உங்கள் மெடிக்கல் இன்சூரன்ஸ் பாலிசியை வேறு நிறுவனத்திற்குப் போர்ட் செய்வது எப்படி?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்கள் மெடிக்கல் இன்சூரன்ஸ் பாலிசி பிரிமியத்திற்கான கட்டணத்தினைச் செலுத்தும் முன்பு அதன் நன்மைகள், பிரிமியம் எவ்வளவு மற்றும் கவரேஜ் எவ்வளவு என்பதை ஒருமுறை பரிசீலிக்கவும். ஒருவேலை தற்போது நீங்கள் தொடரும் மருத்துவக் காப்பீட்டின் விலை அதிகமாகவும், நன்மைகள் குறைவாகவும் இருந்தால் நீங்கள் தொடரும் பாலிசியை வேறு நிறுவனத்திற்குப் போர்ட் செய்ய முடியும்.

 

இதற்காகக் காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (IRDA) இணையதளச் சேவை ஒன்றை அளிக்கிறது. அதன் மூலமாகப் பிற காப்பீட்டு நிறுவனங்களின் பாலிசி விவரங்களைப் பெற்று புதிய காப்பீட்டு நிறுவனத்திற்கு உங்கள் பாலிசியை மாற்றிக்கொள்ளலாம்.

மெடிக்கல் இன்சூரன்ஸை போர்ட் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்

மெடிக்கல் இன்சூரன்ஸை போர்ட் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்

உங்கள் பாலிசியைப் போர்ட் செய்வதன் மூலம் நன்மைகளில் எந்தப் பாதிப்பு இருக்காது, நீங்கள் எதிர்பார்த்த நன்மையையும் கிடைக்கும். உதாரணத்திற்கு முன்பு நீங்கள் வாங்கியிருந்த பாலிசியில் 2 வருடத்திற்கு மட்டுமே அனைத்து நன்மைகள் பெற முடியும் என்ற போது நீங்கள் தேர்வு செய்த புதிய நிறுவனத்தில் அதே நன்மைகள் மூன்று வருடத்திற்குக் கிடைக்கின்றது என்றால் புதிய நிறுவனத்தின் பாலிசி திட்டத்திற்குப் போர்ட் செய்து நன்மைகளைப் பெற்று பயன்பெறலா. இந்தச் சேவையினால் முதியவர்களை விட இளமையானவர்களுக்கு எளிதாக மாற முடியும்.

 ஏன் முதியவர்களைப் போர்ட் செய்ய அனுமதிப்பதில்லை?

ஏன் முதியவர்களைப் போர்ட் செய்ய அனுமதிப்பதில்லை?

இளைஞர்கள் தங்களது இன்சூரன்ஸ் பாலிசியைப் போர்ட் செய்வது எளிது, முதியவர்களைக் காப்பீட்டு நிறுவனங்கள் போர்ட் செய்ய அனுமதி அளிப்பதில்லை. முதியவர்கள் போர்ட் செய்யும் போது புதிய நிறுவனத்திற்கு அவர்களுக்கு எப்போது வேண்டுமானாலும் காப்பீட்டுத் தொகையினை அளிக்க வேண்டிய நிலைக்கு நிறுவனங்கள் தள்ளப்படும். முதியவர்கள் மட்டும் இல்லாமல் சில குறிப்பிட்ட உடல் நலக்குறைவுக்காகத் தொடர்ந்து சிகிச்சை பெறுபவர்களுக்கும் போர்ட் செய்ய அனுமதி வழங்கப்படுவதில்லை.

 போர்ட் செய்ய எத்தனை நாட்கள் ஆகும்
 

போர்ட் செய்ய எத்தனை நாட்கள் ஆகும்

பொதுவாக ஒரு பாலிசியினை 45 நாட்கள் முதல் 60 நாட்களுக்குள் போர்ட் செய்துவிடலாம். இது நீங்கள் போர்ட் செய்யும் நிறுவனத்தின் செயல்பாடுகளைப் பொறுத்ததும் கூட.

கூடுதல் படிவங்கள் தேவையா?

கூடுதல் படிவங்கள் தேவையா?

மொபைல் எண் போர்ட் செய்வது போன்று இன்சூரன்ஸ் பாலிசியைப் போர்ட் செய்வதும் எளிது தான். என்ன ஒன்று எப்போதும் பாலிசி வாங்கும் போது தேவைப்படும் படிவங்களை விடக் கூடுதல் படிவங்கள் தேவைப்படும். ஆனால் மருத்துவக் காப்பீடு நிறுவனத்தினைப் போர்ட் செய்வது என்பது இன்னும் இந்திய வில் பெரிதாகப் பிரபலம் அடையவில்லை. அதே நேரம் பாலிசியை வாங்குபவர்களுக்கு இதில் பயமும், குழப்பமும் உள்ளது.

ஆய்வு

ஆய்வு

புதிய மருத்துவக் காப்பீட்டு கொள்கையின் அம்சங்களை நீங்கள் ஏன் ஆய்வு செய்ய வேண்டும்.

போர்ட் செய்ய முடிவு செய்த உடன் புதிய பாலிசியினை ஒரு முறை சரிபார்க்க வேண்டும். பாலிசியின் நன்மைகள், கூடுதல் காத்திருப்புக் காலம் ஏதேனும் உள்ளதா, கூடுதல் கட்டணம் ஏதேனும் செலுத்த வெண்டுமா, விலக்குகள் ஏதேனும் உள்ளதா போன்றவற்றை ஆராய வேண்டும்.

 

 முக்கியமான கவனிக்க வேண்டியவை

முக்கியமான கவனிக்க வேண்டியவை

பாலிசியைப் போர்ட் செய்யும் போது விலை எவ்வளவு என்பது முக்கிய முடிவை எடுக்கும் என்றாலும், சொற்ப பணத்திற்கு ஆசைப்பட்டு ஏமாற்றம் அடையாமல் புதிய காப்பீட்டு நிறுவனம் எந்த அளவிற்குக் காப்பீட்டுத் தொகையினை அளிக்கிறது என்பதைப் பற்றியும் தெரிந்துகொள்ள முடியும்.

நிபந்தனைகள்

நிபந்தனைகள்

சில காப்பீட்டு நிறுவனங்கள் பாலிசியைப் போர்ட் செய்யும் போது பல நிபந்தனைகளை விதிக்க வாய்ப்புகள் உண்டு. மேலும் காப்பீட்டு நிறுவனமானது ஏதேனும் கூடுதல் காத்திருப்பு நாட்கள் அல்லது நிரந்தர விலக்கு அளிக்கிறதா என்பதை ஆராய வேண்டும்.

கிளைம் போனஸ்

கிளைம் போனஸ்

ஒரு முறை காப்பீட்டிற்கான பணத்தினைப் பெற்று இருந்தால் போர்ட் செய்ய அது தான் சரியான நேரம் ஆகும்.

போர்ட் செய்யும் போது உங்களுக்குக் கிளைம் போனஸ் கிடைக்க வாய்ப்பில்லை. எனவே ஒரு முறை பாலிசியைக் கிளைம் செய்த பிறகு போஎர்ட் செய்தால் புதிய நிறுவனத்தில் கிளைம் பொனஸ் இல்லாமல் இன்சூரன்ஸ் பாலிசியைப் போர்ட் செத்துக்கொள்ளலாம்.

 

ஒப்புதல்

ஒப்புதல்

இந்திய காப்பீட்டு ஒழுங்கு முறை ஆணையமானது போர்ட் செய்யும் போது மூன்று வேலை நாட்களுக்குள் நிறுவனங்கள் ஒப்புதல் அளிக்க வெண்டும் என்று 2011 பிப்ரவரி மாதம் 10-ம் தேதி அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டுள்ளது.

உங்கள் புதிய காப்பீட்டு நிறுவனம் பழைய நிறுவனம் வழங்கிய அதே அளவு காப்பீட்டை அளிக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். 2011 ஜூலை 1 முதல் நடைமுறையில் இருக்கும் அனைத்து ஒப்பந்தங்களையும் புதிய ஒப்பந்தங்கள் நடைமுறையில் பயன்படுத்தலாம்.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

How To Port Your Medical Insurance Policy

How To Port Your Medical Insurance Policy
Story first published: Saturday, December 16, 2017, 12:01 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X