மருத்துவ காப்பீடு ஏன்? எப்படி? எதற்காக?

இந்தியாவில் மருத்துவச் சிகிச்சைக்கான கட்டணம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ஒரு மோசமாக உடல்நலக் குறைவு அல்லது விபத்தின் போது, உங்களுக்குத் தகுந்த மருத்துவச் சிகிச்சையை அளித்து உதவுகிறது.

உங்கள் உடல்நலத்தில் அதிகக் கவனத்தைச் செலுத்த உற்சாகப்படுத்துகிறது. ஏனெனில் எந்தளவிற்கு உடல்நலம் மோசமடைகிறதோ, அந்தளவிற்கு அதற்குச் செலுத்த வேண்டிய பிரீமியமும் அதிகரிக்கிறது.

மருத்துவக் காப்பீடு எப்படி வேலைச் செய்கிறது?

மருத்துவக் காப்பீடு எப்படி வேலைச் செய்கிறது?

நீங்கள் தேர்ந்தெடுக்கும் திட்டத்தின் அடிப்படையில் அது அமைகிறது. மருத்துவக் காப்பீட்டு திட்டங்களின் வடிவமைப்பு இரு வகைப்படும். அவையாவன:

பணத்தை ஈடுசெய்யும் முறை : நீங்கள் சிகிச்சைப் பெற்ற உண்மையான மருத்துவமனை கட்டண ரசீதுகளை, உங்கள் காப்பீட்டு நிறுவனத்திற்கு அளித்து, அதன் அடிப்படையில் அவர்களிடம் இருந்து பணத்தை ஈடுசெய்து கொள்ள முடியும்.

பணமற்ற முறை: உங்கள் காப்பீட்டு நிறுவனத்துடன் இணைப்பில் உள்ள மருத்துவமனைக்கு நீங்கள் சென்று, உங்கள் சிகிச்சையைப் பெற்று, தேவைப்படும் படிவங்களில் கையெழுத்திட்டால், உங்களுக்குப் பதிலாகக் காப்பீட்டு நிறுவனம் அதற்கான கட்டணத்தைச் செலுத்தும்.

 

மருத்துவக் காப்பீட்டை நீங்கள் எப்படிப் பெறலாம்?

மருத்துவக் காப்பீட்டை நீங்கள் எப்படிப் பெறலாம்?

பெரும்பாலான மக்களுக்குத் தாங்கள் பணியாற்றும் நிறுவனம் அல்லது சார்ந்திருக்கும் நிறுவனம் மூலம் மருத்துவக் காப்பீடு அளிக்கப்படுகிறது. இது குழு காப்பீடு என்று அழைக்கப்படுகிறது.

சிலருக்கு இந்தக் குழு காப்பீட்டில் அனுமதி கிடைப்பதில்லை. இவர்களுக்கு ஒரு காப்பீட்டு நிறுவனத்தில் இருந்து நேரடியாகத் தனிப்பட்ட முறையில் மருத்துவக் காப்பீடு பெற்றுக் கொள்ளலாம்.

 

குடும்ப மருத்துவக் காப்பீடு

குடும்ப மருத்துவக் காப்பீடு

குடும்பமாக உள்ளவர்கள், குடும்ப இணைப்புத் திட்டங்களைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் ஒரு குடும்பத்தில் உள்ள பல்வேறு நபர்கள் பயனடைய முடியும்.

ஒன்றுக்கு மேற்பட்ட மருத்துவக் காப்பீடு எடுத்திருந்தால் என்ன செய்வது?

ஒன்றுக்கு மேற்பட்ட மருத்துவக் காப்பீடு எடுத்திருந்தால் என்ன செய்வது?

உங்களுக்கு ஏற்கனவே ஒரு மருத்துவக் காப்பீடு இருக்கும் நிலையில், மற்றொரு காப்பீட்டின் மூலம் பாதுகாப்பை அதிகரிக்கக் கருதினால், இந்தக் கருத்தை முதலிலேயே கூறிவிட வேண்டும். இதன்மூலம் உங்கள் காப்பீட்டிற்கான கோரிக்கையை, இரண்டில் ஒரு காப்பீட்டு நிறுவனம் ஏற்க மறுப்பதைத் தவிர்க்கலாம்.

இந்தியாவில் மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்கள் எத்தனை வகைகள் உள்ளன?

இந்தியாவில் மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்கள் எத்தனை வகைகள் உள்ளன?

மருத்துவமனையில் சேர்க்கும் திட்டங்கள் என்பது நீங்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, உங்கள் சிகிச்சைக்கான செலவுகளை, காப்பீட்டுத் தொகைக்கு ஏற்ப இழப்பைத் தடுக்கும் திட்டங்களாகச் செயல்படுகின்றன. காப்பீட்டுத் தொகையைப் பொறுத்து, தனிநபர் மருத்துவக் காப்பீட்டின் கீழ் ஒரு நபர் அடிப்படையிலும், முழுக் குடும்பக் காப்பீட்டின்படி பிரித்து வழங்கும் அடிப்படையிலும் அளிக்கப்படுகிறது.

தங்கள் பணி வழங்குநர் மூலம் அளிக்கப்பட்ட மருத்துவக் காப்பீட்டு திட்டங்களின் மூலம் பூர்த்திச் செய்யப்படாத குறிப்பிட்ட காரணிகளில் இருந்து தம்மைப் பாதுகாத்து கொள்ள விரும்பும் மக்களுக்காக, டாப் அப் திட்டங்கள் அளிக்கப்படுகிறது.

சிக்கலான உடல்நலக் குறைவு திட்டங்களின் மூலம் காப்பீட்டில் உட்படும் ஏதாவது ஒரு சிக்கலான நோயைக் கண்டறிய மற்றும் அதற்கான மருத்துவச் செயல்பாடுகளுக்கு ஏற்படும் ஒரு பெரிய தொகையைச் செலுத்த உதவும் நன்மை பயக்கும் திட்டங்கள் ஆகும். சிக்கலான உடல்நலக் குறைவு என்பது குறிப்பிட்ட நோயின் மோசமான தன்மை அல்லது வழக்கமாக ஏற்படும் ஒரு உடல்நலக் குறைவு எனலாம். இதனால் இதற்கான சிகிச்சைக்கு அதிகம் செலவிட வேண்டிய நிலை உருவாகிறது.

 

நான் பணியாற்றும் நிறுவனம் மூலம் அளிக்கப்படும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், எனக்குப் பேதுமானதா?

நான் பணியாற்றும் நிறுவனம் மூலம் அளிக்கப்படும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், எனக்குப் பேதுமானதா?

கண்டிப்பாக அது போதுமானது. ஏனெனில் பெரும்பாலான நிறுவனங்களின் மூலம் குழு காப்பீட்டுத் திட்டங்கள் வழங்கப்படுகின்றன. ஆனால் ஒரு தனிப்பட்ட காப்பீட்டுத் திட்டத்தைப் போல உங்கள் குறிப்பிட்ட தேவைகள் மற்றும் சூழ்நிலைக்கு ஏற்ப சீரமைக்கப்பட்டு இருக்காது. ஆனால் தனிப்பட்ட காப்பீட்டுத் திட்டத்தில் உங்கள் விருப்பத்திற்கேற்ப எந்த மாதிரியான காப்பீட்டையும் தேர்ந்தெடுக்கலாம்.

ஒரு நிறுவனத்தில் இருந்து மற்றொரு நிறுவனத்திற்குத் தாவும் போது, இந்தக் காப்பீட்டுத் திட்டங்கள் உங்களுக்கு உதவாது. மேலும் பெரும்பாலான நிறுவனங்களில் புதிதாகச் சேரும் போது, இந்த வசதி அளிக்கப்படுவதில்லை. சில நிறுவனங்களில் ஒரு குறிப்பிட்ட காப்பீட்டு தொகையின் மூலம் எல்லாப் பணியாளர்களுக்கும் ஒருங்கே காப்பீடு அளிக்கப்பட்டிருக்கலாம். இதனால் ஒருவருக்கு ஏற்பட்ட காயம் அல்லது உடல்நலக் குறைவிற்காகக் காப்பீடு பயன்படுத்தப்பட்டால், மற்ற பணியாளர்களுக்கான காப்பீட்டுத் தொகை குறைவுப்படும்.

உங்கள் குடும்பத்தில் உள்ள எல்லா உறுப்பினர்களும் இதில் உட்படுத்தப்படாமல் இருக்கலாம்.

 

உடல் நலம் குறைவாக இருக்கும் போது மருத்துவக் காப்பீடு திட்டத்தினை வாங்க முடியுமா?

உடல் நலம் குறைவாக இருக்கும் போது மருத்துவக் காப்பீடு திட்டத்தினை வாங்க முடியுமா?

ஏற்கனவே ஒரு மருத்துவச் சிகிச்சை தேவைப்படும் நிலையில் நான் இருந்தால் என்ன செய்வது? எடுத்துக்காட்டாக, எனக்கு ஒரு உடல்நலக் குறைவு இருப்பதாக ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டிருந்தால் என்ன செய்யலாம்?

ஒவ்வொரு காப்பீட்டு நிறுவனத்திடமும் வழிகாட்டிகளின் ஒரு தொகுப்புக் காணப்படும். இதன்படி உங்களை ஒரு காப்பீட்டுத்தாராக ஏற்றுக் கொண்டால், அந்த நிறுவனம் எந்த மாதிரியான பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டிய நிலை உருவாக்கும் என்பதைக் குறிக்கும் அளவீட்டை வைத்துள்ளனர். எனவே ஒரு காப்பீட்டு நிறுவனம் மூலம் உங்கள் காப்பீட்டிற்குக் காத்திருப்புக் காலத்தை நியமித்து, அந்தக் காப்பீடு பயன்பாட்டில் வராமல் நிறுத்தி வைக்க முடியும் அல்லது ஏற்கனவே உள்ள பிரச்சனைகளால் உங்களுக்கு ஏற்படும் சிக்கலான உடல்நலக் குறைவுகளைத் தவிர, மற்ற வகையில் உண்டாகும் பாதிப்புகளுக்கு ஒரு வாழ்நாள் பாதுகாப்பை அளிக்க ஒப்புக் கொள்ளலாம். அல்லது கூடுதலான பிரிமியம் தொகையைச் செலுத்துமாறு கூறலாம் அல்லது காப்பீட்டிற்கான உங்கள் விண்ணப்பத்தை ஏற்க மறுக்கலாம்.

 

நினைவில் கொள்ளவும்

நினைவில் கொள்ளவும்

உங்கள் முழுமையான விவரங்களைக் கட்டாயம் அளிக்க வேண்டும். உங்களுக்கு இருப்பதாகத் தெரிந்த ஏந்தொரு உடல்நலக் குறைவையும் குறித்துப் பேச்சிலோ அல்லது மற்ற ஏதாவது தொடர்பு முறையிலோ இருக்கும் போது, காப்பீட்டு நிறுவனத்திடம் மறைக்க முயற்சிக்கக் கூடாது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+