உங்களுக்கு 40 வயது ஆகப் போகின்றதா..? கண்டிப்பா இதை எல்லாம் நீங்கள் செய்தே அக வேண்டும்?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெரும்பாலானவர்களுக்கு 50 வயதை அடைவது ஒரு அடையாள மைல்கல்லாக உள்ளது. ஆனால் தனிப்பட்ட நிதி சார்ந்த கண்ணோட்டத்தில் பார்த்தால், உங்கள் வருங்காலத்திற்கான முடிவுகளை எடுக்கும் ஆற்றலை நீங்களே பெற்றிருப்பதால் 40 வயது என்பது ஒரு முக்கியத் திறன் மதிப்பீட்டுக் காலமாகும்.

 

அப்போது உங்கள் வாழ்க்கை மற்றும் தொழில் வாழ்க்கைக்கான உங்கள் கண்ணோட்டம் சாத்தியங்கள் நிறைந்ததாக இருக்கும். எனவே நீங்கள் உங்கள் 40 வயதுகளில் நுழையப் போகிறீர்கள் என்றால், இங்கே உங்களுக்கான தனிப்பட்ட நிதி சரிபார்ப்புப் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது.

1. சமகாலக் குழு ஒப்பீடுகளைத் தவிர்க்கவும்

1. சமகாலக் குழு ஒப்பீடுகளைத் தவிர்க்கவும்

உங்களைப் பற்றிச் சொல்லிக் கொள்ள நீங்கள் போதுமான சாதனைகளை ஏற்கனவே செய்திருப்பீிர்கள் என்பதால் உங்கள் 40 வயதில் சமகாலக் குழு ஒப்பீடுகளைப் புறந்தள்ள சிறந்த காலமாகும். தொடர்ந்து போட்டிகள் நிறைந்த வாழ்க்கை உங்களை மிகச் சிறிதளவே செல்வமும் மகிழ்ச்சியும் கொண்டவராக்கி விடுகிறது.

2. பங்குச் சந்தை மீது அளவுக்கதிகமாகக் கவனத்தைச் செலுத்தாதீர்கள்

2. பங்குச் சந்தை மீது அளவுக்கதிகமாகக் கவனத்தைச் செலுத்தாதீர்கள்

நீங்கள் 40 வயதிற்குள் பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் திறனை கற்றிருக்கவில்லை என்றால், உங்கள் பணத்தைத் தொழில் முறை நிபுணர்களிடம் ஒப்படைக்க வேண்டிய நேரம் இது. உங்கள் பணம் பங்குச் சந்தை வழங்கும் வருவாயைப் பெறும் வாய்ப்புகளைப் பெற்றுள்ளதை உறுதி செய்ய இன்டெக்ஸ் நிதிகள், பரஸ்பர நிதிகள் மற்றும் தொழில்முறை சேவைகளைப் பயன்படுத்துங்கள்.

3. ஒரு முதலீட்டுத் தத்துவத்தைக் கொண்டிருங்கள்
 

3. ஒரு முதலீட்டுத் தத்துவத்தைக் கொண்டிருங்கள்

இப்போதிலிருந்து நீங்கள் எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும், எங்கே, ஏன் மற்றும் எப்படி என்றெல்லாம் தெரிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம். இதுவரை உங்களுக்கு முதலீட்டுக் கொள்கை எதுவும் இல்லையென்றால், உங்கள் நிதிகளுக்கு உதவக்கூடிய வழிகாட்டும் உபாயங்களும் மற்றும் உங்கள் சேமிப்பு மற்றும் முதலீடுகளில் ஒழுங்குமுறையும் இன்னமும் உங்களுக்கு இருக்காது. திட்டத்திற்கு நிதியளிக்க உங்களிடம் இன்னமும் 20 வருடங்கள் இருக்கின்றன, இருந்தாலும் இப்பொழுதே தொடங்குங்கள்.

4. சிந்திய பாலை நினைத்து அழாதீர்கள்

4. சிந்திய பாலை நினைத்து அழாதீர்கள்

கடந்த காலத் தவறுகளைப் பற்றி அதிகமாகக் குழப்பமடையாதீர்கள். அவற்றை எப்படிச் சரி செய்ய வேண்டும் என்பதில் கவனம் செலுத்துங்கள். உங்கள் வருமானத்தில் 30 முதல் 40% -த்தை நீங்கள் ஏற்கனவே சேமித்து வைக்கவில்லை என்றால், ஒன்று, நீங்கள் மிகக் குறைவாகச் சம்பாதிக்கிறீர்கள் அல்லது மிக அதிகமாகச் செலவழிக்கிறீர்கள் என்று பொருள். தாமதமாவதற்கு முன் அந்தப் பிரச்சனையைச் சரி செய்யவும்.

5. உங்கள் செலவுகளைக் கட்டுப்படுத்துங்கள்

5. உங்கள் செலவுகளைக் கட்டுப்படுத்துங்கள்

உங்கள் வருமானம் அதிகரிக்கும் போது நீங்கள் எளிதாகச் செலவழித்து விடுகிறீர்கள். எனவே உங்களுக்குச் சம்பளம் உயரும் போதெல்லாம், அதில் குறைந்தபட்சம் பாதிப் பணத்தையாவது சேமிக்கிறீர்களா மற்றும் மிச்சமிருக்கும் பாதிப் பணத்தைத் தான் செலவழித்துக் கரைக்கிறீர்களா என்பதை உறுதிச் செய்து கொள்ளுங்கள்.

6. கடன்களிலிருந்து விடுபடுங்கள்

6. கடன்களிலிருந்து விடுபடுங்கள்

அதிகப்படியான கடன்கள் உங்கள் வருமானத்தை வற்ற செய்துவிடும். அதிகப்படியான கடன் அட்டைகளைத் தூக்கி எறியுங்கள், தனிப்பட்ட கடன்களை வாங்குவதை நிறுத்துங்கள், கைமாற்றாகக் கடன் வாங்குவதைத் தவிர்த்து நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் மத்தியில் நன்மதிப்பையும் நம்பகத்தன்மையையும் நிலைநாட்டிக் கொள்ளுங்கள்.

7. நீண்ட கால இலக்குகளைப் பற்றித் தீவிரமாக இருங்கள்

7. நீண்ட கால இலக்குகளைப் பற்றித் தீவிரமாக இருங்கள்

நீங்கள் ஓய்வு காலத்திற்கான சேமிப்பை இன்னமும் தொடங்கவில்லை என்றால், உடனடியாக அதைச் செய்யுங்கள். ஒரு விரிவான நிதித் திட்டத்தை உருவாக்கி, நீங்கள் எவ்வளவு சேமிக்கிறீர்கள், நீங்கள் அதை எப்படி முதலீடு செய்யப் போகிறீர்கள், என்பதைப் பற்றியெல்லாம் குறிப்பிட்ட இலக்குகளை அமைத்து, அடுத்தடுத்த ஆண்டுகளிலும் அந்தத் திட்டத்தைப் பின்பற்றுவது சிறந்த யோசனையாகும்.

8. குடும்பத்துடன் பணத்தைப் பற்றி உரையாடுங்கள்

8. குடும்பத்துடன் பணத்தைப் பற்றி உரையாடுங்கள்

உங்கள் பெற்றோரிடம் அவர்களுடைய நிதி சார்ந்த தேவைகளைப் பற்றிப் பேசுங்கள் அவர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதைக் கண்டறியுங்கள், அதில் எந்த அளவுக்கு உங்களால் நிறைவேற்ற முடியும் என்று பாருங்கள். உங்கள் வாழ்க்கைத் துணைவரை அருகில் அமர்திதிக் கொண்டு, உங்கள் வருமானம், சேமிப்பு மற்றும் சொத்து விவரங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள். பணத்தை நிர்வகிக்கும் வர்த்தகத்தில் உங்கள் குழந்தைகளையும் ஈடுபடுத்துங்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: நிதி finance
English summary

Things to remember Financially before crossing 40

Things to remember Financially before crossing 40
Story first published: Saturday, September 9, 2017, 17:08 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X