உங்களுடைய இன்சூரன்ஸ் பாலிசி காலாவதியாகி விட்டால் என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

Written By: Tamilarasu
Subscribe to GoodReturns Tamil

உங்களுக்கான காப்பீடு பாலிசி என்பது ஆடம்பரம் இல்லை. அது ஒரு அத்வாசியமான ஒன்று. இது உங்களைக் காப்பாற்றும் ஒரு கவசம் போன்றது.
இத்தகைய அதி முக்கியத்துவம் வாய்ந்த காப்பீடு பாலிசி விஷயத்தில் நாம் அஜாக்கிரதையாக இருக்கப் போவதில்லை. எனினும் பல்வேறு எதிர்பாராத சந்தர்ப்பங்களின் காரணமாக, காப்பீடு பாலிசி காலாவதி ஆகி விடுகின்றது.

காப்பீடு பாலிசிக்கான கருணைக் காலம் முடிந்து பிறகு மீண்டும் நீங்கள் பிரீமியம் செலுத்தாவிட்டால் உங்களுடைய காப்பீடு பாலிசியானது காலாவதியாகிவிடும். அப்படிக் காலாவதியான பாலிசியின் பாலிசிதாரர் இறந்த பிறகு, அந்தப் பாலிசியின் வாரிசுதாரருக்கு கிடைக்க வேண்டிய பணப்பயன் எதுவும் கிடைக்காது.

டெர்ம் பாலிசி திட்டம்

உங்களின் அன்பானவர்களுக்கான வருங்காலத்துக்கான பாதுகாப்பு என வரும்போது, டெர்ம் ப்ளானை விடச் சிறந்தது வேறு ஒன்றும் இல்லை. உங்களுக்கு ஏதாவது நடந்தால், பயனாளிக்கு அதிகபட்ச தொகைக்கு உத்தரவாதம் அளிக்கும் மலிவான மற்றும் பாதுகாப்பான வழிகளில் இது மிகவும் சிறந்தது.

குறைந்த வருடாந்திர பிரீமியம் விகிதங்கள் மற்றும் சீரான அடிப்படை உடல்நல பரிசோதனைகள் மூலம், நாம் அனைவரும் ஒரு நல்ல காப்பீட்டுத் திட்டத்தை வாங்க முடியும். அதன்மூலம் நாம் நம் அன்புக்குரியவர்களுக்கான பாதுகாப்புக் கவசத்தை உருவாக்க முடியும்.

 

டெர்ம் பிளான் உயிருடன் இருக்குமா?

உங்கள் காப்பீடு திட்டத்திற்கான பிரீமியத்தைக் காலப்போக்கில் செலுத்தத் தவறினால் என்ன நடக்கிறது? உங்களுடைய டெர்ம் ப்ளான் உயிருடன் இருக்குமா? அல்லது குறிப்பிட்ட காலத்திற்குள் நீங்கள் அதைப் புதுப்பிக்க முடியுமா? வாருங்கள் விரிவாகப் பார்க்கலாம்.

காப்பீட்டு பாலிசி எப்பொழுது காலாவதியாகும்?

நீங்கள் எந்தவிதமான காப்பீடு திட்டத்தையும் வாங்கலாம். காப்பீடு காலம் முடிவடையும் வரையில் ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட அளவு பிரீமியத்தை நீங்கள் செலுத்த வேண்டும். சில காரணங்களால், காப்பீட்டாளரால் அந்தத் திட்டத்திற்கு வழங்கப்பட்ட கருணைக் காலத்திற்குள் பிரீமியத்தைச் செலுத்த முடியாவிட்டால், அந்தக் காப்பீடு திட்டம் காலவதியாகிவிடும். காலாவதியான காப்பீடு திட்டத்தை மீண்டும் உயிர்ப்பிக்க வழி எதுவும் இல்லை. உங்களுக்கான ஒரே மாற்றீடு ஒரு புதிய காப்பீடு திட்டத்தை வாங்குவது மட்டுமே. இதற்கான செலவு கண்டிப்பாக அதிகமாகவே இருக்கும். ஏனெனில் உங்களுடைய வயது அதிகரித்திருக்கும். எனவே உங்களுடைய ஆயுள் காப்பீட்டுப் பிரீமியத்தை நீங்கள் செலுத்த தவறவிட்டால், நீங்கள் என்ன செய்ய முடியும். அதைப் பற்றி இங்கே விரிவாகக் காணலாம்.

காலாவதியான காப்பீடு திட்டத்தை எவ்வாறு புதுப்பிக்லாம்?

நீங்கள் உங்களுடைய காப்பீட்டுப் பிரீமியத்தைச் செலுத்தாமல் தவறிவிட்டிருந்தால், உங்கள் பாலிசியானது கருணை கால நிலைக்கு மாற்றப்படும். இந்தக் கருணைக் காலத்தில், காப்பீட்டு நிறுவனம், காப்பீட்டாளரின் இறப்பிற்கு ஒரு சரியான கூற்று தாக்கல் செய்யப்பட்டால், கண்டிப்பாகக் காப்பீடு தொகை அளிக்க வேண்டும். வழக்கமாக, காப்பீட்டாளரான உங்களுக்குப் பிரீமியம் செலுத்துவதற்கு அரை வருடாந்திர மற்றும் வருடாந்திர செலுத்துதல்களுக்கு 30 நாட்களும் மற்றும் மாதாந்திர செலுத்துதல்களுக்கு 15 நாட்களும் கால அவகாசம் கொடுக்கப்படும். எனினும், கால அவகாசம் என்பது வெவ்வேறு நிறுவனங்களுக்கு இடையே வேறுபடும்.

காப்பீடு திட்டம் காலாவதியாகும் போது என்ன நடக்கிறது?

கருணைக் காலத்தில் மீண்டும் எந்த விதமான பிரீமியமும் செலுத்தப்படாவிட்டால் காப்பீடு திட்டம் காலவதியாகிவிடும். அந்தப் பாலிசிதாரர் இறந்தபின், பயனாளிகளுக்கு எந்த விதமான காப்பீடு தொகையும் தரப்பட மாட்டாது.

இதை ஒரு எடுத்துக்காட்டு மூலம் விரிவாகக் காணலாம். ஒரு நபர் டேர்ம் ப்ளான் எடுத்திருக்கின்றார் என வைத்துக் கொள்ளுங்கள். அவர் காப்பீடு காலத்தில் ப்ரீமியம் செலுத்த தவறி விடுகின்றார். அப்பொழுது அவருடைய காப்பீடானது கருணைக் காலத்திற்குச் சென்று விடுகின்றது. அந்தக் கருணைக் காலத்தில், பாலிசிதாரர் இறந்து விடுகின்றார் எனில், அந்தத் திட்டத்தின் பயனாளர்களுக்கு உரிய இழப்பீடு கண்டிப்பாகக் கிடைக்கும். அதே நபர் கருணைக் காலம் முடிந்த பின் இறந்து விடுகின்றார் எனில், பயனாளர்களுக்கு எந்த வித மான இழப்பீடும் கிடைக்காது.

 

மீண்டும் எப்படி உயிர் கொடுப்பது?

எனினும், காலாவதியான பாலிசியானது முற்றிலும் இறந்து விடாது. அதற்கு மீண்டும் உயிர் கொடுக்கலாம். பல காப்பீடு நிறுவனங்கள் காலாவதியான காப்பீடு திட்டங்களுக்கு உயிர்ப்பிக்கும் சந்தர்ப்பத்தை வழங்குகின்றன; இருப்பினும், இந்தச் செயல்முறை மிகவும் விலை உயர்ந்ததாக இருக்கலாம். மேலும் இதற்கு மற்றொரு மருத்துவச் சோதனை மற்றும் / அல்லது பெனால்டி தொகை போன்றவை தேவைப்படலாம்.

காலாவதியான காப்பீடு திட்டங்களுக்கு உயிர் கொடுக்கும் நடைமுறையானது, அந்தப் பாலிசிக்கான கருணை காலம் முடிவடைந்து, பாலிசிதாரருக்கும் காப்பீட்டு நிறுவனத்திற்கும் இடையிலான ஒப்பந்தம் இனி செல்லுபடியாகாதபோது மட்டுமே நடைபெறுகிறது. காலவதியான் பாலிசி திட்டங்களுக்கு உயிர் கொடுக்கும் செயல்முறையானது பல்வேறு காப்பீட்டு நிறுவனங்களுக்கு இடையே வேறுபட்டிருக்கலாம். மற்றும் இந்த நடைமுறையானது மீள்பரிசீலனை செய்யப்பட்ட நேரம், பாலிசி வகை மற்றும் காப்புறுதி செலவு ஆகியவற்றைச் சார்ந்துள்ளது.

எனவே, இப்பொழுது நீங்கள் உங்களுடைய பிரீமியத்தைத் தவறவிட்டிருந்தால், உங்களுடைய காப்பீட்டை புதுப்பித்துத் தொடர என்ன செய்ய வேண்டும் என்று இப்போது உங்களுக்குத் தெரியும் என நம்புகின்றேன்.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

If your insurance policy lapsed what you should do?

If your insurance policy lapsed what you should do?
Story first published: Friday, October 27, 2017, 15:31 [IST]
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns