தோல்வியிலிருந்து மீண்ட மாபெரும் சாதனையாளர்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தோல்வி வெற்றிக்கு மாற்று அல்ல. அது தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று தான். ஆனால் அது ஒரு பெரிய முக்கியப் பாதையில் ஒரு தற்காலிக பின்னடைவு மட்டுமே. எல்லோருமே வாழ்க்கையின் எதாவது ஒரு புள்ளியில் தோல்வியை எதிர்கொள்கிறார்கள். நீங்கள் அந்தத் தோல்வியைச் சந்திக்கும் போது எப்படி எதிர்வினையாற்றுகிறீர்கள் அதிலிருந்து என்ன கற்றுக் கொள்கிறீர்கள் என்பது தான் இதில் உண்மையில் முக்கியமான விஷயம்.

இந்த ஆறு தொழிலதிபர்களின் கதைகளை உதாரணத்திற்கு எடுத்துக் கொள்ளுங்கள். அவர்களுடைய கதைகள் மிகப்பெரிய வெற்றியில் நிறைவடைந்திருக்கிறது ஆனால் அவர்கள் எல்லோருமே தோல்வியிலிருந்து முளைத்தவர்கள். உங்கள் குறிக்கோளை நீங்கள் தொடர்வதைத் தோல்வி ஏன் நிறுத்தக்கூடாது என்பதற்கான மிகச் சரியான உதாரணம் அவர்கள்.

1. அரியன்னா ஹஃப்பிங்டன்

1. அரியன்னா ஹஃப்பிங்டன்

இணையதளப் பிரசுரங்களில் மிகவும் புகழ்பெற்ற பெயர்களில் ஒன்றான இவர் ஒரு காலத்தில் மூன்று டஜன் முறை நிராகரிக்கப்பட்டார் என்பது நம்புவதற்குக் கடினமான ஒன்று தான். ஹஃப்பிங்டன் நீண்ட நாட்களுக்கு முன்னர் அவர் வெளியிட முயன்ற இரண்டாவது புத்தகம், தற்போது எங்கும் வியாபித்திருக்கும் பிரசித்தி பெற்ற ஹஃப்பிங்டனின் பதிவுகளின் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கிய அந்தப் புத்தகம் இறுதியில் பிரசுரிப்பதற்கு ஒப்புக்கொள்ளப்படுவதற்கு முன் 36 முறை நிராகரிக்கப்பட்டது.

ஹஃப்பிங்டன் போஸ்ட் கூட அப்போது பெரிய வெற்றி அடையவில்லை. உண்மையில் அந்தப் புத்தகம் வெளியிடப்பட்ட அதன் தரம் மற்றும் திறன் குறித்துப் போது டஜன் கணக்கில் எதிர்மறையான விமர்சனங்கள் இருந்தது. வெளிப்படையாக, ஹஃப்பிங்டன் ஆரம்பக் காலச் சறுக்கல்களையும் தோல்வியையும் கடந்து வந்து இணையத் தளங்களில் தனது பெயரை மிக வெற்றிகரமான விற்பனை மையங்களில் ஒருவராக உறுதியாகப் பதித்துக் கொண்டார்.

 

2. பில் கேட்ஸ்
 

2. பில் கேட்ஸ்

பில் கேட்ஸ் தற்போது உலகின் மிகப்பெரிய செல்வந்தர்களில் ஒருவராக உள்ளார். ஆனால் அவர் வெற்றியை ஒரே நேர்க்கோட்டில் அடையவில்லை. கேட்ஸ் ட்ரேஃப்-ஓ-டேட்டா என்று அழைக்கப்படும் நிறுவனத்துடன் தொழில் முனைவோர் சந்தையில் நுழைந்தார். இது டிராஃபிக் டேப்களில் இருந்து தரவை செயலாக்க மற்றும் பகுப்பாய்வு செய்வதை இலக்காகக் கொண்டது (முந்தைய பதிப்பின் பெரிய தரவை நினைத்துக்கொள்ளுங்கள்).

அவர் தனது வணிகக் கூட்டாளியான பால் ஆலனுடன் சேர்ந்து யோசனையை விற்க முயன்றார். ஆனால் அந்தத் தயாரிப்பு கைகூடவில்லை. இது ஒரு முழுமையான பேரழிவு. எனினும், தோல்வியானது கேட்ஸை மீண்டும் புதிய வாய்ப்புகளை ஆராய உந்தியது. சில ஆண்டுகளுக்குப் பின்னர், அவர் தனது முதல் மைக்ரோசாப்ட் தயாரிப்பு உருவாக்கத்துடன் வெற்றிப் பாதையில் பயணிக்கத் தொடங்கினார்.

 

3. ஜார்ஜ் ஸ்டெயின்பிரென்னெர்

3. ஜார்ஜ் ஸ்டெயின்பிரென்னெர்

நியூயார்க் யான்கிஸின் உரிமையை அவர் வாங்கிப் பிரபலமாகும்முன் ஸ்டெயின்பிரென்னெர் கிலீவ்லேண்ட் பைப்பர்ஸ் என்று அழைக்கப்படும் ஒரு சிறிய கூடைப்பந்தாட்ட அணியை 1960 களில் வைத்திருந்தார். 1962 ஆம் ஆண்டில் ஸ்டெயின்பிரென்னெர் இயக்கத்தின் விளைவாக முழு உரிமையும் திவாலான நிலைக்கு வந்தது.

1970களில் யாங்கீஸ் அணியைக் கையகப்படுத்தும்போது 1980கள் மற்றும் 1990கள் முழுவதும் பல பின்னடைவுகள் மற்றும் இழப்புகளால் அணி போராடியது. இருப்பினும், ஸ்டெயின்பிரென்னெரின் சர்ச்சைக்குரிய முடிவுகளைப் பற்றிப் பொதுமக்களிடையே பயமும் விமர்சனமும் இருந்த போதினும், இறுதியில் அவர் 1996 மற்றும் 2003 ஆம் ஆண்டுகளுக்கு இடையே ஆறு உலகத் தொடர் பதிவுகளைக் கொண்ட ஒரு அற்புதமான வெற்றிக்கு அணியை இட்டுச்சென்றார். மேலும் ஒரு சாதனையாக, இலாபகரமான அணியாக லீக் பேஸ்பால் விளங்கியது.

 

4. வால்ட் டிஸ்னி

4. வால்ட் டிஸ்னி

20 ஆம் நூற்றாண்டின் மிக ஆக்கப்பூர்வமான படைப்பாளிகளில் ஒருவர் செய்தித்தாள் நிறுவனத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். ஏனெனில் அவரிடம் படைப்பாற்றல் இல்லை என்று சொல்லப்பட்டார். விடாமுயற்சியுடன் டிஸ்னி தனது முதல் வரைகலை நிறுவனத்தை உருவாக்கினார். இது லாஃப்-ஓ-கிராம் பிலிம்ஸ் என்று அழைக்கப்பட்டது. அவர் நிறுவனத்திற்கு 15,000 அமெரிக்க டாலர்களைச் சேர்த்தார். ஆனால் இறுதியில் லாஃப்-ஓ-கிராம் முக்கிய விநியோகஸ்த கூட்டாளியின் தோல்வியால் மூடப்பட வேண்டியதாயிற்று.

நம்பிக்கை இழந்து மற்றும் பணமும் இல்லாமல், டிஸ்னி ஹாலிவுட்டை அடைந்து மேலும் விமர்சனங்களையும் தோல்வியையும் சந்தித்தார். இறுதியாக, அவரது முதல் சில சிறந்த திரைப்படங்கள் வெளியாகி பிரபலமடைந்தன.

 

 5. ஸ்டீவ் ஜாப்ஸ்

5. ஸ்டீவ் ஜாப்ஸ்

ஸ்டீவ் ஜாப்ஸ் அவரது வரம்பற்ற கண்டுபிடிப்புகள் காரணமாக ஒரு சுவாரஸ்யமான தொழில்முனைவோர் ஆவார். ஆனால் அவை சாத்தியமானதன் காரணம் அவரது உறுதியான தோல்வியிலிருந்து மீண்டு எழும் குணமேயாகும். அவருடைய 20 வயதில் ஆப்பிள் ஒரு மகத்தான சாம்ராஜ்யமாக மாறி வெற்றியை தந்தது. ஆனால் அவர் 30 வயதாக இருந்தபோது ஆப்பிள் நிறுவனத்தின் இயக்குநர்கள் அவரை வெளியேற்ற முடிவு செய்தனர்.

தோல்வியால் துவண்டுவிடாமல் ஒரு புதிய நிறுவனமான NeXT ஐ உருவாக்கினார். அது இறுதியாக ஆப்பிளால் கையகப்படுத்தப்பட்டது. ஆப்பிள் நிறுவனத்தில் மீண்டும் சேர்ந்த பிறகு, தன் திறமையால் ஆப்பிள் நிறுவனத்தைப் புதிய உயரத்திற்கு இட்டுச்சென்றார்.

 

6. மில்டன் ஹெர்ஷி ஹெர்ஷி

6. மில்டன் ஹெர்ஷி ஹெர்ஷி

ஹெர்ஷியின் மிட்டாயை அனைவருக்கும் தெரியும். ஆனால் மில்டன் ஹெர்ஷி முதன்முதலில் தனது மிட்டாய் தொழில் வாழ்க்கையை ஆரம்பித்தபோது, அவர் ஒன்றும் இல்லாதவராக இருந்தார். அச்சுப் பயிற்சி நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்பு, ஹெர்ஷி மூன்று தனித்தனி மிட்டாய்ச் சம்பந்தப்பட்ட முயற்சிகளைத் தொடங்கினார். ஆனால் அவையாவும் தோல்வி அடைவதைக் கண்கூடாகப் பார்த்தார்.

ஒரு கடைசி முயற்சியாக, ஹெர்ஷி லான்காஸ்டர் கார்மெல் நிறுவனம் ஒன்றை நிறுவினார். மேலும் மகத்தான முடிவுகளைப் பார்க்க ஆரம்பித்தார். வெகுஜனங்களுக்கான பால் மிட்டாய் நம்பியதால், அவர் இறுதியில் ஹெர்ஷி நிறுவனத்தை நிறுவி தொழிலில் மிகவும் பிரபலமான பெயர்களில் ஒன்றாக மாறினார்.

 

 கதையிலிருந்து உத்வேகம்

கதையிலிருந்து உத்வேகம்

எந்த வித தோல்வியை நீங்கள் அடுத்த முறை பெற்றாலும், இந்தக் கதையிலிருந்து உத்வேகத்தைப் பெறலாம். இந்த நேரத்தில், சில தோல்விகள் சாலையின் முடிவைப் போல் தோன்றலாம். ஆனால் ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள். உலகில் எண்ணிலடங்கா ஆண்கள் மற்றும் பெண்கள் வெற்றி பெறுகிறார்கள் என்றால் அதன் காரணம் அவர்கள் தோல்வியுற்ற தருணத்தைப் பின்தள்ளி வெற்றி நிலைக்கு உயர்ந்துள்ளனர்.

குறிப்பு

குறிப்பு

உங்கள் தவறுகளிலிருந்து கற்றுக் கொள்ளுங்கள், சிந்தனை செய்து தோல்வியை ஏற்றுக்கொள்ளுங்கள். ஆனால் உங்கள் ஆர்வத்தை மீண்டும் தொடரவும். என்ன நடந்தாலும் உங்களுடைய இலக்குகளைத் தொடர்வதை நிறுத்த வேண்டாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Stories of Super Successes Who Overcame Failure

Stories of Super Successes Who Overcame Failure
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X