பிஎப், பிபிஎப், எப்டி, என்பிஎஸ் மற்றும் என்எஸ்சி: வரிப் பயன்கள், வட்டி விகிதங்கள் மற்றும் பல..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வரிகளைத் திட்டமிடுவது எளிதானதல்ல. நீங்கள் நிறையச் சம்பாதிக்கலாம், ஆனால், போதுமான அளவு சேமிக்கவில்லை என்றால், தேவைப்படும் நேரங்களில் உங்களிடம் பணமும் இருக்காது, நீங்கள் அரசாங்கத்திற்குச் செலுத்த வேண்டிய வரிகளையும் சேமிக்கவும் முடியாது. ஒரு குறிப்பிட்ட வரித் திட்டத்தில் முதலீடு செய்வதைத் தீர்மானிப்பதும் கடினமானது. ஒருவர் முதலீடு செய்யும் பொழுது அந்தத் திட்டத்தின் பல்வேறு அம்சங்களான, திட்டம் திருப்பியளிக்கும் வருவாய், முதலீட்டுத் திட்டத்தின் முடிவுகாலம் மற்றும் பல அம்சங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

 

"சேமிப்புத் திட்டங்களின் முதன்மையான குறிக்கோள், அசலுக்குப் பாதுகாப்பு, நீண்ட கால நிதி இலக்குகளை எதிர்கொள்ளுதல் மற்றும் அவை வழங்கும் வரிப்பயன்கள் ஆகியனவாகும்," என்று சொல்கிறார் பிபிஎன்ஜி மூலதன ஆலோசகர்கள் அமைப்பின் நிறுவனரும் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியுமான தருண் பிரானி. இங்கு நாங்கள் நீங்கள் பணம் ஈட்டுவதற்கான ஐந்து முக்கியச் சேமிப்புத் திட்டங்களையும் மற்றும் அவற்றின் நற்பயன்களையும் கொடுத்துள்ளோம்.

1. பிஎப்

1. பிஎப்

பிஎப் என்பது சம்பளம் வாங்கும் பணியாளர்களுக்கான நிதித் திட்டமாகும். இது பொது மற்றும் தனியார் பிரிவு ஊழியர்களுக்கான கட்டாயமாக்கப்பட்ட ஓய்வூதிய சேமிப்புத் திட்டமாகும். தொழில் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பணியாளர் வைப்பு நிதி அமைப்பு இந்த நிதித் திட்டத்தை மேற்பார்வை செய்கிறது.

வட்டி விகிதம்:

வட்டி விகிதம்:

ஈபிஎஃப் திட்டத்தின் வட்டி விகிதம் ஒவ்வொரு ஆண்டும் இந்த நிதி மூலம் உருவாக்கப்பட்ட சராசரி வருவாய் மதிப்பை அடிப்படையாகக் கொண்டு ஈபிஎஃப்ஓ குழுவினரால் தீர்மானிக்கப்படுகிறது. நிதியாண்டு 2016 முதல் 2017 வரை இந்தத் திட்டம் 8.65 சதவிகிதம் வரை வட்டியைச் செலுத்தியிருக்கிறது.

வரிப்பயன்கள்:
 

வரிப்பயன்கள்:

நீங்கள் ஈபிஎஃப் க்கு பங்களிக்கும் தொகை வருமான வரிச் சட்டம் பிரிவு 80சி யின் கீழ் வரிவிலக்கிற்குத் தகுதி பெறுகிறது. அதிகபட்சமாக ரூ.1.5 இலட்சம் வரை வரிவிலக்கிற்கு உட்படுகிறது. நீங்கள் ஒவ்வொரு வருடமும் ஈபிஎஃப் சேமிப்புத் திட்டத்தில் ஈட்டும் வட்டி மற்றும் இறுதியில் கிடைக்கும் முதிர்வு தொகையும் கூட வரிவிலக்குப் பெறுகிறது.

2. பொது வருங்கால வைப்புநிதி (பிபிஎப்)

2. பொது வருங்கால வைப்புநிதி (பிபிஎப்)

பொது வைப்புநிதி (பிபிஎஃப்) பாதுகாப்புடன் கவர்ச்சிகரமான வட்டி விகிதங்கள் மற்றும் வருவாயை வழங்குகிறது. இது வரிவிதிப்பிலிருந்து முழுமையாக விலக்குப் பெற்றது. ஒரு நிதியாண்டில் பிபிஎஃப் வைப்புக் கணக்கில் குறைந்தபட்ச வைப்புத் தொகை ரூ.500 ம் மற்றும் அதிகபட்சமாக ரூ.1.5 இலட்சமும் ஆகும்.

வட்டி விகிதம்:

வட்டி விகிதம்:

பிபிஎஃப் திட்டம் மற்றும் இதர சிறு சேமிப்புத் திட்டங்களின் வட்டி விகிதம் ஒவ்வொரு காலாண்டிற்கு ஒருமுறை மாற்றியமைக்கப்படுகிறது. தற்சமயம், பிபிஎஃப் முதலீட்டாளர்கள் 7.8 சதவிகித வட்டி விகிதத்தைப் பெறுகிறார்கள்.

வரிப்பயன்கள்:

வரிப்பயன்கள்:

பிபிஎஃப் முதலீட்டாளர்கள் மூன்று ஈஈஈ அல்லது மூன்று விதமான வரிவிலக்கு அந்தஸ்தைப் பெற்று மகிழ்கிறார்கள். அவை நிதிப் பங்களிப்பு, வட்டி மற்றும் முதிர்வுத் தொகை செயல்பாடுகள் என அனைத்திற்கும் வரிவிலக்கு அளிக்கப்படுகிறது.

3. நிரந்தர வைப்பு நிதிகள்

3. நிரந்தர வைப்பு நிதிகள்

வைப்புநிதிகள் என்பது அதன் நெகிழ்வுத்தன்மை மற்றும் பணமாகும் தன்மை காரணமாக நாட்டில் கிடைக்கப்பெறும் மிகுந்த பிரசித்தி பெற்ற திட்டங்களில் ஒன்றாக இருக்கிறது. வைப்பு நிதிகள் நீண்ட கால வரையறை கொண்ட வைப்பு நிதிகள் என்றும் அறியப்படுகிறது. இது இந்த வைப்புநிதித் திட்டத்தின் ஒட்டுமொத்த காலவரையறை வரை நிர்ணயிக்கப்பட்ட வட்டி விகிதத்தை வழங்குகிறது.

வட்டி விகிதம்:

வட்டி விகிதம்:

வட்டி விகிதம் வங்கிக்கு வங்கி வித்தியாசப்படுகிறது. உதாரணமாக, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா அதன் வைப்புநிதி வட்டி விகிதங்களை மாற்றியமைத்து அனைத்து உள்நாட்டு நீண்ட கால வைப்புத் தொகைகளுக்கும் (1 கோடிக்கும் குறைவான வைப்பு நிதிகளுக்கு) ஜுலை 1, 2017 முதல் திருத்தியமைக்கப்பட்ட வட்டி விகிதத்தை நடைமுறைக்குக் கொண்டு வந்துள்ளது. எஸ்பிஐ ஆரம்பத்தில் கொடுத்த 6.9 சதவிகிதத்தோடு ஒப்பிடும் போது, தற்போது வைப்பு நிதிகளுக்கு ஒரு ஆண்டிற்கு 6.75 சதவிகிதம் வட்டியை வழங்குகிறது. ஆனால் இது வழக்கமான வைப்புத் தொகைகளுக்குத் தரப்படும் வட்டியாகும். இது வரிசேமிப்புப் பயன்கள் எதையும் தருவதில்லை.

வரிப்பயன்கள்:

வரிப்பயன்கள்:

வங்கி சேமிப்புக் கணக்கை போழல்லாமல் வங்கி வைப்பு நிதிகளிலிருந்து ஈட்டப்படும் வட்டி வருவாய் முழுவதுமாய் வரிவிதிப்புக்கு உட்பட்டது. ஆனால், வங்கி சேமிப்புக் கணக்குகளில் ஒருவர் ஒரு ஆண்டுக்கு ரூ. 10000 வரை ஈட்டப்படும் வட்டிக்கு வருமான வரிவிலக்கு பெறுகிறார். வங்கி நிலையான வைப்புத் தொகைகளுக்கு வட்டி வருமானம் ஒரு வருடத்திற்கு ரூ. 10000 க்கும் அதிகமாக இருந்தால், வங்கிகள் 10 சதவிகித மூலதன ஆதாய வரியைக் கழிக்கிறது. ஒரு குறிப்பிட்ட வங்கியின் அனைத்துக் கிளைகளின் கூட்டு வட்டி வருவாயைச் சரிபார்ப்பதன் மூலம் டிடிஎஸ் கணக்கிடப்படுகிறது.

மேலும் சில வங்கிகள் வரிச் சேமிப்பு வைப்பு நிதித் திட்டங்களை வழங்குகின்றன. இந்த வைப்பு நிதித் திட்டங்களில் நீங்கள் முதலீடு செய்யும் தொகை பிரிவு 80சி இன் கீழ் வருமான வரி விலக்கிற்குத் தகுதி பெறுகிறது. இருந்தாலும், வரிச் சேமிப்பு வைப்பு நிதித் திட்டங்களிலிருந்து நீங்கள் ஈட்டும் வட்டி வரி விதிப்பிற்கு உட்பட்டது.

 

4. தேசீய ஓய்வூதிய திட்டம்

4. தேசீய ஓய்வூதிய திட்டம்

தேசீய ஓய்வூதியத் திட்டம் (என்பிஎஸ்) ஜனவரி 1, 2004 முதல் அனைத்து மூத்த குடிமக்களுக்கும் ஓய்வூதிய வருமானத்தை வழங்க வேண்டுமென்ற குறிக்கோளுடன் நிறுவப்பட்டது. ஓய்வூதியத் திட்டங்களில் சீர்திருத்தங்களை நிறுவுவதற்காகவும், மற்றும் மூத்த குடிமக்களிடையே ஓய்வூதியத்திற்கான சேமிப்புப் பழக்கத்தை ஊக்கப்படுத்தவும் இலக்குகளை என்பிஎஸ் கொண்டுள்ளதாக என்பிஎஸ் வலைத்தளம் தெரிவிக்கிறது.

"என்பிஎஸ் இல் ஒரு பகுதியாக வரி விதிக்கப்பட்டாலும் இது ஈபிஎஃப் தருவதைப் போல அதே வரிப்பயன்களைத் தருவதில்லை. இருந்தாலும், சொத்து ஒதுக்கீடு, மறைமுக வருவாய் மேம்பாடு மற்றும் ரூ. 1 இலட்சத்திற்கும் அதிகமான தொகைக்கு ரூ. 50,000 க்கும் மேல் இத்திட்டம் அளிக்கும் கூடுதல் வரிக் கழிப்பு போன்ற சிறந்த தேர்வுகளைக் கருத்தில் கொண்டு பார்க்கும் போது, வரி செலுத்தும் தனிநபர்கள், குறிப்பாக இளைய தலைமுறையினர் இந்தத் திட்டத்திற்கு நிதி ஒதுக்குவதைப் பற்றி யோசிக்கலாம்," என்று சொலிகிறார் திரு. பிரானி.

 

 வட்டி விகிதம்:

வட்டி விகிதம்:

என்பிஎஸ் திட்டத்தில் வருவாய் பங்குச் சந்தையுடன் இணைக்கப்பட்டுள்ளது. (எங்கள் பார்வையில் உத்தரவாதமளிக்கப்பட்ட வருவாய்த் திட்டங்களான பிபிஎஃப், பிஎஃ போன்ற திட்டங்களை விட என்பிஎஸ் போன்ற பங்கு சந்தைகளுடன் இணைக்கப்பட்ட முதலீடுகளில் மறைமுக வருவாய் அதிகமாக இருக்கும். இதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன. ஒன்று, என்ஆர்எஸ் திட்டத்தில் பங்குச் சந்தையை எதிர்கொள்ளும் தேர்வு, இரண்டாவதாக, தொழில்முறை நிதி நிர்வாக உட்கூறுகள்) என்று என்டிடிவி ஃப்ராபிட் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவுட்லுக் ஏசியா நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி மனோஜ் நாக்பால் தெரிவித்துள்ளார்.

வரிப்பயன்கள்:

வரிப்பயன்கள்:

என்பிஎஸ் திட்டத்தின் கீழ் ரூ. 2 இலட்சம் வரை செய்யப்படும் முதலீடுகளுக்கு (ரூ.1.5 இலட்சம் வரை பிரிவு 80சி இன் கீழ் மற்றும் கூடுதல் தொகையாக ரூ 50,000 க்குப் பிரிவு 80 சிசிடி இன் கீழும்) வரிவிலக்கிற்குத் தகுதியுடையதாகிறது.

5. தேசீய சேமிப்புப் பத்திரங்கள்

5. தேசீய சேமிப்புப் பத்திரங்கள்

இந்தச் சேமிப்புப் பத்திரங்கள் இந்திய அரசாங்கத்தால் வழங்கப்படுகிறது. இது அனைத்து அஞ்சல் அலுவலகங்களிலும் விற்கப்படுகிறது. இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யப்படும் தொகை பிரிவு 80 சி இன் கீழ் வரி குறைப்பிற்குத் தகுதியுடையதாகிறது.

வட்டி விகிதம்:

வட்டி விகிதம்:

தற்சமயம், என்எஸ்சி க்கு வழங்கப்படும் வட்டி விகிதம் 7.9 சதவிகிதம் என்று இந்திய தபால் துறை வலைத்தளம் தெரிவிக்கிறது. 1-10-2016 க்கு பிறகு கொள்முதல் செய்யப்படும் ரூ. 100 க்கான சான்றிதழின் முதிர்வுத் தொகையின் மதிப்பு ஐந்து வருடங்கள் கழித்து ரூ. 146.93 ஆக இருக்கும்.

வரிப்பயன்கள்:

வரிப்பயன்கள்:

என்எஸ்சி திட்டத்தில் அதிகபட்ச முதலீட்டு வரம்புகள் இல்லை. மேலும் வட்டித் தொகையின் மீது டிடிஎஸ் கழிக்கப்படுவதில்லை. இருந்தாலும், என்எஸ்சி யிலிருந்து ஈட்டப்படும் வட்டி வரிவிதிப்பிற்கு உட்பட்டது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

PF, PPF, FDs, NPS and NSC Savings Schemes Tax Benefits, Interest Rates And More

PF, PPF, FDs, NPS and NSC Savings Schemes Tax Benefits, Interest Rates And More
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X