப்படாத பணமும் அந்தத் தொகையை பாலிசிதாரர் அல்லது பயனாளருக்கு பணம் செலுத்தப்பட வேண்டிய தேதியிலிருந்து 10 வருடங்களுக்கு உரிமைத் தாக்கல் செய்யப்படாமல் இருந்தால், இந்திய அரசாங்கத்தின் மூத்த குடிமக்கள் நல வாழ்வு நிதியில் அந்தத் தொகை சேர்க்கப்படும்.

இடமாற்றத்திற்கு பிறகு, 25 வருட காலத்திற்கும் மேல் எந்த ஒரு காப்பீட்டு உரிமை தாக்கல் செய்யப்படவில்லை என்றால், நீங்கள் அந்தப் பணத்தை பறிமுதல் செய்து விட வேண்டும். இல்லையென்றால் அது அரசாங்கத்திற்கு சொந்தமாகி விடும். அரசாங்கம் இந்த நிதியை நிதிச் சட்டம் 2015 மற்றும் 2016 ஆகியவற்றின் வழியாக, உருவாக்கி மூத்த குடிமக்களின் நல்வாழ்விற்காக மேம்படுத்தியுள்ளது. குறிப்பிட்ட காப்பீட்டு நிறுவனங்கள் இந்தத் தாக்கல் செய்யப்படாத பணத்தை அரசாங்க நிதிக்கு மாற்ற வேண்டும். தபால் துறை சேமிப்புத் திட்டங்கள் மற்றும் பணியாளர் வைப்பு நிதித் திட்டங்கள் ஆகியவையும் இதில் அடங்கும். இந்த வருடம் ஏப்ரல் மாதம் செய்யப்பட்ட ஒரு சட்டச் சீர்த்திருத்தத்தில் அரசாங்கம் காப்பீட்டு நிறுவனங்களையும் இந்தப் பட்டியலில் சேர்த்துள்ளது.

உங்கள் காப்பீட்டு நிறுவனத்தாரிடம் இருக்கும் ஆயுள் காப்பீட்டுப் பணத்தை தாக்கல் செய்ய நீங்கள் என்ன செய்யலாம் என்று இங்கே கொடுக்கப்பட்டுள்ளது: (நீங்களோ அல்லது உங்கள் அன்பிற்குரியவரோ எடுத்த பாலிசிக்காக)

காப்பீட்டு நிறுவனங்கள் உங்கள் உரிமைத் தாக்கல் செய்யப்படாத பணத்தை அவர்களுடைய வலைத்தளங்களில் கண்டறிய அனுமதிக்கிறது. நீங்கள் ‘பாலிசிதாரர்களின் தாக்கல் செய்யப்படாத தொகை' என்ற தலைப்பின் கீழ் எளிிதாகப் பார்க்கலாம்.

திறக்கும் பக்கத்தில் நீங்கள் அந்தத் தலைப்பின் மீது சொடுக்கினால், பின்வரும் விவரங்களை உள்ளிட வேண்டும்: பாலிசிதாரர் பெயர், பாலிசி எண், நிரந்தரக் கணக்கு எண் (பான் எண்), ஆதார் எண், மற்றும் பிறந்த தேதி. இந்த விவரங்களை நிரப்புவதன் மூலம் உரிமைத் தாக்கல் செய்யப்படாத தொகையின் விவரங்களை நீங்கள் அறிந்து கொள்ள முடியும்.

பாலிசிதாரரின் பெயரும் பிறந்த தேதியும் கட்டாயம் ஆனால் பான் எண்ணும் பாலிசி எண்ணும் தேர்வுக்குரியது.

 

 வருமுன் காப்பதே சிறந்த சிகிச்சை

வருமுன் காப்பதே சிறந்த சிகிச்சை

நீங்கள் ஒரு பாலிசிதாரராகவோ அல்லது நியமனப்படடவராகவோ இருந்தால் காப்பீட்டு நிறுவனத்திடம் உங்கள் பணம் உரிமை தாக்கல் செய்யப்படாத தொகையாக மாறுவதைத் தவிர்க்க பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.

உங்கள் அனைத்து பாலிசி விவரங்களின் பதிவுகளையும் பராமரியுங்கள்
உங்கள் அனைத்து பாலிசிகளையும் பராமரியுங்கள் மற்றும் பின்தொடருங்கள்
உங்கள் அனைத்து பாலிசிகளையும் ஆன்லைனில் வழக்கமாகப் பின்தொடருங்கள்
உங்கள் அனைத்து பாலிசி பதிவுகளையும் ஆன்லைனில் வைத்திருங்கள்
உங்கள் காப்பீட்டு நிறுவனத்திடம் தொடர்பு விவரங்களை புதுப்பித்து வையுங்கள்
உங்கள் காப்பீட்டு நிறுவனத்தினரிடம் என்ஈஎஃப்டி விவரங்களை புதுப்பித்து வையுங்கள்
உங்கள் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நியமனப்பட்டவர்களுக்கு மேற்கூறிய அனைத்து விவரங்களையும் தெரிவித்து வையுங்கள்
அனைத்து பாலிசிகளுக்கும் ஒரு நியமனப்படடவரை நியமியுங்கள்
ஒரு உயிலை எழுதி வையுங்கள்

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

How to track unclaimed life insurance money of your family and not suffer a loss

How to track unclaimed life insurance money of your family and not suffer a loss
Story first published: Sunday, September 17, 2017, 13:21 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X