இந்தியாவில் அம்பானி போல இல்லைனாலும் கோடிஸ்வரனாவது எப்படி?

Written By: Tamilarasu
Subscribe to GoodReturns Tamil

சென்னை: உதாரணமாக, ஒரு நாளைக்கு 50 ரூபாய் சேமித்து, ஒவ்வொரு மாதமும் சேமிப்புத் திட்டத்தில் முதலீடு செய்து வந்தால், வெறும் 8% வருடாந்திர வருவாயைக் பெறுவதன் மூலம் 40 ஆண்டுகளுக்கு மேல் எவ்வளவு பணம் சம்பாதிக்க முடியும் என்பதை நீங்கள் கற்பனை செய்ய முடியுமா? ரூ 1 லட்சம், ரூ 2 லட்சம், ரூ 5 லட்சம் - வேறு எவ்வளவு?

பணம் பணத்தை ஈன்றெடுக்கிறது - இது பொதுவாக நம்பப்படுகிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், உங்களிடம் உள்ள அதிகமான பணத்தை முதலீடு செய்வதன் மூலம், அதிகமான செல்வத்தை நீங்கள் உருவாக்க முடியும். இது ஓரளவிற்கு உண்மை. எனினும், இது முற்றிலும் உண்மை இல்லை. சேமிக்கப்பட்ட பணம் அல்லது முதலீடு செய்யப்படும் பண அளவு மட்டுமல்ல, சேமிக்க வேண்டும் என்ற உங்கள் ஞானமும், இயற்கை குணமும் இங்கு மாற்றத்தை உண்டாக்குகின்றன.

உதாரணம்

ஒரு நாளைக்கு 50 ரூபாய் சேமித்து, ஒவ்வொரு மாதமும் ஒரு சேமிப்புத் திட்டத்தில் சேமித்து வைத்தால், வெறும் 8% வருடாந்திர வருவாயைக் பெறுவதன் மூலம் 40 ஆண்டுகளுக்கு மேல் எவ்வளவு பணம் சம்பாதிக்க முடியும் என்பதை நீங்கள் கற்பனை செய்ய முடியுமா? ரூ .1 லட்சம், ரூ 2 லட்சம், ரூ 5 லட்சம் - அனுமானிக்க முடிகிறதா? இல்லை, இது ஒரு மகத்தான தொகையாகும். ரூ 52.25 லட்சம், உங்கள் முதலீட்டில் வட்டி காலாண்டு கூடி இருந்தால்! இந்த மொத்த தொகையில், ரூ. 720,000 மட்டுமே பிரதான தொகையாகவும், 45 லட்சம் வட்டியும் ஈட்டியுள்ளது. ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் "உலகின் எட்டாவது ஆச்சரியம்", என்று கூட்டு வட்டியை விவரித்தார்.

எளிது இல்லை

எனினும், இது எளிதானது அல்ல. இதற்காக, உங்களுடைய நிதி விஷயங்கள் மற்றும் நுகர்வோர் பழக்கவழக்கங்களுக்கான ஒரு ஒழுங்குமுறை அணுகுமுறை தேவை. இங்கே நாம் செய்யக்கூடிய 5 எளிய வழிகளைப் பாருங்கள்:

வெளியில் சாப்பிடுவதைக் குறைத்தல்

இந்த நாட்களில் பலர், குறிப்பாக உழைக்கும் மக்கள், வீட்டில் சமையல் மற்றும் உணவு சாப்பிடுவதைத் தவிர்த்து வெளியே சாப்பிட விரும்புகின்றனர். உண்மை, உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எப்போதாவது உபசரிப்பது அல்லது சில நேரங்களில் வெளியே சாப்பிடுவது கெட்டது அல்ல. உண்மையில், இது பல காரணங்களுக்காக இன்றைய உலகில் இன்றியமையாததாகிறது. ஒன்று உங்கள் நண்பர்களுக்கும் குடும்பத்தினருக்கும் தரமான நேரத்தைச் செலவிட உதவுகிறது.

எனினும், வழக்கமாக வெளியே சாப்பிடுவது உங்கள் உடல்நலத்திற்கு மட்டுமல்ல, வரவு செலவுத் திட்டத்திற்கும் உகந்ததல்ல. உங்களால் சேமிக்க முடிந்தால், அதாவது ஒரு மாதத்திற்கு 1,000 ரூபாய் மட்டுமே வெளியே சாப்பிடும் பணத்தில் 8 சதவிகிதம் வருமானம் தரும் ஒரு திட்டத்தில் முதலீடு செய்யுங்கள், இது 20 ஆண்டுகளில் 5.92 லட்சம் ரூபாய் வரை உங்களுக்குப் பெற்றுத் தரும். நீங்கள் ரூபாய் 1000 ஐ 30 வருடம் சேமித்தால், ரூ 14.94 லட்சமாக மாறும். 40 ஆண்டுகளில் நீங்கள் 34 லட்சம் ரூபாய் திரட்ட முடியும். ஒன்றும் மோசமில்லையே?

 

நிலுவைத் தொகைகளைச் சரியான நேரத்தில் செலுத்துதல்

நாம் எல்லோரும் தொலைப்பேசிக் கட்டணம், மின் கட்டணம், எரிவாயு கட்டணம், கிரெடிட் கார்டுகட்டணம், பள்ளி கட்டணம் மற்றும் பராமரிப்புக் கட்டணம் (நீங்கள் ஒரு சமுதாயத்தில் வாழ்ந்து கொண்டிருந்தால்), போன்ற பல்வேறு கட்டணங்களைச் செலுத்துகிறோம். எந்தவொரு கட்டணமும் நேரத்திற்குச் செலுத்தப்படாவிட்டால் தாமதக் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும் என்பதை நாம் அறிவோம். எனினும், நம்மில் எத்தனை பேர் குறித்த நேரத்திற்குள் கட்டணத்தைச் செலுத்துகிறோம்?

உண்மையில் பெரும்பாலான மக்கள் ஒவ்வொரு மாதமும் ரூ 500 முதல் ரூ 1000 வரை தாமதக் கட்டணமாகச் செலுத்துகின்றனர். அதைக்குறித்து அவர்கள் கவலை கொள்வதும் இல்லை. பெரும்பாலான சந்தர்ப்பங்களில் பிரச்சினை பணம் அல்ல, சோம்பல் ஆகும். இருப்பினும், சரியான நேரத்தில் நிலுவைத் தொகைகளைச் செலுத்துவதன் மூலம் மாதத்திற்கு 500 ரூபாயைச் சேமிக்க முடிந்து, அதே அளவு முதலீடு செய்யப்பட்டால், நீண்ட காலத்திற்குப் பின் நீங்கள் அதிகப் பணத்தைச் சேர்க்கலாம். எடுத்துக்காட்டாக, ஒவ்வொரு மாதமும் ஒரு சேமிப்புத் திட்டத்தில் ரூ 500 ரூபாய் முதலீடு செய்யப்படுகிறது என்றால், இது 8% வருமானத்தை அளிக்கிறது. 40 ஆண்டுகளில் 17 லட்சம் ரூபாய் வரை பெற முடியும்!

 

தூண்டுதல் காரணமாகப் பொருட்களை வாங்குதல்

நாம் எல்லோரும் கடைக்குச் செல்ல விரும்புகிறோம். எனினும், நீங்கள் எப்போதாவது ஏதோ ஒன்றை வாங்கிவிட்டு, வீட்டிற்கு வந்ததும் அந்தப் பொருள் ஆத்தனை முக்கியமில்லை என்பதை உணர்ந்திருக்கிறீர்களா? அல்லது அது தேவையே இல்லை என உணர்ந்திருக்கிறீர்களா?

அது நம்மில் பெரும்பாலானோருக்கு நடக்கிறது. எனவே, நீங்கள் உற்சாகத்தில் செலவழிக்கும் பழக்கமுடையவராக இருந்தால், எதையும் வாங்குவதற்கு முன் அதன் பிரதிபலிப்பை ஒருமுறை கண்முன் கொண்டு வர முயற்சிக்கவும். நீங்கள் மாதத்திற்கு 2,000 ரூபாயை மட்டுமே சேமிக்க முடிந்தால், 8% வருடாந்திர வருவாய் தரும் முதலீட்டுத் திட்டத்தில் முதலீடு செய்ய முடியுமானால் 40 ஆண்டுகளில் ரூ. 70 லட்சம் மற்றும் 30 ஆண்டுகளில் 30 லட்ச ரூபாய் வரை உங்களுக்குக் கிடைக்கும்!

 

புகைப்பதை நிறுத்துவதன் மூலம்

புகைபிடிப்பது ஆரோக்கியத்திற்குத் தீங்கு விளைவிப்பதாக எல்லோருக்கும் தெரியும். நீங்கள் புகைபிடிப்பவராக இருந்தாலும், இப்போது புகைபிடிப்பதை விட்டுவிடுகிறீர்கள் என்றால், நீங்கள் புகைக்காத ஒவ்வொரு சிகரெட்டிற்கும் பணத்தை ஒதுக்கி வைக்க முயற்சி செய்யுங்கள்.

ஒரு சிகரெட் செலவு 10 ரூபாயாகவும், ஒரு நாளைக்கு 20 சிகரெட்களைப் புகைப்பதாகவும் இருந்தால், புகைபிடிப்பதை முற்றிலும் வெற்றிகரமாக நிறுத்தினால் நீங்கள் ஒரு மாதத்தில் 6,000 ரூபாயை ஒதுக்கி வைக்கலாம். ஒவ்வொரு மாதமும் இந்தச் சேமிப்புத் தொகையை 8% வருடாந்திர வருவாய் ஈட்டும் திட்டத்தில் முதலீடு செய்யுங்கள். 40 வருடத்தில் நீங்கள் 2 கோடி ரூபாயை உருவாக்க இது உதவும்!

 

'செலவு செய்யாமல்' ஒரு வாரம் இருப்பது

பணத்தைச் சேமிக்கவும், தரமான வரவு செலவு திட்டத்தை வைத்துக் கொள்ளவும் மற்றொரு முக்கிய வழி, ' செலவு செய்யாமல்' அல்லது ஒருவாரம் 'எதுவும் வாங்காமல்' இடைவெளி எடுத்துக் கொள்வதன் மூலம் தான். இது போன்ற காலங்களில், நீங்கள் புதியதாக எதையும் வாங்கவோ அல்லது கடைவீதிக்கு செல்லவோ கூடாது.

' எதுவும் வாங்காமல்' நேரத்தின் விதிவிலக்குகள் மருந்துகள், உணவு மற்றும் யாருக்கேனும் உடல்நிலை சரியில்லாத அவசரநிலைகள் ஆகியவற்றிற்குப் பணம் செலுத்துவதைக் கொண்டிருக்கும். நீங்கள் வழக்கமாகத் தினசரி அல்லது வாரத்தில் செலவழிக்கக் கூடிய பணத்தை, நீங்கள் ' எதுவும் வாங்காமல்' இருக்கும் நேரத்தில் கணக்கிட்டு அந்த மாதத்தின் இறுதியில் அந்தப் பணத்தை முதலீடு செய்யுங்கள். இது நீண்ட காலத்திற்கு ஒரு பெரிய தொகையை நீங்கள் உருவாக்க உதவுகிறது!

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

How to become rich in India fast?

How to become rich in India fast?
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns