நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடம் கடன் வாங்கும் முன் கருத்தில் கொள்ளவேண்டிய முக்கியமான விஷயங்கள்!

Written By: Tamilarasu
Subscribe to GoodReturns Tamil

உங்களுக்குப் பணம் அவசரமாகத் தேவைப்படும் போது நீங்கள் என்ன செய்வீர்கள்? உங்கள் குடும்பத்தினர் அல்லது நண்பர்களிடம் கடன் வாங்குவீர்களா? அல்லது வங்கியில் கடன் வாங்குவதைத் தேர்ந்தெடுப்பீர்களா?

நம்மில் பெரும்பாலானவர்களுக்கு முதல் தேர்வே வசதியானது. நட்பும் தனிப்பட்ட உறவுகளும் தான், நாம் மக்களிடம் வைத்திருக்கும் சிறந்த சொத்து. யாரிடமாவது கடன் வாங்குவதற்கு முன், உங்கள் கடன் வாங்கும் நடத்தையை ஆய்வு செய்யுங்கள்.

ஒரு பணப் பரிவர்த்தனையால் உங்கள் உறவுகளின் நெருக்கம் குறைந்து விட இடம் கொடுக்காதீர்கள். உங்களுக்குக் கடன் வழங்கியவருடன் தற்போது இருப்பதைப் போன்ற சுமுகமான உறவை பராமரிக்க முயற்சி செய்யுங்கள். உங்கள் அனைத்து உரையாடல்களும் பணத்தைப் பற்றியே இருக்க வேண்டாம்.

உறவுகளில் சமன்பாட்டைச் சரிபார்க்கவும்

பணம் பெரும்பாலும் தனிப்பட்ட உறவுகளை நொறுக்கி விடுகிறது. கடன் வாங்குவதற்கு முன்பு, அந்தப் பணம் உங்களுக்குக் கடன் கொடுத்தவருடனான உங்கள் உறவை எப்படிப் பாதிக்கும் என்பதை மதிப்பாய்வு செய்யுங்கள். கடன் வாங்குவதற்கு முன், கடன் கொடுப்பவருடனான உங்கள் உறவு எத்தகையது? இதற்கு முன் நீங்கள் அவரிடம் கடன் வாங்கியிருக்கிறீர்களா? அந்த நேரத்தில் நீங்கள் கடனை எப்படித் திருப்பிச் செலுத்தினீர்கள்? என்பது போன்ற சில விஷயங்களைச் சரிபாருங்கள்.

மற்ற அனைத்துத் தேர்வுகளையும் பயன்படுத்தி விட்டீர்களா?

கிடைக்கப்பெறும் அனைத்துத் தேர்வுகளையும் நீங்கள் முயற்சி செய்து பார்த்துவிட்டிருந்தால் நீங்கள் செய்யக்கூடிய கடைசி விஷயம் தனிப்பட்டக் கடனாகும். கடன் வாங்குவதற்கு முன், உங்கள் நிதி ஆதாரங்களை மேம்படுத்துவதற்கு நீங்கள் ஏற்கெனவே சாதகமான நடவடிக்கைகளை எடுத்துள்ளீர்களா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும். உங்கள் நிதிநிலையை மேம்படுத்தாமல் உங்கள் நண்பரிடமோ அல்லது உறவினரிடமோ கடன் வாங்க இன்னும் நீங்கள் தயாராகவில்லை. கடன் பணத்தின் முழுப் பொறுப்பும் கடன் வாங்கியவரின் மீதே விழுகிறது. ஒரு நபர் கடன் வாங்குவதற்கு முன் சில நல்ல பழக்கவழக்கங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். சிறிய நிதி இடைவெளிகளை இணைப்பதற்குக் கடன் வாங்குவதைக் கடைசித் தேர்வாகப் பரிசீலிக்க வேண்டும்.

வட்டி செலுத்துங்கள்

நீங்கள் நீண்டகால வரையறையில் பணத்தை ஒருவரிடம் கடனான வாங்குவதாக இருந்தால், உங்களுக்குக் கடன் கொடுத்த அவர் அல்லது அவளுக்கு வட்டியைச் செலுத்துங்கள். வட்டிகளற்ற கடன் என்பது அடிப்படையில் ஒரு பரிசாகும். நீங்கள் பணத்தை வங்கிகளில் முதலீடு செய்வதன் மூலம் அபாயங்கள் ஏதுமின்றி வட்டியை ஈட்டலாம். கடனளிப்பவர் ஒருவர் உங்களுக்கு மனமுவந்து வட்டி இல்லாத கடனை அளிக்க முன்வருகிறார் என்றால், உங்களுக்கு உதவுவதற்காக அவர் தன் வருமானத்தை இழக்கிறார் என்று பொருள். அது கருணை நிறைந்த செயலாகும், ஆனால் ஒரு கடன் வாங்கியவராக அது ஏற்றுக் கொள்ள முடியாதது.

பணத்தைத் திருப்பிச் செலுத்தும் திட்டம்

யாரிடமாவது கடன் கேட்பதற்கு முன், பணத்தைத் திருப்பிச் செலுத்துவதற்கான காலக்கெடுவை உங்களுக்கு நீங்களே வகுத்துக் கொள்ளுங்கள். தொகையைத் திருப்பிச் செலுத்துவது எப்படி என்று திட்டமிடுங்கள். ஒருவேளை உங்களால் பணத்தைத் திருப்பிச் செலுத்த முடியவில்லை என்றால், அதற்கான மாற்றுத் திட்டத்தை அமைக்கவும் முயற்சிக்கவும். நீங்கள் பணத்தைத் திருப்பிச் செலுத்துவதைப் பற்றி உறுதியாகத் தெரியவில்லை என்றால், கடன் வாங்கும் உங்கள் முடிவை மறுபரிசீலனை செய்யுங்கள்.

முன்கூட்டி செலுத்தி விடுங்கள்

காலக்கெடுவிற்கு முன்பாகவே முன்கூட்டி பணத்தைச் செலுத்திவிட அனைத்து முயற்சிகளையும் செய்யுங்கள். தாமதமாகப் பணம் செலுத்துவதற்குக் காரணங்களோ மன்னிப்புகளோ கிடையாது. முன்னதாகப் பணம் செலுத்தி விடுவது உங்கள் உறவில் நம்பிக்கையைத் தொடர உதவுகிறது. கடன் காலத்தின் இறுதிக்குள் உங்கள் நிதி நெருக்கடிகள் மாறி முன்னேற்றம் அடைந்திருந்தால், நீங்கள் கடனை முன்னதாகவே செலுத்தி விடலாம்.

கடன் வாங்குவதையும் கொடுப்பதையும் ஆவணப்படுத்துங்கள்

உறவினர்களிடமிருந்தும் நண்பர்களிடமிருந்தும் கடன் வாங்கும் போது தவறுகளில் ஈடுபடாதீர்கள். எப்பொழுதும் காகிதங்களில் விஷயங்களை ஆவணப்படுத்துங்கள். இந்த ஒப்பந்தம் கால வரையறை, வட்டி விகிதம் போன்ற கடன் பற்றிய விவரங்களை உள்ளடக்கி இருக்க வேண்டும். இல்லையென்றால், வட்டி விகிதம் அல்லது இதர விவரங்கள் காலப்போக்கில் மாற்றப்படலாம். இது உங்களைப் மிகப் பெரும் பிரச்சனைகளுக்கு உள்ளாக்கலாம். நமது உறவும் நம்பிக்கையும் மிக வலுவானதாக இருந்தாலும் கூட, ஒரு ஒப்பந்தத்தை ஆவணப்படுத்தி வைப்பது அனைவருக்கும் நல்லது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

What Should You Consider Before Borrow Money From Friends And Family?

What Should You Consider Before Borrow Money From Friends And Family?
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns