பரஸ்பர நிதி ஆதாயங்கள் மீதான வருமான வரி விதிமுறைகள் 10 புள்ளிகளில் விவரிக்கப்பட்டுள்ளது.

Written By: Tamilarasu
Subscribe to GoodReturns Tamil

பரஸ்பர நிதி ஆதாயங்கள் மீதான வருமான வரி விதிமுறைகள் 10 புள்ளிகளில் விவரிக்கப்பட்டுள்ளது.

பரஸ்பர நிதி ஆதாயங்கள் மீதான வருமான வரி விதிமுறைகள் 10 புள்ளிகளில் விவரிக்கப்பட்டுள்ளது.

இந்திய பரஸ்பர நிதித் துறை நிர்வாகத்தின் கீழ் சொத்துக்கள், கடன் மற்றும் பங்குச் சந்தை என இரண்டு பிரிவுகளிலும் வலுவான முதலீடுகளினால் உந்தப்பட்டு இந்த ஜூலை மாதம் ரூ. 20 இலட்சம் கோடிகள் சாதனை உயரங்களைத் தொட்டுள்ளது. சில்லறை முதலீட்டாளர்கள் சிப் நிதித் திட்டங்கள் வழியாக பரஸ்பர நிதிகளில் தொகையை முதலீடு செய்து சாதனையை உயர்த்தி வருகின்றனர். முதலீட்டாளர்கள் ஒவ்வொரு மாதமும் சுமார் ரூ. 5,000 கோடிகளை சிப் நிதித் திட்டங்களின் வழியாக முதலீடு செய்கிறார்கள் என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
திட்டமிடப்பட்ட முறையான முதலீட்டுத் திட்டங்கள் அல்லது சிப் நிதித் திட்டங்கள் என்று பொதுவாக அறியப்படும் இது பரஸ்பர நிதிகளால் வழங்கப்படும் ஒரு முதலீட்டுத் திட்டமாகும். இந்தத் திட்டங்களில் ஒருவர், ஒரு பரஸ்பர நிதித் திட்டத்தில் ஒரு நிலையானத் தொகையை வரையறுக்கப்பட்ட கால இடைவெளிகளில் முதலீடு செய்யலாம்.

பரஸ்பர நிதி ஆதாயங்களின் மீது நீங்கள் செலுத்த வேண்டிய வருமான வரி எவ்வளவு என்பதைப் பற்றி இங்கே கொடுக்கப்பட்டுள்ளது:

1) வரி நோக்கங்களுக்காக, ஒரு பரஸ்பர நிதித் திட்டம் சமபங்கு நிதிகள் அல்லது பங்கு சார்ந்த நிதித் திட்டங்களில் 65 சதவிகிதம் அல்லது அதற்கு மேற்பட்ட அதன் நிதிகளை முதலீடு செய்தால் அது பங்கு நிதிகளாகக் கருதப்படுகின்றது.
2) பங்குகளில் பரவலாக்கப்பட்ட நிதிகளைத் தவிர, தரகு செலவாணி நிதிகளும் பங்கு நிதிகளாகக் கருதப்படுகின்றன. தரகுச் செலவாணி நிதிகள் பங்குகளிலும் மற்றும பங்கீட்டு ஆதாயங்களிலும் முதலீடு செய்கின்றன, அதே சமயத்தில் பங்கு வருமான நிதிகள் பங்குக் கலவை, பங்கு ஆதாயங்கள் மற்றும் கடன் நிதிகளில் முதலீடு செய்கின்றன. ஒரு சமச்சீர் நிதி குறைந்தபட்சம் 65 சதவிகிதத்தை சம பங்குகளில் முதலீடு செய்தால், வரி நோக்கத்திற்காக அது ஒரு சமபங்கு நிதியாகக் கருதப்படும்.
3) 12 மாதங்களுக்கு மேல் வைத்திருக்கும் சமபங்கு பரஸ்பர நிதி அலகுகளுக்கான எந்த ஒரு ஆதாயமும் (சிப் அல்லது ஒட்டு மொத்தத் தொகை) நீண்ட கால மூலதன ஆதாயமாகக் கருதப்படுகின்றது. சமபங்கு நிதிகளிலிருந்து கிடைக்கும் நீண்ட கால மூலதன லாபங்களுக்கு வரிகள் இல்லை.
4) 12 மாதங்களுக்கும் குறைவான காலத்தைக் கொண்ட சமபங்கு நிதிகளிலிருந்து கிடைக்கும் ஆதாயங்களுக்கு 15 சதவிகிதம் குறுகிய கால மூலதன ஆதாய வரிகள் பொருந்தும்.
5) நிறைய முதலீட்டாளர்கள் சமபங்கு பரஸ்பர நிதிகளில் முதலீடு செய்யும் அதே சமயத்தில் லாபப் பங்கு விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கின்றனர். நீங்கள் எப்போது பெற்றுக் கொண்டிருந்தாலும், சமபங்கு நிதிகளிலிருந்து கிடைக்கும் பங்காதயங்களுக்கு வரிகள் இல்லை.
6) கடன் நிதித் திட்டங்களில் முதலீடு செய்யப்படும் நிதிகள் மூன்று வருடங்களுக்கு மேல் வைத்திருந்தால் மட்டுமே நீண்ட காலத் திட்டங்களாகக் கருதப்படும்.
7) தற்போது, கடன் நிதிகள் மீதான நீண்ட காலத்திற்கான மூலதன ஆதாயங்கள் 20 சதவிகித கட்டணத்தில் வரிவிதிக்கப்படுகின்றன. இருந்தாலும், முதலீட்டாளர்கள் அவர்களுடைய அசல் கடன் நிதித் திட்டத்தின் மீது பொருளாதார ஒழுங்குமுறை நற்பயன்களைப் பெறலாம். இதன் பொருள் என்னவென்றால், அசல் முதலீடு பணவீக்க விலைகளுக்கு ஏற்றவாறு சரிசெய்யப்பட்டு அதற்கேற்ப வரிவிதிக்கப்படும். எனவே பணவீக்கக் காரணத்திற்குப் பிறகு அசல் முதலீட்டு விலை மேலே உயருகிறது, நீண்ட கால மூலதன ஆதாய வரி புறக்கணிக்கத்தக்க நிலைகளுக்கு வரும்.
8) ஆனால் கடன் பரஸ்பர நிதி முதலீடுகள் மூன்று வருடங்களுக்கு முன்பே திரும்பப் பெறப்பட்டாலோ அல்லது விற்கப்பட்டாலோ, உங்கள் வரிப் பலகங்களுக்கு ஏற்றபடி குறுகிய கால ஆதாய வரிகள் விதிக்கப்படும்.
9) கடன் நிதிகளிலிருந்து பெறப்படும் வருவாய் கூட பங்கு ஆதாய வடிவில் வருகிறது. கடன் பரஸ்பர நிதிகளால் அறிவிக்கப்படும் எந்தவொரு பங்காதாயமும் முதலீட்டாளரின் கைகளுக்கு வரும் போது வரிவிலக்கு பெறுகிறது.
10) இருப்பினும், பரஸ்பர நிதி நிறுவனங்கள் முதலீட்டாளர்களுக்கு பங்காதயங்களை ஒப்படைக்கும் முன், 28.84 சதவிகித விலையில் பங்காதாய விநியோக வரியை (மிகை வரி மற்றும் மேல் வரி உட்பட) செலுத்துகின்றன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Income Tax Rules On Mutual Fund Gains

Income Tax Rules On Mutual Fund Gains
Story first published: Tuesday, September 12, 2017, 14:41 [IST]
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns