மூத்த குடிமக்களுக்கு காப்பீடு திட்டங்கள் அவசியமா அல்லது ஆடம்பரமா?

Written By: Tamilarasu
Subscribe to GoodReturns Tamil

திரு வர்மாவிற்கு 35 வயதாக இருந்தபோது, அவர் தன்னுடைய நிதி மற்றும் முதலீடுகளை மிகவும் திறன்பட நிர்வகித்தார். அவரைச் சார்ந்து அவருடைய மனைவி மற்றும் மகன் இருக்கின்றனர். அந்த இளம் வயதில் அவர் வாழ்க்கைக்கான காப்பீடு திட்டமும், சுகாதாரத் திட்டமும் உட்படப் பல்வேறு வகையான காப்பீடுத் திட்டங்களை வாங்கினார்.

காலச சக்கரம் மிகவும் வேகமாகச் சுழல்கிறது. இன்று அவருக்கு 67 வயது முடிவடைந்து விட்டது. அவருடைய வேலையில் இருந்து ஓய்வு பெற்று, ஒரு தாத்தாவாகத் தன்னுடைய வாழ்நாட்களைக் கழித்து வருகின்றார். திரு வர்மாவிடம் அவருக்கான ஓய்வூதியத் தொகை இருக்கின்றது. ஆனால் அதை என்ன செய்வது என்பது அவருக்குத் தெரியவில்லை. அவருடைய ஓய்வூதியத் தொகையைச் சில காப்பீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டுமா? அல்லது, அவருடைய பெயரில் வங்கியில் சில நிரந்தர வைப்பு நிதியாக முதலீடு செய்ய வேண்டுமா? அல்லது ஒருவேளை அவரது பேத்தியின் படிப்பிற்காக அவளுடைய பேரில் முதலீடு செய்யலாமா? அவருக்கு முன்னால் பல வாய்ப்புகள் உள்ளன. அதுவே அவருடைய பிரச்சனையாகவும் மாறி விட்டது. அவரால் ஒரு தீர்மானத்திற்கு வர இயலவில்லை.

மூத்த குடிமக்கள் காப்பீடு திட்டங்களில் முதலீடு செய்வது புத்திசாலித்தனமானதா என நீங்கள் யோசிக்கலாம். எனவே, இதைப் பற்றி முடிவெடுக்கும் முன்னர் மூத்த குடிமக்களுக்கு ஏற்ற சில சிறந்த முதலீடுகளைப் பற்றிப் பார்ப்போம்.

மூத்த குடிமக்களுக்குச் சுகாதாரக் காப்பீடு

ஒரு மூத்த குடிமக்கள், சுகாதாரக் காப்பீடு திட்டத்தின் நன்மைகளைப் பொருத்து சுமார் ரூ. 20,000 முதல் ரூ. 30,000 வரை ஒவ்வொரு ஆண்டும் ப்ரீமியம் செலுத்த வேண்டும். இது ஒரு பெரிய தொகை. எனவே, நீங்கள் சுகாதாரக் காப்பீடு திட்டத்தை வாங்குவதற்கு முன், உங்கள் வருடாந்திர மருத்துவக் கட்டணங்களையும், தேவையான சேவைகளையும் மதிப்பீடு செய்யுங்கள்.

இருப்பினும், உங்களுடைய மருத்துவப் பில்கள் அதிகமாக இருந்தால், உங்களுக்கு உடல்நல காப்பீட்டு முக்கியம். உங்களுடைய வயது ஏற ஏற, உங்களுக்கு ஒரு குறிப்பிட்ட மருத்துவச் சேவை தேவைப்படும் வாய்ப்பு அதிகம். நீங்கள் கடுமையான நோய்களுக்கு அல்லது பாதிப்புகளுக்கு ஆளாகி அவஸ்தைப்படும் வாய்ப்பும் மிக அதிகம். மேலும் சிகிச்சைக்காக அதிகச் செலவாகும். இது கண்டிப்பாக உங்களுடைய ஓய்வூதிய சேமிப்பை கரைத்து விடும். ஒரு பொருத்தமான சுகாதாரக் காப்பீட்டுத் திட்டமானது இத்தகைய சூழ்நிலைகளில் உங்களுக்குத் தேவைப்படும் நிதிப் பாதுகாப்பை வழங்க முடியும், எனவே நீங்கள் மருத்துவச் செலவைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை. கூடுதலாக, ஒரு சில குறிப்பிட்ட சுகாதாரப் பாலிசிகள் வழக்கமான சுகாதாரப் பாதுகாப்புடன் இலவச மருத்துவச் சோதனைகளை வழங்குகின்றன. இது உங்களுடைய ஆரோக்கியத்தைக் கண்காணிக்க உதவுகிறது.

 

முதலீடு செய்யப் பல வழிகள்

நீங்கள் கஷ்டப்பட்டுச் சம்பாதித்த பணத்தை முதலீடு செய்யப் பல வழிகள் உள்ளன. இவற்றில் பல பாதுகாப்பானது. மற்றும் இவற்றில் நல்ல வட்டி விகிதங்கள் கிடைக்கின்றன. மூத்த குடிமக்களுக்கு ஏற்றச் சிறந்த முதலீட்டுத் திட்டங்கள் சில:

• மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம்

• நிரந்தர வைப்பு நிதி

• தபால் அலுவலகம் சேமிப்பு நிதி

• தேசிய சேமிப்புப் பத்திரம்

• மாதாந்திர வருவாய் திட்டங்கள் (பரஸ்பர நிதிகள்)


மற்றொரு வாய்ப்பு ஈக்விட்டியுடன் இணைக்கப்பட்ட சேமிப்புத் திட்டம் (ELSS) ஆகும். எனினும், இந்த முதலீட்டுத் திட்டத்தில் ஆபத்து சற்று அதிகம்.

 

மருத்துவக் காப்பீடு

உங்களுடைய உடல்நலம் பலவீனமாக இருந்து, உங்களுக்கு அடிக்கடி மருத்துவப பராமரிப்பு தேவைப்பட்டால், நீங்கள் புற்றுநோய் மற்றும் இதய நோய் போன்ற முக்கியமான வியாதிகளை உள்ளடக்கிய ஒரு விரிவான சுகாதாரத் திட்டத்தை வைத்திருங்கள். நீங்கள் இப்போது ஆரோக்கியமாக இருந்தாலும் கூட, திட்டமிடப்படாத ஆபத்துக்கால மருத்துவச் செலவுகளுக்கு முன்கூட்டியே திட்டமிடுவது மிகவும் சிறந்தது. இந்தியாவில் ஒவ்வொரு 33 விநாடிக்கும் ஒரு நபர் மாரடைப்பால் மரணமடைவதை நீங்கள் அறிவீர்களா? காற்று மாசுபாடு காரணமாக இரண்டு இந்தியர்கள் ஒவ்வொரு நிமிடமும் இறந்து போவதையாவது அறிவீர்களா?

இது போன்ற தரவுகளை உற்று நோக்கிய பின்னர், நீங்கள் மருத்துவ அவசரத் திட்டத்திற்காகத் திட்டமிடுவது முக்கியம், ஏனெனில் ஒரு துரதிருஷ்டவசமான சம்பவம் எப்போது வேண்டுமானாலும் உங்களுடைய வாழ்வில் நிகழலாம். மறுபுறம், நீங்கள் ஆரோக்கியமானவராக இருந்து நீரிழிவு அல்லது இதயக் குறைபாடு போன்ற முக்கியமான அல்லது நீண்டகால நோய்களின் பிடியில் இல்லாமல் இருந்தால், சுகாதாரக் காப்பீடு திட்டங்களில் செலவழிக்காமல், நீங்கள் உங்களுடைய சேமிப்பை பல்வேறு நிதி தயாரிப்புகளில் முதலீடு செய்யலாம்.

எனினும், உங்கள் முதலீடுகள் உங்களுடைய சுகாதாரச் செலவுகள் (மருத்துவ அவசர அல்லது வருங்காலப் பிரச்சனைகளின் போது), உங்களுடைய தற்போதைய மற்றும் எதிர்கால வழக்கமான செலவுகள் ஆகியவற்றைப் பூர்த்திச் செய்வதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

 

மூத்த குடிமக்களுக்கான ஆயுள் காப்பீடு

பெரும்பாலான மூத்த குடிமக்கள் தங்களுடைய ஓய்வு காலத்தைல் தங்களுடைய கடனை திருப்பிச் செலுத்துகின்றனர். அந்தக் காலக் கட்டத்தில் அவர்களுடைய வாரிசுகள் வாழ்க்கையில் தங்களைக் கண்டிப்பாக நிலை நிறுத்திக் கொண்டிருப்பார்கள். எனவே, ஓய்வுபெற்ற ஒருவர் ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தைத் தொடர வேண்டுமா என நீங்கள் சந்தேகிக்கக்கூடும். நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டால், உங்களுடைய தற்போதைய நிதியியல் சூழ்நிலையைப் பாருங்கள்

கட்டி முடிக்கப்படாத கடன்

உங்களுக்குக் கட்டி முடிக்கப்படாத வீட்டுக் கடன் அல்லது ஒரு வணிகக் கடன் போன்ற கடன்கள் இருந்தால் அதை முடிக்கப் பாருங்கள். உங்களுக்கு ஒரு வேளை கடன் இருந்து நீங்கள் உங்களுடைய ஆயுள் காப்பீடு திட்டத்தை நிறுத்திவிடும் பட்சத்தில், உங்களுக்கு ஏதாவது நடந்தால், உங்களுடைய வயதான மனைவி அல்லது பிள்ளைகள் உங்களுடைய கடன்களால் கண்டிப்பாக அவதிப்படுவார்கள்.

உங்களை நம்பியுள்ளவர்கள்

உங்களுடைய பெற்றோர்கள் இன்னும் உங்களுடன் வசிக்கின்றார்களா? உங்களுடைய வாழ்க்கைத் துணை அல்லது குழந்தை உங்களை நம்பி இருக்கின்றதா? ஆம் எனில் நீங்கள் ஓய்வுற்ற போதிலும் உங்களுடைய ஆயுள் காப்பீடு திட்டத்தைக் கண்டிப்பாக நீங்கள் தொடர வேண்டும்.

உங்களுடைய குழந்தைகளுக்குச் சொத்து விட்டுச் செல்ல விரும்பினால்

உங்களுக்குக் குழந்தைகள் இருந்து, அவர்களுக்கு நீங்கள் குறிப்பிட்டுச் சொல்லும் அளவிற்குச் சொத்தை விட்டுச் செல்ல விரும்பினால், ஆயுள் காப்பீட்டுக் கொள்கையானது அர்த்தமுள்ளதாக இருக்கும். உங்களுக்கு ஏதாவது நடந்தால், உங்களுடைய வாரிசுகளுக்குக் காப்பீடு தொகை கிடைக்கும். இருப்பினும், உக்ன்களைச் சார்ந்து துணைவி அல்லது பிள்ளைகள் இல்லையென்றால், ஆயுள் காப்பீட்டுத் திட்டம் சிறந்த விருப்பமாக இருக்காது.

உங்களிடம் இத்தகைய கடன்கள் இல்லை என்றால், ஓய்விற்குப் பிறகு உங்களுடைய ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தைத் தொடர்வதைப் பற்றிக் கண்டிப்பாகப் பரிசீலனை செய்யுங்கள்.

 

மூத்த குடிமக்களுக்கான பயணக் காப்பீடு

பயணக் காப்பீடு உங்களுக்கு மிகவும் அவசியமானது. வெளிநாடுகளில் சுகாதாரச் செலவினங்கள் மிக அதிகம். நீங்கள் காப்பீடு இல்லாமல் பயணம் மேற்கொள்கின்றீர்கள் மற்றும் உங்களுக்கு வெளிநாடுகளில் மருத்துவத் தேவை என்றால், உங்களுடைய நீண்ட காலச் சேமிப்பு கண்டிப்பாகக் கரைந்து விடும். எனவே, மிகவும் ஜாக்கிரதையாக ஒரு பயணக் காப்பீடு திட்டம் இல்லாமல் பயணம் மேற்கொள்ளாதீர்கள்..

தீர்மானம்

சுகாதாரக் காப்பீடு மற்றும் ஆயுள் காப்பீடு ஆகிய இரண்டும் அனைத்து மூத்த குடிமக்களிடமும் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்பதை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள். இத்தகைய காப்பீடு திட்டங்களின் தேவைகள் ஒவ்வொரு நபருக்கு இடையே வேறுபடுகின்றன. எனவே, உங்களுக்கான காப்பீடு மற்றும் முதலீட்டு விருப்பங்களைப் புரிந்து கொள்ள உங்கள் நிதி ஆலோசகரிடம் பேசுங்கள். அதன் பின்னர் உங்களுக்கு மிகவும் பொருத்தமானதை தேர்வு செய்யுங்கள்.

பொருப்புத்துறப்பு

இந்தக் கட்டுரை பொதுத் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே வடிவமைக்கப்பட்டுள்ளது. முதலீடு, காப்பீட்டு, வரி அல்லது சட்ட ஆலோசனை புத்தகமாக இதனைக் கருதக்கூடாது. இங்கே குறிப்பிடப்பட்ட பகுதிகளைப் பற்றிய முடிவுகளை எடுக்கும்போது தனியாகத் தனித்துவமான ஆலோசனையைப் பெற உங்களை நாங்கள் அறிவுறுத்துகின்றோம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Insurance for senior citizens need or not

Insurance for senior citizens need or not
Story first published: Saturday, December 30, 2017, 17:24 [IST]
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns