புகழை இழந்து வரும் லார்ஜ் கேப் மியூச்சுவல் ஃபண்டுகள்

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  இந்தியா பங்கு சந்தையில் வேகமாக வளர்ந்து வருகிறது. இந்தச் சந்தை இன்னமும் ஆல்பா நிதிகளை வழங்கும் என்று நம்பப்படுகிறது. (லேமென் கூற்றின் படி அடையாளக்குறியீட்டை விட அதிகப்படியான வருவாயை வழங்கும் நிதிகள் என்று அறியப்படுகிறது.) இது வரலாற்று ரீதியாக உண்மையாக இருந்த போதிலும் இன்றளவும் சில பிரிவுகளில் உண்மையாக இருக்கிறது. பெரிய மூலதனத்தின் ஆல்பா நிதிகளை உருவாக்கும் திறனை மீண்டும் மறுபார்வையிட வேண்டியுள்ளது.

  ஆல்பாவில் வீழ்ச்சி

  கடந்த காலத்தில் நிஃப்டி 50 இன் மொத்த வருவாய் அட்டவணையுடன் ஒப்பிடும் போது பெரிய மூலதன நிதிகளின் ஆல்பா வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. 3 வருட கால ஓட்டத்தில் நிஃப்டி டிஆர்ஐ மீது பெரிய மூலதன நிதிகளால் உருவாக்கப்பட்ட கூடுதல் வருவாய் 2000 முதல் 2007 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் 4% ஆக இருந்தது. அது 2008 முதல் 2017 ஆம் ஆண்டுக்குள் 1% ஆகக் குறைந்துள்ளது.
  ஆல்பாவின் வீழ்ச்சிக்கு முக்கியப் பங்களிப்பாளர்களைப் பற்றி இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

  திட்டத்தின் அளவு மற்றும் மேற்பொருந்திய ஃபோர்ட்போலியோ

  திட்டங்களின் அளவு மற்றும் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதுடன் பெரிய மூலதன நிதிகள் (பொதுவாக 50 முதல் 60 பங்குகளை வைத்திருப்பவை) மேற்பொருந்திய நிதிகளைக் கண்டிருக்கின்றன மேலும் திறன்மதிப்பை தழுவியவையாக அறியப்படுகின்றன.
  2002 முதல் 2007 ஆம் ஆண்டு வரை இந்த நிதிகளுக்கிடையே வருவாய் வித்தியாசம் 10% ஆக இருந்தது, ஆனால் கடந்த 5 வருடங்களாக அது 5% ஆகக் குறைந்துள்ளது.

  பின்தொடர்தலில் பிழை

  இந்தப் பிரிவில் கடந்த 10 வருடங்களாக மூழ்குதலுக்குக் காரணமாக இருந்த மற்றொரு காரணம் பின்தொடர்தலில் இருந்த பிழைகளாகும். (திறன் மதிப்பு தொடர்பான அபாயம்) 2001 முதல் 2007 வரை இருக்கும் பின்தொடர்தலில் பிழை 10% ஆகும். இது 2008 முதல் 2017 க்குள் 3.8% மாகச் சரிந்துள்ளது. அதிக அழுத்தமுடைய ஏஎம்யு க்கள் மேலாளர்களை அபாயங்களை வெறுப்பவர்களாகவும் மற்றும் திறன் மதிப்பில் உள்ள சௌகரியத்தைத் தழுவுபவர்களாகவும் ஆக்கியது. புதிய செபி விதிகளின் கீழ் இந்தப் பிரச்சனை மேலாளர்கள் உலகளாவிய 100 நிறுவனங்களில் 50 முதல் 60 நிறுவனங்களை மட்டுமே தேர்ந்தெடுக்க வேண்டும் என்று மட்டுமே ஒன்றிணையும்.

  செலவு விகிதம்

  சராசரி ஆல்பா வீழ்ச்சியடைந்திருந்த போதிலும் செலவு விகிதம் கீழிறங்கவில்லை. பெரிய மூலதன நிதிகளின் சராசரி விகிதம் 2017 ஆகஸ்டில் 2.35% ஆக இருந்தது. அதே சமயம் ஆகஸ்ட் 2017 இல் முடியும் 3 வருட காலத்தின் சராசரி வருவாய் 2.9 % ஆகும். எனவே மொத்த ஆல்பா 2.5% ஆக இருந்த போதிலும் அதில் பாதியை நிதி மேலாண்மை கட்டணமே தின்றுவிட்டது.

  நடுத்தர மற்றும் பன்முக மூலதன நிதிகள்

  இந்தப் பிரிவு நிதிகள் அபாயங்களைச் சரிக்கட்டும் செயல்பாடுகள் மற்றும் ஆல்பா என்ற வகையில் அதிக மதிப்பெண்களைப் பெறுகின்றன. பன்முக நிதிகளோடு ஒப்பிடும் போது பெரிய மூலதன நிதிகளில் ஒரு நிதித் திட்டத்தின் அபாயங்களைக் கையாளும் செயல்பாடுகளைக் காட்டும் தகவல்கள் குறைவாகவே இருக்கின்றன. நடுத்தர மூலதனப் பங்குகள் மிகக் குறைவானவை மேலும் ஆய்வாளர்கள் மற்றும் மேலாளர்களால் கண்காணிக்கப்படுகின்றது. இது இன்னமும் அடித்தளப் பங்குகளை எடுப்பதில் கவனம் செலுத்துகிறது, மேலும் திறன் மதிப்பு தொடர்பான அதிக எடையுள்ள செயல்பாடுகளை முன்னெடுக்கிறது. அதனால் தான் ஆல்பா இந்தப் பிரிவில் தொடர்ந்து நீடிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது.

  முன்நோக்கிச் செல்லுதல்

  பாரம்பரிய பெரிய மூலதன நிதிகளின் ஆல்பா வீழ்ச்சியடைந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலும் இந்தத் திட்டங்கள் அதிகச் செலவு திறனுடையதாக இருக்க வேண்டும். அவ்வாறு செய்யப்படவில்லை எனில் அவை செயலற்ற சாமர்த்தியமான பீட்டா நிதிகளால் இடமாற்றப்படும்.

  முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?

  பன்முக மற்றும் நடுத்தர மூலதன நிதிகளைப் பார்ப்பது சிறந்தது. பன்முக மற்றும் நடுத்தர நிதிகளில் நீங்கள் நிதிகளைப் பிரித்து முதலீடு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். மேலும் இதில் பாரம்பரியமற்ற மாற்று நிதிகள் மற்றும் சமபங்கு ஒதுக்கீட்டு நிதிகளும் இருக்கின்றன.

  தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

  English summary

  Large cap mutual funds are losing their sheen

  Large cap mutual funds are losing their sheen
  Story first published: Thursday, November 23, 2017, 10:44 [IST]