டூப்ளிகேட் பான் கார்டுக்கு விண்ணப்பிப்பது எப்படி?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பொதுவாக நாம் அடையாள ஆவணங்களான ஓட்டுனர் உரிமம், பாஸ்போர்ட், ஆதார், பான் கார்டு போன்றவற்றை எப்போதும் தங்களுடன் எடுத்துச் செல்வது வளக்கமாக வைத்துள்ளோம். அதே நேரம் இந்தக் கார்டுகளின் அசலை எப்போதும் தங்களுடன் வைத்து இருக்கும் போது அதனைத் தொலைக்கவும் அதிக வாய்ப்புகள் உள்ளது.

 

எனவே பான் கார்டினை தொலைத்துவிட்டால் என்ன செய்வது? வருமான வரி தாக்கல் செய்ய, வங்கி கணக்குகளுடன் இணைக்க எல்லாம் ஆதார் கார்டு முக்கியம் என்பது அனைவருக்கும் தெரியும். எனவே இவ்வளவு முக்கியமான பான் கார்டு தொலைந்து போனால் எப்படி டூப்ளிகேட் பான் கார்டுக்கு விண்ணப்பிப்பது என்று விளக்கமாக இங்குப் பார்க்கலாம்.

முதலில் என்ன செய்ய வேண்டும்?

முதலில் என்ன செய்ய வேண்டும்?

உங்களது பான் கார்டு போன்ற முக்கிய ஆவணங்கள் தொலைந்து போனால் அவற்றை முறைகேடாகப் பயன்படுத்த வாய்ப்புகள் உள்ளதால் முதலில் அது குறித்துக் காவல் நிலையத்தில் புகார் அளிப்பது நல்லது. அதற்காகக் காவல் நிலையத்திற்கு நேரடியாகச் செல்ல வேண்டும் என்பது இல்லை. தமிழ்நாட்டில் இதுபோன்ற காரணங்களுக்காகப் புகார் அளிக்க என்பதற்காகவே eservices.tnpolice.gov.in இணையதளம் ஒன்றும் உள்ளது.

எதற்காகப் புகார் அளிக்க வேண்டும்?

எதற்காகப் புகார் அளிக்க வேண்டும்?

பான் கார்டில் உங்களது பெயர், புகைப்படம், தந்தை பெயர் மற்றும் பிறந்த தேதி போன்ற தனிப்பட்ட தகவல் இருப்பதால், அதனைப் பயன்படுத்திப் பிற சேவைகளில் உங்களது விவரங்களை முறைகேடாகப் பயன்படுத்த அதிக வாய்ப்புகள் உள்ளது. அதனால் முன்னெச்சரிக்கையாகப் புகார் அளிப்பது நல்லது.

டூப்ளிகேட் பான் கார்டுக்கு விண்ணப்பிப்பது எப்படி?
 

டூப்ளிகேட் பான் கார்டுக்கு விண்ணப்பிப்பது எப்படி?

டூப்ளிகேட் பான் கார்டுக்கு என்எஸ்டிஎல்(NSDL) அல்லது யூடிஐஐடிஎஸ்ல்(UTIITSL) ஏஜன்சிகள் மூலமாக விண்ணப்பித்து வருமான வரித் துறை அனுமதியுடன் பான் கார்டினை பெறலாம்.

இந்த இரண்டு ஏஜன்சிகள் மூலமாகவும் புதிய பான் கார்டு, பான் கார்டில் திருத்தங்கள் அல்லது டூப்ளிகேட் பான் கார்டு போன்றவற்றைப் பெறுவதற்காக விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பத்திற்கான இணைப்பு: https://www.onlineservices.nsdl.com/paam/endUserRegisterContact.html

 

 டூப்ளிகேட் அல்லது ரீபிரிண்ட் தேர்வு

டூப்ளிகேட் அல்லது ரீபிரிண்ட் தேர்வு

டூப்ளிகேட் அல்லது ரீபிர்ண்ட் பான் கார்டு தேர்வை தேர்வு செய்து விண்ணப்பிக்கும் போது உங்களஹ்டு பெயர், பிர்றந்த தேதி, மின்னஞ்சல் முகவரி, மொபைல் எண் மற்றும் பான் எண் உள்ளிட்டவையினை உள்ளிட வேண்டும்.

பேப்பர் விண்ணப்ப முறை

பேப்பர் விண்ணப்ப முறை

அடிப்படை விவரங்கள் உள்ளிட்ட பிறகு அடுத்தப் பக்கத்தில் ஆதார் எண் அல்லது ஆதார் விண்ணப்ப ஐடி உள்ளிட்டவற்றை அளிக்க வேண்டும். பின்னர் அடையாள மற்றும் முகவர் சான்றிதழ் போன்றவற்றைத் தேர்வு செய்து அவற்றினைப் பதிவேற்ற வேண்டும். இதுவே தபால் மூலம் விண்ணப்பிக்க உள்ளீர்கள் என்றால் விண்ணப்பம், அடையாள ஆவண நகல் போன்றவற்றை இணைத்து, புகைப்படத்தினை ஒட்டி விண்ணப்பிக்க வேண்டும்.

பேப்பர்ஸ் லெஸ் விண்ணப்பம்

பேப்பர்ஸ் லெஸ் விண்ணப்பம்

இதுவே பேப்பர் இல்லாமல் விண்ணப்ப முறையினைத் தேர்வு செய்தால் உங்கள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணிற்கு ஒரு முறை கடவுச் சொல் வரும். அதனை உள்ளிட்டு எளிதாக விண்ணப்பத்தினைச் சரிபார்த்துப் பூர்த்திச் செய்துவிடவும் முடியும். மேலும் இப்படிச் செய்யும் போது உங்களது கையெழுத்து மற்றும் புகைப்படம் போன்றவற்றையும் விண்ணப்பத்துடன் பதிவேற்ற வேண்டியது அவசியமாகும்.

யூடிஐஐடிஎஸ்ல்(UTIITSL)

யூடிஐஐடிஎஸ்ல்(UTIITSL)

யூடிஐஐடிஎஸ்ல்(UTIITSL) http://www.myutiitsl.com/PAN_ONLINE/CSFPANApp இணையதளம் மூலமாகவும் மேலே கூறியது போன்றே விவரங்கள் அளித்துப் பான் கார்டினை ரீபிரிண்ட் செய்திட முடியும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

How to apply for a reprint or duplicate of PAN card

How to apply for a reprint or duplicate of PAN card
Story first published: Tuesday, December 12, 2017, 11:05 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X